"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Ponnendrum poovendrum - Nilave nee saatchi

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Dec 03, 2010 9:23 am    Post subject: Lyrics - Ponnendrum poovendrum - Nilave nee saatchi Reply with quote

படம்: நிலவே நீ சாட்சி
பாடியவர்: S.P. பாலசுப்ரமணியன்
பாடலாசிரியர்: கவிஞர் வாலி
இசை: மெல்லிசை மன்னர்

பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ
பெண்ணை பார்த்தால் சொல்ல தோன்றும்
இன்னும் நூறாயிரம் ம்ம்ம்ம்...இன்னும் நூறாயிரம்

மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து
மோகரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து
(பொன்னென்றும்)

கோடை வசந்தங்கள் குளிர் காலம் என்று
ஓடும் பருவங்கள் கணநேரம் இன்று
காதல் கவி பாடும் அவள் மேனி கண்டு
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று

கன்னி இளம் கூந்தல் கல்யாண பள்ளி
கண்கள் ஒளிவீசும் அதிகாலை வெள்ளி
தென்றல் விளையாடும் அவள் பேரை சொல்லி
இன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி
(பொன்னென்றும்)

1970- இல் வெளிவந்த நிலவே நீ சாட்சி படத்தில வரும் இந்த பாடல் மிக மிக அருமையான பாடல். ஒரு ரம்யமான சூழலில் தென்றலில் சலசலக்கும் ஓடை போல் நம் மனதில் சலசலக்கும் பாடல் இது. அழகான, சற்றே வித்யாசமான மெட்டில் அமைந்த இந்த பாடல், வாலியின் கைவண்ணத்தில் மேலும் ரசிக்க வைக்கிறது. எளிமையான வரிகளில் காதலியை வர்ணிக்கும் ஒரு இதமான பாடல் இது.

அருமையான கிடாரில் தொடங்கி, தேனையே குரலாய் கொண்ட எஸ்.பீ.பீ. யின் ஹம்மிங்கில் தொடர்ந்து வயலினோடு இழைந்து அமோகமாய் தொடங்கும் பாடல் இது. பாடலின் இடை இடையே வரும் ட்ரம்பெட்டின் அழகும், சந்தூரின் அழகும் நெஞ்சை அள்ளும்.

மெல்லிசை மன்னரின் பாடல்களில் சில, மேகத்தில் மறைந்திருக்கும் நிலவு போல. இந்த பாடலும் அது போல ஒன்றுதான். நான் நீண்ட வருடங்களாய் கேட்க மறந்து, பின் சமீபத்தில் இந்த பாடலை தொலைகாட்சியில் பார்த்தபோது மெய் மறந்து ரசித்தேன். இதை உடனே பதிவில் எழுதிவிட வேண்டும், என்னை போல் இந்த பாடலை கேட்க மறந்த நம் மெல்லிசை மன்னரின் ரசிகர்களுக்காக என்று உடனே எழுதி விட்டேன். இதோ பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்கள்.

http://www.dishant.com/jukebox.php?songid=59289
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Fri Dec 03, 2010 10:43 am    Post subject: Reply with quote

Dear Mrs. Meenaksi,

Nice to hear from you after a long time with a post on your specialized posting.

I am hearing this song after along time from the link provided by you.

Another beautiful melody.

Thanks for providing the link.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Dec 03, 2010 11:21 am    Post subject: Reply with quote

மிக்க நன்றி. பதிவில் நீண்ட நாட்களாக எழுத முடியாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன். இனி நிச்சயமாக இவ்வளவு இடைவெளி இருக்காது. இந்த பதிவிற்கு உங்கள் கருத்ததை உடனே எழுதியதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Mon Dec 06, 2010 5:00 am    Post subject: Lyrics Reply with quote

Dear Meemakshi mam,
Curiously the song 'ponnendrum poovendrum' has managed to stay in hibernation despite the alert recallers in our forum. Possibly it 'waited' for you to restore its prestine glory by touching upon the lyric. The movie showcased the amazing repertoire of MSV as a composer adept in every department of the game including the one for voice selection. Also this song has faithfully registered the whiff of SPB's FRESHNESS along with a little of 'less perfection' in his rendering of chaste Tamil terms in those distant days of his entry to TFM. A careful observation of the line "MOONRU KANICHHaaRU ONRaaGA PIZHINDHU has been rendered as "" "" "" "" "" "" "" PIZH U NDHU- indeed an tricate spot for a non-Tamil to strike perfection so early in his/ her career. It is certainly a pardonable slip, as elsewhere it is virtually impossible to 'implicate' SPB of mispronunciation in his career studded with glories. Perhaps it was a 'Divine desire' that this slip occurred just once to emphatically register the fact this singer has taken pains to achieve the elegance of clarity and been one of the most meticulous about even dilects and their variants across the Tamil land.
Thank you for the opportunity.
Warm regards K.Raman Madurai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Mon Dec 06, 2010 10:31 am    Post subject: Reply with quote

This song seems to have some resemblance to Dheyvam thandha veedu irukku (It is the other way about, factually speaking.) People like Murali may clarify (or point out that my conception was incorrect.)
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Mon Dec 06, 2010 12:54 pm    Post subject: Reply with quote

உங்கள் கருத்துக்கு நன்றி Professor. உங்கள் கருத்தை படித்த உடன் 'காதல் விளையாட, கட்டிலிடு கண்ணே' என்ற பாடல்தான் என் நினைவுக்கு வந்தது. இந்த பாடலின் சரணத்தில் வரும் 'நீராட்டு தீராமல் தேரோட்டும் புஷ்பங்கள் பாராட்டி பேசட்டுமே' என்பதற்கு பதில் S.P.B. அவர்கள் 'போராட்டி பேசட்டுமே' என்று பாடி இருப்பார். ஆனால் இதை சரி செய்து பாடிய version ஒன்றும் இருக்கிறது. ஆனால் அந்த பழைய version பாடல்தான் நிறைய ஒலிபரப்பில் கேட்க முடிகிறது.
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group