"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

மெல்ல&

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax
Maniac


Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sat Aug 08, 2015 11:46 pm    Post subject: மெல்ல& Reply with quote

14/07/2015 எனது வாழ்வில் ஒரு கருப்பு தினம் .

முதல் நாள் இரவில் கூட மன்னர் நலமே என்ற செய்திகளினால் எனது அலைபேசி நிரம்பி இருந்தது , ஆனால் காலை விடியல் நல்ல செய்தியை கொண்டுவரவில்லை .

அன்றிலிருந்து மனதுக்குள் அழுதுகொண்டுதான் இருக்கிறேன் .எனது துக்கம் அவரது பாடல்களை தனிமையில் கேட்கும் போது பன்மடங்கு ஆகிறது .

என்னை பொறுத்தவரை அவர் என்னுள் வந்த ஆண்டு 1963 ஆக இருக்கலாம் .ஏனென்றால் சிறுவயதில் நான் கேட்டு தூங்கிய பாடல்கள் அவருடையது தானாகவே இருந்து இருக்கிறது ,மழலையில் பாடிய பாடலும் அவர் போட்டதாகவே இருந்திருகிறது அத்தை யடி மெத்தையடி , பொன்னை விரும்பும் பூமியிலே கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா போன்றவை . இது என் உறவினர் சொல்லி அறிந்தது .

பிறகு அவரை நான் தொடர துவங்கியது பார்வை யுவ ராணி கண்ணோவியம் மற்றும் ஒரு நாளிலே கேட்ட பிறகிலிருந்து (உலகமெங்கும் ஒரு ராஜா ராணியிடமும் பட்டத்து ராணியையும் கேட்க துடிக்கையில் நான் இந்த பாடலுக்காக தவம் கிடைக்க துவங்கினேன்.

சென்னை வந்த பிறகு என் நல்ல நேரம் எங்கள் வீட்டில் ஒரு படத்தயாரிப்பாளர் குடி வந்தார் , அவரின் ஆஸ்தான இசை அமைப்பாளர் மெல்லிசை மன்னர் . அதன் மூலம் கிட்டத்தட்ட 7 ,8 படங்களின் இசை வார்ப்பு இசைகோர்ப்பு ஆகிய அனைத்தையும் பார்க்கும் பெரும் பேரு எனக்கு கிடைத்தது

அவருடைய வேலையில் அவருக்கிருந்த பக்தி என்னை அவரிடம் காதல் கொள்ள வைத்தது . என்னகிருக்கும் சில
நல்ல பழக்கங்கள் என்னை அறியாமல் அவரிடம் இருந்து வந்தவையே

எனக்கு மெல்லிசை மன்னர் என்கிற இசை விற்பன்னர் பிரிவு பெரிதாக தெரியவில்லை ஏன் எனில் அவர் ஏற்கனவே நமக்கு அளித்த கொடை என் வாழ்நாளின் மீதிக்கு போதும்

ஆனால் MSV என்ற மா மனிதர் கிடைப்பாரா எனது ஆத்மார்த்தமான பதில் இல்லை என்பதே .

மெல்லிசை மன்னரிடம் முதல் முதலின் தயங்கியபடி நான் பேசியது 1998 இல் இருக்கலாம் .எனது 2 1/2 வயது மகனை அறிமுகப்படுத்தி பேசியது
அவன் அவ் வயதில் பாடிய எல்லா பாடல்களும் மெல்லிசை மன்னர் பாடல்களே . அவர் சந்தோஷப்பட்டு என் மகனை பாடச்சொன்னார் அவன் வரிசையாக love birds இல் துவங்கி சட்டி சுட்ட தடாவில் முடித்தான் .ஆச்சரியப்பட்டு போனார் legends cassets இல் ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்

இது நடந்து கிட்டதட்ட 15 வருடங்களுக்கு பிறகு எம் எஸ் வி டைம்ஸ் மூலமாக சார்பாக மறுபடியும் சந்திக்கிறேன்
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group