"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Kannile enna undu kangal dhaan ariyum-Aval oru thodar kathai

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Tue Feb 08, 2011 2:46 pm    Post subject: Kannile enna undu kangal dhaan ariyum-Aval oru thodar kathai Reply with quote

சிறு வயதிலேயே குடும்பத்தை விட்டு பிரிந்து துறவரம் பூண்ட தந்தை... மூத்த அண்ணன் ஒரு குடிகாரன் ..அவன் குடும்பம்... இரண்டு தங்கைகள் -தனக்கு முன் திருமணம் புரிந்து விதவையான ஒரு தங்கை.... திருமண வயதில் ஒரு தங்கை...பார்வையிழந்த ஒரு தம்பி.....வயதான தாய்...இந்த சூழ்நிலையில் கவிதா ( சுஜாதா ) வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றும் ஒரு பெண்....அவள் வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள் ...சோதனைகள்...சவால்கள்.... அவள் எப்படி எதிர்கொள்கிறாள்..... ஒரு நடுத்தர வர்கத்து பெண் எப்படி போராடுகிறாள் என்பது சாரம்.

இது தான் 1974ல் வெற்றி பெற்ற இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை...

எல்லா பொறுப்பும் தன் மீது விழுந்ததாலும் ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் எதாவது சுயநோக்குடன் எதாவது எதிர்பார்பதால் கவிதாவிற்கு தோற்றத்திலும், மற்றவர்களுடன் பழகுவதிலும் ஒரு முரட்டுத்தனமும், கடுமையும் வந்துவிடுகிறது. தான் குடும்பத்திற்காக மிகவும் உழைத்தாலும் எல்லாரும் தன்னை சரியாக புரிந்த்து கொள்ளவில்லை என்ற ஒரு வருத்தம்....

தன்னை ஓர் அளவுக்கு அறிந்த தன் காதலன் விஜயகுமாரும் ஒரு முறை ..." ஏன் நீ இப்படி கடுமையாக பேசுகிறாய்... உன் மனதில் என்ன தான் உள்ளது..நீ என்ன கல்லா..." என்று கேட்க... சுஜாதா தன் மன ஏக்கத்தினை ஒரு அருமையான பாடல் மூலமாக வெளிபடுத்துகிறார்...

கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்

எஸ்.ஜானகியின் குரலில் சுஜாதா பாடுவது இந்த படத்தில் அந்த அபலை பெண் தன் ஆதங்கத்தை யாரிடம் சொல்வேன் ...தன்னை மணக்கபோகும் விஜயகுமாருக்காவது புரிய வேண்டும் எனற நோக்குடன் ...கண்ணதாசனின் முத்தான வரிகளுடன், மெல்லிசை மன்னரின் மெலடி மெட்டுடன் அமைந்த இப்பாடல் மிகவும் புகழ்பெற்றது..... படம் பார்க்கும் அனைவருக்கும் ஒரு ஆறுதலும், நிம்மதியும் அளிக்கும் அருமையான பாடல்...

எம்.எஸ்.வி. ஷெனாய் கருவியை எப்படி பயன்படுத்துவார் என்பது சரித்திரம் அறிந்த உண்மை.... இப்பாடலில் கதாபாத்திரத்தின் ஏக்கத்தினை வெகு அழகாக ஷெனாய் மூலமாக நமக்கு அளிப்பார்... ஷெனாய் இடைஇடையே வரும்..... அதனுடன் சிதார்.....சற்று பாங்கூஸ்......தபலா......

பல்லவியின் ஒவ்வொரு வரியின் முடிவிலும் அருமையான சிதார் ஒலி ! பல்லவி அமைப்பே ப்ரமிக்கதக்கது ! படிபடியாக மேல் ஸ்தாயிக்கு சென்று நிற்பதாக அமைத்த நம் எம்.எஸ்.வி. யை எப்படி புகழ்ந்தாலும் போதாது...

மெல்லிசை மன்னர் என்ற பெயர் அவரை விட வேறு யாருக்கு பொருந்தும் !

இப்படத்தின் எல்லா பாடல்களும் புகழ் பெற்றவை...கே.பி--- எம்.எஸ்.வி. கூட்டணியின் மற்றோரு வெற்றி சித்திரம்....

இதோ பாடலின் வரிகள்

கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்கு தெரியும்

நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யார் ஆணைப்பாரோ இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்கு தெரியும்

சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனம் என்னும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையில் தேனி
நான் ஒரு ராணி பெண்களில் ஞானி
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்கு தெரியும்

கோடையில் ஓரு நாள் மழை வரக்கூடும்
கோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்
காலங்களாலே காரியம் திறக்கும்
காரியம் திறந்தால் காரணம் விளங்கும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்கு தெரியும்


இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் நமக்கு அந்த கவிதா பாத்திரமும் .....அவளின் ஏக்கமும் தான் மனதில் எழும் !

கே.பி. சூழ்நிலையை மட்டும் சொல்ல எப்படி தான் இந்த கவிஞரும்- மெல்லிசை மன்னரும் இப்படி ஓர் மனதை வருடும் பாடலை தந்தார்களோ !!!
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Wed Feb 09, 2011 12:38 am    Post subject: Reply with quote

Congrats Mr. Balaji for your passionate piece. I still remember and relish your excellent postings on Sumaithangi songs. Kavignar's lyrical display is incredible. He has written simple lines to convey profound meanings. He has presented the character of the heroine completely in capsule form. I have nothin more to add than what you have said on the music. Whenever I hear this song, I feel disturbed. This film was lifted to great heights by Kavignar and Mellisai Mannar.

I find that you are close to hitting your 5th century. Pl hit it fast and keep marching towards the millennium goal.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Thu Feb 10, 2011 11:29 am    Post subject: Reply with quote

Dear Ramesh and Parthavi Sir

Thank you. I have very fond memories of this movie and the songs especially Kadavul amaithu vaitha medai and Deivam thandha veedu were talk of Chennai . Kadavul amaithu ....was played on all light music programmes.

And Ramesh.... that climax BGM was novel.... Sometime , I have seen without BGM and with too ! Lots of thought process went into creating a scene..

Parthavi Sir,

True. Trait of the central character was indeed captured in capsule by Kavignar and KB was blessed to have 2 Geniuses who added immense value to his creations.

The MSV mystery still remains ! When I started identifying the raga content, I thought it must be a product of Mohanam as the Pallavi oscillates between G3 and R2 . At the end of the Pallavi...En manam enna vendru...... MSV takes us to N3 and also M2 which are all Kalyani notes ! Shall we say that its Mohana Kalyani ? Rolling Eyes
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Fri Feb 11, 2011 10:33 am    Post subject: Reply with quote

Dear Mr. Balaji,
Thanks for reminding one of the great song as far as the composition value and the emotive expression is concerned. This is a personal favorite of MSV who said in an interview.

Some times some songs which has a greater value and in terms of composition and emotive expressions gets buried by the other songs of the same movie due to film situation, star value who sings etc. A classical example of a particular type is 'Ooraariyam naadagam aadinaal' in 'sumathi en sundhari' which got buried with other hits like 'pottu vaitha mugamo' etc.

As far as the raga content is concerned as you rightly said it starts with a shade of mohanam, but shifts to the notes 'n2' (you mentioned n3 which I think is a typing mistake) and gets through m2 (prathi madhyamam)which of course is of kalayaani.

But there is further surprise. In the charanam it goes through the note m1 (sudha madhyamam) at the place 'neruppendru sonnal neerilum anauyum' and goes through the same note for the next 2 lines and then comes back to the kalayani route when the line 'yaararivaroo iravanin poruppu'.

Now how to call this song with a raga name. If the starting of the pallavi is mohana and end through kalayani and during the charanam if it goes through m1 which then we may call as sankarabaranam or we could call it as yaman kalayani which gets both the notes of m1 and m2 but which does not show any shade of the raga melody. This types of composition should be aptly named as 'How to name it?'

There are N number of songs which falls in this category and worse some songs even goes to ni1, da1 etc with a above mentioned notes.

MSV adapted a particular style which unique of his own in which he starts the song in mohana but deviates immediately with in two lines of lyric. This style he started and exploited especially after parting off with TKR. His first compositions is itself a testimony which is 'Velli kizhamai visiyum velai'

Hundreds and hundreds of songs can be quoted as an example. I give a few

Velli mani oosayile
oru naalile urvaanadhe
sirithaal thanga padumai
kadalooram vaangiva kaathu
vizhiye kadhai yezhudhu
kuzhandyayum deivamum gunathaal ondru
thanga thoniyile
kettavarellam paadalam
kattazhagu thanga magal thiru naalo


This list inconclusive.

But MSV insists that he never kept any raga in mind unless the situation warrants. a classical type


N Y MURALI
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Mon Feb 14, 2011 11:26 am    Post subject: Reply with quote

Murali Sir

True ! the notes also touch upon M1 which is Shankarabaranam . And thanks for the list . They too have the flavour Shocked There is a general perception that Ilayaraja was the one who had applied Mohanam or relative raga maxium . May be more of MSV to be unearthed now !

Sir, I decipher the notes on the following lines :

R1 shudhDha rishabham D1 shudhDha dhaivatham
R2 chathushruthi rishabham D2 chathushruthi dhaivatham
R3 sathshruthi rishabham D3 sathshruthi dhaivatham
G1 shudhDha gAndhAram N1 shudhDha nishAdham
G2 sAdhArana gAndhAram N2 kaishiki nishAdham
G3 anthara gAndhAram N3 kAkaLi nishAdham
M1 shudhDha madhyamam M2 prathi madhyamam


So for Kalyani / Shankarabaranam / Mayamalavagowla etc, I follow N3 and thats why used N3
Back to top
View user's profile Send private message Send e-mail
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Wed Feb 16, 2011 11:54 pm    Post subject: Reply with quote

Dear Sirs,
This song evokes a nostalgic feeling too! The background tabla is so soft and added with the bass guitar's support, it feels like heaven to move with the wave as the tabla progresses. Great tabla accompaniment by tabla Prasad, and no less compared to Shehnai and sitar, of course!
Sai Saravanan
Back to top
View user's profile Send private message
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Sun Mar 13, 2011 12:06 pm    Post subject: Reply with quote

Dear All,
MSV used 5 top singers (Yesudoss, SPB, S.Janaki, P.Suseela, LRE) for 5 songs in this movie which is another special.
Each song is unique in its own way. Deivam thandha veedu made Yesudoss very popular.
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group