 |
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
Ram Devotee
Joined: 23 Oct 2006 Posts: 1160
|
Posted: Mon Apr 20, 2009 4:29 am Post subject: A Handful of Piano Picks - Part 25 - "Layam" |
|
|
A Handful of Piano Picks - 25
"Layam"
இந்திய இசையில் கர்நாடக இசையின் தாளச் சிறப்பு வெகு ஆழமானது. தாள வகையின் சிறப்பினை தமிழ்த் திரையிசையின் அழகு கொண்டு ஒரு சிறு பயணம் நடத்த வேண்டும் என்பது எனது வெகு நாள் ஆவல். பியானோ தொடரை ஒரு நல்ல சந்தர்பமாகக் கருதுகிறேன். பல வகையான திரையிசை, உலக இசை வடிவங்களை, விளக்கத்தின் பயன் கருதி பட்டியலில் கொள்வோம்.
ஒரு பாடலைப் பற்றி எழுதுவதென்பது ஒரு சைக்கிளில் மலை மேலிருந்து கீழே வருவது போன்ற அனுபவம். ஆனால் இம்முறை சைக்கிளின் பாகங்களைக் கொஞ்சம் பார்த்து ரசிக்க வேண்டுமென்ற எண்ணம். இரண்டிலும் ஒருவித அனுபவங்கள், கற்பனைகள், கற்றல்கள்!
"லயம்" என்கிற சொல்லைப் "பக்கவாத்தியம்", "தாளம்" (ரிதம்) என்று நாம் பொதுவாக கூறினாலும் "லயம்" என்பதற்கு ஆழ்ந்த பொருள் உள்ளது. "லயம்" என்பதற்கு "இணைதல்" என்பதையும் தாண்டி "ஒன்றுடன் கலத்தல்", "லயித்துப் போதல்" என்னும் பொருள் உள்ளது. "To Dissolve", "To Merge" என்பதைப் போல். பாடலுடன், இசையுடன் ஒன்றான ஒன்று "லயம்".
"தாளம்" என்பதன் பொருள் "கைதட்டல்" என்பதாகும். தாளம் என்ற சொல் - 'தாண்டவம்' (சிவபெருமானின் நடனம்) 'லயசம்' (பார்வதியின் நடனம்) என்ற இரண்டு வார்த்தைகள் கொண்டு உருவானது. தாளத்திற்கு இரண்டு கைகள் வேண்டும் என்கிற பொருளை உணர்த்துவதாக உள்ளது.
இசைக்கு "லயம்" என்பது ஒரு கண்ணென்றால் மற்றொன்று "ஷ்ருதி". "ஷ்ருதியும்" "லயமும்" சேர்ந்ததே இசை! இவ்விரண்டும் இயற்கையிலேயே உள்ளது. "ஷ்ருதி மாதா", "லயப் பிதா" என்பதைக் கேட்டிருக்கிறோம்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் "சஹானா" தொடரின் டைட்டில் இசையில் வரும் வரிகள் இக்கருத்தை நன்கு விளக்கும்: "ஒவ்வொரு அசைவிலும் தாளம் உண்டு; ஒவ்வொரு நினைவிலும் ராகம் உண்டு" என்ற வரி.
அப்போது "ஸ்வரங்களையும்", "தாளங்களையும்" எப்படிக் கூறுவது? அவற்றை "குரு" எனலாம். அவற்றைக் கொண்டு "தெய்வத்தை" (Bliss) அடையும் காரணத்தினால்.
சப்த ஸ்வரங்கள் (7) என்பதைப் போல், தாளங்களின் எண்ணிக்கையும் ஏழாகும். இவை 'சூலதி சப்த தாளம்' என்று அழைக்கப்படும். அவை:
துருவ தாளம் (IOII)
மட்டிய தாளம் (IOI)
அட தாளம் (IIOO)
த்ருபுட தாளம் (IOO)
ஜம்ப தாளம் (IUO)
ரூபக தாளம் (OI)
ஏக தாளம் (I)
O,U,I ஆகியவ அங்கம்(கள்). இவை த்ருதம், அனுத்ருதம், லகு ஆகும். இதில் 'லகு' என்பது 'தட்டி விரல் எண்ணுவ'தாகும். இந்த விரல் எண்ணிக்கையே தாளத்தின் நீளத்தை நிர்ணைக்கும். லகு'வின் எண்ணிக்கையைச் சொல்வது 'ஜாதி'கள் ஆகும். மொத்தம் ஐந்து ஜாதிகள்:
திஸ்ரம் (3)
சதுஸ்ரம் (4)
கண்டம் (5)
மிஸ்ரம் (7)
சங்கீரணம் (9)
7 தாளங்களும், 5 ஜாதிகளும் சேர்ந்துதான் மொத்தம் (7x5=) 35 தாளங்களை உருவாக்குகின்றன. உதாரணமாக 'சதுஸ்ர ஜாதி த்ருபுட தாளத்தை' ஆதி தாளம் என்கிறோம்.
தமிழ்த் திரைப்பாடல்களில் 98 சதவிகிதம் ஆதி தாளத்தில் அமைந்தவைதான். எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள். மாலை சூடும் மணநாள், மௌனமே பார்வையால், சந்ரோதயம் ஒரு பெண்ணானதோ, அழகுக்கும் மலருக்கும், நெஞ்சம் மறப்பதில்லை, ஆண்டவன் படச்சான் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
பொதுவாக 'ஆதி' தாளம் என்றாலும், அதில் நிறைய வேறுபாடுகளைக் காணலாம். காலப்பெருமாணம், எடுக்கும் இடம் என்று. மேற்கூறிய எடுத்துக்காட்டுகளிலேயே மாலை சூடும் மணநாள், மௌனமே பார்வையால் - அழுத்தி வாசித்தது என்பதைப் போல், மெதுவான காலம். அழகுக்கும் மலருக்கும், ஆண்டவன் படச்சான், எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை - இவை ஒருவகை காலம்.
'எடுப்பு' என்பதும் ஒரு பாடலில் முக்கியமான ஒன்று. 'மாத்திரை' என்பது தாளத்தின் ஒரு 'சொல்'. மாத்திரைகள் தள்ளப்படாமல் பாடல் துவங்குவதை 'சமத்திலிருந்து' எடுப்பது என்று கூறுவார்கள். 'சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ', 'தானே தானே தன்னான நான்னா', 'அவளுக்கென்ன' சமத்திலிருந்து எடுக்கப்பட்டவை. 'சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு' ஒரு மாத்திரை தள்ளியும், 'உன்னை ஒன்று கேட்பேன்' இரண்டு மாத்திரைகளும் தள்ளப்பட்டவை. 'உனக்கென்ன மேலே நின்றாய்', 'மாதவிப் பொன் மயிலாள்' மூன்று மாத்திரைகள் தள்ளி எடுக்கப் படுவது. (பல எடுத்துக்காட்டுகள் உள்ளன, பெயருக்கு ஒன்றிரண்டு பாடல்களைக் குறிப்பிடுகிறேன்) நான்கு மாத்திரைகள் தள்ளி எடுப்பதில் திரைப்பாடல்கள் ஏதும் இல்லை. 'பஞ்ச ரத்ன' கீர்த்தனைகளில் ஒன்றான 'எந்தரோ மகானு' ஒரு எடுத்துக்காட்டு.
ஆதி தளத்தினுள்ளும் பல நடைகள் உள்ளன. எவ்வளவு மாத்திரைகளைத் தாளம் கொண்டுள்ளது என்பதை வைத்தே என்ன நடை என்பது அமையும்.
உதாரணமாக, மேற்கூறிய பாடல்கள் அனைத்தும் நான்கு நான்காக வருவதால் 'சதுஸ்ர நடை' ஆகும். இதுவே மூன்றாக வருவது 'திஸ்ர நடை' ஆகும். திரைப்பாடல்களில் பலவகையான 'திஸ்ரத்தில்' பாடல்கள் உள்ளன.
இந்த பியானோ தொடரில் பல பாடல்கள் த்ஸ்ரத்தில் அமைந்தது. 'என்னைத் தெரியுமா', 'காற்று வந்தால் த்லை சாயும்', 'மனிதன் என்பவன்', 'வண்ணக்கிளி', 'தைரியமாகச் சொல் நீ', 'அதோ அந்த பறவை போல', 'ஓ லிட்டில் ஃப்ளவர்' என்று மெல்லிசை மன்னர் கைவண்ணத்தில் பல பாடல்கள் திஸ்ரம்-பியானோவில் உள்ளன.
திஸ்ரத்திற்கென ஒரு தனி அழகு உள்ளது. வகைகள் (Variety) இதற்கு அதிகம். 'Waltz' எனப்படும் இசை வகையும் திஸ்ரம் தான். 'என்னைத் தொட்டு சென்றன', 'தமிழுக்கும் அமுதென்று பேர்' பாடலின் இடையிசை, 'நாளை இந்த வேளை பார்த்து', 'பொன்னெழில் பூத்தது' அனைத்தும் Waltz நடை. (நம் தளத்தில் ராம்.ராமகிருஷ்ணன் அவர்களின் அருமையான Waltz ஆய்வு இங்கு குறிப்பிடத்தக்கது)
பல கிராமியப் பாடல்களுக்கு இயற்கையிலேயே திஸ்ரம் அமைந்திருக்கும். 'கட்டோடு குழல் ஆட', 'இது மார்கழி மாதம்', 'ஆனி முத்து வாங்கி வந்தேன்', 'தண்ணிலவு தேனிரைக்க' என்று பல பாடல்களை உதாரணமாகக் கூறலாம். பல தமிழ்க் கூத்துப் பாடல்கள், டப்பாங்குத்துப் பாடல்கள், இப்போது 'Hero Entry' குத்துப் பாடல்கள் அநேகமாக திஸ்ரம் தான்.
தெற்கிந்திய இசையில் மூன்று காலங்கள் (Speed) உள்ளது. அவை:
1) சவுக்க காலம் (அல்லது) கீழ்க்காலம்
2) மத்திம காலம்
3) துரித காலம் (அல்லது) மேல்காலம்
திஸ்ர நடையை மேல்காலமாக வாசித்தால் ஆறாக (6) வரும். அதிலும் மெல்லிசை மன்னர் பாடல்களில் எடுத்துக்காட்டு உள்ளன. 'என்னங்க சொல்லுங்க', 'விஸ்வநாதன் வேலை வேண்டும்', 'வரவேண்டும் ஒரு பொழுது' முன்னிசை, 'சக்கபோடு போடு ராஜா' அனைத்தும் திஸ்ர மேல்காலங்கள்.
திஸ்ர நடை(3) தாண்டி அடுத்தது 'கண்ட நடை' (5). இது கொஞ்சம் உணர்ச்சி வசமான நடை . "ருத்ர தாண்டவம்" என்பதற்கு பொருத்தமான நடை. தமிழ்த் திரையில் "அழகு மலராட", "பாபா" படத்தில் "சக்தி கொடு" பாடலில் வரும் "உப்பிட்ட தமிழ் மண்ணை" வரி, படையப்பாவில் நடிகர் திலகம் உணர்ச்சிப் பூர்வமாக "இந்த ஆறுபடையப்பன் மீது ஆணையாகச் சொல்லு, உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதமா" என்று கூறும் போது பின்னணியில் வரும் நாதஸ்வர இசை அனைத்தும் 'கண்ட நடை'யே. மெல்லிசை மன்னர் திரையில் கண்ட நடையில் அமைத்ததில்லை. தனிப்பாடலாக 'பாடிடுக பாடிடுக' பாடல் கண்ட நடையில் அமைத்துள்ளார்.
உணர்ச்சிப் பெருக்கையும் தாண்டி எதார்த்தமான சூழலில் இந்த நடையை அமைப்பதென்பது ஒரு சிறப்புதான். அவ்வகையில் சில பாடல்கள் இந்நடையில் 'Creative Applications' ஆக உள்ளது. "கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே", "மழைவருது மழைவருது குடை கொண்டு வா", "அன்பென்ற மழையிலே" (மின்சாரக் கனவு) - அனைத்தும் இந்நடையின் சிறந்த ப்ரயோகங்கள்.
வெளிநாட்டு பாப், ராப் இசை அநேகமாக ஆதிதாளத்தில் தான் அமைந்திருக்கும். பியானோ பாடல்களை எடுத்துக்காட்டுக்களாகக் கூறவேண்டும் என்றால் - "Rihanna" வின் "Unfaithful" மற்றும் "Timba Land" இன் "Apologize" போன்றவை சமீபத்திய சிறந்த பியானோ பாடல்கள். வெளி நாட்டவர்களில் பியானோ கலைஞர்களில் என்றென்றும் முதன்மையானதாகத் திகழ்பவர் "Yanni".
'மிஸ்ர நடை' (7) என்பது கொஞ்சம் Advanced Level. ஆனால் இதில் இரண்டு பாடல்கள் அநாயாசமாக உருவக்கப்பட்டுள்ளன. 'Yanni' நான் மிகவும் போற்றும் பியானோ கலைஞர். அருமையான பியானோ ஆர்கெஸ்ட்ரேஷன் பாடல்களைத் தன்னுடைய பாணியில் தந்து அசத்தியவர். அவர் இசையில் வந்த "Santorini" என்ற பாடல் மிஸ்ர நடையாகும். எப்படி இந்த நடையில் இவர் பரிச்சயம் பெற்று இப்படி ஒரு அழகான பாடலைத் தந்தார் என்பது ஒரு புதிராகத் தான் உள்ளது. மற்றொரு பாடல் ஹாரிஸ் ஜெயராஜின் முதல் படமான 'மின்னலே' யில் "இரு விழி உனது" என்ற பாடல். இரண்டுமே 'மிஸ்ர நடையின்' அருமையான ப்ரயோகங்கள்!
சங்கீரண நடையில்(9) இதுவரை நான் திரையிசையில் ஏதும் கேட்டதில்லை. எந்த காலத்திலாவது, எந்த படத்திலாவது ஒரு இடத்திலாவது இந்நடை வந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். தேடுதலைத் தொடர்வோம்!
அடுத்து 'மிஸ்ர சாபு' தாத்தைப் பார்ப்போம். ஆதி தாளத்தை அடுத்து திரையில் பிரபலமான தாளம், 'மிஸ்ர சாபு' தாளம். 3 1/2 அட்சரம், அதாவது, (3 1/2 x 4=) 14 மாத்திரைகளைக் கொண்ட தாளம். கர்ணனில் 'மஞ்சள் பூசி' சிறந்த எடுத்துக் காட்டு. 'சேதி கேட்டோ சேதி கேட்டோ' என்ற மலையாளப் பாடல், 'கங்கைக் கரை மன்னனடி' - மிஸ்ரம். ரகுமானின் "பாம்பே ட்ரீம்ஸ்" வெளியீட்டில் "Are You Sure You Want to be Famous?" மிகச் சிறந்த மிஸ்ரப் பிரயோகம். "பார்த்தாலே பரவசம்" படத்தில் "அன்பே சுகமா" பாடல் அருமையான பியானோ-மிஸ்ரம். (குறிப்பாக இடையிசையில் பியானோ மிக அழகு; ரகுமானின் பியானோ பாடல்களுக்கு ஒரு தனி அழகு இருக்கத்தான் செய்கிறது. "என்னுயிர்த்தோழி நீ" முன்னிசை, அந்திமந்தாரை படத்தில் "வனஜாக்ஷி" கீர்த்தனைக்கு பின்னணி பியானோ அனைத்தும் அருமையான பியானோ முயற்சிகள்)
ஏனோ மிஸ்ரத்திற்கு தனி அழகும்,ஈர்ப்பும் இருக்கிறது. Probably, அதில் மூன்றும் நாலும் (3+4=7)இணைந்து இருப்பதாலோ என்னவோ. இந்த் ஈர்ப்பை அப்படியே உள்வாங்கி, மிஸ்ரத்தில் ஒரு தலை சிறந்த பாடலை அளித்தவர் மெல்லிசை மன்னர். "தேரோட்டம்" பாடலில். பாடலின் காலப்பெருமாணம், சங்கதிகள், இருதியில் தபேலா நடை முத்தாய்ப்பாக இரண்டாம் இடையிசையில் விஸ்வேஷ்வரன் அவர்களின் சந்தூர் - எல்லாம் பாடலுக்கு ஒரு தனி அந்தஸ்த்தை ஏற்படுத்திவிடுகிறது. நம் களத்தில் ஒருவர் கூறியது போல்-இப்பாடல் ஒரு "Atrocious மிஸ்ரம்!"
மிகச் சிறிய அளவில் ப்ரயோகப் படுத்தபட்ட தாளங்கள் 'ரூபக சாபு', 'கண்ட சாபு' தாளங்கள். 'பூமாலை வாங்கி வந்தான்' (சிந்து பைரவி) ரூபக சாபு. "குணா" படத்தின் "பார்த்தவிழி பார்த்தபடி" கண்ட சாபு தாளம். (இவ்விரண்டு பாடல்கலைத் தவிற ரூபக, கண்ட சாபு தாளங்களில் வேறு திரைப் பாடல்களை நானறியேன்)
கர்னாடக/இந்துஸ்தானி இசையைத் தாண்டி திரையிசை, ஆங்கில இசை, தனி இசை அனைத்திலும் மிக அரிய (Complex) தாள நடையாக நான் கருதுவது இரண்டு இடங்களில் உள்ளது. அதன் தாள நடை "தகிட தகிட தகதிமி" அதாவது "3+3+2+2" என்கிறவாறு வரும். இதற்கு சரியான பெயர் உள்ளதா எனத் தெரியவில்லை. கூட்டினால் 10 வருவதால் 'கண்ட-மேல்காலம்' என்று கூறிவிடவும் இயலாது. ஆனால் அதன் அமைப்பைப் பார்க்கும் போது "திஸ்ர ஜாதி அட தாள நடை" என்று வேண்டுமானால் கூறலாம்.
இந்த தாள நடை இரண்டு "Theme"' இசையில் உள்ளது. "Mission Impossible Theme" இசை முதலாவது. இப்படி ஒரு நடையைத் தேர்ந்தெடுத்து அதை உலகப் பிரபலம் அடையச் செய்தது உண்மையில் சாதனைதான்! இரண்டாவது ரகுமான் இசையில் "World Space Radio Theme" இசை. "கர்நாடக காபி" (ஆரோகணம்: கரகரப்ரியா; அவரோகணம்: கானடா) ராகத்தில் அமைக்கப்பட்ட அட்டகாசமான "ஒரு நிமிட" பியானோ இசை!
பல தாளங்கள் வழக்கத்தில் இல்லாமலும் இருக்கின்றன. அவற்றை "மார்க்க தாளங்கள்" என்பார்கள். ப்ளுதம், சர்ப்பிணி, குரு, காகாபாதம் போன்றவை இந்த அடிப்படையில் வரும்.
மெல்லிசை மன்னர் பல இந்துஸ்தானி தாள வகைகளிளும் பாடல்கள் அமைத்திருக்கிறார். இந்துஸ்தானிக்கும் கர்னாடக இசையின் தாளத்திற்கும் ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. இந்துஸ்தானி "Arithmetic Progression" கர்னாடக இசை "Geometric Progression". இந்துஸ்தானி தாள இசை மெதுவாக ஆரம்பித்து அதன் காலம் கூடும், கர்னாடக இசையில் முதலில் 2 என்றால் அடுத்தது 4. அடுத்தது 8, 16 என்று போகும். இரண்டிலும் அதற்கான அழகு உள்ளது.
மெல்லிசை மன்னரின் பரிசோதனை முயற்சி உண்மையில் வியப்பூட்டுவதாகும். நடைகளை மிக அழகாக, பட்டாடை நெய்வதைப் போல், அலுங்காமல் மாற்றுவார். உதாரணமாக "என்னங்க சொல்லுங்க" பாடல் திஸ்ர-மேல் காலத்தில் துவங்கினாலும் சரணம் அழகாக சதுஸ்ரத்திற்கு மாறும். "சவாலே சமாளி" டைட்டில் இசை, "ஹே...நாடோடி" (அன்பே வா) பாடல்களில் திஸ்ரமும் சதுஸ்ரமும் மாறி மாறி விளையாடுவது கொள்ளை அழகு. "வரவேண்டும் ஒரு பொழுது" முன்னிசையில் "திஸ்ர-மேல்" காலத்திலிருந்து "திஸ்ர-மத்திம" காலத்திற்கு வருவது அசாத்திய கற்பனை!
"மெல்லிசை மன்னர் புது ராகங்கள், தாளங்கள் அமைக்க வேண்டும்" என்று நினைத்திருந்தால் பல "விஸ்வ-லகரி"கள் உருவாகி இருக்கும். அனால் அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல் தன் கண் முன் இருக்கும் பாடலுக்கும் காட்சிக்கும் சிறந்த இசை அளிக்க வேண்டும் என்கிற ஒரு "கண்மூடித்தனமான" காதலை, ஆசையை, ஈர்ப்பை இசையிடம் கொண்டிருந்ததால் தான் இன்னமும் அவரது படைப்பு சிறப்பானதாக உள்ளது.
அவர் திரையில் திகழ்ந்த கால கட்டங்களைப் பார்க்கும் போதும், அவர் இசையில், மெலடியில், தாளங்களில், ஆர்கெஸ்ட்ரேஷனில் செய்த சாதனைகளைப் பார்க்கும் போதும், அவரது தொலைநோக்கை உணர்த்த ஒன்று தோன்றுகிறது:
மானுடம் ஒரு வேளைச் சாப்பாடிற்கு வேட்டையாடச் செல்லும் காலகட்டங்களில் மெல்லிசை மன்னர் ஒவ்வொறு நாளையும் தைத் திருநாளாக்கி சர்க்கரைப் பொங்கலிட்டு அதை எறும்புகளுக்கும் பறவைகக்கும் அளித்து மகிழ்ந்தவர்! இன்னும் ஒரு பானை நிறைய பொங்கல் பருகப்படாமல் இருக்கிறது என்பது என் தாழ்மையான எண்ணம்!
(தொடரும்) _________________ Ramkumar |
|
Back to top |
|
 |
madhuraman Devotee
Joined: 11 Jun 2007 Posts: 1226 Location: navimumbai
|
Posted: Mon Apr 20, 2009 6:46 am Post subject: Articles &Writings by Fans - |
|
|
Dear Mr.Ram,
You have brought out yet another 'beauty'.This time on 'layam' an integral element that touches the listeners' soul. With no knowledge on the fine issues involved, all I can feel is -something great is being explained. I am simultaneously sad that I am technically impoverished in knowledge and still happy that God has given me some semblance of understanding of the language.
Any reader's inability can not in any manner rob the author's eloquence on the subject. Certainly these interpretaions of yours are items that bridge the mental gaps that people suffer from in not being able to enjoy the different forms /genres of music. There is enough material in your write-up that looks up a concept in great objectivity. Any appreciative adjective of mine on your piece would just be a pale compliment unable to stand in justification of the attempt.
So, I choose to say -May GOD bless you.
What I feel is , we need a thread exclusive for Technical domains to avoid a mixing of varied thoughts under the broad head 'Articles by fans'.
I hope the call is not mistimed.
Warm regards Prof.K.Raman Madurai. _________________ Prof. K. Raman
Mumbai |
|
Back to top |
|
 |
Ram Devotee
Joined: 23 Oct 2006 Posts: 1160
|
Posted: Mon Apr 20, 2009 7:46 am Post subject: Re: Articles &Writings by Fans - |
|
|
Dear Professor,
Thanks much for your appreciation in the response. I was aware before starting to write this piece that this is going to be a step 'deeper'. But I seriously felt that somehow I needed to get this topic covered in this series-due to its importance in Music in general & Tamil Film's in particular. Also the very nature of the topic allows & necessitates one for an in-depth analysis. I tried to deleniate as much as possible to make sure anyone without a background on this topic, can do a little research over internet and get familiar with some of the terms. I hope succeeded atleast a little in that attempt. And your suggestionto create a "technical section" makes a lot of sense and thanks for sharing the thought. I'll soon start working on creating that section.
Regards. _________________ Ramkumar |
|
Back to top |
|
 |
parthavi Philiac

Joined: 15 Jan 2007 Posts: 704 Location: Chennai
|
Posted: Mon Apr 20, 2009 10:08 am Post subject: |
|
|
Dear Ram,
I cannot add anything beyond what the scholarly professor has so crisply observed. Reading your article made me understand the meaning of the word "awe" in a deeper dimension.
I am astonished at the versatality of your knowledge and range of references. In addition to your deep knowledge of various genres of music, you are also updated on Tamil film music including the title music of TV serials!
I would say that the common objective of all of us in bringing to limelight the uniqueness and matchless greatness of MSV is immensely strengthened by having such connoisseurs like you in our group. Analysis by people like you definitely brings in high credibility and authenticity to the views of the group.
May your efforts continue for ever.
I have the advantage of age to wish you and bless you for your efforts. _________________ P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/ |
|
Back to top |
|
 |
Vatsan The Fervent
Joined: 20 Jan 2007 Posts: 352
|
Posted: Mon Apr 20, 2009 3:37 pm Post subject: Resp |
|
|
Ram, that was a brilliant article.
As one of the forumers had remarked, when a song is set to kaNda nadai, the melody is often staccato and sounds abruptly "broken". We have quite a few songs in TFM set to kaNda nadai and sound broken into pieces as the nadai seems to be demanding !!!! .......all those do not happen when MSV sets a tune to kaNda nadai as in 'nal vAzhvu nAm kANa varavENdum Sridevi" from veettukku veedu set to chaste Ananda Bhairavi by MSV. There is not one point where the melody is broken or made to sound like several pieces "occuring" together within 3.5 minutes and therefore being called a melody MSV managed to carve out a niche here as well.
Tumba Sekhar was telling us that 'sonnathu neethAnA' is set to a 11 beat cycle !!!! |
|
Back to top |
|
 |
Ram Devotee
Joined: 23 Oct 2006 Posts: 1160
|
Posted: Tue Apr 21, 2009 7:56 pm Post subject: |
|
|
Dear Parthavi (& Professor)
Thanks for the best wishes from you.
To be honest, this article is just an introduction to 'Layam' & is more a statistical collection of information. We can go the deepest levels possible in each of the 'ThaaLam' & 'Nadai' & try to bring out beauties in them, how it can be presented, how it has been presented by Classical Musicians etc. There is no end to this journey & that is the greatness of Indian Music! "No Limits"!
Dear Vatsan, I've not had a chance to listen to the 'Kanda Nadai' number from Veettukku Veedu. I think I need to listen to that soon. Thats an interesting news on "Sonnathu Neethaana". Will check that out. _________________ Ramkumar |
|
Back to top |
|
 |
Ram Devotee
Joined: 23 Oct 2006 Posts: 1160
|
Posted: Wed Apr 22, 2009 8:31 pm Post subject: |
|
|
Dear Malathi Ma'm,
I'm glad you liked the article. And more happy to know that you were learning music.
Seriously I feel you can continue Music (pbly along with 'Kutti' Lakshmi) Just think abt it!
Regards. _________________ Ramkumar |
|
Back to top |
|
 |
N Y MURALI Maniac
Joined: 16 Nov 2008 Posts: 920 Location: CHENNAI
|
Posted: Fri Apr 24, 2009 8:41 pm Post subject: |
|
|
Dear Ram,
This is indeed a great article. You have to keep writing more and more as many of the posting do not cover this facet of MSV. Next time when you come to India you must spend 1/2 day with us to personally explain this aspect
Regards,
N Y MURALI |
|
Back to top |
|
 |
Ram Devotee
Joined: 23 Oct 2006 Posts: 1160
|
Posted: Fri Apr 24, 2009 9:51 pm Post subject: |
|
|
Dear Murali,
Sure, I'll write more on layam - sorry MSV's layam. MSV's sense of rhythm is absolutely stunning - both technically & aesthitically. What I wrote was just like a pinch of salt!
And definitely I'll spend time with you personally and thanks for the offer. And remember first thing in that occasion is kutti Lakshmi's keyboard & only then our discussion on whatsoever. I'm waiting to hear her play live! _________________ Ramkumar |
|
Back to top |
|
 |
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|