"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Viswa RaamaayaNam

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Speak to Members, Introduce Yourself, Discuss any topic of your interest, Fun, Puzzles, Riddles, Games
View previous topic :: View next topic  
Author Message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Wed Jan 27, 2010 6:00 pm    Post subject: Viswa RaamaayaNam Reply with quote

ராமாயணத்தில் ஏழு காண்டங்கள் உண்டு. இந்த ஏழு காண்டங்களையும் குறிக்கும் பாடல்கள் எம் எஸ் வியின் பாடல்களில் உண்டு! ஏழாவது காண்டமான உத்தர காண்டம் சீதை காட்டுக்கு அனுப்பப்பட்டது, ராமர், சீதை அனைவரும் அவதாரம் முடித்து இவ்வுலகை விட்டு நீங்கியது போன்ற விஷயங்களை விவரிப்பதால், ராமாயணம் சொல்பவர்களும், படிப்பவர்களும் ஆறாவது காண்டமான யுத்த காண்டத்தோடு முடித்துக் கொள்வார்கள். உத்தர காண்டத்தைத் தவிர்த்து விடுவார்கள். ஒருவேளை உத்தர காண்டத்தைப் படித்து விட்டால், மீண்டும் பால காண்டத்தில் ராமாவதாரத்தைப் படிக்க வேண்டும் என்பது ஒரு மரபு.

எம் எஸ் வியின் இசை வீச்சுக்கு உத்தர காண்டமும் தப்பவில்லை. எனவே, உத்தர காண்டத்தில் துவங்கி யுத்த காண்டத்தில் முடிக்கிறேன். காட்டில், வால்மீகி ஆசிரமத்தில், லவ குசர்கள் பிறந்து, வால்மீகியிடம் ராமாயணம் கற்று, ராமன்தான் தங்கள் தந்தை என்று அறியாமலே ராமாயணத்தைப் பாடிப் பரப்புகிறார்கள் ('லவ குசா' திரைப்படத்தில், லவ குசர்கள் பாடுவதாக, 'ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே' என்று ஒரு அற்புதமான பாடல் வருகிறது. பாடல் வரிகள், இசை இரண்டுமே அற்புதம். கவிஞர் யார், இசை அமைப்பாளர் யார் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ராமனின் பெயர் கொண்ட ராகவேந்திரர் நிச்சயம் அறிந்திருப்பார்!) எனவே, உத்தர காண்டத்தில் ராமாயணம் துவங்கப் படுவதில் தவறில்லை என்று கருதுகிறேன்.

உத்தர காண்டம்: (உத்தரம் என்றால் முடிவு, மறைவு என்று பொருள்.)
(யாரோ சொன்ன அவச்சொல்லைக் கேட்டு, ராமன் சீதையைக் காட்டில் கொண்டு விட்டதையும், சீதை வால்மீகியின் ஆசிரமத்தில் தங்கி லவ குசர்களை ஈன்றதையும், லவ குசர்கள் வால்மிகியிடம் ராமாயணம் பயின்று, ராமகாதையைப் பாடிப் பரப்பியதியும், அஸ்வ மேக யாகம் செய்த ராமன், லவ குசர்களுடன் போரிட நேர்ந்து, பின்பு அவர்கள் தன் புதல்வர்கள்தான் என்று அறிந்ததையும், அவர்களுக்குப் முடி சூட்டி விட்டுக் கானகம் சென்று, சரயு நதியில் மூழ்கி இவ்வுலகை விட்டு அகன்றதையும், அவ்வாறே அவன் தம்பியர் மூவரும் மறைந்ததையும், பூமி பிளந்து தன் மகளான சீதையைத் தனக்குள் அழைத்துக் கொண்டதையும் உத்தர காண்டம் விவரிக்கிறது.)

கண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகிறது
அது பாசமன்றோ? ('அம்மம்மா தம்பி என்று நம்பி' - ராஜபார்ட் ரங்கதுரை)

கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
சுவைக் கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகி
மானிடத்தைத் தேடி இன்று போகிறாள்
தன் மணவாளன் கட்டளையால் ஜானகி

தேடி வந்த மாளிகையில் ஆதரவில்லை
அவள் தேர் செல்லும் பாதையில் தெய்வமும் இல்லை
பாவை அவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை
தன் பாவம் இல்லை என்று சொல்ல ஒரு வார்த்தையும் இல்லை

ஊமை கண்ட கனவை அவள் யாரிடம் சொல்வாள்
இன்று ஊர் சொல்லும் வார்த்தையில் வேறிடம் செல்வாள்

('கானகத்தை தேடி' - கொடி மலர்)

பால காண்டம்
(ராம, லட்சுமண, பரத சத்துருக்குனர் பிறப்பு, ராம லட்சுமணர் விஸ்வாமித்திரருடன் கானகம் சென்று முனிவர்களின் யாகத்தைக் காத்தது, மிதிலை சென்று வில்லை முறித்து ராமன் சீதையை மணமுடித்து அயோத்தி திரும்புதல்)

வம்சத்துக்கொருவன் ரகுராமன்

ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன் ('ராமன் எத்தனை ராமனடி? - லக்ஷ்மி கல்யாணம்)


மிதிலா நகரில் ஒரு மன்றம்
பொன் மேனியில் ஜானகி தங்கம்
மணிமாடத்திலே வந்து தோன்றும்
மனம் மன்னவன் எண்ணத்தில் நீந்தும்
ஸ்ரீராமனைக் கண்டது மனமே
பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே ('மதுரா நகரில்' - பார் மகளே பார்)

ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் -
ராஜாராமன் நினைத்திருந்தான்
அவள் சுயம்வரம் கொள்ள மன்னவர் சிலரும் மிதிலைக்கு வந்திருந்தார் -
மிதிலைக்கு வந்திருந்தார்
மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்
இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க ராமனைத் தேடி நின்றாள்
நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம் கவலை ஒருபுறம்
அவள் நிலைமை திரிபுறம்

கொத்க்கின்ற மூச்சு மாலையில் விழுந்து மணியும் கருகியதே
அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே

நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை
அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை

முனிவன் முன்புறம் ஸ்ரீராமன் பின்புறம்
சீதை தனியிடம் அவள் சிந்தை அவனிடம்

மன்னவர் எல்லாம் சுயம்வரம் நாடி மண்டபம் வந்து விட்டார்.
ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கி விட்டாள்
ஜானகி கலங்கி விட்டாள். ('ஜனகனின் மகளை' - ரோஜாவின் ராஜா)

சீதைக்கேற்ற ராமனோ? ('ராதைக்கேற்ற கண்ணனோ?' - சுமைதாங்கி)

வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளொ?
மையிட்ட கண்ணொடு மான் விளையாட
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ - அங்கே
தேவர்கள் யாவரும் திருமண மேடை அமைப்பதைப் பார்த்திருந்தாரோ திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர் காவலில் நின்றிருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ?

பொன் வண்ணமாலை ஸ்ரீராமன் கையில் மூவரும் கொண்டு தந்தாரோ அங்கெ
பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
மங்கையை வாழ்த்த வந்தாரோ தேவி
சீருடன் வந்து சீதனம் தந்து
சீதையை வாழ வைத்தாரோ தேவி
('வசந்தத்தில் ஓர் நாள்' - மூன்று தெய்வங்கள்)

கல்யாணக்கோலம் கொண்ட கல்யாண ராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன் ('ராமன் எத்தனை ராமனடி? - லக்ஷ்மி கல்யாணம்)


ஸ்ரீராமன் ஜானகியின் திருமுகத்தைப் பார்த்திருந்தான்
இன்றுவரை அவள் நினைவை இதயத்தில் வைத்தே போற்றி வந்தான் ('ஒருவனுக்கு ஒருத்தி என்று' - தேனும் பாலும்)

அயோத்யா காண்டம்
(தசரதன் ராமனுக்கு முடி சூட்டத் தீர்மானித்தது, கைகேயியின் பிடிவாதத்தால் ராமன் லட்சுமணன் சீதையுடன் காட்டுக்குச்சென்றது )

தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன் ('ராமன் எத்தனை ராமனடி? - லக்ஷ்மி கல்யாணம்)

மந்தரையின் போதனையால் மனம் மாறிக் கைகேயி
மஞ்சள் குங்குமம் இழந்தாள் ('ஒற்றுமையால் வாழ்வதாலே' - பாகப்பிரிவினை)

ராம நாடகத்தில் மூன்று தம்பியரின் உள்ளம் கண்டேனே ('அம்மம்மா தம்பி என்று நம்பி' - ராஜபார்ட் ரங்கதுரை)

மாலை சூடி வாழ்ந்த வேளை
வனவாசம் போனாலும் பிரியாத சீதை ('மல்லிகை முல்லை' - அண்ணன் ஒரு கோவில்)

ஆரண்ய காண்டம்
(ராமன் சீதை லட்சுமணன் இவர்களின் காட்டு வாழ்க்கை, ராவணன் சீதையை அபகரித்துச் சென்றது)

ஜானகிராமன் காட்டினில் திரிஞ்சான் ('போடச்சொன்னால் போட்டுக்கறேன்' - பூவா தலையா)


கோடு போட்டு நிற்கச் சொன்னால் சீதை நிற்கவில்லையே
சீதை அன்று நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே1 ('அடி என்னடி உலகம்' - அவள் ஒரு தொடர்கதை)

கிஷ்கிந்தா காண்டம்
(ராமன் சுக்ரீவன், அனுமனை சந்தித்தது, வாலியை வதம் செய்தது)

அவர்களுக்கேற்ப அனுமான் பொறந்தான் ('போடச்சொன்னால் போட்டுக்கறேன்' - பூவா தலையா)

சுந்தர காண்டம்
(அனுமன் இலங்கை சென்று சீதையைகண்டு வந்து ராமனிடம் சொல்லுதல்)

யாரோ இவளோ ராமன் தேடிய சீதை ('திருவளர்ச் செல்வியோ?' - ராமன் தேடிய சீதை)

யுத்த காண்டம்
(போரில் ராவணனை வென்று, சீதையுடன் அயோத்தி திரும்பி மணிமகுடம் தரித்தல்)

வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வெற்றி என்று போர் முடிக்குன் ஸ்ரீஜயராமன்
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்
அலங்காரரூபன் அந்த சுந்தரராமன்

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது ப்யம்?
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்

ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Wed Jan 27, 2010 8:57 pm    Post subject: Reply with quote

One more information. Of all the lines quoted, 'podachchonnaal pottukkaren' is written by Vaali. All other songs are by Kannadasan.

Others may bring our more lines from MSV songs depicting Raamaayanaa.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Speak to Members, Introduce Yourself, Discuss any topic of your interest, Fun, Puzzles, Riddles, Games All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group