"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Andhappakkam vaazhndhavan - Veettukku veedu

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Tue May 05, 2009 11:14 pm    Post subject: Lyrics - Andhappakkam vaazhndhavan - Veettukku veedu Reply with quote

படம்: வீட்டுக்கு வீடு
பாடியவர்: சாய்பாபா
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர்


மலர்களில் படுத்தவள் சகுந்தலை அந்நாளில்
என் நிலைதனை கெடுத்தவள் மாலதி இந்நாளில்
சலாமி, சலாமி, சலாமி, ஐ லவ் யூ

அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ
ஒ மை ஸ்வீட்டி, ஒ மை ஸ்வீட்டி
ஓடி வா, ஓஓஓஓஓஓ

ஜூலையில் பிறந்ததேன் ஜாதகம்
காதலில் அது ரொம்ப சாதகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம்
எங்கு செல்லுமோ இந்த நாடகம்
ஒ மை ஸ்வீட்டி, ஒ மை ஸ்வீட்டி,
ஓடி வா, ஓஓஓஓஓஓ

இனி உனை யாரும் நெருங்கிடார்
உன் இளமையை பார்த்தவர் உறங்கிடார்
ஊர்வசி வந்தாலும் மயங்கிடார்
உன்மேல் ஆணை மை கிடார், மை கிடார்
ஓடி வா, ஓஓஓஓ
(அந்தப்பக்கம்)


1970-ல் வந்த படம் 'வீட்டுக்கு வீடு' ஒரு சிறந்த நகைச்சுவை சித்திரம். இதில் ஜெயசங்கர், லக்ஷ்மி, நாகேஷ் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் 'பட்டு பாகவதர்' என்ற பெயரில் பாட்டு வாத்தியாராக வரும் நாகேஷ், லக்ஷ்மி திருமணம் ஆகாதவர் என்று நினைத்துக் கொண்டு அவரை காதலிப்பார். லக்ஷ்மியின் காதலைப் பெற பல வழிகளில் முயற்சி செய்வார். அந்த முயற்சியில் ஒன்றுதான் இந்த பாடல்.

இரவில், தன் தந்தை உறங்கியவுடன், கையில் கிடாரை வைத்துக்கொண்டு, லக்ஷ்மியை நினைத்துக்கொண்டு மிகுந்த ஏக்கத்துடன் இந்த பாடலை பாடுவார். இந்த பாடல் இரவில் பாடுவதாக வருவதால், மெல்லிசை மன்னர் எல்லோர் மனதயுமே தன் இனிமையால் உறங்கவைக்கும் நீலாம்பரி ராகத்தை தேர்ந்தெடுத்து மெட்டமைத்திருக்கிறார். இரவில், மென்மையாக பாடும் இது போன்ற பாடலுக்கு ஏற்ற குரல் வளம் படைத்தவர்கள் பீ.பீ.ஸ்ரீநிவாஸ், ஜேசுதாஸ் போன்றவர்கள். ஆனால் நம் மெல்லிசை மன்னர் இந்த பாடலுக்கு சாய்பாபா அவர்களை தேர்ந்தெடுத்து பாட வைத்தது மிகவும் அருமை. இதையெல்லாம் அவர் எதை வைத்து முடிவெடுக்கிறார் என்பதை எண்ணி எண்ணி நானும் என் அண்ணாவும் பல முறை வியந்திருக்கிறோம்.

இதமான மெட்டில் அமைந்துள்ள இந்த பாடலின் பின்னணி இசையில் வரும் கிடார், bongos, டிரம்ஸ் மற்றும் விசில் இவை எல்லாமே இந்த இரவு பாடலுக்கு ஏற்றார் போல் மிக மிதமாக, இதமாக வரும். கிடாரின் ராகத்தில் தொடங்கும் இந்த பாடல், குறைட்டை ஒலியில் முடியும். இந்த குறட்டை ஒலி பாடலின் பல்லவி தொடங்கும் முன் வரும் கவிதை வரிகளின் முடிவில் இசையாக வருவது அழகாக, புதுமையாக இருக்கும். பின்பு 'அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ' என்று பல்லவி தொடங்கும்.

இந்த பாடலை சாய்பாபா மிகவும் அற்புதமாக பாடி இருக்கிறார். அதிலும் குறிப்பாக 'ஓடிவா' என்ற வரிகளை அவர் பாடி, ஹம்மிங் செய்வது ரொம்ப பிரமாதமாக இருக்கும்.

கண்ணதாசன் அவர்களும் பாடல் வரிகளை இந்த படத்தில் நாகேஷ் அவர்களின் கதாபாத்திரம் எப்படி உள்ளதோ அதற்கு ஏற்றார் போல் வேடிக்கையாக எழுதி இருக்கிறார்.

பாடலின் முதல் சரணத்தில் 'ஜுலையில் பிறந்ததேன் ஜாதகம், காதலில் அது ரொம்ப சாதகம், தந்தை வழியில் கொஞ்சம் பாதகம்' என்ற வரிகள் மிகவும் ரசிக்க வைக்கும்.

அந்த காலத்தில் வந்த ஒரு வித்யாசமான பாடல் இது.
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Wed May 06, 2009 6:26 am    Post subject: Lyrics Reply with quote

Dear Meenakshi mam,
You have recalled the lyric 'andhappakkam vazhndhavan Romeo' from "Veettukku veedu". In the course of your writing , you have observed that for a mild song of this version, KJJ or PBS could have been used.[B T W SPB had already worked with MSV, and remember how TMS was used in 'Yaar andha nilavu- "Shanthi"]. Also you have a question 'how he chooses a singer?'
MSV goes by the rigid requirements of the movie scene -cum -the artiste on screen for a song. This particular piece had all the then famous Hippy elements like long flowing hair, slim physique and the perpetual company of Guitar. Obviously, the language used should be English of the hippy style. All the then contemporary singers were good -no doubt. But this time the need was to render the phrase ' Oh my sweety' in the way hippies do it. Mr.SAIBABA [s/o ACTOR T.S.BALIAH] was a student from Madras Christian college, and had imbibed all those styles of uttering English and was on the orchestra of MSV.Knowing his prowess ideal for the occasion, MSV used him. Another evidence of mine is -in the "Thangappadhakkam" movie, the number 'Thaththichellum ' by VJ there is an interject with nursery rhyme 'Twinkle twinkle little star' rendered by Saibaba that sounds very close to native styles of English. Carefully observe the elegance in rendering it the way it should be. MSV goes for apt style and voice. What a singer has to do matters the most. Remember how he used Ajit singh and Usha utub for pop style numbers.
Thank you for the opportunity.
Warm regards Prof.K.Raman Madurai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Thu May 07, 2009 6:27 pm    Post subject: Reply with quote

Dear Meenakshi and Prof

Please see my article about this song in the heading 'Pick a song and analyse'


N Y MURALI
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Thu May 07, 2009 6:43 pm    Post subject: Reply with quote

Thank you Professor.
'யார் அந்த நிலவு' .....மிக சரியாக சொல்லிவிட்டீர்கள்.
இயற்கையில் கம்பீரமான குரல் வளம் கொண்ட டி.எம்.எஸ். அவர்களையே, இதமான இரவு பாடல்கள் பலவற்றை பாட வைத்தவர் மெல்லிசை மன்னர். நான் சொல்லவந்தது என்னவென்றால் பீ.பீ.எஸ்., கே.ஜே இவர்கள் எல்லாம் இயற்கையிலேயே மென்மையான குரல் வளம் கொண்டவர்கள். அதிலும் குறிப்பாக பீ.பீ.எஸ். அவர்களின் முக்கால்வாசி பாடல்கள் நாம் இரவில் கேட்க இதமாக இருக்கும். அதைத்தான் சொல்ல வந்தேன்.

மேலும் சாய்பாபா அவர்கள் பாடியுள்ள பாடல் என்றவுடன் உடனே என் நினைவுக்கு வரும் பாடல் 'hello my darling இப்போ காதல் வந்தாச்சு' மற்றும் 'உன்னை தொடுவது இனியது'. நீங்கள் எழுதி இருப்பது போல் கையில் கிடார் வைத்துக்கொண்டு பாடும் Hippi கும்பலுக்கு இவர் குரல் மிகவும் பொருத்தமாக இருப்பதால்தான் மெல்லிசை மன்னர் இவரை பாட வைத்திருக்கிறார். Excellent choice.
Back to top
View user's profile Send private message
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Mon May 11, 2009 1:31 am    Post subject: Reply with quote

Friends,
This is a rare song, and as described by Professor, has suited the character, situation and the song well. There is an eerie feeling too generated by the mood induced by the singing, music, the whistling. I am also reminded of the type of songs rendered in this style by Sai Baba such as "Thotta idam ellam" by PS, where Sai Baba intervenes with a 'What's your name babie?'...

Sai Baba was an apt choice for such songs, and how MM chooses 'ingredients' for his compositions!

Sai Saravanan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group