"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

'Adi yendi asattu penne' MSV - A creator or a discoverer?

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Fri Oct 24, 2014 3:26 pm    Post subject: 'Adi yendi asattu penne' MSV - A creator or a discoverer? Reply with quote

இசை அமைப்பாளர்களில் MSV வித்யாசமானவர். பொதுவாக இசை அமைப்ப்பாளர்கள் தாங்கள் ஒரு பாடலுக்கோ அல்லது ஒரு காட்சிக்கான பின்னணி இசையோ அமைத்ததை பற்றி விவரிக்கும் பொழுது அந்த பாடலுக்கோ அல்லது காட்சிக்கோ பொருத்தமாக இசை அமைத்ததாக கூறுவார்கள். இது முற்றிலும் உண்மையே. ஆயினும் MSV அவர்கள் பாடலுக்கோ அல்லது காட்சிக்கான பின்னணி இசை அமைத்ததை பற்றி எப்படி கூறுகிறார்?

'ஒரு பாடலுக்கான காட்சியை இயக்குனர் விவரிக்கும் பொழுதே அந்த காட்சி என் மனத்திரையில் ஓடும். அவ்வாறு என் மனத்திரையில் ஓடும் காட்சியிலேயே ஒரு இசை இருக்கிறது. அதை கண்டுபிடிப்பதுதான் என் வேலை' என்று கூறுவார். இது சற்று வித்யாசமான அணுகுமுறை. பொதுவாக இசை அமைப்பாளர்கள் தங்களை ஒரு உருவாக்குபவர்களாக தான் காண்பார்கள். அவர்கள் தங்களை ஒரு creator ஆக தான் காண்பார்கள். ஆனால் MSV கூறும் முறையில் தன்னை ஒரு CREATOR ஆக பார்க்காமல் ஒரு discovererஆக தான் பார்கிறார்.
இல்லாத ஒன்றை உருவாகுவது creation. ஆனால் கண்டுபிடித்தல் என்பது ஏற்கனவே அனாதியாக இருப்பதை கண்டுபிடிப்பது. மறைந்திருந்த அந்த இசை, பாடல் காட்சியை விவரித்தவுடன் வெளிகொனரபடுகிறது. எனவே அது காட்சிக்கு மிக பொருத்தமானதாக இருக்கிறது. இதற்கு ஒரு பாடல் மூலம் சாட்சி காண்போம்.

'கன்னி பெண்' படத்தில் ஒரு பாடல். 'அடி ஏண்டி அசட்டு பெண்ணே' என்ற ஒரு பாடலை காணலாம். பாடல் காட்சி பற்றி இயக்குனர் தெளிவாக விளக்கி உள்ளார். இரண்டு இளம் பெண்கள். ஒரு பெண்ணின் வீட்டில் உள்ள ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பாடல் மூலம் தங்கள் கருத்துகளை பரிமாறி கொள்கிறார்கள். இளம் பெண்கள் என்ன கருத்தை பரிமாறி கொள்வார்கள். காதல் பற்றி தான். ஆனால் அதில் ஒரு பெண்ணுக்கோ காதல் பற்றி வேட்கை இல்லை. அதன் காரணம் அவள் காதல் ஒரு சிக்கலில் இருக்கிறது. இவ்வாறு இரண்டு பெண்களும் எதிர் எதிர் கருத்து கொண்டு ஒரு பெண் காதல் பற்றியும் மற்றவளின் காதலன் பற்றியும் கேள்வி கேட்க அதன் மீது ஈடுபாடு இல்லாத மற்றொரு பெண் பதில் கூறுவது போல அமைந்த அற்புதமான பாடல். பாடலை எழுதிய வாலி அவர்களும் அந்த காட்சியை படமாக்கிய இயக்குனரும் அதி அற்புதமாக செய்திருக்கிறார்கள். பாடலை பாடிய சுசிலா மற்றும் ஈஸ்வரி அவர்களும் மிகவும் திறமையாக பாடி உள்ளார்கள்

இப்போது ஒரு காட்சியிலேயே இசை இருக்கிறது அதனை வெளிகொனருவது தான் என் வேலை என்று சொல்கிற MSV என்ன செய்தார் என்று பாப்போம்.

பாடல் காட்சி எவ்வாறு உள்ளது? இரண்டு பெண்களும் வீட்டின் தோட்டத்தில் உள்ள ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பாடுகிறார்கள். அந்த காட்சியை படமாக்கிய ஒளிபதிவாளரின் திறமை முழவதும் காட்சியில் பளிச்சிடுகிறது.

பல்லவியை பார்ப்போம்.

'அடி ஏண்டி அசட்டு பெண்ணே'

இந்த வரிகளுக்கு MSV கண்டுபிடித்த இசை ஸ்வர அமைப்பை பாருங்கள். Technical ஆக இருக்கிறதே என்று கவலை படவேண்டாம். அதனை எளிய முறையில் விளக்குகிறேன்.

மேற்குறிப்பிட்ட வரிகளுக்கு கண்டுபிடிக்கப்பட்ட இசை ஸ்வரம்

'ப ப கா ரி - ப க ரி - ப சா'

இந்த ஸ்வர அமைப்பை கூர்ந்து கவனியுங்கள்.

ப த நி ச ரி க என்ற ஸ்வர வரிசையில் 'த' 'நி' என்ற இரண்டு ஸ்வரம் தவிர்த்து மற்ற நான்கு ஸ்வரங்களும் வருகின்றன. மேலும் 'ப' என்ற 1 வது ஸ்வரத்திற்கு 'க' என்பது 6 வது ஸ்வரம். 'ரி' என்பது 5 வது ஸ்வரம். 'ச' என்பது 4 வது ஸ்வரம்.

எனவே மேலே குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு அமைந்த ஸ்வர கோர்வை 'ப' என்ற 1 வது ஸ்வரத்தில் தொடங்கி அதன் extreme end ஸ்வரமான 'க' என்ற 6 வது ஸ்வரத்தை தொட்டு அதன் பின் 'ரி' என்ற 5 வது ஸ்வரத்தில் இறங்கி அதன் பின் மீண்டும் 'ப' என்ற 1 வது ஸ்வரத்தை வந்தடைந்து பின் மீண்டும் extreme endஆன 'க' என்ற 6 வது ஸ்வரத்தை தொட்டு அதன் பின் மீண்டும் 'ரி' என்ற 5 வது ஸ்வரத்தில் இறங்கி பின் 'ப' என்ற 1 வது ஸ்வரந்தை மீண்டும் வந்தடைந்து பின் இறுதியாக இடைப்பட்ட 4 வது ஸ்வரமான 'ச' என்ற ஸ்வரத்தில் முடிகிறது.

ஊஞ்சல் என்பது எப்படி ஆடும்? ஒரு முனையில் தொடங்கி பின் ஆடி மாற்றொரு extreme முனை சென்று பின் மீண்டும் தொடங்கிய முனை வந்தடைந்து இவ்வாறே மாறி மாறி ஆடிக்கொண்டே இறுதியாக அதன் வேகத்தின் ஆற்றல் குறையும் பொழுது நட்ட நடுவிலே வது resting position என்று சொல்லும் இடத்தில வந்து நிற்கும்.

மேற்குறிப்பிட்ட இசை ஸ்வர கோர்வை அவ்வாறு தானே உள்ளது. எனவே MSV கூறுவது போல அந்த காட்சியை இயக்குனர் விளக்கும் பொழுதே அவரின் மனக்கண்ணில் அந்த காட்சியின் இசை இவ்வாறு தான் அவருக்கு தோன்றியிருக்கிறது. அவர் மூலம் வெளிப்பட்ட இசையை தான் நாம் கேட்கிறோம்.

எத்தனை இசை அமைப்பாளர்கள் MSV கூறுவது போல 'மெட்டை கண்டு பிடித்தேன்' என்று கூறியிருக்கிறார்கள். MSV கூறுவது உண்மை என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.

இது வெறும் accidental ஆக வந்ததாக எண்ணினால் மேலும் சில பாடல்களை உதாரணம் கூறுகிறேன். அதிலும் ஊஞ்சல் என்ற வார்த்தையோ அல்லது ஊஞ்சலில் ஆடும் காட்சியோ வருகிறது.

'முள்ளில்லா ரோஜா முத்தான பொன்னூஞ்சல் கண்டேன்'

'ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் இட்டாளோ'

இந்த விபரத்தை சில வருடங்களுக்கு முன் நான் கண்டு என் மகளிடம் கூறிய பொழுது மிகவும் ஆச்சரியப்பட்டாள். மேலும் இந்த பாடலை தொடர்ந்து வாசித்து அவளே மேலும் ஒரு விபரத்தையும் கூறினாள்.

அது என்னவென்றால் சரணத்தை பார்க்கலாம். காதல் பற்றி கேள்வி கேட்கும் பெண்

'உள்ளத்தை தொட்டால் உண்டாவது கை
தொட்டதும் எண்ணம் ஒன்றாவது
ஆசை ஊஞ்சல் ஆடும் பாவை காணும் நெஞ்சம் தாபத்தில் தான் இங்கு தள்ளாடுது'

அதற்கு மற்றொரு பெண்ணின் பதில்

'மை வாய்த்த கிண்ணம் கண்ணல்லவோ நீ
பொய் வைத்து சொல்லும் பெண்ணல்லவோ
மாலை சூடும் தோளில் ஆடும் காலம் நேரம்
தெய்வத்தை கேட்டிங்கு நான் சொல்லவோ'

இதில் கேள்வி கேட்கும் பெண்ணின் வார்த்தைகள்

'ஆசை ஊஞ்சல் ஆடும் பாவை காணும் நெஞ்சம்' என்ற வரிகள் ச, ரி, க, ம, ப என்ற ஏறு வரிசையில் அமைந்துள்ளன. அதாவது இசை முறையில் ஆரோகணம்.

இந்த கேள்விக்கு, காதலை வெறுக்கும் பெண்ணின் வார்த்தைகளான ' மாலை சூடும் தோளில் ஆடும் காலம் நேரம்' என்ற வார்த்தைகள் ப, ம, க, ரி, ச என்ற இறங்கு வரிசையில் அமைந்துள்ளன. அதாவது இசை முறையில் அவரோஹனம்.

இரண்டு பெண்கள் மாறுப்பட்ட கருத்து கொண்டுள்ளார்கள் (contrasting mood) என்பதனை இசை மூலம் விளக்க என்ன அழகான கற்பனை MSV க்கு கிடைத்துள்ளது.

இதனை வெளிபடுத்திய என் பெண்ணிற்கு அப்போது சுமார் 11 வயது தான் இருக்கும். MSV இன் இசை தலை முறை தாண்டி பாதிக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

http://youtu.be/i3Wy_uL5B48
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sat Oct 25, 2014 8:44 am    Post subject: Reply with quote

Murali,

Another brilliant analysis. I think you have featured this song in your second 'musical enlightenment program' held at Sivagami Peththaachchi auditorium (I don't remember the name of the program, though) four or five years ago. I also remember your explaining the song to me when I met you at your office a few days before the program, when you shared with me your daughter Lakshmi's perspicacious observation also.

Perhaps you will find interesting contrasts in other same gender duets like 'adi podi paiththiyakkari,' 'unadhu malar kodiyile,' 'ponnondru kanden' etc.

Like MSV's discoveries, your discoveries are also amazing and will be applauded and cherished both by your contemporaries and by posterity.

Great job. I can't find adequate words to appreciate it. My greetings and good wishes to the little genius Lakshmi also.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group