"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Chiththirai Maadham - Raaman Eththanai Raamanadi

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Mar 13, 2009 8:38 pm    Post subject: Lyrics - Chiththirai Maadham - Raaman Eththanai Raamanadi Reply with quote

படம்: ராமன் எத்தனை ராமனடி
இசை: மெல்லிசை மன்னர்
பாடியவர்: பீ. சுசீலா


சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்ம்

தேரில் வந்த ராஜ ராஜன் என்பக்கம்
தேன் உலாவும் தேன் நிலாவும் உன்பக்கம்
சொர்கமோ நானும் நீயும் போகுமிடம்
தேரில் வந்த ராஜ ராஜன் என்பக்கம்

அந்நாளிலே நீ தந்த கனவு காயாகி இப்போது கனியானதோ
என் நெஞ்சிலே நீ தந்த உறவு கனவாகி இப்போது நனவானதோ
மின்னல் இளமேனி ஆசை தீர மெல்ல மெல்ல சேராதோ
பொன்னழகு கன்னம் காதல் தேவன் பூஜையில் மலராதோ
(சித்திரை மாதம்)

பூமாலைகள் உன்மீது விழுந்து ஊரெங்கும் தேர் பாடும் பொன்னாளிலே
பாமாலைகள் பல்லாக்கு வரிசை ஒன்றல்ல பல கோடி உன் வாழ்விலே
பங்கு கொள்ள வந்தேன் கண்ணா உந்தன் சங்கம் வரக் கூடாதோ
மங்கை இவள் பேரும் உன்னுடன் சேர்ந்தால் வாழ்வே மலராதோ
(தேரில் வந்த)

சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்ம்ம்ம்ம்ம்ம்.......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

திரு. பீ. மாதவன் அவர்கள் இயக்கத்தில் 1970- ல் வெளிவந்த படம் ராமன் எத்தனை ராமனடி. இந்த படத்தில் சிவாஜியும், கே.ஆர். விஜயாவும் நடித்துள்ளனர். படத்தின் தொடக்கத்தில் மிகவும் அப்பாவியாக வரும் சிவாஜி, அந்த ஊரின் பண்ணையார் வீட்டுப் பெண்ணாக வரும் கே.ஆர். விஜயா, தன் மேல் காட்டும் பரிவை காதல் என்று எண்ணி அவரை திருமணம் செய்துக்கொள்ள நினைப்பார். கே.ஆர். விஜயாவை பெண் கேட்டு செல்லுமிடத்தில், தகுந்த அந்தஸ்த்து இல்லாததால், மிகவும் அவமானப்பட்டு, தான் நல்ல அந்தஸ்த்துடன் வந்து அவரை பெண் கேட்பதாக சபதம் செய்வார். பின் சிறந்த நடிகராகி நல்ல அந்தஸ்த்துடன், கே.ஆர். விஜயாவை திருமணம் செய்வதற்காக, மிகுந்த கனவுடன் சொந்த ஊர் செல்ல ரயிலில் வருவார். அப்பொழுது அவருடைய ஊர் வருவதற்கு முன்னம் உள்ள ரயில் நிலையத்திலேயே, கையில் பூச்செண்டுடன் கே.ஆர். விஜயா அவரை வரவேற்று, பின் அவருடனேயே அந்த ரயிலில் பயணம் செய்வதாக கனவு காண்பார். அப்பொழுது கே.ஆர். விஜயா பாடுவதாக வரும் பாடல் இது.

இந்த பாடல் ரயில் பயணத்தின் போது பாடுவதாக வருவதால் பாடலின் தொடக்கமே ரயில் ஓடும் சப்தத்துடனும், அது எழுப்பும் அலார ஓசையுடனும் அழகாக தொடங்கும். இந்த ரயிலின் ஓட்டம் போல் பாடலும் சற்று வேகமாக 'சித்திரை மாதம்' என்று தொடங்கும். பின் ரயில் வண்டி நிலையத்தை அடையும்முன் அதன் வேகம் சற்று குறைய தொடங்குவதுபோல் பல்லவியின் மீதி வரிகள் சற்று நிதானத்துடன் இருக்கும். இப்படி வேகமெடுத்து பின் நிதானத்துடன் தொடங்கும் பல்லவியின் ஒவ்வொரு வரிகளும் ஒரு சிறிய புல்லாங்குழல் ராகத்துடன் முடியும். இந்த புல்லாங்குழல் ராகம் நம் காதில் மோதும்போது, நாம் ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணம் செய்யும்போது, இதமான குளிர் காற்று நம் முகத்தை மோதுவது போன்ற உணர்வை தரும்.

பல்லவி முடிந்து, முதல் சரணம் தொடங்கும் முன் வரும் அந்த இசை முழுவதுமே அலாரத்துடன் கூடிய ஒரு ரயிலின் ஓட்டம் போல் மிக அழகு.

ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பி, பிளாட்பாரத்தை கடக்கும்போது உண்டாகும் சப்தத்தையே மிகவும் இனிமையான, அழகான இசையாக இந்த பாடலின் சரணத்தின் ஒவ்வொரு வரியின் முடிவிலும் கொண்டு வந்திருப்பது மிகவும் அருமை.

இரண்டாவது சரணம் தொடங்கும் முன் வரும் இசை முழுவதுமே புல்லாங்குழலின் ராகம்தான். சில நேரங்களில் ரயிலில் நீண்ட பயணம் செய்யும்போது, அதன் சப்தம் ஒரு தாலாட்டாக அமைந்து நம்மை சற்றே ஒரு சிறிய தூக்கத்தில் ஆழ்த்தும். அது போல இந்த புல்லாங்குழல் தாலாட்டும் நம்மை சற்றே மயங்க வைக்கும். இரண்டாவது சரணத்தின் வரிகளை ஒன்றோடு ஒன்றை இணைக்க அழகான கிடாரின் ராகம்.

இந்த பாடல் முடிவதும் பாடலின் தொடக்கத்தை போலவே வேகமான வரிகளில்தான். இந்த வரிகளை தொடர்ந்து வரும் அந்த 'ம்ம்ம்ம்ம்ம்' என்ற ஹம்மிங்கும், சிறிய புல்லாங்குழல் ராகமும், இந்த ரயில் இசை பயணம் முடிந்து, அந்த ரயில் மிக தொலைவில் சென்று விட்டதை போன்ற உணர்வை தரும்.

இந்த பாடலில் வரும் 'சொர்கமோ' என்ற வார்த்தையை சுசீலா அவர்கள் பாடும்போது நம்மை அவர் சொர்கத்துக்கே அழைத்து செல்வதுபோல் தோன்றும்.

மெல்லிசை மன்னர் இந்த பாடலின் காட்சி ஒரு ரயில் வண்டியில் என்பதால் எவ்வளவு அழகாக இசை அமைத்துள்ளரோ, கவிஞரும் பாடல் வரிகளை அதற்க்கு இணையாக அழகாக எழுதி உள்ளார்.

'சொர்கமோ நானும் நீயும் போகுமிடம்....' என்று சொர்கத்துக்கு செல்வதற்காக இந்த இசை ரயிலில் ஏறியது போல் உள்ளது.

படத்தில் சிவாஜியை திருமணம் முடிக்க தன் சம்மதத்தையும், தான் எவ்வளவு ஆசையுடன் அதை எதிர் பார்த்து கொண்டிருப்பதையும்

'பங்கு கொள்ள வந்தேன் கண்ணா உந்தன் சங்கம் வரக்கூடாதோ,
மங்கை இவள் பேரும் உன்னுடன் சேர்ந்தால் வாழ்வே மலராதோ...' என்று எவ்வளவு அழகாக இந்த பாடல் வரிகள் சொல்கின்றன.

இந்த பாடல் முடியும்போது இவ்வளவு விரைவாக இந்த ரயில் இசை பயணம் முடிந்து விட்டதே என்று எண்ண தோன்றும்.
Back to top
View user's profile Send private message
tvsankar



Joined: 24 Jan 2007
Posts: 229

PostPosted: Sat Mar 14, 2009 12:53 am    Post subject: Reply with quote

Dear Meenakshi,
Welcome back. Yen neenda naalaga kanom ungalai?


As u mentioned,

"இந்த பாடல் முடியும்போது இவ்வளவு விரைவாக இந்த ரயில் இசை பயணம் முடிந்து விட்டதே என்று எண்ண தோன்றும் "


Padalai polave - ungalin writings um seekiram mudindhu vitta
oru feelings....

Paatin mood polavae ungalin ezhuthu vadivamum irundhadhu .

I enjoyed a lot.
Enaku migavum piditha padal idhu.

Thank you for nice writings Meenakshi.

With Love,
Usha Sankar.
Back to top
View user's profile Send private message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Sat Mar 14, 2009 1:38 am    Post subject: Reply with quote

நன்றி உஷா.

தவிர்க்க முடியாத வேலை காரணமாக சில மாதங்கள் ஒன்றுமே எழுத முடியாமல் நெருக்கடியாக ஆகி விட்டது. நம் மெல்லிசை மன்னரின் பாடல்களை நம்மை போலவே ரசனை உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணையே கிடையாது அல்லவா? :). இனி தவறாமல் எழுதுகிறேன். உங்கள் அன்புக்கு மீண்டும் என் நன்றி உஷா.
Back to top
View user's profile Send private message
tvsankar



Joined: 24 Jan 2007
Posts: 229

PostPosted: Sun Mar 15, 2009 12:45 am    Post subject: Reply with quote

Dear Meenakshi,
Thanks for the response,
Nnaum Tamizh la ezhudha try pannanam,
think of that.

Yes . Nammai polavae rasikum fans idam share seiyum
sandhoshamae thani dhan...


Oru song reqeust ungaluku

"Chittu kuruvikena kattu padu"

Indha paatuku neenga ezhudhuveengala??

With Love,
Usha Sankar.
Back to top
View user's profile Send private message
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Sun Mar 15, 2009 12:48 pm    Post subject: Reply with quote

Thanks a lot Ms.Meenakshi for the quick response.
படத்தின் கதையையும் பாட்லின் காட்சியையும் மிக அழகாக கண் முன் வைத்துவிட்டீர்கள். மிக்க நன்றி.

Your speciality is presenting the lyrics, story and song sequence, MSV's BGM, the way the singer sung in beautiful tamil.

It took nearly 2-3 minutes for me to type the above lines in Tamil... Smile

Usha madam ketta paadal kooda enaku migavum piditha ondru.
Adhai padikka aavaludan kathirukiren...
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Sun Mar 15, 2009 4:34 pm    Post subject: Reply with quote

மிக்க நன்றி மகேஷ்.

'சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு'..... மிகவும் அழகான பாடல் இது. இவ்வளவு அழகான பாடலை பற்றி நானும், என்னால் முடிந்தவரை ஓரளவுக்காவது அழகாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த பாடலுக்கு 1971- ல் சுசீலா அவர்களுக்கு National Award கிடைத்தது. இந்த பாடலை தேர்வு செய்து எழுத சொன்னதற்கு மிகவும் நன்றி உஷா.
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Mon Mar 16, 2009 3:28 pm    Post subject: Reply with quote

Dear Meenakshi.

A wonderful writing on one of the best melodies of Sri MSV.
This is my favourite number and I had written about this song in one of the pages of our site the way I had experienced when I heard this song a long time ago !

Only MSV can make you 'experience' the scene in any song he composes !

We missed your writing for some time and I am happy you will be online again, as usual.

All the best

Regards
RAMKI
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Mon Mar 16, 2009 5:45 pm    Post subject: Reply with quote

i had also written abt this earlier

in the song when the train goes on a bridge the very music will change and it is almost like we travel in the train and the beauty just because that piece was included it will not disturb the song and the very music will be felt like a part of and not as an intrusion
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Mon Mar 16, 2009 8:48 pm    Post subject: Reply with quote

Recently Mr. Sampath (of our forum) told me that a six year old boy, casually listening to this song from an audio (not video) asked, "Is this song sung in a train?"
That is the power of the composition of this song.

This song can be contrasted with 'Kelvi Pirandhadhu Andru' (Pachchai Vilakku) sung by an Engine Driver, where the music is attuned to the Engine sound, whereas 'Chiththirai madham' reflects the sound of train produced by the moving carriages.

Similarly, we can feel a boat moving on a calm river when we hear 'Amaidhiyaana nadhiyinile..'

While I have been experiencing these sensations from the time I started hearing these songs, there is an overwhelming sense of satisfaction and joy, when several members of the group share their individual feelings which converge into a commonly experienced set of feelings!
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group