"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Curtains for Karnan re-release /digital assault on MSV music

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Speak to Members, Introduce Yourself, Discuss any topic of your interest, Fun, Puzzles, Riddles, Games
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Apr 25, 2012 10:05 pm    Post subject: Reply with quote

அன்பு நண்பர்களே,
அறியாமையால் நேர்ந்த பிழை என்றால் மன்னித்து விடலாம். தெரிந்து கொண்டே எழுதுபவர்களை எப்படி மன்னிப்பது. திரும்பத் திரும்ப தவறாக எழுதி வருவதை எப்படி ஏற்றுக் கொள்வது.

While for the mishandling blame should be leveled on the entire team of Shanti Narayanaswamy/Ramkumar family and not on a few individuals much less on a couple of our forum members.

இது எதற்குத் தேவையில்லாமல் சிவாஜி குடும்பத்தை இழுக்கிறீர்கள். அது தவறு என்று தங்களுக்கெல்லாம் தெரியாதா அல்லது வேண்டுமென்றே அவர்களை அவமானப் படுத்தும் உள்நோக்கத்தோடு எழுதுகிறீர்களா. படத்தில் நடித்ததோடு சிவாஜி நின்று விடுவதும் அவர் மற்ற துறைகளில் தலையிட மாட்டார் என்பதும் ஊரறிந்த உண்மை. அப்படி எல்லா விஷயங்களிலும் தலையிடுபவர்களைப் பற்றி எழுத இங்கு ஒருவருக்கும் தைரியமில்லை. அப்படி இருக்கும் போது அவரே மறைந்து போன பிறகு, அவர் குடும்பத்தாருக்கு இதில் எப்படி தொடர்பு இருக்க முடியும். ஒரு நிறுவனம் கர்ணன் திரைப்படத்தின் உரிமையை வைத்திருக்கிறது. மற்றொரு நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு விநியோகம் செய்யும் உரிமையைக் கொடுக்கிறது. உரிமையைப் பெற்ற நிறுவனம் அப்படத்தைத் தன் செலவில் மெருகேற்றி அல்லது குட்டிச் சுவராக்கி, தன் பொறுப்பில் வெளியிடுகிறது. அதில் வெற்றி கிடைத்தாலும் தோல்வி கிடைத்தாலும் நன்றாக வந்தாலும் சொதப்பலாக வந்தாலும் அது சம்பந்தப் பட்ட நிறுவனம் சம்பந்தப் பட்ட விஷயம். இதில் சம்பந்தமே இல்லாமல் சிவாஜியின் குடும்பத்தை இழுப்பது எந்த நாகரீகத்தில் சேர்த்தி. அப்படியும் இப்படத்தின் தயாரிப்பு அந்த குடும்பத்தினுடையதா என்றால் அதுவும் இல்லை. அந்தப் படத்தில் நடித்ததற்காக சிவாஜிகுடும்பத்திற்கு இந்த பழி என்றால் அதே பழி அப்படத்திற்கு இசையமைத்த மெல்லிசை மன்னர்களின் மேலும் போடலாமே... இதெல்லாம் என்ன வாதம். அந்தப் படத்தில் நடித்தது சிவாஜி செய்த பாவமா... சிவாஜி மேலும் அந்தக் குடும்பத்தின் மேலும் நம் மெல்லிசை மன்னர் ரசிகர்களுக்கு என்ன கடுப்பு அல்லது காழ்ப்புணர்ச்சி என்பது புரியவில்லை. தன் 300க்கும் மேல்பட்ட படங்களில் 100க்கும் மேல் மெல்லிசை மன்னர் இசையமைத்து சாதனை புரிந்தது தான் சிவாஜி செய்த பாவம் போலும். ஒரு நடிகரின் படங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் ஒரே இசையமைப்பாளர் பங்கேற்ற பெருமை நடிகர் திலகத்தையும் மெல்லிசை மன்னரையும் தான் சேரும். இவர்கள் இருவரையும் நம்முடைய உறுப்பினர்கள் நடத்தும் விதம்... ஆஹா... புல்லரிக்க வைக்கிறது. இவர்களல்லவோ மெல்லிசை மன்னரின் ரசிகர்கள்.. இவர்களல்லவோ நாகரீகத்தின் சின்னங்கள்...
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Speak to Members, Introduce Yourself, Discuss any topic of your interest, Fun, Puzzles, Riddles, Games All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group