"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Yaaradhu Yaaradhu Thangamaa - En Kadamai

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Tue Mar 26, 2013 8:36 am    Post subject: Lyrics - Yaaradhu Yaaradhu Thangamaa - En Kadamai Reply with quote

படம்: என் கடமை
பாடியவர்கள்: டி.எம்.எஸ். சுசீலா
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி

TMS: யாரது யாரது தங்கமா, பேரெது பேரெது வைரமா
ஊரெது ஊரேது சொர்கமா, ஊறிடும் தேனது வெட்கமா

PS: யாரது யாரது சிங்கமா, பேரெது பேரெது செல்வமா
ஊரெது ஊரெது வீரமா, ஊறிடும் தேனதன் சாரமா

TMS: யாரது யாரது தங்கமா
PS: பேரெது பேரெது செல்வமா

TMS. PS.: ஒன் டூ த்ரீ, ஒன் டூ த்ரீ, லலலலலல ரம் பம்,
லலலலலல ரம் பம் ................................

TMS: கள்ளூறும் மலர் என்ன பெண் ஆனதோ
கரு நாவல் பழம் என்ன கண் ஆனதோ
தள்ளாடி தள்ளாடி நடை போடுதோ
தணியாத சுகம் என்னும் தடை போடுதோ

PS: ஆஹா, ஓஹோ, ஆஹா, ஓஹோ

TMS: யாரது, யாரது தங்கமா
PS: பேரெது பேரெது செல்வமா
TMS: ஊரெது ஊரெது சொர்கமா
PS: ஊறிடும் தேனதன் சாரமா
TMS: யாரது யாரது தங்கமா

PS: முதிராத கனி என்ன முகமானதோ,
முளைக்காத கரும்பென்ன மொழி ஆனதோ
சிதறாத முத்தென்ன நகையானதோ
சிங்கார ரசம் எந்தன் துணையானதோ

TMS: யாரது யாரது தங்கமா

TMS: அனைத்தாலும் அணையாத தீபம் என்ன
PS: அழித்தாலும் அழியாத எண்ணம் என்ன
TMS: மறைத்தாலும் மறையாத மாயம் என்ன
PS: மழை போல பொழிகின்ற இன்பம் என்ன

TMS: ஆறாது ஆறாது ஆசை வெள்ளம்
PS: அடங்காது அடங்காது காதல் உள்ளம்
TMS: தீராது தீராது சேரும் இன்பம்
PS: தெளியாது தெளியாது இருவர் உள்ளம்

PS: ஆஹா, ஓஹோ, ஆஹா, ஓஹோ

TMS: யாரது யாரது தங்கமா
PS: பேரெது பேரெது செல்வமா
TMS: யாரது யாரது தங்கமா

இந்த பாடல் 1964- இல் என் கடமை என்ற படத்தில் எம்.ஜி.ஆர். சரோஜாதேவி இருவரும் பாடுவதாக வெளிவந்தது.

இந்த பாடல் ஒரு அழகான காதல் காவியம். கண்ணதாசன் அவர்கள் இந்த பாடலை அவ்வளவு அழகாக எழுதி இருக்கிறார்.

முதலில், 'யாரது யாரது தங்கமா, பேரெது பேரெது வைரமா',
'யாரது யாரது சிங்கமா, பேரெது பேரெது செல்வமா'
என்று காதலன் காதலி அறிமுகம்.

அடுத்ததாக காதலன் தன் காதலியை வர்ணிப்பதாக வரிகள். இந்த வர்ணனைதான் என்னவொரு அழகு பாருங்கள்.
'கள்ளூறும் மலர் என்ன பெண்ணானதோ, கரு நாவல் பழம் என்ன கண் ஆனதோ'.
அப்படியே நம்மை சொக்க வைக்கிறது.

அடுத்து காதலி அவனை வர்ணிக்கிறார். இந்த வரிகளை கண்ணதாசன் அவர்கள் எம்.ஜி.ஆர். அவரை மனதில் வைத்துதான் எழுதி இருக்கிறார் என்றே எனக்கு தோன்றும். :)
முதிராத கனி என்ன முகமானதோ, முளைக்காத கரும்பென்ன மொழியானதோ, சிதறாத முத்தென்ன நகையானதோ, சிங்கரார ரசமெந்தன் துணையானதோ'.
இந்த பாடலிலேயே இந்த வரிகள் என்னை உருக வைக்கும். தமிழின் இனிமை அப்படியே வரிகளில். 'முதிராத கனி
முகம்' என்னவொரு அழகான உவமை. மொத்தத்தில் அவன் ஒரு 'சிங்கார ரசம்' எவ்வளவு ரசித்து எழுதி இருக்கிறார். நானும் மீண்டும் மீண்டும் ரசித்து கேட்பேன்.

இப்பொழுது இருவரும் சேர்ந்து காதலை எவ்வளவு அழகாக வர்ணிப்பதாக எழுதி
இருக்கிறார் பாருங்கள்.
அணைத்தாலும் அணையாத தீபம், அழித்தாலும் அழியாத எண்ணம், மறைத்தாலும் மறையாத ஒரு மாயம், மழை போல பொழியும் இன்பம். இதுதான் காதல். இப்படி காதலை வர்ணித்தால் காதலை பற்றி நினைக்காத மனங்களுக்கு கூட காதலிக்க ஆசை வரும்.

இப்படி இந்த அழகான காதலில் ஈடுபட்டவுடன் அந்த காதல் மனங்களின் நிலை எப்படி இருக்கும்?
இதையும் கவிஞர் அந்த காதலர்களே சொல்வதாக எவ்வளவு அற்புதமாய் எழுதி இருக்கிறார்.

'ஆறாது ஆறாது ஆசை வெள்ளம், அடங்காது அடங்காது காதல் வெள்ளம், தீராது தீராது சேரும் இன்பம், தெளியாது தெளியாது இருவர் உள்ளம்'.
ஒரு முறை மனதில் இந்த அழகான காதல் புகுந்து விட்டால் அந்த உள்ளங்கள் இறுதி வரை அந்த காதலிலேயே தான் ஊறி போய்விடும்போலும். இறுதி வரை தெளியவே தெளியாதோ! இதுதான் அந்த காதலர்களின் அழகான நிலையோ! எவ்வளவு அற்புதமான பாடல். கண்ணதாசன் அவர்களுக்கு hats off!

இப்படிப்பட்ட ஒரு ரசமான பாடல் வரிகளுக்கு வேறு யாரால் இவ்வளவு அழகான ஒரு மெட்டமைக்க முடியும். அருமை, இனிமை. இந்த மெட்டிற்கு மெருகேற்றுவது ட்ரம்பெட், வயலின், புல்லாங்குழல். பாடலின் பல்லவி முடிந்தவுடன் வரும் அந்த ஹம்மிங்கை தொடரும் ட்ரம்பெட் நம் மனதை அதன் இசையில் சுழன்றாட வைக்கும்.
வரிகளின் இடையிடையே வரும் புல்லாங்குழல் காதில் நுழைவதுபோல் மனதில் நுழைந்து விடும். பாடலின் நடுவில் இரண்டாவது முறை ஹம்மிங் வரும் இடத்தில் வயலின், அதை தொடர்ந்து மீண்டும் அதே ட்ரம்பெட். பின் மூன்றாவது சரணத்தின் முன் வரும் அந்த புல்லாங்குழல், தொடரும் வயலின், அதை தொடரும் அந்த சரணத்தின் மெட்டில் சுழன்றாடும் ஒரு நடனத்தின் வேகம். இந்த வேகம் பாடலின் முடிவில் ட்ரம்ஸ், ட்ரம்பெட் என்று ஒரு அழகான வாத்தியங்களின் நடனமாக முடிகிறது. பாடலில் இரண்டு முறை ஹம்மிங்கில் மட்டுமே வரும் அந்த விசிலின் ஓசை அற்புதம். இதற்கு மேல் இந்த அருமையான மெட்டையும், இசையையும் வர்ணிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை.
என்றும் வாழ்க நம் விஸ்வநாதன், ராமமூர்த்தி அவர்கள் இசை.

இந்த இனிமயான மெட்டிற்கும், ரசமான வரிகளுக்கும் கிரீடம் வைத்தாற்போல் டி.எம்.எஸ். அவர்களும் சுசீலா அவர்களும் பாடி இருக்கிறார்கள். குழல் இனிமையா? சுசீலா அவர்களின் குரல் இனிமையா? வரிகள் அழகா? உச்சரிக்கும் டி.எம்.எஸ். குரல் அழகா? என்று இந்த பாடலை வைத்து ஒரு அழகான விவாதமே செய்யலாம்.
இந்த பாடலில் வரும் 'சொர்கமா' 'சொர்கமா' என்று வரும் இடத்தில் எல்லாம் டி.எம்.எஸ். அவர்களின் குரல் நம்மை சொர்கத்துக்கே அழைத்து செல்லும். பிரமாதம். அதே போல் சுசீலா அவர்கள் 'செல்வமா' என்று அந்த பெயரை ஒவ்வொரு முறை சொல்லும்போதும் செல்லமாக கொஞ்சுவதை போல சொல்லுவார். இந்த இரண்டையும் நான் மிகவும் ரசிப்பேன்.
அதே போல் 'முதிராத கனி என்ன முகமானதோ' என்ற சரணத்தை சுசீலா அவர்கள் பாடி முடித்தவுடன் 'யாரது யாரது தங்கமா' என்று டி.எம்.எஸ். பாடுவது அவ்வளவு உருக்கமாக இருக்கும். தன்னை தன் காதலி இவ்வளவு அழகாக வர்ணிப்பதை கேட்கும்போது உண்டாகும் அந்த நெகிழ்ச்சியில் அவளை காதலோடு அழைக்கும் போது அந்த குரலில் வரும் உருக்கம்தான் அது. இவர்கள் இருவரும் தான் இந்த பாடலை எவ்வளாவு அனுபவித்து பாடி இருக்கிறார்கள் இல்லையா!

மீண்டும் மீண்டும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் இந்த பாடலை கேட்கலாம். கேட்டுக்கொண்டே இருக்கலாம், இறக்கலாம்.

பாடலின் லிங்க் இங்கே.
http://www.youtube.com/watch?v=8yxN-OJp6GY
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Tue Mar 26, 2013 3:43 pm    Post subject: lyrics Reply with quote

Dear Meenakshi mam,
A song that would grip the listener while hearing. After the song is complete, the listener cannot take off to anything else mentally. The lyric plays itself with all the orchestral assemblages to haunt us for a couple of days at least. There is some mysterious power unleashed by this song. What I mean is 'I cannot hum the lyric in isolation, as the music recapitulates itself as a part of the lyric'. There is an 'object- shadow cum born for each other' feeling between the lyric and the orchestration.
It showcases how MSV has imbibed the words to embellish the 'mood' without an iota of suggestion of any artificial assemblage. Harmony is the soul and wit through this song. Now, it is almost 50 years since the song came out quite ahead of the movie. It is fresh and aggressive as a lamb, young, agile and active with rhythm in every step.
Thank you a lot for pushing me to the corridors of mind in recalling the nostalgia of this number, even as I long for my then friends whom I have lost track of since 1965.
Warm regards K.Raman Camp: Navi Mumbai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Tue Mar 26, 2013 8:42 pm    Post subject: Reply with quote

சகோதரி மீனாட்சி,
அருமையான பாடல் பற்றி மிகவும் அருமையாக அலசி இருக்கிறீர்கள். பாடல் முழுவதும் குரலுக்கு பின்னணியில் வரும் வயலின் இசை என்ன அருமை. விவரிக்க வார்த்தை இல்லை. குறிப்பாக 'ஊரது' என்ற வரிகளுக்கு பின் வரும் வயலினை கவனிக்கவும்.சரணத்தின் முதல் வரியை இரண்டாவது முறை பாடும் போது வரும் வயலின் இசையையும் கூர்ந்து கவனிக்கவும்.

முடிவாக இதில் msv யின் stamp என்னவென்றால் ஒரு நடன பாடல் என்றலும் அது பல பார்வையாளர்கள் முன்னே பாடுவதாக இருந்தால் அந்த பாடலின் pitch உச்ச ஸ்தாயியில் இருக்கும். உம் 'ஒருவர் ஒருவராய் பிறந்தோம்' பாடலை எடுத்த இடம் மேல் சட்சமம்.(high pitch )

ஆனால் இந்த பாடலில் நடன ஆசிரியராக மாறு வேடத்தில் வரும் நாயகன் அவளுக்கு நடனம் சொல்லி கொடுக்கும் போது வரும் பாடல் எந்த தொனியில் இருக்க வேண்டும்?
பாடலை எடுத்த இடத்தை கவனியுங்கள். மந்திர ஸ்தாயி (lower octave ) பஞ்சமம். பாடல் முழுவதும் ஒரு முறை கூட உச்ச ஸ்தாயி போகாது. இம்மாதிரி காட்சிக்கு ஏற்ப கற்பனை செய்து இசை அமைக்க msv ஒருவரால் மட்டுமே முடியும்.

நன்றி

N Y MURALI.
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Thu Mar 28, 2013 4:21 pm    Post subject: Reply with quote

Meenakshi Madam, You have picked a wonderful song ! and a lovely writeup too.

May I say that this is another Waltz type composition . You will see MGR-Saroja devi dancing with hands joint ( similar to Kan pona pokkile ).

NYM, Did you also notice the double bass during the pallavi ? amazing orchestration !

That whistling as the charanam ends ........ Great great embellishment ! Vaazga MSV-TKR Very Happy
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group