"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Raman Ethanai Ramanadi-A Peep in to the Creative Part

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Mon Mar 02, 2015 10:17 am    Post subject: Raman Ethanai Ramanadi-A Peep in to the Creative Part Reply with quote

'ராமன் எத்தனை ராமனடி'
ராமனின் ஒவ்வொரு சிறப்பையும் கூறி அதற்கேற்ப அந்த அடை மொழியுடன் கூடிய பல விதமான ராமன் பெயரை கொண்ட இப்பாடல் அதன் காரணமாகவே என்றும் நெஞ்சிலிருந்து நீங்காத பாடலாக உள்ளது.

இந்த இப்பாடல் உருவானதின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. எங்கேயோ படித்த ஞாபகம். கவியாசர் சொன்னது என்று நினைக்கிறேன். ஒரு தயாரிப்பாளரை அவர் இல்லத்தில் சந்தித்தபோது அவர்கள் வீட்டில் உள்ள அனைவரும் ஜெயராமன், சிவராமன் என்று ஏதோ ஒரு ராமனின் பெயரையே கொண்டிருந்தது கண்டு வியந்தாராம். மேலும் அவர் இலக்கியத்தில் ராமன் ஒரு சலவை தொழிலாளி கூறியதற்காக தன் மனைவி சீதையை காட்டிற்கு அனுப்புகிறான். தம்பி லக்ஷ்மணன் எவ்வளவோ எடுத்து கூறியும் அதை ராமன் ஏற்கவில்லை. எனவே சீதையை காட்டில் விட்டு விட்டு திரும்பும் பொழுது அரண்மனையில் ராமன் அழுது கொண்டிருப்பதை கவனித்த லக்ஷ்மணன் 'நீதானே அண்ணா காட்டில் விட சொன்னாய். இப்போது நீயே அழுது கொண்டிருக்கலாமா என்று கேட்க அதற்கு ராமன் 'காட்டில் விட சொன்னவன் 'ராஜா ராமன்' அது ராஜதர்மதிற்கேர்ப்ப முடிவு செய்யப்பட்டது. ஆனால் இப்போது அழுது கொண்டிருப்பவன் 'சீதா ராமன்'. இந்த தகவலும் கவிஞர் மனதை இப்பாடல் எழுத ஒரு தூண்டு கோலாக அமைந்தது என்று கூறுவார்கள்.
பொதுவாக அவதார புருஷர்களான ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் அவர்கள் வாழ்ந்த சூழலுக்கேற்ப பல அடை மொழி தாங்கிய பெயர்கள் நிறைய இருந்தாலும் கிருஷ்ணனை விட ராமனுக்கு அது மிக பொருத்தம் என்பது என் தனிப்பட்ட கருத்து. அதன் காரணம், இருவருமே விஷ்ணுவின் அவதாரமாக மனிதர்களாய் பிறந்து இருந்தாலும், பல சமயங்களில் கிருஷ்ணன் தன்னை அவதார புருஷனாக காட்டி இருக்கிறான். கீதை உரைத்தபோது ஆசாரியனாக போதிக்கிறான். காளிங்க நர்தனம் புரியும் பொழுதும், கோவர்தன மலையை குடையாக தூக்கிய பொழுதும் அவன் 'மாயவன்' என்ற விஷ்ணுவின் தன்மைக்கேற்ப செயல் புரிந்துள்ளான். பல சமயங்களில் அவனை துதித்தவர்களும் அல்லது தூற்றியவர்களும் அவனை 'மாயாவி' என்றே உரைத்தனர்.

ஆனால் ராமனின் நிலை வேறு. அவன் முழுக்க முழுக்க மனிதனாக மட்டுமே தன்னை காட்டியுள்ளான். இன்பம் வரும் பொழுது சிரித்தும், சோகம் வரும் பொழுது சோர்ந்தும், துன்பம் வரும் போது துவண்டும், வீரம் வரும் போது வேட்கையும், நட்பு வரும் பொழுது இணைந்தும், செயல் வரும் பொழுது சேர்ந்து செயல்பட்டும், நீதி வரும் பொழுது நடு நிலைமை ஏற்றும், என்று ஒரு தனிமனிதனுக்கு உள்ள குணத்தையே ராமன் பிரதிபலித்தான். ஆனால் எந்த நிலை வந்த பொழுதும் எது தர்மமோ அதை தான் செய்தான். ஒரு தனிமனிதன் விமரிசனத்திற்கு அப்பார்ப்பட்டவன் அல்ல என்ற நிலையில், ராமனும் 'வாலி' விஷயத்தில் இன்று வரை விமரிசிக்கப்படுகிறான். ஒரு முறை கூட ராமன் தன்னை அவதார புருஷானாக காட்டிகொள்ள வில்லை. மற்றவர்களுக்கு என்று ஒரு போதனையும் சொல்லவில்லை. ஆயினும் ஒரு மனிதனாக பிறந்தவன் என்ன உணர்சிகளுக்கு ஆட்படுகிறானோ அதையெல்லாம் பட்டாலும் தர்மம் என்ற நிலையில் ராமன் ஒரே நிலையில் நின்றான். தான் ராஜ வம்சம் என்ற போதும் தேவை படும் பொழுது மற்ற குலங்களை சேர்ந்தவர்களின் உதவி தேவைப்பட்ட பொழுது ராமன் Practical ஆக ராஜ தந்திரத்தை கடைபிடித்தான். எனவேதான் மனிதனாக பிறந்தாலும் தான் வாழ்ந்து காட்டிய முறையின் மூலம் தெய்வமாக மதிக்கப்பட்டான்.

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்'
என்ற பொய்யாமொழி புலவரின் கருத்து ராமனுக்கு சரியாக பொருந்துகிறது.

எனவே ஒரு லட்சிய புருஷனான ராமனின் பல அடை மொழி தாங்கிய பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு வைப்பதை மக்கள் ஒரு அவசியமாக கருதினார்கள்.

எனவே தான் அவ்வாறு பல நிலை கொண்ட சிறப்பு பெற்ற ராமனின் பெயர்களை கொண்ட இப்பாடல் சிறப்பு பெற்றது. ஆயினும் இப்பாடல் 'நெஞ்சில் நீங்கா' சிறப்பு பெற்றதற்கு அது ஒன்றே காரணமாகுமா? என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது. கவிஞரின் கற்பனை திறன் பொதிந்த இப்பாடலில், அதற்கு இசை அமைத்த MSV அவர்களின் பங்கு என்ன என்பதனை அறிய முயற்சிக்கும் எண்ணமே இப்பதிவின் காரணம்.

பொதுவாக ஒரு பாடல் வெற்றி பெறுவதற்கு நல்ல வார்த்தைகள் மட்டும் போதுமா? ராமனை பற்றிய எத்தனையோ திரை இசை பாடல்கள் வந்துள்ளன. ஆயினும் இந்த பாடல் மட்டும் ராமனை பற்றிய பாடல் வரிசையில் மறக்காமல் மேற்கோள் காட்டப்படுவதின் காரணம் என்ன? நான் இந்த பதிவினை செய்வதற்கு முன்பு சில இனைய தளங்களில் இந்த பாடல் பற்றி அறிய பார்த்தபொழுது தெய்வ பாடல்களை பற்றிய இனைய தளங்களிலும் ராமனை பற்றிய பாடல் வரிசையில் திரை இசை சாரா பல பாடல்களின் தொகுப்பிலும் இப்பாடல் இடம் பெற்றதை கண்டேன். எனவே இப்பாடல் செறிந்த பக்தி உணர்வை ஊட்டுகிறது என்பது தெரிகிறது.

அது எவ்வாறு நேர்ந்தது என்பதனை ஆராயும் முயற்சியே இந்த பதிவு.

பொதுவாக MSV அவர்களுக்கும் கண்ணதாசன் அவர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு உண்டு. அது, பாடல் வரிகள் முதலில் எழுதப்பட்டு இசை அமைக்கப்படுமா அல்லது இசை கோர்வைகள் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் பாடல் வரிகள் எழுதப்படுமா என்பது. ஒரு கதையின் முக்கிய காட்சிக்கு பாடல் என்றால் பாட்டெழுதி இசை அமைப்பது என்றும், அதுவே ஒரு இசை பாடலாகவோ அல்லது நாட்டிய பாடலாகவோ இருந்தால் இசை கோர்வை அமைக்கப்பட்டு பாட்டெழுதுவது என்ற நிலை இருவரும் ஒப்புக்கொண்ட புரிந்துணர்வு. எனவே அம்முறைபடி பார்த்தால் இப்பாடல் இசை அமைக்கப்பட்டு அதன் பின்னே வார்த்தைகள் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் கதைப்படி கதாநாயகி தன்னை பெண் பார்க்க வரும் பொழுது பாடுவது போல அமைந்த காட்சிதான். எனவே அவளின் இசை திறமையை காண்பிக்க இசை அமைத்து தான் பாடல் எழுதியிருக்க வேண்டும். ஆயினும் நமக்கு கிடைத்த தகவல்படி கவிஞர் எழுதிய வரிகளுக்கு தான் MSV இசை அமைத்ததாக தெரிகிறது. அதன் காரணம் கவிஞர் கூறிய வித்யாசமான வரிகள். எனவே இது ஒரு Exception.

சரி பாடல் வரிகளை காண்போம்

Quote:
பல்லவி

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி

சரணம் 1
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன் ராமன்

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி

சரணம் 2
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன் ராமன்

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி


இவ்வாறு கவிஞரின் கற்பனை மற்றும் சொல்லாட்சி.
ஆயினும் முதல் இரண்டு சரணம் முடிந்தவுடன் MSV ன் குறிக்கீடு ஏற்பட்டிருக்கிறது என்று நான் திண்ணமாக சொல்வேன். ஏனெனில் முதல் இரண்டு சரணம் வரிகளுக்கும் மூன்றாவது சரணத்தின் வரிகளுக்கும் உள்ள வேறுபாடு. ஒரு Test செய்து பார்க்கலாம்.

Quote:
3வது சரணம்
வம்சத்திற்கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
வம்சத்திற்கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்த ராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்த ராமன்


மூன்றாவது சரணத்தின் வரிகளை முதல் இரண்டு சரணத்தின் இசை முறையில் பாடி பாருங்கள். தாள கதிக்கு வார்த்தைகளை இழுத்து இழுத்து பாட வேண்டி வரும். அவ்வாறு பாடல் வரிகள் சிதைவதை ஒரு கவிஞர் ஒரு போதும் அனுமதிக்கமாட்டார். மேலும் கவிஞரே மூன்று சரணத்தையும் எழுதியிருந்தால் ஒரே சந்த நடையில் தான் எழுதியிருப்பாரே தவிர சந்த நடை மாற்றி எழுதியிருக்க முடியாது. ஒரு பாடலின் சந்த நடையை மாற்றுவது என்பது இசை அமைப்பாளருக்கே சத்தியம். எனவே மேற்கூறிய முறையில் MSV இந்த இடத்தில் சந்த நடையை மாற்றி 'மேட்டருக்கு மீட்டர்' என்பதனை மாற்றி 'மீட்டருக்கு மேட்டர்' என்ற முறையில் மாற்ற சொல்லியிருக்க வேண்டும். அது ஏன் என்பது இதன் அடுத்த கேள்வி?

பொதுவாக சொன்னால் ஒரே இசை முறையில் 3 சரணங்களும் அமைந்தால் அது ஒரு தொய்வு தன்மையை ஏற்படுத்தும் என்று சொல்லலாம். எனவே சரணத்தின் இசை போக்கினை மாற்றி அமைக்க நேரிடும். இதனை 'Monotony breaking' என்று சொல்வார்கள். ஆனால் இப்பாடலில் அது ஒன்றே காரணம் இல்லை. அதனைவிட முக்கியமான காரணம் பாடலில் பக்தி ரசம் ததும்ப வேண்டும் என்ற நோக்கம்.

பொதுவாக இறை இசை பாடல்களில் கீர்த்தனை, கீதம் போன்ற பல இருந்தாலும், பொது ஜன ஆதரவும் அங்கீகாரமும் பெற்றது நாமசங்கீர்த்தனம் என்னும் பஜனை அல்லது பஜன் பாடல்கள். அது அவ்வாறு வெகு ஜன ஆதரவு பெற்றதன் காரணம் அது ஒரு கூட்டு இசை (Group Singing) என்பதும் அதில் பாடுபவர் தவிர அதில் பங்கேற்கும் அனைவரும் சேர்ந்து பாடும் வகையில் எளிய சொற்களும் மற்றும் இறைவன் திருநாமங்களும் கொண்டதாகும். அவ்வாறு எல்லோரும் சேர்ந்து பாடும் பொழுது பக்தி உணர்வு எளிதாக எல்லோர்க்கும் ஏற்படும்.

எனவேதான் மேற்கூறிய பாடலில் இதன் பொருட்டு MSV குறுக்கிட்டு 3வது சரணத்தை தன சந்ததிற்கேர்ப்ப வார்த்தைகளை கவிஞரை சொல்லுமாறு செய்தது.

இதில் மேலும் ஒரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். பஜன் பாடல்கள் பொதுவாக ஒரு தாள கதியில் ஆரம்பித்து பின் படிப்படியாக அதன் தாள வேகம் அதிகரித்து பின் மீண்டும் தொடங்கிய கதிக்கே வருவது. இவ்வாறு செய்வதன் நோக்கம், கூட்டு பிரார்த்தனையில் அதில் பங்குபெறும் அனைவரது கவனமும் குவியும்.

இப்போது மேற்கூறிய தகவல்களுடன் 3வது சரணத்தை அலசுவோம்.

Quote:
வம்சத்திற்கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
வம்சத்திற்கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்த ராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்த ராமன்


இங்கு நாம் மேற்கூறியபடி இசையின் வேகம் மற்ற இரண்டு சரணங்களை விட துரித கதியில் செல்லுவதை உணரலாம்.

இங்கு கவிஞரை பற்றி ஒரு வார்த்தை கூற வேண்டும்.

மூன்று சரணங்களிலும் ராமனின் பல மனித குணங்களின் பெருமைகேற்ப அவன் பல திருநாமங்களை கூறிய கவிஞர் முடிவான வரியில் அவன் ஒரு முடிவில்லாத அனந்த ராமன் என்று கூறியது ஒரு அழகான Contradictory Creative Coincidence.

மேற்கூறிய இந்த நான்கு வரிகளும் முடிந்தவுடன் ராமனின் நாம திருமந்திரமான 'ஸ்ரீ ராமஜெயம்' என்ற வார்த்தைகளை MSV கொண்டு வந்து விட்டார். இதுதான் கூட்டு பிரார்தனையின் துவக்கம்

ஆயினும் நான் ஊகிப்பது என்னவென்றால் MSV, ராம மந்திரமான திருநாமங்களை

'ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்

ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்'

என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.

இப்போது கவிஞரின் குறுக்கீடும் இருந்திருக்க வேண்டும்..

கவிஞர் குறிக்கிட்டு மேற்கூறிய வார்த்தைகளை

'ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம் ' என்று மாற்றி கொடுத்திருக்க வேண்டும்.

மேற்கூறியவாறு வார்த்தைகளை கற்பனை செய்ய ஒரு இசை அமைப்பாளர்களுக்கு தோன்றாது. அவர்களின் கவனம் முழுவதும் வார்த்தைகள், சந்ததிற்கு பொருந்தி வருகிறதா என்பதிலேயே இருக்கும்.

கவிஞரின் கவனம் அந்த வார்த்தைகள் தரும் பொருள் பற்றியே இருக்கும். இதை முக்கியமாக சிந்திக்க வேண்டும்.

இங்கு கவிஞர் மாற்றி கொடுத்த வார்த்தையின் பொருள் என்ன?

இறை நிலை அடைய வேண்டுமானால் முதலில் நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கை வரவேண்டுமானால் அந்த நம்பிக்கைக்கு என்ன பிரதிபலன் கிடைக்கும் என்ற தெளிவு வேண்டும். இதில் தவறில்லை. இறை நிலையின் ஆரம்ப நிலை ஒரு வியாபார நோக்கோடுதான் துவங்கும். இது தவறு என்றல் 'வேண்டுதல்' என்பதே தவறாகிவிடும்.


மேலும் மேற்கூறிய நாமவளியான 4 வரிகளில் 2வது வரியை மாற்றிய கவிஞர் அதனை திரும்ப பாடும் பொழுது 4வது வரியையும்

'ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்' என்றும்
மாற்றி கொடுத்துள்ளார்.

இங்குதான் கவிஞர் மற்ற கவிஞர்களிடமிருந்து வேறுபடுகிறார். இந்த வரி 'சரணாகதி' தத்துவத்தின் பொருளை உணர்த்துகிறது.

வியாபார நோக்கோடு துவங்கிய பக்தி, சரணகதியில் முடிய வேண்டும். அப்போதுதான் 'தான்' என்ற ஆணவம் அழிந்து 'எல்லாம் அவன் செயல்' என்று சரணாகதி அடையும் பொழுது, பக்தி நிலை முழுப்பெறுகிறது.

அடுத்து இப்போது MSV ராம மந்திரத்தின் ஆதாரமான 'ராம் ராம்' என்பதனை முழுவீச்சில் இசை அமைக்கும் பொழுது அந்த காட்சியில் என்ன நடக்கிறது. அங்கு உள்ள எல்லோரும் ராம மந்திரத்தை முனுமுனுத்தவாறு பங்கு கொள்கின்றனர். மேலும் காட்சியின் முதலில் வெறுப்புடன் இருக்கும் C K சரஸ்வதி கூட ராம மந்திரம் வரும் பொழுது தலையாட்டி பங்கு கொள்வதை காணலாம்.

இவ்வாறு ராம நாமாவளியை MSV புகுத்தி இருக்காவிட்டால் இம்மாதிரி காட்சியை அமைத்திருக்க முடியாது.

இறுதியாக இப்பதிவினை முடிப்பதற்கு முன் பாடலின் இசை முறை பற்றி குறிப்பிடவேண்டும். இங்கு வழக்கமான MSVயின் Touch பல உள்ளன.

Contnd ....


Last edited by N Y MURALI on Mon Mar 02, 2015 10:37 am; edited 2 times in total
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Mon Mar 02, 2015 10:25 am    Post subject: Reply with quote

'ராமன் எத்தனை ராமனடி' என்ற பல்லவியின் முதல் வரி ஒவ்வொரு முறையும் பாடப்படும் பொழுது இரண்டு முறை பாடப்படுகிறது. அதுவும் 2வது முறை பாடும் பொழுது 'எத்தனை' என்ற வார்த்தையை இசை முறையில் மாற்றி பாடும் விதம் அந்த வார்த்தையின் பொருளை உணர்த்தும் விதமாக அமைந்தது அற்புதம். மேலும் மேலே சொன்ன வரியில் 'ராமன்' என்ற வார்த்தை முடிந்தவுடன் ஒரு Pause கொடுத்துவிட்டு 'எத்தனை ராமனடி' என்று பாடும் பொழுது அந்த முழு வார்த்தையும், கேட்பவர் கவனத்தை ஈர்ப்பதாக அமைத்தது MSVகே உள்ள தனிப்பட்ட திறமை.

'அரசாள' என்ற வார்தையாகட்டும் 'வீரமென்னும்' என்ற வார்தையாகட்டும் அந்த வார்த்தையின் தொனி MSV சொல்லி கொடுத்ததே.

துவக்க இசையாகட்டும், இடை இசையாகட்டும் அவை பக்தி உணர்வினை ஏற்படுத்துகின்றன.குறிப்பாக 3வது சரணத்திற்கு முன் வரும் Sitar இசை, அந்த சரணத்தில் வரும் நாமவளியான 'ராம் ராம்' என்ற சொற்றொடர் போல அமைத்தது 'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்பது போல உள்ளது.
Shenoi வாத்தியம் பயன்படுத்தியது அந்த காட்சி ஒரு திருமணத்தின் பொருட்டு ஏற்பட்டது என்பதினால் என்று அறியலாம்.

இவ்வளவு அதி அற்புதமான கற்பனை நிறைந்த வார்த்தைகளையும், அதனை ஏற்றம் செய்த இசை அமைப்பையும், அதன் தன்மை மாறாது பாடி கொடுத்த சுசீலா அவர்களும் இங்கே நம் நினைவில் கொள்ளப்படவேண்டியவர். இதில் பங்கெடுத்த அணைத்து இசை கலைஞர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

முடிவாக இவ்வளவு சிறப்பு நிறைந்த இந்த பாடல் உள்ள படம், ராமனை பற்றிய ஒரு பக்தி படம் கூட இல்லை. ஒரு சமூக படம். அந்த காட்சியும் கூட இத்தனை பக்தி நிறைந்த இசை முறை கொண்டு அமைக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஆயினும் இந்த காட்சிக்கு கவிஞரின் சிந்தனை, கற்பனையாக, ஒரு பாடல் வடிவில் வெளிப்பட்டு, அந்த வார்த்தைகள் வெறும் பாடல் வடிவில் இருந்தால் அது ஒரு சிறந்த இலக்கிய பாடல் என்ற புள்ளி விபர கணக்கோடு சென்று சேர்ந்துவிடும் என்றும், அதன் மூலம் இந்த சிறந்த வரிகள் வெகு ஜன மனதில் நிரந்தரமாக குடியிருக்க தவறிவிடும் என்றும், எனவே இதை ஒரு சிறந்த பக்தி பாடலாக ராம நாமாவளி கொண்டு பக்தி ரசம் ததும்ப அமைத்தால்தான் இது வெகுஜன மனதில் ஆழமாகவும் நிரந்தரமாகவும் பதியும் என்றும் முடிவெடுத்து அதன் காரணமாக 3வது சரணத்தில் குறிக்கிட்டு, கவிஞரின் பலவிதமான ராமனின் பெயர் நிறைந்த வார்த்தைகளுக்கு தங்க சிம்மாசனம் அமைத்து கொடுத்தவர் மெல்லிசை மன்னர் MSV.

இந்த பாடலின் youtube link


https://www.youtube.com/watch?v=aoMm2wQpdHs

இந்த பாடல் பற்றி மேற்கூறிய youtube linkல், Venkata Subramanian என்ற நண்பர் பதித்த எண்ணம்.

Quote:
இந்தப் பாடல் நம்மைப் பல தளங்களில் பல உணர்ச்சிகளில் ஆழ்த்துகிறது. ஆரம்பிக்கும் போது இசையும் , பக்தியும் நம்மை மயக்கினாலும்,இறுதியில், பாடலின் லயம் தீவிரமாகும் போது ராமனின் தோற்றம்,ஆகிருதி, அன்பு, கருணை , பாசம், போன்ற அனைத்து கல்யாண குணங்களும் தாண்டவமாடுகின்றன. அப்போது அங்கே பாட்டு இல்லை, இசை இல்லை.. பாடுபவர் இல்லை. ராமன் மட்டுமே மிஞ்சுகிறான். அற்புதம் ! மீண்டும் கேட்க அடிக்கடி வருவேன். மீண்டும் கண்ணீரைத் துடைத்துக் கொள்வேன்.




நன்றி

ஸ்ரீ ராம ஜெயம்.

ராம் ராம்.
Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Tue Mar 03, 2015 11:58 am    Post subject: Reply with quote

Dear Murali

As usual you have come back with BANG after a LULL period , rightly bringing in bakthi bhava . Hope Lord RAM will give time to contribute more to msvtimes.

it looks like you have gone little non technical in description . we (atleast I) expect songs to be analysed technically too as there are a few who can ,so do not want to miss the opportunities whenever they cone on board

hope you consider this
bregds
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Tue Mar 03, 2015 1:00 pm    Post subject: Reply with quote

Dear VK,
Nice observation. I knew it when I finished posting. But while writing this article which took almost 10 hours for compiling, it never occurred to me. After posting this article I noticed that aspect.

I recall the reply written by Venkata Subramanian. While at the beginning of the song there were words,music but travelling towards the end there was neither word nor music. It was only Ram.
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Tue Mar 03, 2015 1:53 pm    Post subject: Reply with quote

Dear Murali,

A very exhaustive posting.

I was also surprised that the technical elements which are your specialty were missing. But I think, in a way, it gave another dimension to the post- a exhaustive overview. Perhaps you can write about the musical nuances in another post.

You have written about Rama and Krishna. Interestingly, in the same film, MSV and Kannadasan have given an exquisite song 'Brindhavanaththukku varugindren' on Krishna!
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Wed Mar 04, 2015 10:54 am    Post subject: Reply with quote

parthavi wrote:
Dear Murali,

A very exhaustive posting.

I was also surprised that the technical elements which are your specialty were missing. But I think, in a way, it gave another dimension to the post- a exhaustive overview. Perhaps you can write about the musical nuances in another post.

You have written about Rama and Krishna. Interestingly, in the same film, MSV and Kannadasan have given an exquisite song 'Brindhavanaththukku varugindren' on Krishna!


Thanks Parthavi. Yes two songs of two different great 'avadhara purusha'
MSV-KD combination had also given a song 'radhayai pen paarkka kannan vandhan' for a similar situation.
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Mon Mar 09, 2015 4:37 pm    Post subject: Reply with quote

NYM ji,

For the kind of deep knowledge and understanding of the genius, I request you better release a book on MSV's creations through our forum. May be its time for the 2nd book release .Idea

Yes Sir. RER is one such wonder , a song which the current gen may not be aware . Many many thanks for unearthing this. So much to explore about this song and you have truly brought it out ! Exclamation

One can distinctly identify the devotion , Bhakti and what not from this great song .
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Wed Mar 11, 2015 11:16 am    Post subject: Reply with quote

S.Balaji wrote:
NYM ji,

For the kind of deep knowledge and understanding of the genius, I request you better release a book on MSV's creations through our forum. May be its time for the 2nd book release .Idea

Yes Sir. RER is one such wonder , a song which the current gen may not be aware . Many many thanks for unearthing this. So much to explore about this song and you have truly brought it out ! Exclamation

One can distinctly identify the devotion , Bhakti and what not from this great song .


Dear Balaji,

Somehow I missed to see your above post, due to very involved exchange of post between myself and Sampath.

Thanks for your appreciation, and pardon me for the late reply.
Back to top
View user's profile Send private message Send e-mail
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Tue Mar 31, 2015 11:26 pm    Post subject: Reply with quote

Murali sir!
What an exhaustive writing on this song! All the dimensions, including the choice of some of the music instruments, have been thoroughly brought out. Kavingar's composing method going hand in hand with MM's keen eye for keeping pace for instilling devotion have been picturised by you in real. Your regular style of analysis using the musical notes is hidden under the devotional aspect. This is yet another style of analysis from your stable, sir!
Thanks,
Sai
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group