"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Kaadhal Sariththirathai Padikka Vaarungal - Dr.Siva

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Wed Dec 31, 2008 7:01 pm    Post subject: Lyrics - Kaadhal Sariththirathai Padikka Vaarungal - Dr.Siva Reply with quote

படம்: டாக்டர் சிவா
பாடலாசிரியர்: கவிஞர் வாலி
இசை: மெல்லிசை மன்னர்
பாடியவர்கள்: டி.எம்.எஸ். & சுசீலா


(சுசீலா)
காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்
மேகத்தை ஊஞ்சலிட்டு ஆடவைத்த மேனி இங்கே
மோகத்தை ஆடையிட்டு மூடி வைத்த ராணி இங்கே
கொதிக்கும் கோடை தணிக்கும் வேளை
கடைக்கண் ஜாடை தொடுக்கும் பார்வை
(காதல்)

(டி.எம்.எஸ்.)
வளை கைக்கொண்டு வளைக்கும் செண்டு
செவ்விளநீரை இடை தாங்கும் இளம் வாழைத் தண்டு
மலர் தேர் ஒன்று பனிக்கண் கொண்டு
தன் மகராஜன் குடியேற வரும் நேரம் இன்று
கொடிக்குள் ஆடும் கனிக்குள் ஊரும்
இனிக்கும் சாரம் கிடைக்கும் காலம்
ஆனந்த நாடகத்தை ஆட வந்த பாத்திரங்கள்
ஆரம்ப நாளை எண்ணி காத்திருக்கும் நேத்திரங்கள்

காதல் சரித்திரத்தை படிக்க வந்தாயோ
ஆசை அரங்கேறி நடிக்க வந்தாயோ

(சுசீலா)
இயற்கை காட்சி நமக்கோர் சாட்சி
நம் ராஜாங்கம் நாள்தோறும் ரதி தேவன் ஆட்சி
இதழ் வாய் திறந்து எடுத்தேன் விருந்து
என் மலர் மேனி நோகாமல் மெதுவாக அருந்து
பனிப் புல் மீது படுக்கை போட்டு
மணிக்கும் கவிதை மனம் போல் தீட்டு

(டி.எம்.எஸ்.)
மலை மேல் நின்று கலைமான் ஒன்று
உன் விழி பார்த்து விளங்காமல் வழி மாறும் இன்று
(சுசீலா)
மழை நீர் கொண்டு முகில் போல் வந்து
செந்த்தளிர் பூவை தாலாட்டு தலைவா நீ இன்று
(டி.எம்.எஸ்.)
சிலிர்க்கும் அங்கம் சிவக்கும் வண்ணம்
அணைக்கும்போது மயங்கும் மாது
(காதல்)

1975-ல் வெளிவந்த இந்த படத்தில் சிவாஜியும், மஞ்சுளாவும் நடித்துள்ளனர். டாக்டர் சிவா என்றவுடனே அனேகமாக எல்லோர் மனதிலும் நினைவுக்கு வரும் முதல் பாடல் இந்த படத்தில் வரும் இன்னொரு பாடலான 'மலரே குறிஞ்சி மலரே' என்ற பாடல்தான். ஆனால் இந்த படத்தில் அந்த பாடலை விட என் மனதை மிகவும் கவர்ந்தது இந்த பாடல் தான்.

இந்த காதல் பாடலின் மெட்டு, அழகாக ஒருவரை ஒருவர் கெஞ்சுவதை போல அமைந்திருக்கும். மிகவும் வித்யாசமான மெட்டில் அமைந்த பாடல் இது. இந்த படத்தில் சிவாஜி அவர்கள் ஒரு மனோதத்துவ டாக்டராக இருப்பார். அவருடைய கதாபாத்திரம் மிகவும் கண்ணியமானதாக இருக்கும். மெல்லிசை மன்னர் எப்பொழுதுமே, தான் இசை அமைக்கும் பாடலை, அந்த படத்தில் நடிப்பவரையும், அவரின் கதா பாத்திரத்தின் தன்மையையும் உணர்ந்து, அதற்கேற்றவாறு அந்த பாடலை பாடுபவர்களை, பாட வைக்கும் திறமை பெற்றவர். இதை இந்த பாடலில் டி.எம்.எஸ். பாடும்போது நம்மால உணர முடியும். அவருடைய குரல், இந்த படத்தில் வரும் அந்த கண்ணியமான டாக்டர் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு அருமையாக பாடி இருப்பார். சுசீலா அவர்களும் பல்லவியின் தொடக்கத்தில் வரும் 'காதல்' என்ற வாத்தையில் இருந்தே இந்த பாடலை அழகான கெஞ்சலுடன் பாட தொடங்கி விடுவார்.

இந்த பாடலின் பல்லவி தொடங்குவது ஒரு அழகான மிக சிறிய வயலின் ராகத்தில். பின் அதை தொடர்ந்து வரும் புல்லாங்குழலின் ராகம், மேலிருந்து படிப்படியாக இறங்கி வருவதை போல் இசைக்கும். இந்த பாடலின் காட்சி ஒரு அழகான மலை பிரதேசத்தில் படமாக்கப் பட்டிருக்கும். இந்த புல்லாங்குழலின் ராகம், அந்த மலை பிரதேசத்தில் வீசும் குளிர்ந்த காற்று நம் உடலில் தலையில் இருந்து கால் வரை படிபடியாக இறங்கி குளிர்விப்பதை போல உணரவைக்கும். இந்த பாடல் முழுவதுமே புல்லாங்குழலின் ராகம் மிகவும் இதமான கெஞ்சலுடன் இசைக்கும்.

பாடலின் இரண்டாவது சரணம் தொடங்கும் முன், வேகமாக வரும் அந்த வயலின் ராகத்துடன், கிடாரின் இசையும் இணைந்து ஓடி வந்து நம் செவிகளில் இதமாக மோதும். இதே போல் மூன்றாவது சரணத்தில் விட்டு விட்டு வரும் அந்த ஆர்மோனிகாவின் இசை, துள்ளி துள்ளி வருவது போல இருக்கும். இந்த அழகான துள்ளலை தொடர்ந்து வரும் வயலின் ராகம், மேலிருந்து கீழே ஓடி வருவதை போல இருக்கும்.

மூன்றாவது சரணத்தை டி.எம்.எஸ். & சுசீலா இருவரும் மாறி மாறி பாடிய பிறகு, அவர்கள் இருவரும் இணைந்து பாடும் ஒரு ராகத்தோடு இந்த பாடல் முடியும். அந்த இணைந்த ராகமும் high pitch-l இருந்து low pitch-l இருக்கும்.

மலை பிரதேசத்தில் காதலர்கள் ஓடி ஆடி பாடுவதைப் போல, இந்த பாடலின் பின்னணி இசை முழுவதும் ஓடுவது போலவும், துள்ளி ஆடுவது போலவும் அழகாக இருக்கும்.

இந்த பாடலின் வரிகளும் நம் மனதை கொள்ளை கொண்டு ஓடும்.

'மேகத்தை ஊஞ்சலிட்டு ஆட வைக்கும்....'

'மலர் தேர் ஒன்று, பணிக்கன் கொண்டு தன் மகராஜன் குடியேற .......'

'மலை மேல் நின்று, கலை மான் ஒன்று உன் விழி பார்த்து விளங்காமல் வழி மாறும்......' என்ற வர்ணனைகள் எல்லாம் இந்த பாடலில் மிகவும் அழகாக இருக்கும்.

கவிஞரின் அழகான வர்ணனைகளும், மெல்லிசை மன்னரின் இதமான இசையும் கலந்த ஒரு அழகான காதல் கீதம் இது.
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Fri Jan 02, 2009 4:28 pm    Post subject: Reply with quote

Excellent write-up, as usual, Meenakshi !
Ramki
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Sat Jan 03, 2009 7:29 pm    Post subject: Reply with quote

As usual great write-up Ms.Meenakshi.

I like another song in this movie. "Nallavar Kuralukku Mathippirukkum Intha Naatile..." and of course Malare...

Another aspect I like about this movie is the title music.
Amazing master piece. Ahead of its time. Thats our MM.
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group