"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Manamedai malargaludan dheepam - Gyana oli

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Oct 02, 2009 7:48 am    Post subject: Lyrics - Manamedai malargaludan dheepam - Gyana oli Reply with quote

படம்: ஞான ஒளி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர்
பாடியவர்: பீ. சுசீலா

மணமேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்
மாப்பிள்ளை பெண் என்றால்
இவர் என்பார் என்றும் வாழ்க
மனமங்கை என்பார்
(மணமேடை)

நான் இரவில் எரியும் விளக்கு
நீ என் காதல் மணிமாளிகை
நீ பகலில் தெரியும் நிலவு
நான் உன் கோயில் பூந்தோரணம்
மணி ஓசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்
(மணமேடை)

என் மடியில் விடியும் இரவு
நம் இடையில் வளரும் உறவு
தேகம் தழுவும் மலர்காற்று
மோகம் பரவும் பெருமூச்சு
நான் பெறுவேன் சுகமே சுகமே
(மணமேடை)

என் தனிமை உலகம் இனிமை
என் தாய் வீடும் நினைவில் இல்லை
நான் உறவில் உனது அடிமை
உன் துணை போல சுகமும் இல்லை
அருள் புரிவார் தேவன் நம் பாதை எங்கும்
(மணமேடை)

திரு. மாதவன் அவர்கள் இயக்கத்தில் 1972- ல் வெளியான படம் இது. சிவாஜி, மேஜர் மற்றும் சாரதா அவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை.

இந்த பாடலின் சிறப்பே நம் மெல்லிசை மன்னரின் எளிமையான மெட்டும், சுசீலா அவர்களின் உணர்ச்சி பூர்வமான வெளிப்பாடுடன் கூடிய குரலும்தான்.
இந்த பாடல், ஒரு பெண் தன் காதலன் மீது கொண்டுள்ள அளவுகடந்த அன்பு, மோகம், ஆசை போன்ற பலவித உணர்ச்சிகளின் வெளிப்பாடுதான். பாடலின் மெட்டு, சுசீலாவின் மயக்கமான குரல், கவிஞரின் வரிகள் இவை எல்லாமே அந்த பெண்ணின் காதல் மயக்கத்தை அற்புதமாக வெளிப்படுத்தும்.

மெல்லிசை மன்னர் மிகவும் கவனத்துடன் இந்த பாடலை சுசீலா அவர்களை பாட வைத்திருக்கிறார். இதை பாடலின் பல இடங்களில் கேட்கலாம். குறிப்பாக
'தேகம் தழுவும் மலர் காற்று, மோகம் பரவும் பெருமூச்சு'
இந்த வரிகளை பாடியவுடன், அடுத்த வரியான
'நான் பெறுவேன் சுகமே, சுகமே'
என்ற வரியை பாடத் தொடங்கும் முன் சுசீலா அவர்கள் ஒரு பெருமூச்சு எடுத்து பின் பாடுவார். இதை கேட்கும்போது அப்படியே மெய் சிலிர்க்கும். நம் மெல்லிசை மன்னர் எவ்வளவு முயற்சியும், கவனமும், சிரத்தையும் எடுத்து ஒவ்வொரு பாடலையும் உருவாக்குகிறார், பாடகர்களை பாட வைக்கிறார். கலியுக இசை தெய்வம் அவர்.

இந்த பாடலின் பின்னணி இசையும் அற்புதம். இந்த பின்னணி இசை, இதை ஒரு இரவு பாடல் என்றும், இது ஒரு கிறிஸ்த்துவ பெண் பாடுகிறாள் என்றும் பாடல் காட்சியயை பார்க்கமலே சொல்லும் வண்ணம் இருக்கும். பாடல் ஒரு அழகான ஹம்மிங்கில் தொடங்கும். இந்த ஹம்மிங்கின் முதல் வரி வந்தவுடன், ஜில்லென்ற குளிர் காற்று இசையாய் நம் மீது மோதும். பின் தொலைவில் மாதா கோவிலின் மணி ஓசை கேட்கும். நாம் இரவின் மடியில், ஒரு ரம்யமான இடத்தில், இதமான காற்று வீச இந்த உலகை மறந்த மயக்க நிலையின் இருப்பதை போல தோன்றும். பாடலின் பல்லவி முழுவதும் பின்னணி இசையாக வருவது ட்ரம்ஸ் மற்றும் கிடார்.

முதல் சரணம் தொடங்கும் முன் மணி ஓசையுடன் சேர்ந்து அழகான வயலின் ஓசையும் நம் செவியில் ஒலிக்கும். இதை தொடரும் சுசீலாவின் மயக்கமான ஹம்மிங். இந்த ஹம்மிங்குடன் மீண்டும் ட்ரம்ஸ் மற்றும் கிடார் பின்னணியாக இணையும். பின் சரணம் முழுவதும் பின்னணியாக வருவது இவை இரண்டும்தான்.

இரண்டாவது சரணம் மிகவும் அழகு. இந்த சரணம் தொடங்கும் முன் புல்லாங்குழலும், ட்ரம்ஸும் ஒரே நேரத்தில் இனிமையாய் வர, அதை தொடரும் வயலின். இந்த சரணத்தின் மெட்டும் வேறு விதம். இந்த மெட்டில் சுசீலாவின் குரலில் இன்னும் மயக்கம் அதிகமாக இருக்கும்.

மூன்றாவது சரணம் தொடங்கும் முன், படத்தில் சாரதாவின் தந்தையாக சிவாஜி நடித்திருப்பார். சிவாஜியின் நண்பராக மேஜர் வருவார். இந்த பாடல் காட்சியில் திருமணம் ஆகும் முன் தன் பெண் வாழ்க்கையில் தவறும் தருணத்தில், சிவாஜி தன் நண்பனான மேஜருடன் வந்து கொண்டிருக்கும் பொழுது, தவறி விழுவாதகவும் அப்பொழுது மேஜர் கை கொடுப்பதுபோலவும் அமைக்கப்பட்டிருக்கும். பாடலில் இந்த இடம் மூன்றாவது சரணத்திற்கு முன் வரும். அதற்கு மெல்லிசை மன்னரின் இசையும், அந்த காட்சிக்கு தகுந்த வண்ணம் மாறி, பின் மீண்டும் இந்த காட்சியில் அழகாய் இணையும்.

பாடலின் ஒவ்வொரு வரியும் அந்த பெண் தன் காதலனை எவ்வளவு நேசிக்கிறாள் என்பதை சொல்லும்.
'என் தனிமை உலகம் இனிமை, என் தாய் வீடும் நினைவில் இல்லை'
அந்த பெண்ணின் உள்மனதில் அவன் மீது கொண்ட ஆழமான நேசத்தை எவ்வளவு எளிமையாக, அழகாக இந்த வரிகளின் மூலம் கவிஞர் வெளிப்படுத்துகிறார்.

சுசீலா அவர்களின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று.


Last edited by Meenakshi on Fri Oct 02, 2009 6:48 pm; edited 1 time in total
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Fri Oct 02, 2009 10:14 am    Post subject: Reply with quote

அன்புள்ள மீனாக்ஷி அவர்களுக்கு,

மெல்லிசை மன்னரின் ஒவ்வொரு பாடலும் சிறப்பானது. அதுபோல்தான் உஙளுடைய ஒவ்வொரு பாடல் விளக்கங்களும். என்னால் ஒரு பாடலைப் பற்றி 'இது நன்றாக இருக்கிறது' என்று மட்டும்தான் சொல்ல முடியும். இது போன்ற விளக்கஙளைப் படிக்கும்போது, நான் இந்தப் பாடலை ரசித்ததில் ஒரு அர்த்தம் இருக்கிறது என்று உணர்ந்து பெருமைப்பட முடிகிறது.

பாடலை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்திருக்கிறீர்கள். மெல்லிசை மன்னர் எப்படி ஒவ்வொரு வரியையும் பார்த்துப் பார்த்து, ஒரு சிற்பத்தை வடிப்பது போல் வடிவமைக்கிறாரோ, அது போல் நீங்களும் இந்தப் பாடலைத் துவக்கத்திலிருந்து இறுதிவரை, ஒரு மலருக்குள் வண்டு புகுந்து துழாவுவது போல விரிவாக அலசியிருக்கிறீர்கள். இது ஒரு காதல் பாடல் ஆனாலும், இது ஒரு கிருஸ்துவப் பெண் பாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துவது வியக்கத்தக்க அனுபவம். மெல்லிசை மன்னரின் வேறு சில பாடல்களில் வருவது போல் 'இரவுப் பாடல்' என்ற உணர்வும் இதில் ஏற்படுவதும் வியப்புதான்.

முதல் சரணத்தின் முதல் வரியான, 'நான் இரவில் எரியும் விளக்கு,' என்பதின் ராகம் அடுத்த இரு சரணங்களின் முதல் வரிகளின் ராகத்திலிருந்து நூலிழை அளவு வேறுபடுவதாக நான் உணர்கிறேன். திரு முரளி போன்றவர்கள் இந்த நுணுக்கத்தை ஆராயலாம்.

நான் அடுத்த முறை இந்தப் பாட்டைக் கேட்கும்போது நிச்சயமாக உங்கள் நினைவு வரும்.

சிறப்பான உங்கள் ஆராய்ச்சியைப் பாராட்டுவதை விட, இதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிப்பதே இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பி.கு: நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் ஒரு கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும்போது, நம்மை அறியாமல் ஆங்கிலச் சொல்லின் எழுத்துக்களை (spelling) அப்படியே பயன்படுத்துகிறோம். ஆனால் தமிழில் இந்தச்சொல் சில சமயம் வேறு விதமாக வந்து விடுகிறது. தமிழில் எழுதும்போது எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. உங்கள் கட்டுரையில், ட்ரும்ஸ் என்று இருமுறை வருகிறது. பழக்க தோஷத்தில் ஆங்கிலத்தில் எழுதுவதுபோல drums என்று எழுதுவதால் இவ்வாறு நேர்கிறது. தமிழில் எழுதும்போது drams என்று எழுதக் கை வருவதில்லை. இது உங்களுக்குத் தெரியாத விஷயம் இல்லை. ஒருவேளை இதை நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்களோ என்ற எண்ணத்தில் எழுதுகிறேன். குற்றம் கூறுவதற்காக இதைக் குறிப்பிடவில்லை. தவறாக எண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Fri Oct 02, 2009 3:18 pm    Post subject: Lyrics- maNa mEdai Reply with quote

Dear Friends,
The song from GnAna oLi has several dimensions. Of the so many embellishments, the play of percussion and the caressing beats render a typical church flavour to the song. Also MM has played his nuances of expressing lyrical phrases by sheer pace variations even between adjacent words ; in this case between charaNam phrases the technique has been exploited to the full. Any amount of our interpreting them would be futile. Yet, I invite your attention to the piece by Mr Vatsan on the same work to grasp more vividly the life of this song.
Warm regards Prof.K.Raman Madurai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Oct 02, 2009 6:44 pm    Post subject: Reply with quote

அன்புள்ள பார்தவி,

மிக்க நன்றி. உங்கள் அழகான தமிழுக்கு பாராட்டுக்கள். நீங்க எழுதி இருப்பது முற்றிலும் சரி. என்னுடைய கருத்து, இசையை பற்றி நன்கு அறிந்தவர்கள், ஆராய தெரிந்தவர்கள் நம் மெல்லிசை மன்னரின் பாடல்களை எல்லாம் இன்னும் ஆராய்ந்து அழகாக எழுத முடியும் என்பதுதான். நான் மெல்லிசை மன்னரின் எப்படிப்பட்ட ரசிகை என்பதை சொல்ல வார்த்தையே இல்லை.:) நானும் என் அண்ணனும் எங்கள் சிறு வயதிலிருந்தே இவர் பாடல்களை அவ்வளவு ரசித்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். கேட்ட பாடல்களையே திரும்ப திரும்ப கேட்டாலும், அதில் எங்கள் ரசிப்பு தன்மை மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டேதான் போகிறது. ஒரு ரசிகையாக நான் இந்த அளவு அவர் பாடல்களை ரசிப்பதை, அப்படியே எழுத்தில் கொண்டுவர என்னதான் முயற்சி செய்தாலும், அதில் சிறிதளவுதான் என்னால் எழுத முடிகிறது. என்ன செய்வது?

நீங்கள் உங்கள் கருத்தை தெரிவித்ததற்கு நன்றி. இதில் தவறாக நினைக்க ஒன்றுமே இல்லை. இனிமேலும் என் எழுதுத்தை பற்றிய உங்களின் இது போன்ற கருத்துக்களை தயவு செய்து தவறாமல் எழுதுங்கள். நானும் அறிந்து கொண்டு அதை மாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும்.
Back to top
View user's profile Send private message
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Sun Oct 18, 2009 3:49 pm    Post subject: Reply with quote

அன்புள்ள மீனாக்ஷி,
ஒரு அற்புதமான பாடலுக்கு மிகவும் அற்புதமாக ஆராய்ந்து விளக்கம் அளித்திருக்கிறீர்கள். ஓவ்வொரு வரியும் அற்புதம்.

Really I am finding it very difficult to put it in words.
In the first and third stanza the same tune will be used. In the second stanza the tune used is different. The orchestration is extraordinary and ofcourse your analysis too.

Whenever I read your posting I will play that song in the BG and read.
That will add more flavor.

Thanks a lot for the wonderful analysis of a wonderful gem.
Please continue...
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group