"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Sollaththaan ninaikkiren - Sollaththaan ninaikkiren

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Feb 12, 2010 3:18 am    Post subject: Lyrics - Sollaththaan ninaikkiren - Sollaththaan ninaikkiren Reply with quote

படம்: சொல்லத்தான் நினைக்கிறேன்
பாடியவர்கள்: மெல்லிசை மன்னர், எஸ். ஜானகி
பாடலாசிரியர்: கவிஞர் வாலி
இசை: மெல்லிசை மன்னர்

எம்.எஸ்.வீ.:
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தை இன்றி தவிக்கிறேன்
ஆஹா! சொல்லத்தான் நினைக்கிறேன்

ஜானகி:
காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மனவீடு, அவன் தனி வீடு
அதில் புகுந்தானோ? எங்கும் நிறைந்தானோ?
அதில் புகுந்தானே, எங்கும் நிறைந்தானே
ஆஹோ! சொல்லத்தான் நினைக்கிறேன்

எம்.எஸ்.வீ.:
காதல் என்பது மழையானால்
அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட, நான் பாராட்ட
அவள் வருவாளோ? இல்லை மறப்பாளோ?
அவள் வருவாளே, சுகம் தருவாளே
ஆஹா! சொல்லத்தான் நினைக்கிறேன்

ஜானகி:
ஆசை பொங்குது பால் போலே
அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம்
அவன் அணைப்பானோ? என்னை நினைப்பானோ?
அவன் அணைப்பானே, என்னை நினைப்பானே
ஆஹோ! சொல்லத்தான் நினைக்கிறேன்

எம்.எஸ்.வீ.:
நேரில் நின்றால் ஓவியமாய்
என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்
நான் பாதி, அவள் தான் பாதி
எனக் கலந்தாளோ? கண்ணில் மலர்ந்தாளோ?
நெஞ்சில் கலந்தாளே, கண்ணில் மலர்ந்தாளே
எம்.எஸ்.வீ. & ஜானகி (ஆஹா! சொல்லத்தான் நினைக்கிறேன்)

1973 -ல் டைரக்டர் கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த படம் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' . இது ஒரு மிக அழகான, இயல்பான குடும்ப சித்திரம். இந்த படத்தின் மூலக் கருவே சொல்ல வந்த காதலை, சரியான நேரத்தில் சொல்லாமல், சொல்ல வரும் வேளையில், சூழ்நிலையால் சொல்ல முடியாமல் போவதுதான்.

இந்த பாடலை, படத்தின் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள், தங்களின் காதலின் இனிமையை, மனதிற்குள்ளேயே அனுபவித்து பாடுவது போல் அமைக்கப் பட்டிருக்கும். மனதில் காதல் வரும்போது, அந்த காதலை, அதற்கு உரியவரிடம் சொல்வதற்கு முன் உண்டாகும் பயம், தயக்கம், வெட்கம் என்ற பலவித உணர்ச்சிகளால் அந்த மனம் படும் அழகான போராட்டமே இந்த பாடல். நமக்கு கனவாக இருக்கும் எந்த ஒரு இனிமையான நினைவையும், நாம் மனதால் கற்பனை செய்து பார்க்கும் பொழுது, அந்த இனிமையை மிகவும் நிதானமாக ரசித்து, மகிழ்ந்து, மெய் மறந்து கனவிலேயே அனுபவிப்போம். அதுவும் அந்த கனவு காதல் என்றால், அதற்கு இனிமை இன்னும் அதிகம் அல்லவா!
இந்த உண்மையை உணர்துதானோ என்னவோ, நம் மெல்லிசை மன்னர் இந்த பாடலின் மெட்டையும், பின்னணி இசையும் மிகவும் இனிமையாக, நிதானமாக, நம்மையும் அந்த காட்சியின் இனிமையை ரசித்து அனுபவிக்கும்படி அமைத்திருக்கிறார்.

இந்த பாடலில் வரும் தனி புல்லாங்குழல், வயலின் மற்றும் விசில் இவைகளின் ராகத்தை கேட்கும் பொழுது நம் மனமும் அளவுகடந்த இனிமையால் பொங்கும். இந்த பாடலின் மிக சிறப்பான இரண்டு அம்சங்களில், முதலாவது, இந்த பாடலில் வரும் நம் மெல்லிசை மன்னர் அவர்களின் குரல். இந்த பாடலை தானே பாட வேண்டும் என்று அவரே முடிவு செய்தாரோ, இல்லை வேறு யாரவது முடிவு செய்தார்களோ தெரியவில்லை, ஆனால் இதை யார் முடிவு செய்திருந்தாலும் அவர்களுக்கு hats off! இந்த பாடலில் மெல்லிசை மன்னரின் குரல் அற்புதம்! அவர் குரல், இந்த பாடலுக்கு மிகப் பிரமாதமாக பொருந்தி உள்ளதை யாராலும் மறுக்க முடியாது. இந்த பாடலில் ஜானகி அவர்களின் குரலும் ஒரு ஏக்கத்துடன் கொஞ்சும். இந்த
பாடலின் உச்ச ஸ்தாயியில் வரும் வரிகளை இவர் பாடும் பொழுது, பாடல் காட்சியில் வரும் அந்த நாயகியின் மன நிலைக்கு ஏற்றவாறு, ஒரு ஏக்கம் கலந்த மயக்கத்தை தன் குரலில் கொண்டுவந்து, கெஞ்சுவதை போல அற்புதமாக பாடி இருக்கிறார். பாடலின் முடிவில் வரும் அந்த ஹம்மிங்கில் இவர்கள் இருவர் குரலும் இணைந்து ஒலிப்பதை கேட்கும் பொழுது நம் மனமும் அந்த ஹம்மிங்கில் கலந்து, கரைந்து விடுவது போல் தோன்றும்.

இரண்டாவது முக்கியமான அம்சம், இந்த பாடலின் இசையானது முற்றிலும் இதன் காட்சியோடு ஒன்றி விடுவதுதான். சில பாடல்கள் மட்டும்தான் இந்த தகுதியை பெறுகிறது. அதில், இந்த பாடல் குறிப்பிட தகுந்த ஒன்று. பல பாடல்கள் கேட்பதற்கு மட்டும்தான் இனிமை. காட்சியோடு அவ்வளவாக ஒன்றுவது இல்லை. இந்த பாடலின் இரண்டாவது சரணத்தின் முன், அந்த கதாநாயகி சமையல் அறையில் பால் பொங்குவதையும் உணராமல், நாயகனின் நினைவின் இனிமையில் அமர்ந்திருப்பாள். இந்த காட்சியின் பின்னணியாக வரும் அந்த தனி வயலினின் ராகம் கொள்ளை, கொள்ளை இனிமை. இதை போலவே, இந்த பாடலின் இரண்டாவது சரணம் முடிந்தவுடன் வரும் அந்த தனி விசிலின் ராகத்தின் பின்னணியில், அந்த நாயகி ஸ்கிப்பிங் ஆடுவது போல் வரும் காட்சியும் அவ்வளவு அருமை. மேலும், இந்த பாடலின் பின்னணி இசைக்கு ஏற்ப, பாடல் காட்சியில், அந்த கதாநாயகன் படி இறங்கி வருவதை, slow motion -இல் படம் எடுத்திருப்பது அழகாக இருக்கும். பாலசந்தர் அவர்கள் இந்த பாடல் காட்சியை ஒரு கவிதையாகவே படைத்திருக்கிறார்.

இந்த பாடலின் இசை, காட்சி இவற்றை போலவே பாடலின் வரிகளும் மிகவும் சிறப்பாக இருக்கும். பல்லவி தொடங்குவதே 'சொல்லத்தான் நினைக்கிறேன்' என்று படத்தின் தலைப்பை கொண்டுதான். பாடலின் வரிகள் அனைத்துமே, அந்த காதலர்கள், உறுதி செய்யாத நிலையில் இருக்கும் அவர்கள் காதலை, உறுதியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் பாடுவது போல் இருக்கும். இந்த காதலை உறுதிபடுத்திக் கொள்ள அவர்களே, அவரவர் மனதில், ஒரு சந்தேகத்துடன் கேள்வியையும் கேட்டு, தங்கள் விருப்பம் போல் பதிலையும் அவர்களே பாடிக் கொள்வது போல் எழுதி இருப்பது ஒரு தனி அழகுடன் அருமையாக இருக்கும்.

"மன வீடு, அவன் தனி வீடு, அதில் புகுந்தானோ?
எங்கும் நிறைந்தானோ?
அதில் புகுந்தானே, எங்கும் நிறந்தானே"

"நீராட்ட, நான் பாராட்ட அவள் வருவாளோ?
இல்லை மறப்பாளோ?
அவள் வருவாளே, சுகம் தருவாளே"

"கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம், அவன்
அணைப்பனோ? என்னை நினைப்பானோ?
அவன் அணைப்பானே, என்னை நினைப்பானே"

"நான் பாதி, அவள் தான் பாதி
எனக் கலந்தாளோ? கண்ணில் மலர்ந்தாளோ?
நெஞ்சில் கலந்தாளே, கண்ணில் மலர்ந்தாளே

எவ்வளவு அழகாக அந்த காதலர்களின் மன நிலையை சொல்கிறது இந்த வரிகள்!

இந்த பாட்டின் ராகம்தான், புல்லாங்குழலின் இனிமையில், இந்த படத்தின் தொடக்கத்தில், பெயர்கள் ஒளிபரப்பின் போது பின்னணியாக வரும். மெல்லிசை மன்னரின் பாடல்களை, பாடலின் மெட்டுக்காக, பின்னணி இசைக்காக, பாடல் வரிகளுக்காக என்று மீண்டும் மீண்டும் கேட்பது போல், நான் இந்த பாடலை அவரின் குரலுக்காகவே பலமுறை, திரும்ப திரும்ப கேட்டிருக்கிறேன்.
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Mon Feb 15, 2010 9:52 am    Post subject: Reply with quote

அன்புள்ள மீனாட்சி,

மீண்டும் ஒரு அருமையான பாடலை அற்புதமாக அலசியிருக்கிறீர்கள். எம் எஸ் வியின் பாடல்களின் காட்சி அமைப்பைப் பார்க்கும்போது, இவர் பாடலை தனியாகப் பதிவு செய்தாரா அல்லது காட்சியைப் பார்த்து விட்டு ரீரிகார்டிங் செய்தாரா என்று தோன்றும். இந்தப் பாடலின் பின்னணி இசையைக் கேட்ட பிறகுதான் இயக்குனருக்கு ஸ்லோ மோஷனில் காட்சி அமைக்க வேண்டும் என்று தோன்றியிருக்க வேண்டும்.

மெல்லிசை மன்னரின் குரலைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஏ வி எம் செட்டியாரிட்ம், எம் எஸ் வி, தான் கம்போஸ் செய்த பாடலைப் பாடிக் காட்டும்போது அவர், "நீங்கள் பாடும்போது பாவம் அற்புதமாக இருக்கிறது. இதே பாவம் பின்னணிப் பாடகர் பாடும்போதும் வெளிப்பட வேண்டும்" என்பாராம். பல சமயங்களில் பதிவுக்குப்பின் பாடலைக் கேட பிறகு, "நீங்கள் பாடியது போல் இல்லை" என்பாராம். இது எஸ் பி எம் குறிப்பிட்டது. ஆயினும் எம் எஸ் வி அடிக்கடி கூறுவது போல, அவர் பாடகர் அல்ல, பாட வைப்பவர். ஆனால் அவரை யாராவது பாட வைத்தால் அமர்க்களப் படுத்தி விடுவார். இந்தப்பாடல், 'குடும்பம் ஒரு கதம்பம்,' 'இக்கரைக்கு அக்கரைப் பச்சை' போன்ற பாடல்களை மெல்லிசை மன்னரைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பகப் பாடியிருக்க முடியாது என்பது என் கருத்து.

படத்தின் இறுதியில், இதே பாடலின் வேறு வடிவம்,

'சொல்ல நினைத்தது
சொல்லாமல் போனது
உள்ளம் என்பது ஊமையானது
கனவுகளே
காதல் கனவுகளே'

என்று வரும்.
ஏக்கம், ஏமாற்றம், உள்ளடங்கிய சோகம் இவை எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் பாடல் அது. இந்தப் பாடலைக் கேடு விட்டுத் தியேட்டரிலிருந்து வெளிவரும்போது, மனதில் கனமான ஒரு உணர்வு இருக்கும்.

உங்கள் எழுத்துக்கு மீண்டும் என் பாராட்டுக்கள். மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Thu Feb 18, 2010 2:53 am    Post subject: Reply with quote

அருமையாக பதில் எழுதி இருக்கிறீர்கள். நன்றி.
நீங்கள் எழுதி இருப்பது போல் மெல்லிசை மன்னர் முழு நேர பாடகராகி இருந்தாலும், சிறந்து விளங்கி இருப்பார். ஆனால் அவர் இசை அமைத்துள்ள இவ்வளவு அருமையான பாடல்கள்!!!! என்னால் இவர் பாடல்கள் இல்லாத உலகை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. என் ஜீவன் என்றும் வாழ்வது இவர் பாடல்களில் தான்.
நீங்கள் எழுதி உள்ள இந்த பாடலின் இறுதி வரிகளை நான் கேட்டதே இல்லையா? இல்லை என் நினைவில் இல்லையா? என்று தெரியவில்லை. இதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நீங்க சொல்வது போல், இந்த பாடலை கேட்ட பொழுதெல்லாம் என் மனமும் சற்று கனமானதை நானும் உணர்ந்திருக்கிறேன்.
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Fri Feb 19, 2010 12:15 am    Post subject: Reply with quote

நான் எழுதிய வரிகள் இந்தப் பாடலின் ஒரு பகுதி இல்லை. படத்தின் இறுதியில் வரும் ஒரு சிறிய, தனியான பாடல். இது இசைத்தட்டில் இடம் பெறவில்லை என்று நினைக்கிறேன். திரைப்படத்தில்தான் கேட்க முடியும். இது போல் வேறு சில படங்களிலும் இறுதியாக வரும் பாடல் பெரும்பாலும் இசைத்தட்டில் இடம் பெறுவதில்லை. பாசமலரில் இறுதியாக ஒரு பாடல் வரும். 'அண்ணன் வளர்த்த உயிர் அவனுடனே சென்றதம்மா' என்று முடியும் நாலு வரிப் பாடல். இதுவும் இசைத்தட்டில் வரவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் 'கர்ணன்' படத்தின் இறுதியில் வரும் 'பரித்ராணாய சாதூனாம்...'என்ற கீதை வரிகளை இசைத்தட்டில் 'மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா' என்ற பாடலின் முடிவில் சேர்த்திருப்பர்கள்.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Tue Feb 23, 2010 2:04 pm    Post subject: Reply with quote

A wonderful writing Meenakshi Madam . I tell you, this is an outstanding song & soulful . I have no words to describe Very Happy only emoticons !

You have aptly captured the essence of the song, the underlying intention of great K.Balachander , the lyrical genius Kavignar and above all, the little Master MSV.

Quote:
இந்த படத்தின் மூலக் கருவே சொல்ல வந்த காதலை, சரியான நேரத்தில் சொல்லாமல், சொல்ல வரும் வேளையில், சூழ்நிலையால் சொல்ல முடியாமல் போவதுதான்
T

Hats off Madam ! In just a sentence you have narrated the movie !

he best part of the song to me will be that Solo Violin durind the second intelude. SImply superb !

MSV should have sung more I feel now. Crying or Very sad
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Wed Feb 24, 2010 8:47 pm    Post subject: Reply with quote

நன்றி பாலாஜி.
எப்படி இருக்கீங்க? ரொம்ப அருமையா எழுதிண்டு இருந்தீங்க. ஆனா, சமீப காலமா ஏன் எழுதறது இல்லை? நீங்க, நம் மெல்லிசை மன்னர் பாடல்களை பற்றி ஆராய்ந்து எழுதுவதே ஒரு தனி அழகு. அதனால, முடிந்த பொழுதெல்லாம் எழுதுங்க பாலாஜி. படிக்க ரொம்ப ஆவலா இருக்கு.
Back to top
View user's profile Send private message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Wed Feb 24, 2010 8:54 pm    Post subject: Reply with quote

நீங்கள் சொல்வது சரிதான் திரு. ரங்கஸ்வாமி. இன்னும் சில பாடல்கள் இது போல இருக்கிறது. 'கனவுகளே, ஆயிரம் கனவுகளே.....' இந்த பாடலில் இரண்டாவது சரணத்தில், டி.எம்.எஸ். அவர்கள் பாடுவதே இசைதட்டில் இல்லை. நான் சமீபத்தில், ஒரு தளத்தில் இந்த பாடலை கேட்ட பொழுதுதான் தெரிந்தது. இது போலவே 'பொன்னுகென்ன அழகு' பாடலில் கடைசி சரணமே இசைதட்டில் இல்லை.
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Thu Nov 24, 2011 3:01 pm    Post subject: Reply with quote

Dear All,

There is a 2 minute song of MSV sung very emotionally at the end of this movie which I have uploaded to the youtube. Pls watch it . Very Happy

http://www.youtube.com/watch?v=U2o_DZQqTkk
Back to top
View user's profile Send private message Send e-mail
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Sun Nov 27, 2011 2:58 pm    Post subject: Reply with quote

Dear Mr.Balaji,
A great find and what a discovery! Thanks for this marvellous link!
Sai Saravanan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group