"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

AADI VELLI THEDI UNNAI - MOONDRU MUDICHU

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Tue Jun 05, 2012 11:51 am    Post subject: AADI VELLI THEDI UNNAI - MOONDRU MUDICHU Reply with quote

கமல் ஒரு முழு கதாநாயகனாக வந்த படம் அபூர்வ ராகங்கள்..அதன் ஆண்டு 1975...அதில் ரஜினிகாந்த் ஒரு சிறு வேடத்தில் தான் வருவார்.....

1976இல் வந்த ரஜினியின் இரண்டாவது படம் மூன்று முடிச்சு.......இரண்டுமே கே.பி. இயக்கியவை.....

இப்படத்தில் மூன்று முக்கிய பாத்திரங்களின் வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பமும் அவர்கள் அதை எப்படி எதிர் கொள்கின்றனர் என்பது தான் கதையின் சாரம்....கமல்-ரஜினி நெருங்கிய நண்பர்கள்...இருவருமே விரும்புவது பக்கத்து வீட்டில் வசிக்கும் கல்லூரி மாணவி ஸ்ரீதேவி.... ஆனால் அவரோ நேசிப்பது கமலை......ஒரு நாள் மூவரும் படகு சவாரி செய்யும் தருணம் எதிர்பாராமல் கமல் தண்ணீரில் விழ ரஜினி அவரை காப்பாற்றாமல் மவுனம் சாதிக்க கமல் பாவம் இறக்கிறார்....இதன் பின் ஸ்ரீதேவி எப்படி தன் வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்த்து வெற்றியடைகிறார் என்பது கதையின் பின் பகுதி....

ஒலிபதிவு நாடா விற்க்கும் ஒரு கடையில் வேலை பார்க்கும் கமல் தற்செயலாக ஸ்ரீதேவியை சந்திக்க படிபடியாக இருவருக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது....மேலும் இருவரும் பக்கத்துவீட்டினர் என்றதை தெரிந்தவுடன் இவர்களின் நட்பு அதிகமாகிறது..அடிக்கடி எதாவது ஒரு காரணத்திற்காக சந்திக்கின்றனர்.....

ஆனால் இருவரும் தங்கள் மன விருப்பத்தை சொல்வதில்லை.....

ஸ்ரீதேவியின் கல்லூரி விழாவில் ஒரு கவிதை போட்டி நடக்கிறது. அதில் ஒரு வரியை கொடுத்து அதில் துவங்கி எந்த வரியில் முடிகிறதோ அதை ஆரம்பமாக அடுத்தவர் வைத்து ஒரு கவிதை சொல்ல வேண்டும்.... தொடர்ச்சியாக கவிதை வர ஒரு கட்டத்தில் ஒருவர் ஆடி வெள்ளி என்று முடிக்க அடுத்தவர் அதையே ஆதியாக கொண்டு ஆடிவெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம் கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம் ...என்று அழகான வரி கொடுக்க அதையே முதலாக கொண்டு கமல்-ஸ்ரீதேவி இருவரும் ஒரு காட்டில் சந்தித்து தங்களின் மனதை மொனமாகவும், விழியின் மூலமாகவும் மிக அழகாக தங்கள் காதலை வெளிப்படுத்துவர்......
இக்காட்சியமைப்பே ஒரு கவிதை போல கே.பி. ஒரு கற்பனையோடு அமைத்துள்ளார் ! இருவரும் பாடலுக்கு வாய் அசைக்காமல் வெரும் விழிகளின் மூலமாகவே தன் எண்ணத்தை சொல்லும் இது போன்ற பாடல்கள் மிகவும் அறிது இன்று.....

மென்மை மற்றும் மவுனம்.....இது தான் அடிப்படை என்று கே.பி. , கவிஞர்-எம்.எஸ்.வி. யிடம் சொல்லி இருப்பாரோ ?? தவிர, ஆதி - அந்தம் என்று ஒரு சவாலும் விட்டிருப்பார் அவர்.......பாடலை முதலில் படியுங்கள்....

ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்

ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது ஆசையென்னும் வேதம்
ஆசையென்னும் வேதம்

வேதம் சொல்லி மேளமிட்டு மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்

நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மௌனம்
ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம்
வீணை அவள் சின்னம்

சின்னம் மிக்க அன்னக்கிளி வண்ணச்சிலை கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள என்று வரும் காலம்

காலம் இது காலம் என்று காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்

கவிஞர் பளிச் பளிச் என்று முத்து முத்தாக ஒவ்வொரு வரியும் கொடுக்க அதற்கு மெல்லிசை மன்னர் மனதை ஒரு மயில் தோகயில் வருடுவது போன்ற மெட்டமைக்க இந்த பாடலின் சிறப்பை எப்படி எடுத்துச்சொல்வது !!!!

பாடுவது ஜெயச்சந்திரன்_ வாணி ஜெயராம் ........ஜெ.சந்திரன் ஒவ்வொரு வரியையும் தெள்ளதெளிவாகவும் நிதானமாகவும் பாட அதற்கு வாணி அவர்கள் அழகுக்கு அழகு சேர்க்க இப்பாடல் மேலும் மேன்மையடைகிறது !...


பாடலில் தான் எத்தனை கமகங்கள் !!
நேரம் , ஓரம் , ஆடும் , வேதம், மௌனம், சின்னம்…. இப்படி ஒவ்வொரு வார்த்தையிலும் பிரமிக்கவைக்கும் கமகங்கள் !!
எம்.எஸ்.வி. பாடல் முழுவதும் தன் கை எழுத்தை பதித்திருப்பார்......

நான் அடைந்த நேரம்....கோடி இன்பம்..........இதில் சற்று மென்மை,

நாடி வந்தேன்.......சிறிது சங்கதி...... அதிலும் ..நாடி .... அதில் ஒரு ஏக்கம் !!! எப்படி இவர் வரிக்கு வரி அந்த தாக்கத்தை தருகிறார் !?


சரி.....பல்லவி எப்படி அமைந்துள்ளது ??

சங்கராபரணத்தின் ஸ்வரங்களான SR2G3M1 PD2N3S பாடலின் பெரும்பகுதியில் அமைந்திருக்கும்.

ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்
G3GGS/GGGS/SR2GSRS…/N3RSN3D2

கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
DMPD/D2D1D2M/MPD2PMG….P

ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம்
PPPG/DDDM/PDNPDP…D

ஓசையின்றிப் பேசுவது ஆசையென்னும் வேதம்
D1D2D2D1P / GMPMG / MGRS / N3D2D1M

ஆசையென்னும் வேதம்
MPDPMG…..P

வாணி அவர்கள் , ஓசையின்றி என்ற இடத்தில் அப்படியே மெய் மறக்க வைக்க......... கர்நாடக சங்கீத மொழியில் சொல்லவேண்டும் என்றால் .....அந்த வரி ஓசையின்றி....என்பது D2 மற்றும் D1 ( இரண்டு தைவதமும் இணைவது போல ) ....இது ஒரு பிரமிக்க வைக்கும் அமைப்பு !!....

பல்லவியின் துவக்கத்தில் சங்கராபரணம் ராகம் போன்ற ஒரு மாயையை உருவாக்கிவிட்டு ,இதன் ( D1 )மூலம் ராகத்தினை விட்டு வெளியே செல்வார்...

ஒன்றை குறிப்பிடவேண்டும்......நாயகனின் ஏக்கம் மற்றும் தயக்கத்தை வெளிப்படுத்த பாடலின் பெரும் பகுதி மந்தார ஸ்தாயியில் அமைக்கப்பட்டிருக்கும் ....... கதாநாயகியின் வரிகளில் தாரஸ்தாயின் தாக்கம் அதிகம் இருக்கும்.....

ஜெயச்சந்திரன் ....மேடை கண்டு ஆடும்....என்று சற்றே தாரஸ்தாயி செல்லுகையில் அற்புதமான DOUBLE BASS பின்வரும் !!....பாடல் முழுவதுமே மெலடி தான் என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த இடம் இது.....

பல்லவியினை ஜெயசந்திரன் மீண்டும் பாடும்போது ....ஒரு மாத்திரை இடைவெளிவிட்டு தாளம் வரும்.....எம்.எஸ்.வி.... கற்பனையோடு விளையாடியிருக்கிறார்.. ம்ருதங்கம் வாசிப்பவர்கள் திடீரென்று செய்யும் ஜாலம் இது ....ஒரு நொடி தள்ளி வரும்போது அது ஒரு தனி அழகை தரும்....

பாடலின் மற்றுமொரு சிறப்பு..... இடையிசை கோரஸ் மூலமாகவே வரும்..... துணைக்கு மென்மையான ரிதம் கிடார் !

இப்பாடல் என்னுடன் பள்ளி நாட்களிலிருந்து இன்று வரை மனதில் ஒரு இனிமையான வருடலுடன் வருகிறது.....இரவு நேரங்களில்...அமைதியான சூழ்நிலையில்....எத்தனையோ தருணங்கள் இப்பாடல் எனக்கு சந்தோஷத்தினை தந்திருக்கிறது.......

அந்தாதி போன்ற ஒரு பாடலை அளித்த கவிஞரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்......

மென்மையான சந்தத்தினை தந்த மாமன்னர் வாழ்க.......

இந்த அற்புதமான பாடலின் வீடியோவை பாருங்கள் இங்கே :

http://www.youtube.com/watch?v=BCE9JC_gil8


Last edited by S.Balaji on Fri Jun 08, 2012 1:38 pm; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Fri Jun 08, 2012 9:43 pm    Post subject: Reply with quote

Dear Balaji,

A wonderful analysis of the song "Aadivelli.." from Moondru Mudichu" of KB.
The way our Master has tuned this Anthaakshari of Kaviyarasar is something beyond any explanations and only MSV is capable of creating such wonders.

I listened to the song half a dozen times after you had spoken to me just before posting in the site and I am yet to come out of the 'feel' it has created in me.

Thanks for recalling such a great work of MSV for us to relish again and again ...!!

We look forward to such posting as frequently as possible from you !.

Ramki
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group