"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

PADITHATHU,PAARTHATHU, KAETATHU ON OUR MASTER
Goto page Previous  1, 2, 3, 4, 5  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Speak to Members, Introduce Yourself, Discuss any topic of your interest, Fun, Puzzles, Riddles, Games
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sat Jan 23, 2010 6:26 pm    Post subject: Reply with quote

கங்கை அமரன் - மனசோடு மனோ - ஜெயா டிவி இல் - jan 23-10

நான் எங்கவூர் ராசாத்தி படம் எடுக்கையில் , தயாரிப்பாளர் ,இயக்குனர் , என்னை , பாட்டுக்கு பாடெடுத்து என்ற படகோட்டி பாடல் மாதிரி கேட்டார்கள் . அந்த பாடலை முன்னோடியாகி வந்ததுதான் பொன்மாலை தேடி நானும் பூவோடு வந்தேன்
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Feb 07, 2010 12:27 pm    Post subject: Reply with quote

நன்றி
திரு sp . முத்துராமன்- கண்ணதாசன் ரசிகன் நிகழ்ச்சி கலைஞர் டிவியில் 07 -02 -10 அன்று
ஹோகனேக்கல் பகுதியில் , வீர திருமகன் படப்பிடிப்பு
ஒரு பாடலை படமாக்கும் பொழுது ,( ஒரு பாடல் பல பகுதிகளாகப் பிரித்து படமாக்க படுவது யாவரும் அறிந்ததே )
மக்கள் கையில் கட்டு போட்டவர் யாருயா( இயக்குனர் ACT ஒரு விபத்திற்கு பிறகு கட்டு போட்டிருந்தாராம் )
ஒரு நல்ல பாட்டை கேட்கவிடாமல் , செய்யறது , பாட்டை முயுசா கேட்க விடுங்கையா என்று சொல்ல , தகறாரு வேண்டாம் என்று எண்ணி

ACT பாடலை முழுவதும் போடுங்கையா என்று சொல்லி , மக்களை திருப்தி செய்தபிறகே, படபிடிப்பை தொடர்ந்தனராம்

அந்த பாடல்

ரோஜா மலரே ராஜ குமாரி
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Feb 07, 2010 7:33 pm    Post subject: Reply with quote

Musician M.S.Viswanathan honouredFebruary 6th, 2010
By DC Correspondent Tags: Fouzia, Hariharan, K T Kunjumon, MS Viswanathan, Serin, Srikanth, Suhani I’m still learning,” said legendary music composer MS Viswanathan with utmost humility at a function in the city organised by East Coast Audio Entertainment to felicitate the brilliant musician.

“This gives me an opportunity to thank all those who were part of my work. My dream is that all the music directors come up with appealing music,” he added.

Two time National award-winner, ace playback singer Hariharan was also honoured on the occasion. A romantic album in five languages including Entrentrum in Tamil, Ennennum in Malayalam, Sadaa in Hindi and others sung by top singers like SP Balasubramaniyam, K.S.Chithra, Hariharan, Jayachandran, Udit Narayanan and actress Mamta Mohandas, was launched at the event. Veteran lyricist Vijayan said, “Language should not be a barrier for music.” A host of personalities including Chitra, M G Sreekumar, Unni Menon, Unnikrishnan and actors Srikanth, Jai Akash, Harikumar, actresses Sandhya, Devyani and Ambika, KRG, veteran filmmaker S.Ramanathan and others, came along to be a part of the celebrations. A surprise visitor was former union minister S.Thirunavukkarasar.
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Mon Feb 08, 2010 4:02 pm    Post subject: Reply with quote

Here is another report on the event.

http://www.jointscene.com/news/Living-legend-MS-Viswanathan-was-felicitated-in-a-grand-function.../5349
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Feb 10, 2010 9:21 pm    Post subject: Reply with quote

thank you Mr parthavi

an excellent piece . more info than we had from DC


A REQUEST TO THE CORE MEMBERS

can you devise a plan , to get the info before hand , so those who are interested , those who can , can be benefited ,

thanks

_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Fri Feb 12, 2010 9:43 pm    Post subject: Reply with quote

dear all

all msvians who missed PBS interview , In MANASODU MANO IN JEYA TV ,
pls see the re telecast , pls check out the timings from newspaper

in fact i joined in the middle of converstions , all all through he was praising the master visu , as fondly called by PBS .
to be honest firast time , i am hearing , a singer , talks so much about MSV ,ofcourse about kaviarassu also through out the programme .

i missed roja malarey rajakumari

he talked about

nilavey ennidam nerungathey
nilavukku enn mel
mounamey paarvaiyaal
pon ennben
vazhkai padagu songs
enthavoor enbavaney

will listen to him , again and write , if none writes
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Mon Feb 22, 2010 7:26 pm    Post subject: Reply with quote

just another addition, to bring what kannadasan said of MSVs selection .


actually CB said , none has achieved even 1% of master did .
he really sang most of songs fully

infact aendi muthamma was not as best as it was , and he really apologised , but Mano maintained , it was good .to that CB , it was not , however inspite of bad singing-if its heard good , the credit goes to his Manassega guru .

Infact , when he was called by MSV to his house , CB was stuggling to find tha tune for his maiden venture Madura geetham .
So actually , he thought MSV was calling him , to let him know the change in MD , but rather he was surprised to hear about a chance to sing .

on the day of recording , he was with Kaviarassu ,composing for mathura geetham . and during the lunch , KD said that he had session with MSv , and left . CB wnt to recording studios to meet MSV .
ON seeing CB , Kd நான் நாளைக்குதானே வரேன் என்று சொன்னேன் என்றாராம் அதற்க்கு எம் எஸ் வீ , இல்லை , இவர்தான் இந்த பாடலை பாடபோகிறார் என்றாராம் .
இல்லை , நீதானே இந்த பாடலை பாடுவதாக நினைத்தேன் . அதற்கு எம் எஸ் வீ , இவர் நல்லா பாடுவார் , இவர் பாடி நான் லயோலா காலேஜ் இல் கேட்டேன் , என்று சொல்லி , CB பாடிய பாபி படப்பாடலை பாடசொன்னராம் . அதை கேட்டு KD விசு selection கரெக்ட் ஆகத்தான் இருக்கும் என்றாராம்


yes mano was totally out of place , second in a row , after PBS , praised gloriously a week before .
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sat Apr 03, 2010 10:36 pm    Post subject: Reply with quote

here is an article from sudhangan

he echoes millions of MSv fans on the award

May 5, 2008
இசை இல்லை என்ற நாளில்லை


இந்த வருடம் மே மாதம் 2 ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை. திருவான்மியூர் வால்மீகி நகரில் ஸ்ரீமயம் குடியிருப்பின் மூன்றாவது தளத்தின் மொட்டை மாடி. கடற்கரை காற்றுக்கு தடை போட்டுக்கொண்டிருந்தது கோடையின் சூடு. ஆனாலும் சூடு தெரியவில்லை. காரணம் எங்களுக்கு முன்பு இருந்தது ஒரு மெல்லிசை தென்றல்.அந்த தென்றலின் நெற்றியில் திருநீறு,நடுவில் வட்டமான குங்குமப் பொட்டு.அந்த வெண்மையான சட்டையிலிருந்து மணக்கும் அயல்நாட்டு வாசனை. கழத்தில் ரூத்திராட்சம். இடது கையில் பளபளக்கும் தங்க நிற கைகடிகாரம். உடல் மட்டும்தான் மெலிந்திருந்தது. அவரது கண்கள் காற்றில் கூட கானத்தை தேடிக்கொண்டிருந்தது.




எழத்தாளர் வாமனன் பாணியில் சொல்ல வேண்டுமானால்,` இசை மூலம் அமரத்துவம் நாடத்துடிக்கும் வித்தை அவருடையது! அது கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் சங்கமித்த சங்கீத காவேரி,மெல்லிசை தாமிரவருணி, நல்ல தமிழக்கு ஸ்வரம் பிடித்த தென்மதுரை வைகை நதி!


மலர்ந்தும் மலராத பாதி மலர்களை மலரச்செய்த மணி இதழ்கள்... ஆர்மோனியத்தின் கறுப்பு வெள்ளைக் கட்டைகள் மீது நூறாயிரம் வண்ணங்களை நூறாயிரம் நடைகளில் காட்டி, நடனமாடிய வைர விரல்கள் ... நட்சத்திரக்கூட்டங்களை மெல்லிசைத் தோரணங்கள் ஆக்கிவிட, சங்கீதக் கனவுகள் கண்ட கந்தர்வனுக்குரிய மின்காந்த விழிகள்...'' புரிந்ததா அவர் யாரென்று?




அவர்தான் 9.2.1932ல் கேரளாவின் எலப்புள்ளி கிராமத்தில் பிறந்த மனையங்கத்து சுப்ரமணியன் நாயர் விஸ்வநாதன். நமக்கெல்லாம் பின்னாளில் எம்.எஸ். விஸ்வநாதனாக அறியப்பட்டவர்.எனது பள்ளி நாள் தோழர் சி.பி, ராம்மோகன் ஒரு சங்கீத ரசிகர். மெல்லிசை மன்னரின் பாடலையும் எடுத்துக்கொண்டு அதன் பின்னனியில் இருக்கும் இசையை வாத்ய சுத்தமாக கொண்டு வரக்கூடியவர்.கடவுளுக்குப் பிறகு தன்னில் உள்ள நவரச குணங்களையும் தட்டி எழப்பியவர் எம்.எஸ்.வி. என்று நம்பக்கூடியவர்.அந்த ஒரு மணிநேரம் உணர்வுகள் சில்லிட்டுப் போனது. இன்னுமும் அந்த ராக அலைகள் உடலுக்குள் ஊடுருவிய உணர்வு. இத்தனைக்கும் அவர் எங்களுக்காக பாடவில்லை. அவர் ராக ராஜாங்கத்தின் ஆளுமையை பற்றித்தான் விவாதித்துக்கொண்டிருந்தோம்.


பேசப்பேச அவர் கண்களில் இருந்து மறைந்துபோனார், காற்றோடு கலந்து போயிருக்கும் கானங்கள் செவிப்பாறைகளை வருடிக்கொடுத்தது.கானங்களை சுமந்த கதாபாத்திரங்கள் காட்சிகளாக விரிந்தார்கள்.எத்தனை விதமான பாடல்கள்.


தனது மூன்றாவது வயதில் தந்தையை இழந்து, அதற்கு ஆறு மாதத்தில் தன் தங்கையையும் இழந்தவர். தாய்தான் ஒரே ஆதரவு. தாய் வழித்தாத்தா கிருஷ்ணன் நாயர்,மீட்காவிட்டால் இந்த இசைக் கடல் ஏதாவது ஒரு குட்டையில் கரைந்துபோயிருக்கும்.




கேரளத்தின் வடகிழக்கில் இயற்கை எழில் கொஞ்சும் ஊர் கண்ணனூர். அங்கே கிருஷ்ணன் நாயருக்கு மாற்றலாகியது. அங்கேதான் நீலகண்ட பாகவதரின் வடிவிலே விஸ்வநாதனுக்காக இசை காத்துக்கொண்டிருந்தது.




மாதம் மூன்று ரூபாய் கொடுத்து இசைப்பள்ளியிலே சேர வசதியில்லாத விஸ்வநாதனை, தனது பள்ளியில் எடுபிடி வேலையாளாக சேர்த்துக்கொண்டார் நீலகண்ட பாகவதர்.


விஸ்வநாதனுக்கு கற்பூர புத்தி என்பதை அவர் புரிந்து கொண்டார் காசு வாங்காமலே சங்கீதம் கற்றுக்கொடுத்தார் நீலகண்ட பாகவதர்.நான்கு ஆண்டுகள் கர்நாடக சங்கீத பயிற்சிக்குப்பின் கண்ணனூர் டவுன் ஹாலில் மூன்று மணி நேரம் கச்சேரி செய்ய வைத்தார் நீலகண்ட பாகவதர்.


வாழ்க்கை திசை மாறியது, விஸ்வநாதன் திரை உலகில் சம்பாதிக்க தொடங்கியவுடன் தனது குரு தட்சிணையை எடுத்துக்கொண்டு கண்ணனூர் திரும்பினார். அதை ஏற்றுக்கொள்ள அப்போது நீலகண்ட பாகவதர் உயிரோடில்லை.இவருடைய இசையை ஏற்றுக்கொண்டவர் இசையமைப்பாளர் சி.ஆர், சுப்புராமன். இவருக்கு குருவாக இருந்தவர் மறைந்த இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு. ஜீபிடர் பிகசர்சில் அவர்தான் இவரை சிபாரிசு செய்தார். பிறகு எம்ஜீஆர் நடித்த ஜெனோவா படத்தில்தான் வாய்ப்பு வந்தது. முதலில் இவரை ஏற்றுக்கொள்ள மறுத்த எம்ஜீஆர் பின்னார் இவரது இசையில் மயங்கி, ` இனிமேல் என் படங்களுக்கு நீங்கள்தான் இசை' என்றார். தனது பாடல்களை தனது ஆசான் சுப்புராமன் கேட்கவேண்டுமென்று விரும்பினார் எம்.எஸ்.வி. அவருக்காக காத்திருந்தபோது, அவர் இறந்துவிட்ட செய்திதான் விஸ்வநாதனுக்கு கிடைத்தது.


அவர் இறக்கும் தருவாயில் அவர் இசையமைத்துக்கொண்டிருந்த படம் தேவதாஸ். அந்த பணியை முடித்துக்கொடுக்கும் வேலை அவரது உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு இருந்தது.தேவதாஸ் படத்தில் கண்டசாலா பாடிய ` உலகே மாயம்' பாலசரஸ்வதி பாடிய `சந்தோஷம் வேணும் என்றால்' பாராமுகம் ஏன் அய்யா ' ஆகிய மூன்று பாடலகளையும் மெட்டமைத்தது இந்த இரட்டையர்கள்தான்.




இருவரும் தனியாக இசையமைத்த முதல் படம் கலைவாணரின் பணம்.மெல்லிசை மன்னருக்கும். இளையராஜாவுக்கு ஒரு ஒற்றுமை உண்டு, ஐம்பதுகளின் இறுதியில் தமிழ்நாட்டை இந்தி பாடல்கள் ஆக்ரமித்துக்கொண்டிருந்தது. அதை விரட்டி ரசிகர்களை தமிழ் பாடல்களின் பக்கம் இழத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி. அதே நிலை 1976ல் இளையராஜாவுக்கு இருந்தது. ஆராதனா, பாபி, யாதோன் கீ பாரத் வெற்றிப் படங்களின் பாடல்கள் தமிழக்த்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது. அதிலிருந்து தமிழ் இசையை மீட்டவர் இளையராஜா.




1960 களுக்குப் பிறகு தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர்கள் இந்த இரட்டையர்கள். எத்தனை விதமான பாடல்கள்.பீம்சிங், சிவாஜி கணேசன் கலப்பில் உருவான `பா' வரிசை ப்டங்கள்,. கூடவே எம்ஜீஆரின் படகோட்டி, தெய்வத்தாய். ஆயிரத்தில் ஒருவன், ஸ்ரீதரின் நெஞ்சில் ஒர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை. என்று இரட்டையர்களின் சாம்ராஜ்யம் விரிந்து கொண்டே போனது. காலம் இரட்டையர்களை 1965ல் பிரித்தது. அதற்கு பிறகு விஸ்வநாதனின் நாத படைக்கு பலம் கூடியது என்றே சொல்லலாம்.அடுத்த பத்து ஆண்டுகள் தமிழ் சினிமாவிற்கு விலாசமே விஸ்வநாதன் என்றானது. அவர் பாடல்களில் பட்டியலை இங்கே கொடுப்பது நோக்கமில்லை.




பொதுவாக தமிழன் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் நிச்சயமாக கண்ணதாசன் விஸ்வநாதன் கலந்த பாடல்கள் நிச்சயமிருக்கும். உலகெங்கும் இன்று அவருக்கு கோடான கோடி ரசிகர்கள். சமீபத்தில் கோவையில் நடந்த சம்பவம் இது. ஒரு ரசிகர் கோமாவில் இருந்தார். எந்த மருத்துவ முயற்சியும் பலன் தரவில்லை. வேறு முயற்சியில் இறங்கலாம் என்று அவருக்குப் பிடித்த விஸ்வநாதனின் பாடல்களை போடுங்கள் என்றார்கள். அதிசயம் ஆனால் உண்மை. அவர் விழித்துக்கொண்டார். அதோடு ஏன் `சட்டி சுட்டதடா' பாடலை போடவில்லை என்று கேட்டார். அவருடைய உறவினர்கள் இதை விஸ்வநாதனுக்கே தெரிவித்தார்கள்.


இந்த இசைக்குள் வெளியே தெரியாத ஒரு இன்னிசை ஒளிந்திருக்கிறது. அதுதான் நன்றி உணர்ச்சி, அடக்கம், எளிமை, பணிவு. நன்றி உணர்ச்சிக்கு ஒரு உதாரணம். இவரது குருநாதர் எஸ். எம். சுப்பையா நாயுடுவிற்கு குழந்தைகள் இல்லை. அவர் படமில்லாமல் இருந்த காலத்தில், தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தவர் மறைந்த எம்.ஜீ.ஆர். அவரது தலைமையில் நடிகர் திலகத்தையும் வைத்து ஒரு நட்சத்திர இசை விழா நடத்தி அவருக்கு நிதி திரட்டி கொடுத்தார். பிறகு அந்த தம்பதிகள் நோய்வாய்ப்பட்டபோது அவர்களை தன் வீட்டில் கொண்டு வந்து தங்க வைத்தார். எஸ்.எம்.எஸ். இறந்தபோது அவருக்கு மகனாக இருந்து கொள்ளிவைத்தார். அதற்கு பிறகு ஒன்பது வருடங்கள் கழித்து அவரது மனைவி இறந்தார். அவரும் இறுதிவரை விஸ்வநாதனோடு இருந்தார். அவருக்கும் கொள்ளி வைத்தவர் விஸ்வநாதன். அவருடைய பண்பிற்கு ஒரு உதாரணம்., ஸ்ரீதர் படங்களுக்கு ஆரம்பத்தில் இசையமைத்துக்கொண்டிருந்தவர் ஏ.எம். ராஜா. அவருக்கும் ஸ்ரீதருக்கும் கருத்து வேறுபாடு. ஸ்ரீதர் விஸ்வநாதனிடம் வந்தார். உடனே விஸ்வநாதன் ராஜாவை சந்தித்து, அனுமதி பெற்ற பிறகே ஒப்புக்கொண்டார்.


கர்ணன் படத்தை இந்தியில் எடுக்க முடிவானது. நடிகர்கள் கூட முடிவானது. ஆனால் அந்த முயற்சி இறுதியில் கைவிடப்பட்டது. காரணம் இந்த இசையை கொடுக்க அங்கே ஆளில்லாததால்!


இத்தனை சாதனை படைத்த ஒரு கலைஞனுக்கு, இன்று வரை ஒரு தேசியவிருது கிடைக்கவில்லை.இன்று டெல்லியை தாங்கி பிடித்துக்கொண்டிருப்பது திமுக. முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கு தேசிய விருதை தீர்மானிப்பதும் அக்கட்சியின் தலைவர்தான்.விஸ்வநாதன் உருவாக்கிய பாடல்களுக்கு குரல் கொடுத்தவர்களுக்கெல்லாம் தேசிய விருது கிடைத்துவிட்டது. ஆனால் விஸ்வநாதனின் நினைவு இங்குள்ள தன்மான தமிழர்களுக்கு வரவில்லையா? அல்லது எம்.ஜீ.ஆர் மீதுள்ள கோபம் அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் மீது காட்டப்படுகிறதா? அப்படியானால் ஆஸ்தான இசையமைப்பாளர் இசைக்கு வரி கொடுத்த கவிஞர் வாலிக்கு மட்டும் அதுவும் காலதாமதமாக எப்படி பத்மஸ்ரீ கிடைத்தது.




உண்மையில் சொல்லப்போனால், தனக்கு தாமதமாக வந்த விருதை கவிஞர் வாலி திருப்பிக்கொடுத்திருக்க வேண்டும். காரணம் கவிஞர் வாலி கண்ணதாசனுக்கே சவால் விட்டவர். இப்போது எனக்கொரு ஆசை. விஸ்வநாதன் வாழ்நாளைக்குள் உலகமெங்கும் உள்ள அவரது கானத்தினால் கட்டுண்ட தமிழர்கள் உரக்க கம்பீர குரல் எழப்ப வேண்டும். அந்த குரல் கோபாலபுரத்திலிருந்து, குடியரசு தலைவர் மாளிகை வரை எட்ட வேண்டும். அந்த விருதை விஸ்வநாதன் நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும். காரணம் இது வெறும் தேசிய விருதுதானே, அவருக்குத்தான் ரசிகர்கள் என்கிற சர்வதே விருது ஏற்கெனவே கிடைத்துவிட்டதே.இது நமது பெருமித திருப்தி.




அவரைப் பொறுத்தவரையில் அவர் அடிக்கடி சொல்வது இதுதான் `இல்லை என்ற நாளில்லை; இன்னும் என்னும் ஆசையில்லை'.












Posted by சுதாங்கன் at 5:19 PM
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Mon Apr 05, 2010 2:55 am    Post subject: Reply with quote

Dear Sirs,
Mr.Sudhangan has taken us on a journey from the fifties to the present. I literally lived every moment of his description. Good piece repreoduced by our friends. The final comment, as rightly pointed out, echoes our feelings.
Thanks for producing this essay here.
Regards,
Sai Saravanan
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sat Nov 13, 2010 8:32 pm    Post subject: Hariyudan naan Reply with quote

On 12th Nov, 2010, Friday, in 'Hariyudan Naan ' program in jaya TV, one young girl sang the song 'vara vendum oru pozhudhu..' from Kalaikkovil. I accidentally heard this song just as I entered my house and was surprised, since it was the first time I heard this extraordinary number being presented in a program like this, that too by a girl. I can see that the judges were pleasantly surprised. James Vasanthan remarked at the end, " Just now I was told that this song was composed by V-R. It is surprising to know that such attempts have been made even in tose days. So, it is not as if these genres are being presented only now."

Though I felt sorry that a composer like him was not even aware of a song like this, I felt happy about his frank comments. Another judge Sarat also described this as a beautiful composition and said that we had had such jaambavaans in the past. Hariharan, as usual was cool and confined himself to commending the girl.

When JV asked the girl who suggested the song to her, she said, "Subhashree auntie." I don't know who this rasika is. My congratulations to her.

I am wondering how nice it will be if more such participants are coached to sing MSV's gems and stun the judges. With the number of music programs increasing, I am sure that a lot of MSV's compositions will come into limelight. Only, the "judges" may not be equipped to receive them, much less to appraise the rendering of them!
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Nov 14, 2010 9:00 am    Post subject: Reply with quote

dear Ramesh

its due to the fact , MSV showcased the lyric and talents of singers in every of his compositions , and never projected his .(unfortuntely still he is not if ENDRUM MSV is a clue ). and till he achieved what he wanted , he never allowed singers to go away from the recording theatre .
IF he approves that was supposed be an award for those singers

so singing those songs. correctly will definitely get awards and rewards .

i shyaway commenting present day noises .
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Nov 14, 2010 9:53 am    Post subject: Reply with quote

நன்றி திரு வாலி அவர்கள்
நன்றி -தினமணி 14 /11 /10
நேரில் இந்த நிகட்சியை கண்டவரின் கூற்று படி , வாலி மெல்லிசை மன்னரையும் , அவர்தம் மனைவியையும் மேடைக்கு அழைத்து , பட்டு வேஷ்டி , புடவை , மற்றும் தனது அன்பளிப்பையும் பணமாக கொடுத்து , தன நன்றியறிதலை தெரிவித்துக்கொண்டார் .

மேலும் , தினமணியின் ரிப்போர்ட்



20-ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்

First Published : 14 Nov 2010 02:47:19 AM IST

Last Updated : 14 Nov 2010 03:17:18 AM IST

சென்னை, நவ. 13: 20-ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் என்று கவிஞர் வாலி புகழாரம் சூட்டினார்.

கவிஞர் வாலி எழுதிய திரையிசைப் பாடல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பாடல்களின் தொகுப்பான "வாலி - 1000' என்ற நூலின் வெளியீட்டு விழா, கவிஞர் வாலியின் 80-வது பிறந்தநாள் விழா ஆகியவை சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகர் கமல்ஹாசன் நூலினை வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.

விழாவில் வாலி பேசிய ஏற்புரை:

கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்... என்ற எனது பாடல் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு பாடகர் டி.எம். சௌந்தரராஜன் தான் காரணம். என்னைப் பாராட்ட இங்கே பலர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி.

எனது மனைவி இறந்த முதல் ஆண்டு நினைவு நாளன்று ரஜினிகாந்தின் மகள் திருமணம் நடைபெற்றதால் என்னால் செல்ல முடியவில்லை. எல்லாம் வல்ல முருகன் அருளால் நீடூழி வாழ்க என்று அந்த மணமக்களை மனதால் வாழ்த்தினேன்.

கமல்ஹாசன் கலைஞானி மட்டுமல்ல. கவிஞானியும்கூட. தமிழை சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர். டி.கே. சகோதரர்கள் குழுவில் இருந்து கலை உலகுக்கு வந்தவர். மொழியை உச்சரிக்க தெரியாதவர்கள் அங்கிருந்து வர முடியாது. அந்த வளவுக்கு வரம் - சக்தி அவருக்கு உண்டு.

இந்த நிகழ்ச்சியை முடிவு செய்ததும் முதலில் சரோஜா தேவியைத்தான் அழைத்தேன். சொன்னதும் மகிழ்ச்சியோடு வந்திருக்கிறார். "படகோட்டி' படத்தில் நான் எழுதிய பாடல்கள் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு அவர்தான் காரணம்.

இந்த விழாவுக்கான அழைப்பிதழை கமலிடம் கொடுக்க நேரம் கேட்டபோது என் வீட்டுக்கே வந்து அழைப்பிதழை பெற்றுக் கொண்டார். இங்குள்ளவர்கள் யாரும் வெற்றியை மண்டைக்குள் ஏற்றிக் கொண்டவர்கள் இல்லை. அதே போல் தோல்வியையும் மனதுக்குள் போட்டுக் கொள்ள கூடாது.

ரஜினி, கமல் போன்றவர்கள் புகழின் உச்சியில் இருப்பதற்கு காரணம் அவர்கள் வேர்களை மறக்காததுதான். எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்துக்கும் எம்.எஸ். விஸ்வநாதன் போட்ட பிச்சையே காரணம்.

20-ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான். அவருக்கு நிகரான ஒரு ஆள் இன்னும் பிறக்கவில்லை.

கமல், ரஜினி ஆகியோர் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தி வருகிறார்கள். ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் ஆகிய படங்கள் ரஜினியின் நடிப்புக்கு சிறந்த உதாரணம்.

என்னை பாராட்ட வந்தவர்கள், பாராட்டி இருப்பவர்கள் அனைவருக்கும் என் நன்றி என்றார் கவிஞர் வாலி.

துக்ளக் ஆசிரியர் சோ: காலம் கடந்தும் நிற்பவை வாலியின் கவிதைகள். இது அவருக்கு கடவுள் தந்த பரிசு. அதனால்தான் அவரால் ராமாயணத்தைப் பற்றியும் எழுத முடிகிறது. முக்காப்புல்லாவும் எழுத முடிகிறது. வாலியால் ஆன்மிகம் பற்றியும் பேச முடியும். நாத்திகர்களைப் பாராட்டவும் முடியும். அதில் ஒன்றும் தவறு கிடையாது.

கவிதை, பாடல்களை எழுதும் போது அதிலேயே அவர் ஐக்கியமாகி விடுகிறார். தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார். அவரிடம் இன்னும் திறமைகள் கொட்டிக் கிடக்கிறது. கண்ணதாசன் காலத்தில் புகழ் பெற்ற கவிஞராக இருந்தவர் வாலி. கண்ணதாசன் பாடலுக்கும் இவரின் பாடலுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்தது. அனைத்திலும் கவித்துவம் இருக்கும். எல்லோரையும் வாலியால் கவர முடியும் என்றார்.

நடிகர் கமல்ஹாசன்: வாலியைப் பற்றி பகிர்ந்து கொள்ள என்னிடம் நிறைய நினைவுகள் இருக்கிறது. அவருக்கு இப்போது 80 வயது அல்ல. ஆயிரம் வயது. அத்தனை ஆண்டுகள் அவர் புகழோடு வாழ வேண்டும். அப்படி வேண்டிக் கொள்கிறவர்களில் நானும் ஒருவன்.

அவர் எனக்கு எழுதிய உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் பாடலில் வானம் போல் சில பேர் வாழ்க்கையும் இருக்கும் என ஒரு வரி எழுதியிருப்பார். அந்த வரிகளில் நாங்கள் எல்லாம் பூக்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அதில் இப்போது நிறைய பேர் தேன் எடுத்து செல்கிறார்கள். என் கவிதைகளை கேட்டு பிழை சொல்லமால் பாராட்டி இருக்கிறார். இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பவர் வாலி. தைரியம் அளிப்பவர் வாலி என்றார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, சரோஜா தேவி, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசிலா, கவிஞர் பழனிபாரதி உள்ளிட்ட பலர் கவிஞர் வாலியை வாழ்த்தி பேசினர்.

unquote
நன்றி மறக்கும் இவ்வுலகிலே வாலி போல் சிலரும் உள்ளனர்
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Nov 14, 2010 2:51 pm    Post subject: Reply with quote

வாலியின் கூட்டத்தில் கேட்ட வாலி யின் கூற்று

எம் எஸ் வீ யின் மெட்டுக்கு சரியான பல்லவி வரவில்லை என்றால், மெல்லிசை மன்னர் வாலியை ஒன்றும் சொல்லமாட்டாராம் , தயாரிப்பு நிர்வாகியை கூப்பிட்டு
ஏன் வாலியை கூப்பிட்டுவரசொன்னால் யாரையோ கூப்பிட்டு வந்திருக்கியே என்பாராம்
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Mon Nov 15, 2010 11:15 pm    Post subject: Reply with quote

dear all

these below comments should not find its place here , but still not inappropriate , hence given
these are comments on above news item
quote


11/15/2010 9:04:00 PM MR VAALI IS A GIFT TO TAMIL CINEMA. NO NEED TO COMPARE HIM WITH POET KANNADASAN. MSV IS A LEGEND INCOMPARABLE. HIS LILTING TUNES ARE A TREAT TO US FOR EVER. LONG LIVE BOTH!!
By S Raj


11/15/2010 2:22:00 PM His tunes told you who could be the hero - a different tune for Nadigar thilagam Sivaji and a different one for Makkazh Thilagam MGR. selection of instruments as per film subject ... we can keep on talking about the living legend we are blessed to have lived in the era of MSV-Kannadhasan, Vaali-TMS-P.Suseela amma- PBS and then of course Isaignani Ilayaraja-Vaali,Vairamuthu-SPB-S.Janaki amma.
By vishnu
11/15/2010 12:25:00 AM அவருக்கு நிகராக இன்னொருவர் இன்னும் பிறக்கவில்லை - பல்ரும் அறிந்த இந்த விவரத்தை, கவி வாலி சொல்லக்கேட்க சுகமாக இருக்கிறது... எத்தனை படஙகள் (கிட்டத்தட்ட 1750 !) அதில் எத்தனை ஆயிரம் பாடல்கள் நம் மனதில் வலம் வருகின்றது இன்றும் - தமிழில் பல புதுமைகள் கொன்டு வந்ததும் அவர்தான - ஒர் ராகத்தை மறுபடியும் கேட்பது மிகவும் அபூர்வம் ... அவருக்கு நிகராக இன்னொருவர் இன்னும் பிறக்கவில்லை ; பிறக்கப்போவதும் இல்லை. வாழ்க மெல்லிசை மன்னர் வாழ்க கவி வாலி அவர்கள். MSV's enchanting and mesmerising melodies will live for ever. He is the most versatile music director the world has ever seen, but since he contributed to our language and not English, he is not world famous ! most of his films all the songs will be good and are still heard . I have had the blessing to watch him score tunes - casually so many tunes will go to the bin while confirming one of them, he will not even preserve the one not used for future use! his one song could feed the music for one whole film, so rich and wealthy. Great MSV ! His tunes t
By vishnu
11/15/2010 12:23:00 AM The great creator MSV has been left in lurch due to ineptness in handling in business-like fashion his own creations. Compare this with how Ilayraja sold the rights to a Singapore based firm, minting a few lakhs. Childlike approach of MSV truly belongs only to 20th century, as told by Valli! Coming from a close friend like Vaali celebrating 80th year of age, gives the idea of how things were; compare it with the present, with self-proclaimed half-wits claiming glory, where none exists. My Congrats to whole of yesteryear's team for bestowing us with a great treasure of ever-lasting songs, fully occupying and fulfilling our hearts & souls indelibly.
By ASHWIN
11/14/2010 12:04:00 PM Kavignar Vaali deserves all respect and appreciation from all of us, in the same way MSV deserves for his matchless music. Unless the new musicians learn the unique methods from MSV, the current tamil cinema songs will be buried under instrumental noise only.
By Mohamed
11/14/2010 11:21:00 AM .
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Mar 13, 2011 10:14 pm    Post subject: Reply with quote

the following is the answer by PBS to the dinamani reporter

thank you dinamani , and PBS

quote
[b]எம்.எஸ்.விஸ்வநாதனுக்குப் பெரிய அங்கீகாரம் இல்லை என எல்லோருக்கும் வருத்தம் இருக்கிறதே[/b]?


அவருக்கு அங்கீகாரமும் விருதுகளும் கிடைத்தால் சந்தோஷப்படுகிற முதல் ஆள் நான்தான். ஆனால் அவருக்கு அதெல்லாம் இல்லை என்பதில் எனக்கு மட்டுமே அதிக வருத்தம்.


அவரைக் கூட இருந்து பார்த்தவன், ரசித்தவன் என்ற முறையில் இன்னும் எனக்கு அதிக வருத்தம். ஆனால் அவரைப் பாருங்கள்... விழாக்களில் முதல் ஆளாகக் கலந்து கொள்கிறார். எதையும் எதிர்பாராமல் வாழ்கிறார். அவரிடம் இளம் தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன.


கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் கௌரவிக்காத தேசம் சீக்கிரமாகவே வீழும். தமிழ் இசைக்கு ஒரு புதிய பாதையை அமைத்து கொடுத்தது எம்.எஸ்.வி.தான். அவரை மறந்தால் இந்த வாழ்வு நம்மைப் பழிக்கும்.

unquote
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Speak to Members, Introduce Yourself, Discuss any topic of your interest, Fun, Puzzles, Riddles, Games All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3, 4, 5  Next
Page 4 of 5

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group