"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

iniyavale endru paadi Vanthen (Sivagamiyin Selvan)

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Mon Dec 28, 2009 10:06 pm    Post subject: Reply with quote

இனியவளே என்று பாடி வந்தேன்

நடிகர் திலகத்தின் படங்களில் முதன் முதலாக புலவர் புலமைப் பித்தன் இடம் பெறக் காரணமாயிருந்த பாடல். நடிகர் திலகத்திற்கு புலமைப் பித்தன் எழுதிய முதல் பாடல் எத்தனை அழகு கொட்டிக் கிடக்கு என்ற பாடலும் இந்தப் பாடலும். ஆராதனா ஹிந்திப் படத்தின் கோரா காகஸுதா யே மனுமேரா என்கிற பாடலின் தமிழ் பதிப்பு இப் பாடல். முற்றிலும் வித்தியாசமான மெட்டு. நடிகர் திலகத்திற்கும் வாணிஸ்ரீ அவர்களுக்கும் புதிய உடைவடிவம் இப்பாடலின் உள்ளடக்கிய உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்திருந்தது.

பாடல் வரிகளில் புலவரின் புலமை எப்படி வெளிப்படுகிறது...

இனியவளே என்று பாடி வந்தேன் ...
இனிமை நிறைந்தவளே என்கிற பொருள் தொனிக்கும் வகையில் இவ் விடத்தில் இனியவளே என்று தொடங்குகிறது.

இனியவள் தான் என்று ஆகி விட்டேன் ..
இந்த இடத்தில் வரும் இனியவள், அவளிடத்தில் காதலன் தன்னை முழுதும் ஒப்படைத்து விட்டான் என்பதை உணர்த்தும் விதமாக வெளிப்படுகிறது. டி.எம்.எஸ். பாடும் போது இனி அவள் தான் என்று உச்சரிக்கும் விதமாக பாடியிருப்பார்.
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இனிமை கொண்டவள் -

இனி அவள் பாடும் வரிகள்

இனியவரே என்று பாடி வந்தேன்
இனி அவர் தான் என்று ஆகிவிட்டேன்

தமிழ் எப்படியெல்லாம் விளையாடுகிறது...

சரணத்தில் பார்ப்போம் .

அவன் - ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக
அவள் - ஒன்றானவர் வாழ்வே இன்ப வெள்ளம் என்றாக
அவன் - துணை தேடி வரும் போது கண்ணில் என்ன நாணமோ
அவள் குணம் நான்கில் உருவான பெண்மை என்ன கூறுமோ

அவன் - திருநாள் வரும் அதோ பார்
அவள் - தருவார் சுகம் இதோ பார்
அவன் - பொன் மாலையில்
அவள் - பூமாலையாய்
அவன் - நெஞ்சில் சூடவோ
அவள் - சூடவோ
அவன் - சூடவோ

எளிமையான வரிகள் ஆனால் பொருள் ஆழம் பொதிந்த வரிகள் ...

இந்த இடத்தில் பல்லவியைத் தொடர்ந்து வரும் பின்னணி இசையில் புல்லாங்குழல் அந்த சூழலை அப்படியே உள்வாங்கி பிரதிபலிக்கிறது.

மீண்டும் அடுத்த சரணம்

அவன் - தாலாட்டிடும் நெஞ்சம் தன்னைத் தங்கம் என்றானோ
அவள் - பாராட்டிடும் இன்பம் தன்னை மங்கை கண்டாளோ
அவன் - நினைத்தாலும் சுகம் தானே இந்த நெஞ்சின் காவியம்
அவள் - கொடுத்தாலும் நலம் தானே என்னைக் கொஞ்சும் ஓவியம்
அவன் - இதழால் உடல் அளந்தான்
அவள் - இவளோ தன்னை மறந்தாள்
அவன் - ஏனென்பதை
அவள் - யார் சொல்வது
அவன் - எங்கும் மௌனமே
அவள் - மௌனமே
அவன் - மௌனமே

ஒரு இலக்கிய ஆய்வையே புலவர் நடத்தியிருக்கிறார் இப்பாட்டில். விளக்கம் தேவையில்லை, பாடலை ஆழ்ந்து நோக்கினால் புரியும். எந்த எந்த வார்த்தையை யார் எப்போது பாடுவது, எப்படிப் பாடுவது என்பதெல்லாம் இசையமைப்பாளர்கள் தெரிந்து கொள்ள ஓர் இலக்கணமாய் அமைந்திருக்கிறது இப்பாடல் ... மௌனமே என்கிற வார்த்தையும் சரி, சூடவோ என்ற வார்த்தையும் சரி, அவன் சொல்ல, அவள் சொல்ல, அவன் மீண்டும் சொல்ல ...
அந்த இரண்டு உள்ளங்களின் உணர்வுகள் இங்கே வார்த்தையாய் உறவாடுகின்றன ...
இதை இசையால் பேச வைத்த பெருமை மெல்லிசை மன்னரை சாரும். புலமைப் பித்தன் அவர்கள் நடிகர் திலகத்தின் படத்தல் நுழையும் போதே ஒரு இலக்கிய வேள்வியே நடத்தியிருக்கிறார்.

வாய்ப்புக்கு நன்றி.

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group