"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

News :: Vairamuthu about MSV

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery
View previous topic :: View next topic  
Author Message
Ramesh.P



Joined: 07 Dec 2006
Posts: 177
Location: Chennai

PostPosted: Sat Jul 28, 2007 6:21 pm    Post subject: News :: Vairamuthu about MSV Reply with quote

Please read this edition kumudam VAIRAMUTHU KELVI PADHIL. excellent reply from vairamuthu about MSV. one should preserve for life time.

regards
ramesh

www.kumudam.com
Back to top
View user's profile Send private message Send e-mail Yahoo Messenger
P. Sankar



Joined: 03 Feb 2007
Posts: 142

PostPosted: Sun Jul 29, 2007 9:24 pm    Post subject: Reply with quote

Vairamuthu is a person who has great respects for MSV. There are few people who are good in both - in writings and also while making speeches.
Vairamuthu is one. Could some one bring that specific page in kumudham brought in this forum.

P. Sankar
Back to top
View user's profile Send private message Send e-mail
ramasamysujatha



Joined: 12 Sep 2007
Posts: 19
Location: Bangalore

PostPosted: Wed Sep 19, 2007 2:59 pm    Post subject: Reply with quote

MSVians,

Please keep Tamil Scripts of Vairamuthu's answer about MSV. It will impact us more Smile
_________________
A Great MSV Dasan (Ekalaivan)
Back to top
View user's profile Send private message
irenehastings
Guest





PostPosted: Thu Sep 20, 2007 2:18 pm    Post subject: Reply with quote

From Kumudam 'KavippErarasu Vairamuthu ' bathilgal

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் பற்றி உங்கள் மதிப்பீடு?

Vairamuthu:

மும்பையில் (பழைய பம்பாயில்) ஒரு மெல்லிசை நிகழ்ச்சி. மெல்லிசை மன்னரின் இசைமழையில் அரங்கம் மிதக்கிறது ஆனந்தத் தெப்பத்தில். மேடைக்கு ஒரு துண்டுத்தாள் வருகிறது. அதில் இருந்த செய்தி இதுதான். ‘ஓடம் நதியினிலே’ பாடுங்கள், எழுதியவர் யாரென்று பார்க்கிறார்கள். ‘இப்படிக்கு நௌஷாத்’ என்றிருக்கிறது. ‘அய்யோ… இது நேயர் விருப்பமல்ல. கடவுள் விருப்பம்’ என்று கும்பிடுகிறார் மெல்லிசை மன்னர்.

இப்படி இசைமேதைகளையே சுரக் கயிறுகளால் கட்டிப்போட்ட-வரல்லவா மெல்லிசை மன்னர்! எத்தனை மோதிரங்கள் பூட்டுவது அந்த வித்தக விரல்களுக்கு?

அறுபதுகளின் ஆகாயத்தையே தன் ஆர்மோனியத்துக்குள் அடைத்-துப் போட்ட அந்த ஆளுமையைச் சொல்லவா?

உணரமட்டுமே முடிந்த உணர்ச்சி-களுக்கு சப்த வடிவம் கொடுத்த சக்கரவர்த்தி என்று சொல்லவா?

தம்புராவின் சுதியிலேயே ஒரு மொத்தப் பாட்டும் அமையவேண்டும் என்று இயக்குநர் கேட்டபோது, ‘பொன்னென்பேன்… சிறு பூ வென்பேன்’ என்று பாடி முடித்த படைப்பாற்றலைச் சொல்லவா?

‘சிந்துநதியின் மிசை நிலவினிலே’ என்ற பாரதி பாட்டுக்கு இசை-யமைத்தபோது, ஒரு கவிஞன் எழுத எத்தனிக்கும் முணுமுணுப்பிலிருந்து இசையமைத்தால் என்ன என்ற உத்தி படைத்த புத்தியைச் சொல்லவா?

‘ஆடை முழுதும் நனைய நனைய மழை-யடிக்குதடி’ என்ற பாடலின் இணைப்-பிசையில், அழுகை வாத்தியம் என்று அறியப்பட்ட ஷெனாயில் ஆனந்தத் தாண்டவம் வாசித்த அதிசயத்தைச் சொல்லவா?

உப்புச் சப்பில்லாத படங்களுக்-கும் வஞ்சகமில்லாமல் வாசித்த வள்ளன்மை சொல்லவா?

‘என் பெயரே எனக்கு மறந்து-போன இந்த வனாந்தரத்தில்’ என்ற என் கவிதைக்கு இசையமைத்து இந்தியாவிலேயே புதுக் கவிதைக்கு இசை யமைத்தவர் என்ற புதுமை புரிந்ததைச் சொல்லவா!

வார்த்தைகள் பாடப்படும்போது ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்’ என்று வாத்தியங்களை ஒதுக்கிவைத்துத் தமிழுக்குத் தலைமை தந்த தகைமை-யைச் சொல்லவா!

பிறப்பு ,இறப்பு ,தாலாட்டு ,ஒப்பாரி , காதல்,பிரிவு, கண்ணீர் ,புன்னகை ,விரக்தி ,நம்பிக்கை, வெற்றி ,தோல்வி
என்று வாழ்வின் சகல உபநதிகளையும் தனக்குள் வாங்கி வைத்துக்கொண்ட சமுத்திர-மல்லவா மெல்லிசை மன்னர்!எல்லாவற்றுக்கும் மேலாய் தன் இசைக்குத் தமிழூட்டிய கவிஞனை மறவாத நன்றியாளர்; இசை நிழல்; தமிழே நிஜம் என்னும் பெருந்தன்மை-யாளர்.

எம்.எஸ்.வி மூன்றெழுத்தில் ஏழுசுரம்.

நூற்றாண்டுகளுக்குப் புகழ்சேர்த்த-வர் நூறாண்டுகள் வாழட்டும் !

(Copy & Paste from other website)
Back to top
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group