"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

"Missed Recognitions" - One More Important Factor.
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
s.r.sankaranarayanan
Aficionado


Joined: 29 Jan 2007
Posts: 80
Location: CHENNAI

PostPosted: Wed Sep 26, 2007 8:13 pm    Post subject: Reply with quote

DEAR SARADA MADAM,

SHE IS NOT A MYLAPORE OR T.NAGAR VAASI. SHE IS A CHINMAYANAGARVAASI AND SHE ALSO RUNS A MAHATHI SCHOOL OF FINE ARTS.




S.R.SANKARANARAYANAN
Back to top
View user's profile Send private message
Baskar CS
Addict


Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Sun Sep 30, 2007 8:26 pm    Post subject: Reply with quote

sorry she can change her name as marathi
Back to top
View user's profile Send private message
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Sun Sep 30, 2007 8:52 pm    Post subject: Reply with quote

எம்.எஸ்.வி க்கு அவார்ட் வேண்டி 'Online Petition' ஐத் துவக்கியவர் 'சர்வே சான்' என்று அழைக்கப்படும் சுந்தர் ராமன். அவரது 'Blog' - நம் எம்.எஸ்.வி க்ளப் கவனத்திற்கு இதோ. தன் உளக்குமுறலை அட்டகாசமாக எழுதியுள்ளார்:

Source: http://surveysan.blogspot.com/2007/08/blog-post_3515.html

பத்மபூஷனும் விபூஷனனும் ஈயம் பித்தளைக்கு வாங்கரோமுங்கோ...

Friday, August 03, 2007

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இதுவரை பெரிய அங்கீகாரங்கள் எதுவும் வழங்கப்பட்டதில்லை என்று வவ்வால் இங்கு பதிந்ததைக் கண்டேன்.

உண்மையிலேயே இது பெரிய ஆச்சரியத்தைத் தந்தது.

இப்படி கூட விட்டுருவாங்களா என்ன?

சாதாரண ஆளா அவரு? என்னென்ன பாட்டெல்லாம் போட்டிருக்காரு? எவ்வளவு விதமான ராகங்கள்? அடேங்கப்பா!
கொஞ்ச நஞ்ச சுகத்தையா தந்திருக்கு அவரின் பாடல்கள்? சொக்க வைக்கும் ரகமாச்சே ஒவ்வொண்ணும்.
கண்ணதாசனுடன் சேர்ந்து இசைத்த பாடல் ஒவ்வொண்ணும், ம்யூஸியத்துல வச்சு பாதுகாக்க வேண்டியதாச்சே.

யோவ் விருது கொடுக்கரவங்களே, என்னய்யா இப்படி சொதப்பிட்டீங்க?

பீம்சென் ஜோஷியெல்லாம் 80கள்ளயே வாங்கிட்டாரேய்யா!
லதாஜி கூட, பாரத் ரத்னா எல்லாம் வாங்கிட்டாங்க.
ஏ.ஆர்.ரஹ்மான 2000த்தலயே பத்மஸ்ரீ வாங்கிட்டாரேய்யா!

எம்.எஸ்.விக்கு கொடுக்கப் படவேண்டிய விருதெல்லாம், நேரத்தோட கொடுங்கய்யா. கொடுக்கலன்னா, அந்த விருதுக்கே அவமானம்.
இதுவரை அந்த விருதை வாங்கினவங்கள்ளாம், ஈயம், பித்தளைக்கு வித்து, பேரீச்சம் பழம் தான் வாங்கித் துண்ணோணும்.

சீக்கிரம், ஏதாச்சும் செய்யுங்க!

முதல்வருக்கு வேண்டியவங்க யாராச்சும் எடுத்து சொல்லுங்கய்யா.

வெட்க்கக்கேடு! அவரு பாட்ட இனி காது கொடுத்த கேக்கவே லாயக்கில்லாம போயிடப் போறோம்.

----- ----- ----- ----- ----- -----
லேட்டஸ்ட் அடிஷன்!
நம்மால முடிஞ்சது.
MSVக்காக ஒரு பெட்டிஷன்.
படிச்சுட்டு sign பண்ணுங்க! உடனே!
தகவலை பரப்பவும்!

http://www.petitiononline.com/msv2008/petition.html
----- ----- ----- ----- ----- -----

பி.கு: விக்கீபீடியால அவர பத்தி ரொம்ப சிருசாதான் இருக்கு. தெரிஞ்சவங்க, அதுல கொஞ்சம் மேட்டரப் போடுங்க சாரே. Sad

Posted by SurveySan at Friday, August 03, 2007



26 comments:
SurveySan said...
இப்படி ஒரு பெட்டிஷன் ரெடி பண்ண்ணவா?

M.S.Viswanathan, popularly known as "Mellisai Mannar" meaning "King of Light Music", is the person who ruled the South Indian Film Industry through his Music for decades together.

His achievements range from bringing out new trends in melodies, tunes and orchestration to introducing various genres of World Music to Indian Cinema. He is rightly called by the people as the "University of Music".

The man of such caliber has not been conferred any of the top civilian honors awarded by governments of Tamil Nadu and India.

This petition is to request the government of Tamil Nadu and India to consider this matter and do the needful to respect MSVs talents without further delay.

He is the most deserving civilian in India, and all the undersigned, request a speedy review of the situation and honor MSV.

12:04 AM, August 04, 2007
SurveySan said...
PETITION போட்டாச்சு.

இங்க போய் கையெழுத்து போடுங்க!

அப்பாடி, இனி நிம்மதியா தூங்கலாம். Smile

http://www.petitiononline.com/msv2008/petition.html


12:14 AM, August 04, 2007
வவ்வால் said...
சர்வேசன்,
நன்றி , கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தமைக்கு!

நீங்க உங்க பாணில கலக்கி இருக்கிங்கனே நான் நினைக்கிறேன்!, அந்த பதிவு கொஞ்சம் பழைய பதிவு...இத்தனை நாளாக அப்பதிவு கேட்பார் அற்று கிடந்தது நான் தற்போது தான் பின்னூட்ட பொறுக்கியாக மாறியதால், மஹா ஜனங்களின் கவனத்தில் பதிகிறது( கிட்ட தட்ட எம்.எஸ்.வி போலவே), அப்பதிவு கூட ஏதோ நானே சுயமாக சிந்தித்து எழுதியதாக மக்கள்ஸ் நினைக்கப்படாது , விக்டனில் எஸ்.ராமகிருஷ்ணன் கொட்டிய உணர்ச்சிகளில் கொஞ்சமே கொஞ்சம் நானும் என் பங்குக்கு பிறாய்ந்து வந்து போட்டேன்!

மக்களை ஆள்பவர் மகேசன் பார்க்கலைனாலும் , நீங்க சர்வேசன் உங்க கண்ணிலே பட்டதே பாதி கிணறு தாண்டினாப்போல தானே!

12:24 AM, August 04, 2007
SurveySan said...
வவ்வால்,

வாங்க வாங்க.
லேசுல விடக் கூடாதுங்க இந்த மேட்டர.

நம்ம அரசாங்கம் பண்றது, சின்னபுள்ளத்தனமா இருக்கு.

பெட்டிஷன் போட்டுட்டேன், எவ்ளோ தூரம் போகுதுன்னு பாப்போம்.

பெட்டிஷன பரப்போணும்.

12:26 AM, August 04, 2007
SurveySan said...
just 4 signatures so far.. Sad


இவருக்கு கிடைக்காததர்கு காரணம் என்னன்னு தெரியல.
யாரும் வழிமொழியாமல் போயிருக்கலாம்?
இல்லன்னா, பதவியில் இருப்போர் யாரேனும் வேண்டாதவர்களாய் இருக்கலாம்?

12:59 PM, August 04, 2007
TBCD said...
கைஎழுத்து போட்டாச்சு....

8:53 PM, August 04, 2007
SurveySan said...
நன்றி, TBCD.

அந்த velaiilley, நீங்க இல்லியே? Smile

9:29 PM, August 06, 2007
Anonymous said...
indha muyarchikku vazthukkal.

10:03 AM, August 07, 2007
மாசிலா said...
ஹூம்! விட்டுத்தள்ளுங்க. இதெல்லாம் சும்மா உடான்ஸு பூஷணுங்க ஐயா.

ஐயா எம்.எஸ்.வி.க்கு பதிவர் உலகு சார்பாக நாம் கொடுக்கும் குரலே ஒரு பெரிய விருதுதானங்க!

எம்.எஸ்.வி. ஐயா > எங்கிருந்தாலும் வாழ்க! காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்கள் படைத்த உங்களுக்கு என் வணக்கம்.

கையெழுத்து போட்டாச்சு.

10:16 AM, August 07, 2007
SurveySan said...
மாசிலா, விடக்கூடிய மேட்டரில்லைங்க இது.

லதா மங்கேஷ்கருக்கு (I love Lataji, but still), பாரத ரத்னா கொடுத்திருக்கும்போது, இவருக்கு ஒன்றைக் கேட்பதில் இம்மியளவும் தவறில்லை.

9:44 AM, August 08, 2007
ILA(a)இளா said...
நாங்க ஒரு பெட்டிஷன் எழுதி முதல்வரின் செயலாளர்கிட்டே குடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்கோங்க. உங்க Online பெட்டிஷனையும் நாங்க முன் வைக்கிறோம்.

10:28 AM, August 09, 2007
SurveySan said...
Ila,

Great news. thanks for doing that.
let me know when you plan on doing that. We can try to expedite the 'online petition' signature hunt.

Smile

11:23 AM, August 09, 2007
Anonymous said...
best of luck.

11:02 PM, August 11, 2007
SurveySan said...
சும்மா....

8:58 PM, August 20, 2007
SurveySan said...
43 வந்திருக்கு... மேலும் வரட்டும்.

8:41 PM, August 26, 2007
TBCD said...
நானே தான் அந்த வேலையில்லை...இரண்டு தடவ போட்டுட்டேன்...ஹி ஹி

//* SurveySan said...

நன்றி, TBCD.

அந்த velaiilley, நீங்க இல்லியே? Smile *//

10:10 PM, August 27, 2007
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ILA(a)இளா said...
நாங்க ஒரு பெட்டிஷன் எழுதி முதல்வரின் செயலாளர்கிட்டே குடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்கோங்க. உங்க Online பெட்டிஷனையும் நாங்க முன் வைக்கிறோம்.//

இளா
நாம் விண்ணப்பம் செய்வது ஒரு பக்கம். (Petition)
முதல்வர் செயலாளர் மூலமாக முயற்சிகள் ஒரு பக்கம்.

MSV ஐயா இசையில் பாடிய பாடகர் பாடகிகள், எல்லாரும் சேர்ந்து விண்ணப்பத்தில் கையெழுத்து இட்டா இன்னும் நல்லா இருக்கும். அதில் பல பாடகர்கள் ஏற்கனவே விருது பெற்றவர்கள் தான்!

விருது பெற்றவரே, இவரை விட்டுவிட்டீர்களே என்று சொல்லும் போது அதன் மதிப்பு தனி அல்லவா?

இணையத்தில் அவர்கள் தளங்கள், மின்னஞ்சல் இருந்தால் அவர்களையும் தொடர்பு கொள்ளலாமே!

11:36 AM, August 28, 2007
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
சர்வேஸ்
கையெழுத்து போட்டாச்சுங்க!

பத்மமும் பூஷணம் தாரார் - எம்.எஸ்.வி
தேனிசை கேளா தவர்!

11:41 AM, August 28, 2007
SurveySan said...
TBCD, nenachen Smile

KRS, நல்ல ஐடியா. விருது பெற்றவர்கள் எல்லாம் பிஸியா இருக்காங்க போல.
இனிஷியேட்டிவ் எடுக்கணும்னு யாருக்கும் தோணல.
எல்லாரும் பத்திரிகைகளுக்கு எழுதிப் போட‌லாம்.

they better act fast.

11:42 AM, August 28, 2007
SurveySan said...
நெல்லை சிவாவின் இந்தப் பதிவை பாருங்கள்.

http://vinmathi.blogspot.com/2007/09/blog-post.html

8:00 PM, September 27, 2007
வெற்றி said...
சர்வேசன்,
நானும் கையொப்பம் இட்டுவிட்டேன். நல்ல முயற்சி. முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அற்புதமான கலைஞர் மெல்லிசை மன்னர் அவர்கள். அவர் உயிருடன் இருக்கும் போதே அவர் கெளரவிக்கப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பமும்.

10:43 PM, September 27, 2007
SurveySan said...
நன்றி வெற்றி!

தொடர் ஆதரவுக்கு நன்றி!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Sun Sep 30, 2007 8:58 pm    Post subject: Reply with quote

One More.... by நெல்லை சிவா

இரைச்சலாய் இசைத்திருந்தால் கேட்டிருக்குமோ?
Saturday, September 08, 2007

"இரைச்சலாய்
இசைத்திருந்தால்
கேளாத
செவிகளுக்கும்
கேட்டிருக்குமோ?
மெல்லிசையாய்
இசைத்ததாலேயே
நல்லிசை ஒரமாய்ப்
போனதோ?"


- என்று கேட்கத் தோணுகிறது, நம் மெல்லிசைமன்னரின் இசைக்கு அங்கீகாரம் வழங்கக் கோரும் 'பத்மபூஷனும் விபூஷனனும் ஈயம் பித்தளைக்கு வாங்கரோமுங்கோ... ' என்ற சர்வேசனின் பதிவைப் படித்த போது.


சரி, அங்கீகாரம் வழங்கக் கோரி அவர் எழுப்பியிருக்கிற ஆன்லைன் பெட்டிசன்-ல எத்தனைபேரு கையெழுத்திட்டிருக்காங்கன்னு பாத்தா, மின்மினி மூலமாய் நானிட்ட கையெழுத்தும் சேர்த்து, 60 - தான் வருகிறது.


இப்ப வந்த பசங்க கூட டாக்டர், கம்பவுண்டர் பட்டங்கள எளிதா வாங்கிடறாங்க, ஆனா நம்ம எம்.எஸ்.விக்கு....? என்ன கொடுமை சரவணன் இது?-ன்னுதான் கேட்கத் தோணுது.


இசையில் எவ்வளவோ சாதித்திருந்த போதும், அடக்கமாய் இருப்பவர் அவர், அதனால்தானோ என்னவோ 'விருதார்'கள் கவனிக்காமல் விட்டார்களோ?


நம்ம ஊருல விருது கொடுக்குறதுக்குன்னே சில சட்டதிட்டங்கள் வைத்திருக்காங்க.
1. விருது கொடுக்குறதுனால, தங்களுக்கு பப்ளிசிட்டி கிடைக்கும்னா, வலியக் கூப்பிட்டு வகைக்கொரு பட்டம் கொடுப்பாங்க
2. காசு கொடுத்தா பட்டம் கொடுப்பாங்க
3. பெரிய இடத்து சிபாரிசு இருந்தா பட்டம் கொடுப்பாங்க
4. அனுசரித்துப் போனா, பட்டம் வாங்குறவங்கள விளம்பரப்படுத்த பட்டம் கொடுப்பாங்க
5. நாங்கதான் முதல்ல பட்டம் கொடுத்தோம்-னு சொல்லிக்க, பாப்புலரா இருக்கறவங்களுக்கு முந்தியடிச்சு பட்டம் கொடுப்பாங்க..


இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ம்ம்ம்...MSV இந்த வகை எதிலும் சேர்த்தி இல்லாமல் இருப்பதினாலா என்னவோ, இன்னமும் பட்டம் வாங்காமல் இருக்கிறார். கலையுலகை ஆதரிக்கின்ற எம்ஜியாரும், கருணாநிதியும் கூட கண்டுக்காமல் விட்டது/விட்டுக் கொண்டிருப்பது கூட மன்னிக்கமுடியாதது.


மெட்டுக்கு பாட்டெழுதக் கேட்கிற இசையமைப்பாளர்கள் நடுவே, எழுதுகின்ற கவிஞரின் சிந்தனையைக் கட்டுப்படுத்தாமல் வந்து விழுகின்ற வரிகளுக்கு வாத்தியம் கட்டியவர் அவர்.
'வறுமையின் நிறம் சிகப்பு' படத்தில் வருகின்ற 'சிப்பியிருக்குது ..முத்துமிருக்குது' பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? இரைச்சலோ, இடியோசையோ இல்லாமல், இனிதாயில்லை?
'பூக்காரி' படத்தில் வருகின்ற, 'காதலின் பொன்வீதியில்....' பாடல் மென்மை கூறுவதாயில்லை?
'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் வருகின்ற 'எங்கேயும்..எப்போதும்..', 'யாதும் ஊரே..', 'சிவ சம்போ' பாடல்களெல்லாம், இன்னைக்கும் உங்கள் காதில் ரீங்காரம் இடவில்லையா?
ஹெட்போனிலோ, ஐ-பாடிலோ அல்லது உங்க கார் ஆடியோவிலோ, 'சம்போ..சிவ சம்போ...' பாடலைக் கேட்டுப் பாருங்கள். அதில் இசைத்திருக்கின்ற கருவிகளும், மெட்டும், குரலும் பின்னிப்பிணைந்திருப்பதை உணர முடியும். பாடல் முடிந்த பிறகும் கூட, உங்கள் காதுகளில் அந்த இசை உங்களை ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்.


எத்தனையோ பேரைக் கவர்ந்த, 'சிம்லா ஸ்பெசல்' படத்தில் வருகின்ற 'உனக்கென்ன மேலே நின்றாய்' பாடல், இப்போதைய இளைஞர்களையும் வசீகரிக்கக் கூடிய ஒன்று.



KanaKaanumKangazl....

பாலசந்தரின் 'அக்னிசாட்சி' படத்தில் வரும், எஸ்பிபி பாடிய 'கனாக் காணும் கண்கள் மெல்ல' பாடல் கேட்டிருக்கிறீர்களா? காட்சியையும், கதையின் கருவையும், அர்த்தமிக்க வரிகளையும் தாலாட்டும் விதமாய் 'அருமை' என்ற வார்த்தைக்கு இலக்கணமாய் மனதை உலுக்கும். கேட்காதவர்கள், கேட்டுப் பாருங்கள்.
எத்தனை பேருக்குத் தெரியும், 'ஆயர் பாடி மாளிகையில்' பாடலும், 'புல்லாங்குழல் கொடுத்த' - கண்ணன் பக்திப் பாடலும் MSV-யின் இசை வடிவம் என்று?


அவரது பாடல்களில் மனம் கவர்ந்தது என்றால், பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். MSV ஒரு நிஜக் கலைஞன், சக கலைஞர்களை மதிக்கத் தெரிந்த, 'ஈகோ' இல்லாத, இசையை இசையால் ரசிக்கத் தெரிந்த மனிதன்.
நல்ல கலைஞனுக்கு விருதுகளெல்லாம் இரண்டாம் பட்சம்தான், அது கலைஞனின் பார்வையில். கலைஞனின் ரசிகனின் பார்வையில், விருதும் தேவையான ஒன்று.
அவருடைய பாடல்கள் எத்தனையோ நம்முடைய மனதைத் தொட்டிருக்கின்றது, பிசைந்திருக்கின்றது. அவருடைய ஏதாவது ஒரு பாடல், உங்க மனதை தொட்டிருந்தால் கூட, நீங்கள் உங்களுடைய கையொப்பத்தை, இந்த ஆன்லைன் மனுவில் பதிப்பிக்க கடமைப்பட்டவராகின்றீர்கள்.
'விருதார்கள்' போல, மெத்தனமாய் இல்லாமல், சுறுசுறுப்பாய் இரண்டு நிமிடம் செலவழியுங்கள், அந்த முதுபெரும் இசைக் கலைஞனுக்கு.

http://www.petitiononline.com/msv2008/petition.html

Posted by நெல்லை சிவா at 9/08/2007



9 Comments:
SurveySan said...
அருமை அருமை அருமை!

நானும் என் பதிவ இந்த மாதிரி போட்டிருந்தேனா, 60 க்கு பதிலா 600 கையெழுத்து வந்திருக்கும். வெரி டச்சிங்!

'காதலின் பொன்வீதியில்' - எவ்ளோ சூப்பர் பாட்டுங்க அது. (mp3 இருக்கா? Smile )

கண்ட கண்ட பயலெல்லாம் பத்ம-XYZ வாங்கும்போது, கடுப்பா இருக்கு பாக்க.

அட்லீஸ்ட், இசைத்துறையில் இருக்கும் ராஜா, ரஹமானெல்லாம் சேந்து, ப்ரஷர் போட்டாவது வாங்கிக் கொடுக்கணும்.

லதா மங்கேஷ்கருக்கு, பாரத் ரத்னாவாம், MSVக்கு ஒண்ணும் இல்லியாம். என்ன கூத்துங்க இது.

நன்றி! நன்றி!

19:54
Kavitha said...
Just now I put my signature...

20:55
மாறன் said...
ஆமாங்கன்ணா...

நீங்க சொன்ன பாட்ட எல்லாம் உன்னோரு வாட்டி கேக்கப்போறங்கணா...க‌ல‌க்கிட்டீங்க.

ஆனாலும் அவ‌ருக்கு விருதுகளை விட‌ ந‌ம் (சாரி தங்களை) போன்ற உண்மையான ர‌சிக‌ர்க‌ளின் இது போன்ற‌ ப‌திவுக‌ள் ம‌கிழ்ச்சியை கொடுக்கும் என்ப‌தே என் க‌ருத்து.

இதோட‌ விடாம‌ல் கொஞ்ச‌ம் விலாவ‌ரியா MSV அவ‌ர்க‌ளுடைய‌ சாத‌னைக‌ளைப் ப‌ற்றி உங்க‌ளை போன்ற‌ விவ‌ர‌ம் அறிந்த‌வ‌ர்க‌ள் போட்டால் மிக‌ ந‌ன்றாக‌ இருக்குமே...காத்திருக்கிறேன்...

~மாற‌ன்

21:11
நெல்லை சிவா said...
சர்வேசா, உங்க பதிவுதான் இதுக்கு இன்ஸ்பிரஷேனே. 'காதலின் பொன்வீதியில்..' MP3 இருக்கிறது. நீங்க சொல்ற மாதிரி, பிற இசை ஜாம்பாவன்களும், முயற்சித்தால், இது எளிதில் நடக்கலாம். ம்..ம்..ஊதுகிற சங்கை ஊதி வைப்போம், கேட்கிற காது மட்டும் கேட்கட்டும்.

06:44
நெல்லை சிவா said...
நன்றி கவிதா.

19:16
மதுமிதா said...
நன்றி சிவா
போட்டாச்சுSmile

பிடித்த பாடல்கள் ஆயிரம் ஆயிரம்

19:29
நெல்லை சிவா said...
நன்றி மதுமிதா, உங்களது முயற்சிக்கும்!

10:06
நெல்லை சிவா said...
மாறன்,

நீங்க சொல்றது உண்மைதான், அதான் சொல்லியிருக்கேனே, 'கலைஞனுக்கு விருது பற்றி கவலையில்லாமல் இருக்கலாம், ஆனால், அவன் ரசிகனுக்கு அது தேவை.'

நீங்க சொல்ற மாதிரி, MSV இசையில், எனக்கு பிடித்த பாடல்களைப் பற்றியெல்லாம், எழுதலாம் என்றுதானிருக்கிறேன். மெல்ல மெல்ல ஆரம்பிக்கலாம்.

நன்றி உங்கள் கருத்துக்கும், வாக்குக்கும்.

20:56
Kumar said...
Very Inspirational post, I posted my signature.
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
saradhaa_sn
Addict


Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Mon Oct 01, 2007 4:15 pm    Post subject: Reply with quote

Ram wrote:
MSV ஐயா இசையில் பாடிய பாடகர் பாடகிகள், எல்லாரும் சேர்ந்து விண்ணப்பத்தில் கையெழுத்து இட்டா இன்னும் நல்லா இருக்கும். அதில் பல பாடகர்கள் ஏற்கனவே விருது பெற்றவர்கள் தான்!


நல்லா சொன்னீங்களே. யாரு நம்ம பாடகர், பாடகியரைப்பற்றி நமக்கு தெரியாதா?.

'சுசீலாதான் எனக்கு பிடித்த பாடகி' என்று மெல்லிசை மன்னர் சொல்லியிருந்தும், எந்த ஒரு பேட்டியிலும் முடிந்தவரை அவரைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் சுசீலாவா ? அல்லது

இதே பாணியை கடைபிடிக்கும் ஜானகியா? அல்லது

தன்னுடைய பேட்டிகளின்போது, தனக்கு ஏராளமான வாய்ப்புகள் வழங்கிய மெல்லிசை மன்னரைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் இந்துஸ்தானி இசை பற்றியும் நௌஷாத் பற்றியும் மட்டும் பேசும் பி.பி.எஸ்ஸா.....?

இதோ எஸ்.பி.பி.என்ற பாடகரைப்பற்றி ஒரு தகவல்.

நேற்று ஜெயா டி.வி.யில் 'என்னோடு பாட்டுப்பாடுங்கள்' நிகழ்ச்சியை நடத்திவரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்னும் பாடகர், அந்நிகழ்ச்சியில் ஒரு இளம்பெண் பாடிய 'தூங்காத விழிகள் ரெண்டு' (அக்னி நட்சத்திரம்) பாடலை பாடி முடித்ததும், அப்பாடலை இசையமைத்த இளையராஜாவை ஓகோவென்று புகழ்ந்தார். புகழட்டும் அது அவரது உரிமை. ஆனால் இடையில் ஒரு வார்த்தையை விட்டார்.

'இளையராஜா வெஸ்டர்ன் இன்ஸ்ட்ருமெண்ட்களை தமிழ்ப்பாடல்களில் புகுத்தியதைப்போல யாரும் செய்த்தில்லை. அப்படி ஒரு ஆர்க்கெஸ்ட்ரேஷன் பண்ணுவார். அவர் போல யாருமே செய்ததில்லை'.

அட ஞான சூனியமே, மேற்கத்திய வாத்தியங்களை தமிழ்ப்பாடல்களுக்கு வழி காட்டியதே மெல்லிசை மன்னர்தானே.

1987 ல் வந்த 'தூஙாத விழிகள் ரெண்டு' பாடலை இவ்வளவு புகழ்கிறாரே, அது மெல்லிசை மன்னரின் எந்தப்பாடலின் காப்பி என்று அவருக்கு தெரியாதா?. அது 1975 ல் 'பாட்டும் பரதமும்' படத்தில் வந்த

'சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான்
நடமாடி பார்க்கட்டுமே
கண்கள் உறவாடி பார்க்கட்டுமே
தூக்கிய காலை கொஞ்சம் கீழே வைத்தால் இங்கு
பாக்கியை நான் ஆடுவேன் அந்த
பாக்கியம் நான் காணுவேன்'

என்ற பாடலின் மெட்டுத்தானே அது?. அந்தக்கால கட்டத்தில் அவர் மெல்லிசை மன்னரின் தயவில் தானே தமிழில் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தார்?. மறந்து விட்டாரா? அல்லது தன்னுடைய தற்போதைய 'உயிர்த்தோழன்' கோபப்படுவார் என்று நினைத்தாரா?
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
Sriram Kannan
The Ardent


Joined: 12 Sep 2007
Posts: 103

PostPosted: Mon Oct 01, 2007 5:18 pm    Post subject: Reply with quote

Dear Saradha Madam,

Did you notice when another girl sang "Deviyar Iruvar Muruganukku" from "Kalai Kovil", SPB while giving his comments later, mentioned a line about PS, "None other than PS can sing this song", and later the subjuect turned out to something general, but not a single word was uttered throughout the song about the composer.

Even the same with Kunnakudi as well.. He praised a lot about his own songs when sung by the participants, tried to embarass the partcipants with his music knowledge, when songs of other composers came, and remained silent (or not given chance by SPB to talk), when the song was composed by the EMPEROR!!!

Enna ulagam!!!!
_________________
Thanks and Regards,
Sriram Kannan.

Follow me at http://bibliomaniac-moviefanatic.blogspot.com/
Back to top
View user's profile Send private message Send e-mail Yahoo Messenger
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Mon Oct 01, 2007 6:16 pm    Post subject: Reply with quote

Same is the case is K.J.Yesudoss. My chitthappa used to talk about an interview with KJY by Y.G.Mahendran. As we know, YGM is a die hard fan of MSV. When he tried to pull the word "MSV" from KJY, it did not happen for a long time and finally YG achieved !

There may be some mis-understandings between someone and may people know about it. But it when comes to an occasion one should magnanimously talk about great talent (or) great persons. Thats professionalism.

See how our MSV respects TKR even though they had an split-up for sometime. MSV had said to Jeppiar, Chancellor Sathyabama University, "Only if you give Doctorate to TKR also, will I accept your title. If the 'Doctorate' is ONLY for me, then I do not need it!!!"

Let 'people' learn this quality from MSV!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Mon Oct 01, 2007 6:23 pm    Post subject: Reply with quote

We all know everyone has a great regard for MSV and they all KNOW about this legend's real talents. But it is a PAIN when we see them FAILING to mention MSV's name on the right occasions and act as if they do not know about MSV's WORKS at all. Shame!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Mon Oct 08, 2007 8:40 am    Post subject: Reply with quote

கனெக்டிகட் தமிழ் சங்கம் நடத்திய தீபாவளி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு இன்று சென்றிருந்தேன். இளம் பின்னணிப் பாடகர்கள் / பாடகியர் கலந்து கொண்ட நிகழ்ச்சி.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பல ஆண்டுகள் கடந்து வந்த பிறகும் மெல்லிசை மன்னரின் மெட்டின் இனிமையை ரசித்தபடியே தமிழன்னைக்கு வணக்கம் செலுத்திவிட்டு, முதல் பாடல் கேட்க அமர்ந்தேன்.

முடல் பாடல் பாட வந்த பின்னணி பாடகி கூறியது: "இசைக்கு ராஜா - இளையராஜாவின் இசையில் உருவான 'மெல்லத் திறந்தது கதவு' படத்தில் வந்த ஒரு அருமையான பாடல்" என்று கூறி "ஒரு சனம் தூங்கிடுச்சு" பாடலைத் தொடங்கினார்.

விழா முடிந்த பின் உணவுக் கூடத்தில் அந்த பாடகிய சந்தித்து "ரொம்ப நல்லா பாடினீங்க. ஆனால் 'மெல்லத் திறந்தது கதவு' படத்தின் இசை அமைப்பாளராக 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.வி யைக் குறிப்பிடத் தவறிவிட்டீர்கள்" என்று நறுக்கெனக் கூறினேன். அதற்கு "அய்யய்யோ.... தமிழ் சங்கத்தில் யாராவது இதைக் கூறுவார்கள் என்று பயந்தேன். சொல்லிட்டீங்க. 'ராஜா' பெயர் சொல்லியே பழகி விட்டது...." என்று குழைந்தார் அப்பாடகி!

ஆனால் இனிமேல் சொல்லத் தவற மாட்டீங்க... எனக்கு அது போதும்!!!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv
Philiac


Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Wed Oct 10, 2007 8:57 am    Post subject: COMPOSED BY MSV ONY Reply with quote

Dear Ram,

All the songs in the movie Mella Thiranthathu Kadhavu were composed by our One & Only MSV only and only the orchestration part (I am sure here also MSV would have lent a hand) was carried out by IR. You shouldn't have let that singer go scott free after such a blunder and ensured she announced an errata on the stage itself. This would have served as an eye (brain) opener for many who forget the phenomenon called MSV at their whims & fancies. So much for the knowledge of new singers!!! Sad

CHEERS
MSV IS MUSIC
VAIDY

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
saradhaa_sn
Addict


Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Wed Oct 10, 2007 12:35 pm    Post subject: Reply with quote

டியர் ராம்..

நல்ல காரியம் செய்தீர்கள். இப்படிப்பட்டவர்களைப் பற்றி தனியே அழைத்துச்சொன்னால் அது அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதே சமயம் இப்படிப்பட்ட தற்குறிகள் அரைவேக்காட்டுத்தனமாக மேடையில் உளறும்போது, அந்த மேடையிலேயே ஏறி மைக்கைப்பிடித்து அவரகளின் முகத்திரையைக் கிழித்தால், அவர்களின் அரைவேக்காட்டுத்தனம் எல்லோருக்கும் அம்பலமாகும். அப்படி செய்த்தால் காலம் முழுதும் அவர் மறக்க மாட்டார்.
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
saradhaa_sn
Addict


Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Tue Oct 16, 2007 11:57 am    Post subject: Reply with quote

நேற்று (15.10.2007) ஜெயா டிவியில் வி.ஐ.பி.சிறப்பு தேன்கிண்ணம் நிகழ்ச்சியில் யுகேந்திரன் வந்திருந்தார் (மலேசிய வாசுதேவன் மகனாம்). சரி, இசைத்துறை சம்மந்தப்பட்டவராயிற்றே, இவராவது ஒழுங்காக வழங்குவார் என்று நினைத்தேன்... ஏமாந்தேன்.

ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, ராமு, சந்திரோதயம் பாடல்களின்போது 'வழக்கம்போல' புறக்கணிப்பு, இருட்டடிப்பு எல்லாம் இருந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகழ்கள் பாடப்பட்டன. (நான் வேண்டாம் என்று சொல்லவில்லை). ஆனால் சொல்லப்பட வேண்டியவர் 'வழக்கம்போல' மறக்கப்பட்டார். மனது வலித்தது.

இந்தப்பாடல்கள் முடிந்து 'இன்னொருவரின்' பாடல்களைச் சொல்லத்துவங்கியதும் 'வழக்கம்போல' அவரைப்பற்றி மூணரை முழத்துக்கு நீட்டி முழக்கி விட்டு, பாடலை ஒளிபரப்பினர்.

அப்போதே முடிவு செய்தேன், இனி எவனுடைய சிறப்பு தேன் கிண்ணமும் பார்ப்பதில்லை என்று. காரணம் எல்லா நாய்களும் ஒரே மாதிரிதான் குரைக்கின்றன. நான் ஒருத்தி பார்க்காததால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. ஆனாலும் எனக்கு 'பிளட் பிரஷர்' ஏறாது இல்லையா..?.

(There may be some 'Un-Parlimentary' words in this post. But DONT delete them. please ).
_________________
Saradha Prakash


Last edited by saradhaa_sn on Fri Oct 19, 2007 1:08 pm; edited 1 time in total
Back to top
View user's profile Send private message
Ramesh.P
The Ardent


Joined: 07 Dec 2006
Posts: 177
Location: Chennai

PostPosted: Tue Oct 16, 2007 12:31 pm    Post subject: Reply with quote

Dear Saradhaa

why you are insulting ......... Laughing Taken good decision.

regards
ramesh
Back to top
View user's profile Send private message Send e-mail Yahoo Messenger
irenehastings
Guest





PostPosted: Tue Oct 16, 2007 4:54 pm    Post subject: Reply with quote

'Nethiyad'i post Saradha madam.

(I also request the moderators not to remove your post).
Back to top
Sriram Kannan
The Ardent


Joined: 12 Sep 2007
Posts: 103

PostPosted: Mon Oct 22, 2007 12:32 pm    Post subject: ANOTHER BLUNDER!!!! Reply with quote

These people never change!!!!

I mention to our "as-usual" Vijay Adhiraj, this time an unforgettable blunder...

It was a SUN TV Programme yesterday night, which he anchors, that features persons impersonifying famous actors. In a round, the persons are supposed to dance for some popular songs. For one of the person, the song selected by the judge was "Roja Malare Raaja Kumari" from "Veera Thirumagan". Then, Vijay Adiraj's comment was

Itho A.M. Raajavin Arpudhamaana Paadal

Whether he mentioned him for the MD or the singer, both are unforgivable blunders.. as the MDs are our EMPERORs and the singer is PBS (where does AMR fits in the song here ? )

Why to give "unnecessary" statistics, if the anchor is not sure about what he is saying. Was it because he wants to prove he knows something about Tamil Cinema, or whether he just blurted it out because none of the audience will worry about this, in a comedy show?
_________________
Thanks and Regards,
Sriram Kannan.

Follow me at http://bibliomaniac-moviefanatic.blogspot.com/
Back to top
View user's profile Send private message Send e-mail Yahoo Messenger
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next
Page 3 of 9

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group