"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Senthoor Murugan Kovilile - Shanthi

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Sat Feb 09, 2008 9:19 pm    Post subject: Lyrics - Senthoor Murugan Kovilile - Shanthi Reply with quote

படம்: சாந்தி பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
பாடியவர்கள்: பி.பி. ஸ்ரீநிவாஸ் & பி. சுசீலா
இசை: மெல்லிசை மன்னர்


பி. சுசீலா:
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன், கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன், பாடலை நான் கேட்டேன்.

கண்கள் இரண்டை வேலென எடுத்து கையோடு கொண்டானடி
கன்னி என் மனதில் காதல் கவிதை சொல்லாமல் சொன்னானடி
(செந்தூர்)

ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம் வாராமல் நின்றானடி
வாராமல் வந்தவன் பாவை உடலை சேராமல் சென்றானடி
சேராமல் சென்றானடி
(செந்தூர்)

பி.பி.எஸ்:
நாளை வருவான் நாயகன் என்றே நல்லோர்கள் சொன்னாரடி
நாயகன் தானும் ஓலை வடிவில் என்னோடு வந்தானடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து வாசலில் வருவேனடி
மன்னவன் என்னை மார்பில் தழுவி வாழ்வெனச் சொல்வானடி
வாழ்வெனச் சொல்வானடி
(செந்தூர்)

"சாந்தி".......கண்களை இழந்த ஒரு பெண்ணுக்கு செய்யும் உதவியானது பல குழப்பங்களை விளைவித்து, இறுதியில் இந்த குழப்பங்களே அந்த பெண் இறப்பதற்கு காரணமாகிறது. கண்களை இழந்த அந்த பெண்ணாக விஜயகுமாரியும், அவர்களின் தோழியாக தேவிகாவும், அந்த பெண்ணிற்கு உதவி செய்பவராக நடிகர் திலகமும், அவரின் நண்பராக எஸ்.எஸ்.ஆர் அவர்களும் அற்புதமாக நடித்துள்ளார்கள்.

விஜயகுமாரி கண்களை இழந்தவர் என்பதை தெரியாமலே அவரை மணம் முடிக்கும் ஒரு சூழ்நிலைக்கு ஆளாகிறார் எஸ்.எஸ்.ஆர். அவர்கள். இதற்கு காரணம் அவர் மாமாவாக வரும் எம்.ஆர்.ராதா அவர்கள். மனமுடைந்த எஸ்.எஸ்.ஆர் அவர்கள் திருமணமான அந்த நாளே ராணுவத்திற்கு சென்று விடுகிறார். சில தினங்கள் காத்திருந்து அவர் வராததால், விஜயகுமாரி அவர்கள், தன் தோழி தேவிகா அவர்கள் மூலமாக இந்த பாடலை ஒரு கடிதமாக எஸ்.எஸ்.ஆர் அவர்களுக்கு எழுதுவார். கண்களையும் இழந்து, கணவனையும் பிரிந்த அந்த பெண்ணின் மனதில் வரும் வார்த்தைகளை இதை விட நெகிழ்ச்சியாக யாரால் எழுத முடியும்?

தன் மன வருத்தத்தை அந்த திருச்செந்தூர் முருகனிடம் முறையிடும் போது, அவளுக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது. தன் மனதில் கற்பனை செய்து வைத்திருக்கும் ஆசைகள் எல்லாம் நிஜமாக நடக்கும் என்று நம்ப தொடங்குகிறாள். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இந்த பாடல்.

"கண்கள் இரண்டை வேலென எடுத்து கையோடு கொண்டானடி
கன்னி என் மனதில் காதல் கவிதை சொல்லாமல் சொன்னானடி"

அவனுக்கு எழுதும் கடிதத்தில், தான் கண்களை இழந்தவள் என்பதை ஒரு குறையாக எழுதாமல், அது உன்னிடம்தான் இருப்பதாகவும், திருமண நாள் அன்றே ஒரு வார்த்தை பேசமால் சென்றவனை பற்றி ஒன்றும் சொல்லாமல், அவன் தன் மனதில் யாருக்கும் தெரியாமல் ஒரு காதல் கவிதையே சொல்லி இருக்கிறான் என்று அவன் தன்னை வருத்தத்தில் விட்டு சென்றதை ஒரு குறையாக எழுதாமல் எத்தனை நிறைவாக எழுதுகிறாள்.

"வாராமல் வந்தவன் பாவை உடலை சேராமல் சென்றானடி"

கண்களை இழந்த தனக்கு திருமணம் ஆகுமா? என்று எண்ணி எண்ணி ஏங்கிய அவளுக்கு இறுதியில் திருமணம் ஆகிறது. ஆனால் அவளின் இனிய இல்லற வாழ்கை இனிதாக தொடங்கும் முன்பே அவன் சென்று விடுவதை கண்ணதாசன் அவர்கள் இந்த வரிகளில் எத்தனை கண்ணீருடன் அவள் சொல்வதாக எழுதி இருக்கிறார்.

"நாளை வருவான் நாயகன் என்றே..............."

நல்லோர்களின் ஆசியில் நடந்த இந்த திருமணம் தோல்வி அடையாது என்றும், அவனின் கடிதங்களே அவன் நேரிடையாக வரும் வரை தனக்கு ஆறுதல் என்றும், அவன் வரும் அந்த இனிய நாளுக்காக அவள் எப்பொழுதுமே காத்திருப்பதாகவும், அவன் தன்னை நிச்சயம் வாழ வைப்பான் என்று உறுதியாக நம்புவதாகவும் கடிதத்தை முடிக்கிறாள்.

பி.பி.எஸ். & சுசீலா இருவரும் இணைந்து பாடிய பாடல்கள் அனைத்துமே மிகவும் இனிமையானவை. இந்த பாடலும் அந்த இனிமையில் கலந்த ஒன்றுதான். இந்த பாடலின் இறுதியில் பி.பி.எஸ் பாடும் வரிகளில் 'சொல்வானடி', இதில் வரும் 'செ' என்ற எழுத்தையும், 'செந்தூர் முருகன்' இதில் வரும் அந்த 'செ' என்ற எழுத்தையும் பி.பி.எஸ். அவர்கள் அழுத்தமாக உச்சரிப்பதே ஒரு தனி அழகாக இருக்கும்.

இந்த பாடலை மெல்லிசை மன்னர் இதமாக இசை அமைத்திருக்கிறார். பாடலின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை வரும் அந்த புல்லாங்குழலும், வயலினும் நம் மனதுக்கு ஆறுதல் தருவது போலவே இருக்கும். பாடலின் ஒவ்வொரு சரணத்தை முடித்து பின்பு பல்லவி துவக்கும் முன் வரும் அந்த ஒரு சிறிய புல்லாங்குழலின் இனிமை வெகு அருமை. இந்தபடத்தில் இறுதிவரை அமைதியே கிடைக்காத கதையின் நாயகிக்கு இந்த பாடல் வரிகள் மூலம் கண்ணதாசன் அவர்களும், இசையின் மூலம் மெல்லிசை மன்னரும் 'சாந்தி' அளித்திருக்கிறார்கள். நம்முடைய மனதிற்கும் இந்த பாடல் ஒரு இதமான உணர்வைத் தரும்.
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Mon Feb 11, 2008 4:00 pm    Post subject: Reply with quote

A beautiful writeup on a melodious song Ms. Meenakshi . Shanti has songs which are totally different in genre……..Yaar andha nilavu ….. everyone knows the situation……Nadigar Thilagam pondering on how to express his indifference to Vijayakumari…… Nenjathile nee netru vandhaai…. A song with whistle replies…moves us to a romantic mood……and this song of yours…..Nobody can express the mood of song like the Master….IMO, we are really missing such nice family stories & themes with some ethical values ……Will not be surprised if the theme of this movie is also remade as currently there is a large gap in such creative themes….
Thanks for the writing ……. PS and PBS have given their best…one of the best songs of this combination……like Madura nagaril thamiz sangam !
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Tue Feb 12, 2008 11:20 am    Post subject: Reply with quote

மீனாக்ஷி மேடம்,

"செந்தூர் முருகன் கோவிலிலே" பாடல் பற்றிய தங்கள் அல்சல் அருமை. நான் மிக விரும்பும் பாடல் இது.

இதே பாடல் இன்னொரு விதமாகவும் இருக்கிறது. சுசீலா மட்டும் பாடுவதாக அமைந்தது. டியூன் ஒன்று ஆனால் முன், இடை இசைகள் வேறு.

ஆனால் அருமை ! இதெல்லாம் மெல்லிசைமன்னருக்கு அனாயாசம்.
மனுஷன் பிய்த்து உதறியிருப்பார்.

அந்த version ஐக் கேட்டுப்பாருங்கள். பிரமாதமாக இருக்கும்.

ராம்கி.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Tue Feb 12, 2008 8:09 pm    Post subject: Reply with quote

நன்றி ராம்கி அவர்களே,

நானும் இந்த பாடலை கேட்டிருக்கிறேன். மிகவும் அருமையாக இருக்கும். இது போலவே 'புதிய பறவை' படத்தில் வரும் 'பார்த்த ஞாபகம் இல்லையோ' மற்றும் 'உன்னை ஒன்று கேட்பேன்' இந்த இரண்டு பாடல்களையும் மெல்லிசை மன்னர் சிறிது வித்தியாசமான இசையில், சுசீலா அவர்கள் மெதுவாக பாடுவதாக அமைத்திருப்பார். இந்த இரண்டு விதமாக அமைக்கப்பட்ட பாடல்களில் எது அருமை என்று நம்மை சிறிதும் சிந்திக்க வைக்காமல் இரண்டையுமே சிறப்பாக செய்திருக்கிறார். இதெல்லாம் மெல்லிசை மன்னரின் தனி முத்திரை. இவை எல்லாம் அமைதியான நேரத்தில் நம்மை கேட்க தூண்டும் பாடல்கள் என்பது என் கருத்து.
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group