"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Oomai Pennai Pesa Chonnal Uravo

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Apr 15, 2016 10:15 pm    Post subject: Oomai Pennai Pesa Chonnal Uravo Reply with quote

நாயகி சந்தர்ப்ப வசத்தால் ஒரு காமுகனால் விலைமாதராக வாழ்க்கையில் தள்ளப்படுகிறாள். நாயகன் அவளை எதிர்பாராத விதமாக அவளை சந்திக்கும் போது அவள் நிலை அறிந்து வருந்துகிறான். அவளுக்கு வாழ்வைக் கொடுக்க முன் வருகிறான். அவளுடைய சூழ்நிலை, அதற்கான காரணம் போன்றவற்றைக் கேட்கிறான். அவள் நேரில் சொல்லாமல் நழுவுகிறாள். தன் அறையில் இருக்கும் பொழுது அவள் அங்கே வருவது போன்று ஒரு பிரமை அவனுக்கு ஏற்படுகிறது. அப்போது அவள் அங்கே தோன்றி தன் மனநிலையை பாடலில் சொல்கிறாள். அவனுக்கோ இது உண்மையாய் அவள் சொல்கிறாளா இல்லை தான் ஏதாவது கனவு காணுகிறேனா என புரியாமல் அந்த பிரமையினுள்ளேயே மூழ்குகிறான்.
இந்த சூழ்நிலையில் தான் இந்தப் பாடல் அலைகள் படத்தில் இடம் பெறுகிறது. எஸ்.ஜானகியின் குரலில் இப்படி ஒரு உயிரோட்டமான உணர்வினை நாம் கேட்கும் போது நம்மை நாம் மெய்ம்மறந்து போவது உறுதி.
அவள் நுழைவதைச் சுட்டிக்காட்ட ஒரு Chord. Guitar and Sitar combination. அதனுடனே ஒலிக்கும் ஹம்மிங்குடன் பாடல் துவங்குகிறது.
இப்போது நாயகி அவன் கண் முன் வருகிறாள். அவனுக்கும் அது கனவா இல்லை நினைவா என ஐயம் எழுகிறது., அவன் ஒரு விதமான சந்தேகப் பார்வையுடன் பார்க்கிறான். இதற்கான சூழ்நிலையை இந்த ஹம்மிங்கிலேயே மன்னர் உணர்த்தி விடுகிறார்.
...ஹம்மிங்...ஒலிக்கிறது...
பாடல் தொடங்குகிறது..
ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்னால் உறவோ இது நினைவோ வெறும் கனவோ
மீண்டும் வெறும் கனவோ என ஐயத்தை எழப்புவதன் மூலம் தன் ஐயத்தை அவன் மேலும் திணிக்கிறாள்.
அவனுக்கு தன் சூழ்நிலை என்பது கொஞ்சம் மறக்கும் நிலை ஏற்படுகிறது. உண்மையிலேயே அவள் தான் முன்னால் நிற்கிறாளா என உற்றுப் பார்க்கிறான்.
இதற்குப் புல்லாங்குழலும் குழு வயலின்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவனுடைய இந்த திடுக்கிடும் மனநிலையை சரியாக பிரதிபலிக்கும் வகையில் இந்த இசையமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனி புல்லாங்குழலை ஒருவிதமான மர்ம சூழலை பிரதிபலிக்க மன்னர் பயன்படுத்தியிருப்பது அவருடைய மேதைமையைப் புலப்படுத்துகிறது.
இப்போது சரணத்திற்கு முந்தைய பின்னணி இசை. ஷெனாய் என்னமாய் ஒலிக்கிறது..
(இது போன்ற ஷெனாய் இசையையெல்லாம் நாம் கவனிக்காமலேயே விட்டு விடுகிறோம். எல்லோருக்கும் தெரிந்தவற்றை விட்டு வெளிவந்து இது போன்ற அபூர்வ முத்துக்களைத் தேர்ந்தெடுத்து வெளியுலகிற்கு சொல்வதே மெல்லிசை மன்னருக்கு நாம் செய்யும் சிறந்த பணியாக இருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.)
இப்போது...ஆஹா. தொடரும். அந்த சாரங்கி இசையை எப்படி சொல்வது.. அவனுடைய மன நிலையை - என்ன சொல்வது, என்ன செய்வது ஒன்றுமே தெரியாமல் விழிக்கும் த்த்தளிக்கும் மனநிலையை அந்த சாரங்கி சொல்கிறது.. அவளை சந்தித்த சூழலை சொல்கிறது...
இப்போது வயலின் மிகவும் குறைந்த மாத்திரை இடைவெளியிலும் சரணத்தை இணைக்கிறது. அதோடு அவள் மனதையும்...
இப்போது அவள் அவனை சந்தித்த அனுபவத்தை சொல்கிறாள்..
கூண்டுக்கிளியாக வாழ நினைத்தேன்.. தாங்கும் கை ஒன்று கண்டேன்...
அவளுக்கு அடைக்கலம் கொடுக்க அவன் முன் வந்ததை அவள் மனம் இவ்வாறு சொல்கிறது. கவியரசரின் பங்கிற்குக் கேட்கவா வேண்டும்.
இப்போது அவள் முகத்தில் வடியும் கண்ணீரை ஒரு கை துடிக்கிறது.
இங்கே இயக்குநரின் பங்கினை நாம் காண்கிறோம். அந்தக் கை யாருடையது என காட்டவில்லை.
அவள் அவனைத் தான் சொல்கிறாளா என்ற ஐயத்தை எழுப்பும் வகையில் இந்த கை மட்டும் திரையில் காட்டப்படுகிறது..
அது யாருடையதாக இருக்கும் என்ற ஐயத்தை பாடலைக் கேட்போர் பார்ப்போர் அறிய வேண்டாமா.. அதற்கு அந்த மர்மத்தை சொல்ல மீண்டும் புல்லாங்குழல் இங்கே...
இது வரை இருந்த தாளம் மாறி இப்போது தபேலா துவக்கம்...
இப்போது அந்த மர்மத்தை உடைத்து அந்த வரியை மீண்டும் பாடியபடியே அவள் அவனைப் பார்க்கிறாள். அவனுக்கு மனம் ஒரு நிலைக்கு வருகிறது..
இதற்குத் தான் தபேலா பயன்படுத்தினாரா மன்னர்.. கேள்வி எழுகிறதல்லவா...
நின்றன சொர்க்கங்கள் என் வாழ்வில் என்று ஓடி வர நோக்கி நின்றேன்...
தன் மனதில் எழுந்த சலனத்தை அவள் வெளிப்படுத்துகிறாள். தனக்கு ஓர் ஆறுதல், புகலிடம் கிடைத்த்து என்று மனம் லேசானதை வெளிப்படுத்துகிறாள். அதை எதிர்பார்ப்பதாக உணர்த்துகிறாள். இப்போது அவளுக்கு அது கோயிலாகத் தெரிகிறது. இதனை உணர்த்தும் வகையில் திரையில் ஒரு கோபுரம் நிழலாக மேலெழும்புகிறது...
இத்தனையும் நினைவு தானோ இல்லை கனவாகப் போய் விடுமோ என்று அவளுக்கு மனதில் ஓர் ஆதங்கம்.. இப்போது மிருதங்கம் (அல்லது டோலக்?) ஒலிக்கிறது.
பல்லவி ஒலிக்கிறது. முடியும் போது அவள் திரையிலிருந்து மறைகிறாள். அவன் அவள் மறையும் திசையைப் பார்க்கிறான்.
இப்போது முதலில் அவளை சந்தித்த போது ஏற்பட்ட கசப்பான நிகழ்வு அவன் மனத் திரையில் நிழலாடுகிறது. இது மறக்க வேண்டிய சம்பவம் என்பதாக அவன் முகத்தை திருப்பிக் கொள்கிறான். இதை சித்தரிக்க இங்கே மீண்டும் ஷெனாய்.. மனத்திரையில் இக்காட்சி முடியும் போது மிக்க் குறைந்த மாத்திரை அளவிற்கான நேரத்திற்குள் ஒரு சாரங்கி மீண்டும் ஒலிக்கிறது.
இந்த சாரங்கி அவள் உள் மனதை உலுக்குவதற்கு பயன்படுத்தப் பட்டுள்ளது. அவள் பாடுகிறாள். தன் மனசாட்சியை வெளிப்படுத்துகிறாள்.
பெண்ணின் மனசாட்சி பேசும் பொழுது என்னை நீ காண முடியும்...
இந்த வரியின் மூலம் ஏராளமான விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அவளால் பேச முடியாத நிலை. அவள் பேசும் பொழுது அவனைப் பற்றிய அவளுடைய உயர்ந்த எண்ணங்களைக் கூறுவாள். அதற்கான சந்தர்ப்பம் வரும் என்கிற நம்பிக்கை.. இத்தனையும் இந்த ஒரு வரியில்... கவியரசராயிற்றே...
முடியும் என்கிற பொழுது ஜானகியின் குரலில் வெளிப்படும் அந்த சங்கதிகள், அவள் மன நிலையை சொல்வதில் அவளுக்குள்ள உறுதியான நிலைப்பாட்டை சொல்வதாய் அமைத்திருக்கிறார்.
ஒவ்வொரு சங்கதிக்கும் மன்னர் ஒரு காரணம் வைத்திருப்பார் என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா..
கேயில் தீர்த்தங்கள் அபிஷேகமானால் எண்ணம் உனைத் தேடி அடையும்...
இரண்டாம் முறை அடையும் சொல்லும் போது அந்த ம்.. எழுத்திற்கு சங்கதி.. இங்கும் அவள் மன உறுதியை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் அவள் மனம் ஏங்குகிறது. இது நினைவோ வெறும் கனவோ..
ஆனால் இந்த முறை அது ஏக்கமாக பிரதிபலிக்கிறது. இது நினைவாக இருக்கக் கூடாதா என அவளுக்குள்ளேயே கேட்டுக் கொள்கிறாள்.
இப்போது பல்லவிக்குப் பிறகு அடுத்த சரணத்திற்கு முந்தைய பின்னிசை. இருவரின் மனநிலையும் மீண்டும் அல்லாடுகிறது. அதே போல அதை சித்தரிக்க மீண்டும் ஷெனாய், அதைத் தொடர்ந்து சாரங்கி.. பின் இந்த தெளிவற்ற மனநிலையை உணர்த்த புல்லாங்குழல் மீண்டும் ஒலிக்க, சரணம் தொடங்குகிறது..
பாலும் சிலர் கண்ணில் நீராகத் தெரியும் காணும் கண் செய்ய தவறு..
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்கிற வழக்கினை இந்த வரியில் கவியரசர் என்னவாய் வெளிப்படுத்துகிறார். அது அவளுடைய மன நிலை, அவன் அவளை சரியாகப் புரிந்து கொள்ளாத மனநிலை, ஏனென்றால் அவள் அவனுடைய காதலியாய் இருந்தவள் சந்தர்ப்ப வசத்தால் இது போன்ற சூழலில் அவனைப் பார்க்கிறாள், அதைத் தன் மனதின் குரலாய் வெளிப்படுத்துகிறாள்.
பாவங்கள் ஏதேனும் இருந்தால் யாவும் நான் கொண்ட அழகு... என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறாள்..
பல்லவி மீண்டும் தொடர ...
கனவோ கனவோ ... என்று அவளுக்கு மனதிற்குள் இது கனவாகப் போய் விடுமோ என்கிற பயம்... அதனை வெளிப்படுத்தியவாறே மறைகிறாள்..
ஒரு மூன்று நிமிடங்கள் நம்மையும் அவர்களின் உலகத்தில் அழைத்துக் கொண்டு போய் விடுகிறார். மெல்லிசை மன்னர்..
இப்போது நமக்குள்ளும் ஒரு ஐயம் எழுகிறது..
மெல்லிசை மன்னர் மறைந்து விட்டார்... இது நினைவோ அன்றி கனவோ...
வேண்டாம் அவர் மறைவு என்பது கனவு..
அவர் நம்முடன் வாழ்கிறார் என்பது தான் நினைவு..
அது தான் நிஜம்...

https://www.youtube.com/watch?v=aIEPHm7ye6U
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Mon Apr 18, 2016 12:02 am    Post subject: Reply with quote

Dear sir,
A beautiful description of the rare song by our master! It is mysteriously beautiful, and MM has (in all probability) rightly handled this delicately using Madhuwanti (I feel that there are more occurrences of this raaga; I may be corrected). The accompanying instruments have, in fact, added the very same feelings listed by you, I can feel now after reading your notes. Your valuable additions/narrations have highlighted the song more effectively.
The Jayachandran's song adds another dimension to this issue in this movie, I suppose.
Thanks,
Sai
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Thu May 26, 2016 7:25 pm    Post subject: Reply with quote

Dear Sri Ragasudha,
Your comments are highly valuable. I have no words to convey my sense of astonishment at the depth of your analysis. i suggest that you post this comment in youtube itself so that people who watch this song will have the benefit of going through your comments. (You can also post your observations on other songs also in the youtube.)

Dear Sai,
The charanam of this song has some resemblance to the charanam of Ninaiththaal podhum paaduven. so i thought the raga of this song may be hamsanandi. However, i have no knowledge of carnatic music.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group