"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

THANKS -OTHER PORTALS

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Speak to Members, Introduce Yourself, Discuss any topic of your interest, Fun, Puzzles, Riddles, Games
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Dec 06, 2009 8:38 pm    Post subject: THANKS -OTHER PORTALS Reply with quote

dear all

i just want to copy and paste what i have read in other portals
for the benefit of those , who donot have time to browse many , but keen to know /not tired of knowing on their (our ) beloved master .

pls note the credits go to the autors, also we may differ to their views too :
but criteria IS -MASTER .

THE FOLLOWING FROM tfm pAGE - THNKS




From: Irene Hastings on Wed Dec 2 4:08:19 2009. [Full View]


Mellisai Mannar MSV introduced Jass music to TFM through the song Varavendum

படம் : கலைக்கோயில் (1964)
பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

மிகப் பழைய ஜாஸ் சாயல் கொண்ட பாடல் இதுதான். சொல்லப்போனால் நீண்ட நாட்களுக்கு இந்தப் பாடல் அளவிற்கு சுத்தமான ஜாஸ் வடிவம் கொண்ட பாடலே தமிழில் இல்லை என்று சொல்லலாம். பாடலின் ஆரம்பத்தில் துவங்கும் பியானோ இசை, அதைத் தொடர்ந்த ட்ரம்பெட், சாக்ஸஃபேன் இவற்றுடன் இணையும் ட்ரம்ஸின் ரிதம் இவை எல்லாமே துல்லியமான ஜாஸ் வடிவங்கள். இந்தப் பாடலில் ஜாஸ்-க்கே அடிப்படையான கருவிகள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டிருக்கும். எனக்கென்னமோ இந்தப் பாடலுக்கு வடிவம் தந்தவர்கள் (இதை arrangement என்று சொல்வார்கள், அதாவது மெட்டை ஒருவர் தீர்மானித்தபின் அதில் வரும் இசைக்கருவிகளின் வரிசை மற்றும் எந்தெந்தக் கருவிகள் சேர்ந்திசைக்க வேண்டும் எவை தனியாகச் செல்ல வேண்டும் என்றெல்லாம் தீர்மானிப்பவர் வேறு ஒருவராக இருப்பார். சில டிஸ்ஸி கில்லெஸ்பி (Dizzy Gillespie) பாடல்களுக்கு க்வின்ஸி ஜோன்ஸ் (Qunicy Jones) செய்திருக்கும் அமைப்புகள் அற்புதமான இருக்கும். (இளையராஜாவைப் பற்றி எழுதும் பொழுது இவர்களின் பாடல் ஒன்றைப் போடுகிறேன்). எம்.எஸ்.விக்கு - கோவர்தனம், ஹென்றி டேனியல், ஜேஸப் கிருஷ்ணா என்று மூன்று உதவியாளர்கள் இருந்தார்கள். இவர்களில் ஹென்றி டேனியல் இதைப் போன்ற ஜாஸ் அல்லது பாப் இசையில் வரும் பாடல்களுக்கு arrangement செய்வார் என்று சொல்வார்கள். ஆனால் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் சேர்ந்து இசைத்தபொழுது எப்படி என்று தெரியவில்லை.

பாடலின் இடையீடுகளில் (interlude) வரும் இசையும் வழக்கமாக ஜாஸில் கேட்கும் ஒலி. இந்தப்பாடலில் ஒரு ஆச்சரியமான, இனிமையான விஷயம் ஆண்களின் கோரஸ் குரலை ரிதம் இசைக்கப் பயன்படுத்தியிருப்பது. வழக்கமான ஜாஸ் இசையில் பாஸ் கருவியைப் பயன்படுத்துவார்கள். விஸ்வநாதன் - ராமமூர்த்தி அதற்குப் பதிலாக ஆண்களின் குரலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இசையோடு சேர்ந்து வரும் ஈஸ்வரியின் குரல் பாடலின் சூழ்நிலையை நன்றாகக் காட்டுகிறது.



From: Irene Hastings on Wed Dec 2 4:09:47 2009. [Full View]


Another Jass

பாடல் : நீ என்பதென்ன (1965)
படம்: வெண்ணிற ஆடை
பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்

வரவேண்டும் ஒரு பொழுது பாடல் வந்து ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே அடுத்ததாக வந்த பாடல் இது. கொஞ்சம் வித்தியாசமான பாடல். ஈஸ்வரியின் குரல் ஜாஸின் வடிவத்திற்கு எப்படி ஒத்துப் போகிறது என்று காட்டுவதற்காக வரும் உதாரணம் இது. ஜாஸின் முன்னோடி ஆப்பிரிக்க நாட்டார் இசை வடிவில் பொய்க்குரலுக்கு முக்கியமான இடமுண்டு. ஆண்கள் தங்கள் குரலை அசாத்தியமான உச்சஸ்தாயிகளுக்குக் கொண்டு சென்று கத்துவது - falsetto - ஆப்பிரிக்கப் பழங்குடிகளிடையே முக்கியமான பழக்கம். (பால் சைமனின் க்ரேஸ்லாண்ட் ஆல்பத்தில் இருக்கும் பல பாடல்களில் ஆப்பிரிக்கப் பாடகர்கள் இப்படி falsetto -வில் கத்துவதைக் கேட்கமுடியும்). இதன் தொடர்ச்சியாக ஜாஸிலும் பொய்க்குரல்களுக்கு முக்கிய இடமுண்டு. எப்படி ஆண் பாடகர்கள் குரலை உயர்த்துகிறார்களோ அதேபோல் பெண்கள் தாழ்த்திப் பாடுவதும் வழக்கம். இந்தப் பாடலின் துவக்கத்தில் முதல் இரண்டு வரிகளை ஈஸ்வரி சற்றுத் தாழ்த்தி அழகாகப் பாடியிருப்பார். இதேபோல இந்தப் பாடலின் இடையில் வரும் சிரிப்புகள் மற்றும் எக்காளங்கள் எல்லாம் ஆரம்பகால ஜாஸ் பாடல்களில் மிகவும் முக்கியமான பகுதிகளாக இருந்தவை. இப்பொழுதைய ஜாஸ் பாடல்களில் இது குறைந்துபோயிருக்கிறது.

இந்தப் பாடலின் முக்கியமான விஷயம் - இதில் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை வரும் கிட்டார். சென்ற பாடலில் எப்படி சாக்ஸஃபோன், ட்ரம்பெட் முக்கியமான இடத்தில் இருக்கின்றனவோ அதேபோல் இங்கே கிட்டார் மிக அற்புதமாக பெண்குரலுடன் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பாடலின் இடையீடுகளில் வரும் கிடார் இசை ப்ளூஸ் தாக்கம் அதிகம் பெற்ற Cream, Yard Birds, Led Zepplin போன்ற குழுக்களில் எரிக் க்ளாப்டன், ஜிம்மி பேஜ் போன்றவர்களின் இசையின் சாயலைக் கொண்டிருப்பதைக் கேட்கமுடியும்.

* * *

இந்த இரண்டு பாடல்களின் வரிகளும் சற்றே சோகம் ததும்பிய விரகம் அல்லது விரக்தியான கருத்துக்களைக் கொண்டிருபப்தைக் கவனிக்கலாம். கேளிக்கை விடுதிகள், பாலியல் தொழிலாளிகளின் வீடுகள் போன்றவற்றில் பாடப்படும் பாடல்கள் எல்லாமே ப்ளூஸ் எனப்படும் சோகம் தோய்ந்த பாடல்களாக இருக்கும். மிகவும் ஆச்சரியமாக இந்த இரண்டு பாடல்களுமே அதே சாயலில் வருபவை.



From: Irene Hastings on Wed Dec 2 4:25:56 2009. [Full View]


பாடல் : நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
படம் : நம்நாடு (1969)
பாடியவர்கள் : டி.எம். சௌந்தர்ராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்: வாலி

எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் வேற்றுமைகள் துளிர்விடத் துவங்கியிருந்த காலம் அது. தன்னுடைய திரைப்படங்களில் கறுப்பு-சிவப்பு சட்டைகள், உதயசூரியன், கழகம் என்ற வார்த்தைகள் வரும்படியாக வெளிப்படையாக வசனங்கள் அமைத்து, பாடல் வரிகள் அமைத்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வலு சேர்த்துக் கொண்டிருந்த எம்.ஜி.ராமச்சந்திரன், அதே ஆயுதத்தை தி.மு.கவிற்கு எதிராக வெளிப்படையாக முதன் முதலில் பயன்படுத்திய படம் இது. இதன் அரசியல் பிண்ணனிகள் ஒருபுறமிருக்க அற்புதமான பாடல்களால் படத்திற்கு வலு சேர்த்தார் மெல்லிசை மன்ன்ர் எம்.எஸ்.வி. பட்டிதொட்டியெங்கும் ஒலிபெருக்கிகளில் "நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்.. நான்..." என்று முழங்கிக்கொண்டிருந்த காலம் அது.

பெரும்பாலும் அதன் வரிகளுக்காக அறியப்படும் இந்தப் பாடல் தமிழ்த் திரையிசை உலகில் ஜாஸ் பயன்பாட்டில் ஒரு மைல்கல். பெருங்குழு ஜாஸ் (Big Band Jazz)வடிவத்தை முழுமையாக அடியொற்றி அமைந்த பாடல் இது. துவக்கத்திலேயே ஜாஸின் அற்புத சாத்தியங்களை எம்.எஸ்.வி தெளிவாக எட்டியிருப்பார். முன்னீடு முடிந்து சௌந்தர்ராஜன் துவங்குமுன் ஒரு நொடிக்கு ஒரு சிறிய கிடார் ஒலி வந்துவிட்டுப் போகும். கிட்டத்தட்ட நானும் இருக்கிறேன் என்று ஆரம்பத்திலேயே அறிவித்துவிடுவதைப்போல. இதற்காகவே நான் பல தடவைகள் முன்னீட்டை மாத்திரம் பல தடவைகள் கேட்டிருப்பேன். நினைத்ததை... நடத்தியே... முடிப்பவன் - என்று ஒருவகையில் நீட்டி முழக்கிப்பாடுவது பெரும்பாலான செவ்வியல் இசைவடிவங்களில் வராது. அவை ஒற்றைத்தாளகதியில் சீரான ஒட்டத்தில்தான் வரும். ஜாஸில் இந்தக் கட்டுப்படற்ற தன்மை அதன் தனித்துவத்திற்கு முக்கிய காரணம். 'என்னிடம் மயக்கம்" என்று சொன்னவுடன் அதைத் தொடர்ந்துவரும் ட்ரம்பெட்டின் இசை ஸ்விங் வடிவத்தின் அமைப்பு.

கொஞ்சம் நீளமான பாடல் இது. கிட்டத்தட்ட ஏழு நிமிடங்களுக்கு வரும். இதில் டி.எம்.எஸ் குரலுக்குப் பதிலாக ஒரு ட்ரம்பெட்டையும், ஈஸ்வரி குரலுக்குப் பதிலாக ஒரு சாக்ஸஃபோனையும் மாற்றிப்போட்டிருந்தால் எப்படியிருக்கும் என்று பலநாட்கள் நான் கற்பனை செய்துபார்த்திருக்கிறேன். முதல் இடையீட்டில் வரும் கிட்டாரின் இசைவும் அதனுடன் இணைந்துவரும் பெண்களின் சேர்குரலிசையும் அற்புதமாகக் கையாளப்பட்டிருக்கும். இந்தவகை பெண்களின் சேர்குரலிசை ஒருவகையில் எம்.எஸ்.வியின் முத்திரையாக மாறிப்போனது. உலகம் சுற்றும் வாலிபன் (பச்சைக்கிளி), ரிக்ஷாக்காரன் (அழகிய தமிழ் மகள்), போன்ற பல படங்களில் இந்தவகை பெண்களின் சேர்குரலிசையை எம்.எஸ்.வி அற்புதமாகக் கையாண்டிருப்பார். முதலாவது இடையீடு அற்புதமான இசைக்கலவைகளால் ஆனது.

பெரும்பாலான பெருங்குழு ஜாஸ்களில் வரும் வடிவத்தைப்போல பாடல் முழுவதும் சௌந்தர்ராஜன் அல்லது எல்.ஆர். ஈஸ்வரி பாடும் இடங்களில் ஒரே வகையான தாளத்தை (மிகவும் எளிமையானது)க் கையாண்டு முழுக்கவனமும் பாடுபவரின் குரலின்மீது படியும்படி இசை ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். இதன் இறுதியில் தாளகதி மாறி, பிற வாத்தியங்கள் சேரும்பொழுது ஒருவித துள்ளலுடன் ட்ரம்ஸ் அந்த மாற்றத்தை வழிநடத்தும். இதுபோன்ற வடிவத்தை பல ஜாஸ் இசைகளில் கேட்கமுடியும். இந்த முறைதான் தனித்தனியாக ஒவ்வொரு வாத்தியக் கலைஞர்களும் தங்களின் விசேடத்திறனைக் காட்டினாலும் இசை ஒருவித சீரற்ற (ஆனால் நியதியான) ஒட்டத்தில் இருக்க உதவுகிறது.

பாடலின் இன்னொரு முக்கியமான இடம் இரண்டாவது இடையீட்டிற்கு முன் வருவது. வழக்கமாக பல்லவி ஒருமுறைதான் நம் திரைப்படங்களில் இடையில் வந்துபோகும். ஆனால் இதில் சற்றும் எதிர்பாராத விதமாக "நினைத்ததை நடத்தியே..." என்று மூன்று முறை மாறிமாறி வந்துவிட்டுப் போகும். இது ஜாஸின் சுயகற்பனை வடிவம். (ஆனால் டி.எம்.எஸ். இதிலெல்லாம் விசேடமாக எதையும் செய்யாமல் ஒரே மாதிரி திரும்பத்திரும்பப் பாடிக்கொண்டிருப்பது கொஞ்சம் அபத்தமாக இருக்கும். வேறு சுய கற்பனையுள்ள பாடகர் இந்த இடத்தில் வைரமாக ஜொலித்திருக்க முடியும். டி.எம்.எஸ்ஸிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்றுதான் தோன்றுகிறது).

முதல் இடையிட்டில் கிட்டார், ட்ரம்பெட், சேர்குரலிசை என்று கலவையாக வரும். ஆனால் இரண்டாவது இடையீட்டில் இதற்குச் சற்றும் மாறாக பெரும்பாலும் ட்ரம்ஸ் மாத்திரமேயாக, பின்னர் தனியாக சேர்குரலிசை என்று வேறு வடிவத்தில் வரும். திரும்பவும் மூன்றாவது இடையீட்டில் பழைய வடிவம் திரும்ப வரும். அந்தக் காலங்களில் பாடல் முழுவதும் ஒரே சீரான ஒட்டத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். (உதாரணமாக கே.வி.மகாதேவனின் பல பாடல்களில் ஒரே வகையான இடையீட்டு இசைதான் இருக்கும் அதேதான் திரும்பத்திரும்ப வந்து போகும்). இப்படிப்பழக்கப்படிருந்த காதுகளுக்கு இந்தப் பாடல் ஒரு வித்தியாசமான, புரியாத புதிராகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

எல்.ஆர். ஈஸ்வரி குரலைப்பற்றி இந்தத் தொடரில் நிறையவே சொல்ல வேண்டியிருப்பதால் இங்கே எதுவும் சொல்லப்போவதில்லை. விசேடம் என்ன என்று புரியவேண்டுமென்றால் "முதல் நாள்..." என்று வரும் இரண்டாவது சரணத்தில் அவரது குரலின் சிக்கலான வடிவத்தை உன்னிப்பாகக் கேட்டுப்பாருங்கள்.

மொத்தத்தில் எம்.எஸ்.வி தமிழ்த் திரையிசையின் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஒரு அற்புதமான பெருங்குழு ஜாஸ் பாடலைத் தந்திருக்கிறார். அந்தக் காலத்தின் தமிழ்த் திரையிசைப் பாடல்களுடன் ஒப்பிட்டுப்பார்க்க இது ஒரு அசுர சாதனைதான். இதில் வரும் கிடார், ட்ரம்ஸ், ட்ரம்பெட் இசைகளைத் தனித்த்னியாக நிறுத்தி நிதானித்துக் கேட்டுப்பார்ப்பவர்களுக்கு எம்.எஸ்.வியின் அற்புதக் கற்பனை பிரமிப்பூட்டும் என்பது நிச்சயம்.



From: Irene Hastings on Thu Dec 3 3:02:47 2009. [Full View]


http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=2012

திரு ராம் அவர்களுக்கு மிக்க நன்றி. பல அற்புதமான பதிவுகளை செய்ததற்கு . பியானோவில் இவ்வளவு வகையான இசையமைக்க முடியுமா
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Speak to Members, Introduce Yourself, Discuss any topic of your interest, Fun, Puzzles, Riddles, Games All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group