 |
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
VaidyMSV & Sriram Lax Maniac
Joined: 15 Apr 2007 Posts: 852 Location: chennai
|
Posted: Tue Oct 27, 2015 6:27 pm Post subject: TFM JOURNEY THROUGH MSV - SEVVEL |
|
|
COLLECTED FROM INTERNET
எம்..எஸ்.விஸ்வநாதனை முன் வைத்து தமிழ் திரை இசை வெளியினூடே ஓர் பயணம் -1– செவ்வேள்
on July 17 | in களிப்பு, சினிமா, தொடர், வரலாறு | by admin | with No Comments
1950-களின் ஆரம்ப வருடங்கள், 51-ம் ஆண்டு பி.யு.சின்னப்பா மரணமடைந்தார். சிறை வாழ்க்கைக்கு பிறகு தியாகராஜ பாகவதருக்கு இறங்கு முகம். பாபநாசம் சிவன் மெதுவே திரையுலகிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார். திராவிட-இயக்க படைப்பாளிகளின் தாக்கம் பெருகிக்கொண்டிருந்தது. இசையுலகில் ஏ.வி.எம் தட்டு சுதர்சனத்தையும், பாரதியாரையும் மூலதனமாக கொண்டு பெரும் பொருளை ஈட்டிக்கொண்டிருந்தது.
ஜி.ராமநாதன் உச்சத்தில் இருந்தார் . கே.வி. மகாதேவன் இடைவிடாது பணிபுரிந்து கொண்டிருந்தார். எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கோவிந்த ராஜுலு நாயுடு, ராஜேஸ்வர ராவ் பாண்டுரங்கன், எஸ்.வி. வெங்கட்ராமன், பார்த்தசாரதி, வி.தக்ஷிணாமூர்த்தி, எஸ்.தக்ஷிணாமூர்த்தி, மற்றும் டி.ஆர்.பாப்பா பொன்றோர் களத்தில் இருந்தார்கள் மிகவும் ஆரோக்கியமான போட்டி திரையிசை உலகில் விரவியிருந்தது. வித்தையிலும், புகழிலும் உச்சத்தில் இருந்த சி.ஆர்.சுப்பராமன் தன் 28-வது வயதில் மரணமடைந்தார்.
சி.ஆர்.சுப்பராமன் – 1924- 1952
பூர்வீகம் ஆந்திரா என்றாலும் சுப்பராமன் திருநெல்வேலியில் உள்ள சிந்தாமணி கிராமத்தில்தான் 1924-ம் ஆண்டு பிறந்தார். கும்பகோணத்தை சேர்ந்த நாதஸ்வர வித்துவானிடம் இசை பயிற்சி பெற்றார். பின்னர் வியக்கும் அளவுக்கு தன்னுடைய 14-வது வயதில் ஹார்மோனியத்தில் நிபுணத்துவத்தை அடையப் பெற்றார். அவருக்கு 16 வயது நடக்கும் போது ஜி.ராமநாதன் அவர்களின் சகோதரர் சுந்தர பாகவதரின் சிபாரிசின் பேரில்HMV நிறுவனத்தில் ஹார்மோனிய வாத்தியக்காரராக வேலைக்கு சேர்ந்தார். HMV நிறுவனத்தில் புகழ் பெற்ற இசை அமைப்பாளர் எஸ்.ராஜேஸ்வர ராவும் அங்கே பணி புரிந்து கொண்டிருந்தார். அப்போதே சுப்பராமன் திருவல்லிக்கேணியில் ஆசிரியர் ஒருவரிடம் பியானோ கற்றுக்கொண்டிருந்தார்.
சுப்பராமன் இராக்காலங்களில் கீர்த்தனைகளை பாடும் வழக்கம் கொண்டிருந்தார். அப்படி அவர் பாடுகையில் அவருக்கு பக்க-வாத்தியமாக இளைஞர் ஒருவர் வயலின் வாசித்துக் கொண்டிருப்பார். அந்த இளைஞரும் HMV நிறுவனத்தில்தான் ஊழியம் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால், தற்காலிக உத்தியோகம். அந்த வயலின் இளைஞனின் திறமையை அறிந்த சுப்பராமன் நிறுவனத்திடம் பேசி அவர் வேலையை நிரந்ததரமாக்கினார். அவரை தன்னுடைய பிரத்தியேக உதவியாளராக வைத்துக்கொண்டார். அந்த இளைஞர்தான் பிற்காலத்தில் பெரும் புகழ் பெற்ற மெல்லிசை இரட்டையர்களில் ஒருவரான டி.கே. ராமமூர்த்தி.
HMV நிறுவனம் அப்போது தனக்கென சின்னையா என்பவரின் தலைமையில் இசைக்குழு ஒன்றை பிரத்தியேகமாக நடத்திக்கொண்டிருந்தது. அவ்வமயம் தமிழ்நாடு டாக்கீஸ் என்ற படக்கம்பனி தான் எடுக்கப்போகும் தெலுங்கு படமான ‘செஞ்சு லட்சுமி’க்காக இசைஅமைக்க HMV நிறுவனத்தை அணுகியது. ஏற்றுக்கொண்டது HMV சின்னையா இசைஅமைப்பாளர் ஆனார்.
ஆனால் படத்திற்கான இசை அமைப்பு வேலைகள் தொடங்கிய நிலையில் உடல் நிலை காரணமாக படத்தில் இருந்து விலகிக்கொள்ள நேர்ந்தது. மற்றொரு சீனியரான எஸ்.ராஜேஸ்வர ராவ் தவிர்க்க முடியாத காரணங்களால் தானும் விலகிக்கொள்ள பொறுப்பு சுப்பராமனின் தலை மீது விழுந்தது. சுப்பராமன் செஞ்சு லட்சுமியின் இசைஅமைப்பாளர் ஆனார். படத்தில் கர்நாடக இசையையும், லத்தீன் அமெரிக்க இசையையும் கலந்து இசை அமைத்து இருந்தார். படம் பெரிய வெற்றியை ஈட்டியது. படத்தின் பாடல்கள் பெரிதும் பேசப்பட்டன. சுப்பராமன் ஒரே இரவில் நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்தார்..
வளரும்…
எம்.எஸ்.விஸ்வநாதனை முன் வைத்து தமிழ் திரை இசை வெளியினூடே ஓர் பயணம் -2– செவ்வேள்
on July 20 | in களிப்பு, சினிமா, தொடர், வரலாறு | by admin | with No Comments
செஞ்சு லட்சுமி வெற்றி பெற்றிருந்த சமயத்தில் HMV நிறுவனத்தின் இசைக்குழுவின் தலைவர் சின்னையா மரணமடைந்தார். சுப்பராமன் HMV இசைக்குழுவின் தலைமை பொறுப்பை ஏற்றார். அந்த கால கட்டத்தில் அவர் அமைத்து கொடுத்த இசை கார்வைகள் மிகவும் பிரபலமடைந்தன. HMV நிரம்ப பொருளை ஈட்டியது. சுப்பராமன் மேலும் செல்வாக்கு பெற்றார். ஆனாலும் உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்காமல் போய் கொண்டிருந்ததால் அவர் HMV-இல் இருந்து விலக நேர்ந்தது. பின்னர் முழு நேர இசைஅமைப்பிற்கு தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தார்.
செஞ்சு லட்சுமியின் வெற்றிக்கு பிறகு அன்றைய திரையுலக பிரும்மாண்டம் எம்.கே.தியாகராஜ பாகவதரிடம் இருந்து சுப்புராமனுக்கு அழைப்பு வந்தது . அவரது வெளி வரப்போகும் ‘உதயணன்’ படத்திற்காக இசை அமைக்குமாறு எம்.கே.டி அவரை கேட்டுக்கொண்டார். பாகவதிரின் அழைப்பு அவரை வெகுவாக உற்சாகப் படுத்தியது. ‘உதயனனுக்காக கடுமையாக உழைக்க ஆரம்பித்தார்.
லட்சுமி காந்தனின் கொலை சுப்பராமனின் வாழ்க்கையிலும் நுழைந்தது . தமிழரின் வாசக ரசனையின் திருவிளையாடல்கள்தான் எத்தனை பேரின் விதியை தீர்மானித்திருக்கிறது. பாடல் பதிவு தினத்தன்று பாகவதர் ஸ்டுடியோவிலிருந்து திடீரென வெளியேறினார். எம்.கே.தியாகராஜ பாகவதர் அன்று மாலை கைது செய்யப்பட்டார்.படத்திலிருந்தும் அவர் விலக நேர்ந்தது, அவர் இடத்தில் ஜி.என்.பி நுழைந்தார். உதயணன் படத்திலிருந்து சுப்பராமனும் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சி.எஸ்.ஜெயராமன் பணியாற்றினார். காத்திருப்பின் கொடிய நிழலில் சுப்பராமன் இளைப்பாற நேரிட்டது.
1943-ம் ஆண்டு முதல் படத்திற்கு இசை அமைத்திருந்தாலும் அடுத்த படத்திற்கு சுப்பராமன் வெகு நாட்கள் காத்திருந்தார். யுத்த காலமாதலால் ஃபிலிம் கச்சா பொருளுக்கு பெரிய தட்டுப்பாடு இருந்தது. நிறைய படங்கள் வெளிவரவில்லை. 1946-ம் ஆண்டு ஜகதீஷ் ஃபிலிம்சாரின் ‘லவங்கி’ திரைப்படத்திற்கு பாண்டுரங்க சாஸ்திரியுடன் இணைந்து இசை அமைத்தார். பிறகு அவரது வண்டி சீராய் ஓட ஆரம்பித்தது.
ஐந்து வருடம் வாழ்ந்தவனும் இல்லை , 5 வருடம் தொடர்ந்து சோர்ந்தவனும் இல்லை தமிழ் திரைப்பட முதுமொழிக்கேற்ப, சுப்பராமனின் வாழ்விலும் வசந்தம் எனும் புளிச்சை வீசத் தொடங்கியது. பி.பானுமதி அம்மையாரின் பரணி பிக்சர்சின் தெலுங்கு படமான ‘ ரத்னமாலா’ சுப்பராமனுக்கு ஒரு திருப்புமுனை. ஒரு பக்கத்தில் வித்தையின் வீர்யம், மறு பக்கத்தில் மரணத்தின் அழைப்பு. தமிழ் புளிச்சை படி கலை பொங்க வேண்டும் அல்லவா, பொங்கிற்று.
இணைந்தும், தனித்தும் இசை அமைக்கத் தொடங்கினார். இந்தியா சுதந்திரம் பெற்றது. என்.எஸ்.கே ஃபிலிம்சுக்காக ‘பைத்தியக்காரன்’, லட்சுமி காந்தன் கொலை வழக்கிலிருந்து மீண்டு வந்த என்.எஸ்.கே- விற்கு பைத்தியக்காரன் பெரும் ஆறுதல். 1948
‘பைத்தியக்காரன்’ படத்திற்கு பிறகு கண்டசாலாவின் திரைப்படகம்பெனியான பிரதிபா ஃபில்ம்சுக்காக ‘பாலராஜு’ என்ற படத்திற்கு இசை அமைத்தார். அதே கம்பெனிக்காக சுப்பராமன் 1950-ம் ஆண்டு தமிழிலும், தெலுங்கிலும் வெளியான ‘ஸ்வப்ன சுந்தரி ‘ படத்திற்கு இசை அமைத்தார்.
பின்னர் ஜுபிட்டர் பிக்சர்சுக்காக எம்.ஜி.ஆர் நடித்த ‘அபிமன்யு’ படத்திற்கும், மோகினி என்ற திரைப்படதிற்கும் அவர் இசை அமைத்தார். நாளுக்கு நாள் அவர் இசையில் மெருகு ஏறிக்கொண்டே வந்தது. இந்த இரண்டு படங்களிலும் சுப்பராமன் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவுடன் இணைந்து இசை அமைத்தார்.
பாகவதர் லட்சுமிகாந்தன் கொலைக்காக சிறை சென்று மீண்டார். நெருங்கியவர்களை சந்திப்பதை தவிர்த்தார். கோவில், குளம் என ஒருவருட காலம் சுற்றினார். வெற்றிப்படம் ஒன்றை தந்து விட வேண்டும் என்ற கட்டாயத்தில் தன்னை தள்ளிக்கொண்டார். தனது சொந்த நிறுவனமான நரேந்திரா பிக்சர்ஸ் பேனரில் ‘ராஜ முக்தி’ என்ற படத்தை எடுக்க முடிவு செய்தார். பெரிய டீமை உருவாக்கினார்.
பாகவதர், செருகளத்தூர் சாமா, எம்ஜியார், பி.எஸ்.வீரப்பா, பி.ஜி.வெங்கடேசன், எம்.ஆர். சுவாமிநாதன், பி.பானுமதி, வி.என். ஜானகி, ராஜகாந்தம் போன்றோர் பிரதான வேடங்களில் நடித்தனர். கதை எஸ்.ஆர். கிருஷ்ண ஐய்யங்கார், வசனம் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன், புதுமைப்பித்தன் படம் முடிவதற்கு முன்பே மரணிக்க நேர்ந்தது. சிறு வயதிலேயே அவர் மறைந்தார். பாடல்கள் பாபநாசம் சிவன், இசை சி.ஆர் .சுப்பராமன் . படத்தை ராஜா சந்திரசேகர் இயக்கினார்.
படப்பிடிப்பு முழுவதும் பூனாவில் பிரபாத் ஸ்டுடியோஸ்- இல் நடைபெற்றது. படத்தின் பெரும்பான்மையான தொழில் நுட்ப கலைஞர்கள் பிரபாத் ஸ்டுடியோவை சார்ந்தவர்கள்தான். படம் முடிவடைந்தது. படம் வெளி வருவதற்கு முன்பே இசை தட்டுகள் விற்பனை ஆயின. மொத்தம் 14 பாடல்கள். எம்.எல்.வசந்தகுமரியை இந்த படத்தில் சி.ஆர்.சுப்பராமன் பாடகியாக அறிமுகம் செய்து வைத்தார். 1944-ல் வெளியான ஹரிதாஸ் பிரும்மாண்டமான வெற்றியை பெற்றது. அதற்கு பிறகு 4 ஆண்டுகள் கழித்து வெளியாகும் தியாகராஜ பாகவதரின் படம் ‘ராஜ முக்தி’. பாகவதரின் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த படம் திட்டமிட்டவுடன், கூடவே வதந்திகளும் புழங்கத் தொடங்கின. பாகவதருக்கு வழுக்கை விழுந்து விட்டது, அவர் தன் வெண்கல குரலை இழந்து விட்டார் என்பதாக வதந்திகள் பரவின. தியாக ராஜ பாகவதர் ‘ராஜ முக்தி’யை பெரிதும் எதிர்பார்த்தார்.தன் தொழில் போக்கை படம் நிமிர்த்திவிடும் என்று நினைத்தார். படம் ஏமாற்றியது. தனிமையின் சோகத்தில் பாகவதர் சுருண்டு கிடந்தார். அவரது பிம்பம் பேராழத்திற்குள் வீசி எறியப்பட்டது.
வளரும் ..
Moreசி.ஆர். சுப்பராமன் -1949
1949-ம் ஆண்டு, சுப்பராமன் 25-வயதை எட்டினார். திரைத்துறைக்கு வந்து 6 வருடங்கள் முடிந்து விட்டன. அதற்குள் அன்றைய திரையுலக ஜாம்பவான்களான எம்.கே.டி, பி.யு.சின்னப்பா, பி.பானுமதி, ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எஸ்.வி.வெங்கட்ராமன், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் பாபநாசம் சிவன் இவர்களுடன் பணிபுரிந்து விட்டார்.
1949-ம் வருடம் பி.யு.சின்னப்பாவுடன் இரண்டு படங்கள், ரத்னகுமார் மற்றும் மங்கையர்க்கரசி. ரத்னகுமாரில் ஜி.ராமநாதனுடன் சேர்ந்து இசை அமைத்திருந்தார். மங்கையர்க்கரசியில் ஜி.ராமநாதன் மற்றும் குன்னக்குடி வெங்கட்ராமன் ஐயர் இவர்களோடு இணைந்து இசை அமைத்தார்.
பி.யு.சின்னப்பா, பானுமதி, மற்றும் எம்ஜியார் நடித்த ரத்னகுமார் பெட்டிக்குள் சுருண்டது. ரத்னகுமார் தோற்றது, மங்கையர்க்கரசி வென்றாள்.. பி.யு.சின்னப்பா-கண்ணாம்பா ஜோடியாக நடித்த மங்கையர்க்கரசி பெரிய வெற்றியை பெற்றது. இதில் பி.யு.சின்னப்பா பாடிய ‘காதல் கனிரசமே’ என்ற பாடல் பெரிய வரவேற்பை பெற்றது. காலம் கடந்து இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டுதான் ஒரு உலகப் புகழ் பெற்ற காதல் காவியம் சுப்பராமனின் இசை அமைப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளி வந்தது. அது தான் “லைலா மஜ்னு”. தெலுங்குப் படத்துக்கான பாடல்களை சமுத்ராலா ராகவாசார்யா எழுத தமிழ்ப் பதிப்பின் பாடல்களை கம்பதாசன் எழுதினார்.
நடிகை பானுமதி ராமகிருஷ்ணாவின் சொந்தத் தயாரிப்பில் பரணி பிக்சர்ஸ் சார்பில் பி.எஸ். ராமகிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் பானுமதியுடன் ஏ. நாகேஸ்வர ராவ் இணைந்து நடித்தார். படம் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட். படத்தில் மொத்தம் பதினெட்டு பாடல்கள். பாடல் இசையிலும் பின்னணி இசையிலும் தனி முத்திரை பதித்தார் சுப்பராமன்.
“வான்மதி வான்மதி வான்மதி எனது உயிர் உருகும் நிலை சொல்லுவாய் நீ வான்மதி” என்று தொடங்கும் சோகமான டூயட் பாடலை பி. பானுமதியும் கண்டசாலா அவர்களும் பாட பாடல் மெட்டிலும் அதற்கான இணைப்பு இசையிலும் இனிமையை அப்படியே அழகுறச் சொட்டவிட்டிருந்தார் சுப்பராமன்.
சுப்பராமன் தான் மரணிக்கும் வரை பரணி பிக்சர்ஸின் அனைத்து படங்களுக்கும் தானே இசை அமைத்தார். 1949-ம் வருடம் சி.ஆர். சுப்பராமனை சிகரத்தின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றது. தமிழ்ப் பட உலகிலும் சரி, தெலுங்குப் பட உலகிலும் சரி அனைவராலும் தவிர்க்க முடியாத ஒரு இசை அமைப்பாளராக அவர் திகழ்ந்தார். வசதி வாய்ப்புகளும் வந்து குவிய ஆரம்பித்தன.
இந்த ஆண்டு தான் ஜுபிடர் பிக்சர்சின் “வேலைக்காரி” படமும், “கன்னியின் காதலி” படமும் மற்றும் என்.எஸ். கிருஷ்ணனின் “நல்ல தம்பி” படமும் வெளிவந்தன.
வேலைக்காரி மற்றும் நல்லதம்பி ஆகிய படங்களுக்கு தனித்தும், கன்னியின் காதலி படத்துக்கு ஜுபிடர் பிக்சர்ஸின் ஆஸ்தான வித்வான் எஸ்.எம். சுப்பையா நாயுடுவுடன் இணைந்தும் இசை அமைத்திருந்தார் சுப்பராமன்.
அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் உருவான “வேலைக்காரி” திரைப்பட உலகில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்திய திரைப்படம். கே. ஆர். ராமசாமி, வி.என். ஜானகி, எம். வி. ராஜம்மா, டி. எஸ். பாலையா ஆகியோரின் நடிப்பில் சாதனை படைத்த படம் இது.
ஹிந்துஸ்தானி ராகங்களில் சுப்பராமனுக்கு இருந்த அபரிமிதமான ஈடுபாடு “வேலைக்காரி” படப் பாடல்களில் வெளிப்படுகிறது. மாண்ட், அமீர்கல்யாணி, தேஷ், ஜோன்புரி, பீம்ப்ளாஸ், யமன்கல்யாண் போன்ற ராகங்களை அழகாக கையாண்டிருக்கிறார் சி. ஆர். சுப்பராமன்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற “ஓரிடம் தனிலே நிலை இல்லாதுலகினிலே உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே” – என்ற லலிதா-பத்மினியின் நடனப்பாடலை அருமையான முறையில் கீரவாணி, ஹமீர் கல்யாணி ஆகிய ராகங்களின் அடிப்படையில் வெகு ஜனரஞ்சகமாக இசை அமைத்திருந்தார் சி.ஆர். சுப்பராமன். கே.வி. ஜானகி – பி. லீலா இருவரும் இணைந்து பாடி இருந்தார்கள். அமோக வரவேற்பைப் பெற்ற பாடலாக இந்தப் பாடல் அமைந்தது.
அதே போல கதாநாயகன் கே.ஆர். ர _________________ vijayakrishnan |
|
Back to top |
|
 |
parthavi Philiac

Joined: 15 Jan 2007 Posts: 704 Location: Chennai
|
Posted: Thu Oct 29, 2015 9:28 pm Post subject: |
|
|
VK,
This post is incomplete. it ends abruptly in an incomplete word in the middle of a sentence. MSV is yet to make an entry.
The info about CRS is interesting. I wanted to know about CRS's films. I found an answer here. (I have a feeling that MSV was not treated well by CRS. I have a reason for feeling this way but I may be wrong. Is there any indication about how long MSV was under CRS and how their relationship was?)
Pl check and forward the remaining part f the post. _________________ P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/ |
|
Back to top |
|
 |
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|