"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

KAADHAL KAADHAL ENDRU PESA (Utharavindri ulle va) by Saradha

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Sat Mar 03, 2007 7:37 pm    Post subject: KAADHAL KAADHAL ENDRU PESA (Utharavindri ulle va) by Saradha Reply with quote

"காதல் காதல் என்று பேச கண்னன் வந்தானோ"
(உத்தரவின்றி உள்ளே வா)


ஸ்ரீதர் கதை வசனம் எழுதி, தனது 'சித்ராலயா' சார்பில் தயாரித்த படம். இயக்கியவர் N.C.சக்ரவர்த்தி. கவியரசரின் முத்து முத்தான பாடல்களுக்கு மெல்லிசை மன்னரின் அருமையான இசை. பாடல்கள் அத்தனையும் சூப்பரோ சூப்பர்.

'உத்தரவின்றி உள்ளே வா'
'தேனாற்றங்கரையினிலே'
'மாதமோ ஆவணி.. மங்கையோ மாங்கனி'
'உன்னைத்தொடுவது இனியது'


போன்ற அருமையான பாடல்களுக்கு நடுவில் இந்த அற்புதமான, அமைதியான பாடல். லேசான இந்துஸ்தானி சாயலைத் தழுவிய இப்பாடல், தர்மாவதி ராகத்தில் அமைக்கப்பட்டது. (மெல்லிசை மன்னர் வேண்டுமென்றே இந்த ராகத்தில் அமைத்தாரா, அல்லது தற்செயலாக அமைந்ததா தெரியாது. காரணம், பாடல்களைக் குறிப்பிட்ட ராக எல்லைக்குள் கட்டுப்படுத்துவது அவருக்குப் பிடிக்காத ஒன்று).

'நைட் எஃபெக்டில்' படமாக்கப்பட்ட பாடல் இது. ரவிச்சந்திரனும் காஞ்சனாவும் நடித்திருப்பார்கள். ரவிக்கு வெறும் HUMMING மட்டுமே. காஞ்சனாவுக்குத்தான் முழுப்பாடலும். ஆகவே சந்தேகமின்றி சுசீலாவின் முழு ஆதிக்கம்தான்.

பாடல் துவங்கும்போது, சிதார் மற்றும் பாங்கோஸ் இணைந்து ஒலிக்க, கூடவே வயலின் தொடர, அதைத்தொடர்ந்து எம்.எல்.ஸ்ரீகாந்த்தின் அழகான HUMMING

ம்...ம்...ம்...ம்..ம்ம்...ம்ம்ம்.
ஆக...கா...ஆ...ஆ...ஆ...
(முடிவில் அழகிய ஃப்ளூட் பிட்)

தொடர்ந்து சுசீலாவின் இனிய குரலில்

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
மன்னன் வந்தானோ...


தாளத்துக்கு தபேலா, பாங்கோஸ், மிருதங்கன் என்று எதுவும் இல்லாமல், வெறுமனே டிரம்மில் பிரஷ் கொண்டு ஸ்மூத் டச்....

தொடர்ந்து இடையிசையில் ஃப்ளுட்.. கூடவே மோர்ஸிங்.... தொடர்ந்து வயலினில் நீண்ட பயணித்து கிடாரின் சின்ன பிட்டுடன் இடையிசை முடிய..

மீண்டும் பிரஷ் டச்சுடன் பல்லவி...

கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம்
கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம்
நீராட நீ செல்லும் யமுனா நதி
நீராட நீ செல்லும் யமுனா நதி

(உடனே தாளக்கட்டில் மிருதங்கம் ஒலிக்க)
மங்கல மங்கையர் மேனியில் தங்கிடும்
மஞ்சள் நதியோ குங்கும நதியோ

(ஸ்ரீகாந்த் HUMMING)

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
மன்னன் வந்தானோ...


(மீண்டும் ஸ்ரீகாந்த்..HUMMING தொடர்ந்து அதையே ரிபீட் செய்யும் வயலின்..

காணாத உறவோடு நேர் வந்தது
கண்ணா உன் அலங்கார தேர் வந்தது
வாழாத பெண்ணொன்று வழி கண்டது
வாழாத பெண்ணொன்று வழி கண்டது

(இதுவரை பிரஷ் டச், பின் சடனாக மிருதங்கத்தில் அடுத்த வரி)
வாடிய பூவென மேகலையாடிட
மன்னா வருக மாலை தருக


ஸ்ரீகாந்த் HUMMINGகில் சரணம் முடிய, பல்லவி

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
மன்னன் வந்தானோ...


இறுதியில் இருவரும் அழகாக HUMMING செய்ய, கவிதைநயமான முடிவு.....

இரவில் தனியாக படுத்திருக்கும்போது, ‘நைட்லாம்ப்’ வெளிச்சத்தில் தலைமாட்டில் இந்தப்பாடலை ஸ்டீரியோவில் சன்னமாக ஒலிக்க விட்டு, அரைக்க்ண்ணை மூடிக்கொண்டே இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள். வேறு உலகத்தில் இருப்பீர்கள்.

மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் உங்களை அப்படி ஆக்கி விடும்..

பாடலைக்கேளுங்கள் :
http://www.palanikumar.com/psusheela/148%20-%20PS%20-%20Uthiravindri%20Ulle%20Vaa%20-%20kaadhal%20kaadhal%20endru%20%20pesa.mp3
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
tvsankar



Joined: 24 Jan 2007
Posts: 229

PostPosted: Sun Mar 04, 2007 12:24 am    Post subject: Reply with quote

Dear Saradha,
Thanks for your writing. Its a beautiful song by MSV.Nice modulation.

Ungal wriitings padalai ketta oru feelings ai koduthadhu. Enanku migavum piditha padal varisaiyil eppodhum idam petru irukum indha paadal.

padalai ketka enaku link work agavillai.

with Love,
Usha Sankar.
Back to top
View user's profile Send private message
P. Sankar



Joined: 03 Feb 2007
Posts: 142

PostPosted: Sun Mar 04, 2007 7:28 pm    Post subject: Reply with quote

Dear Sharadha madam,

Undoubtedly this is one of the best of MSV-Susheela combinations. Great composition. No words to express the beauty of this song.. Our sincere thanks for you madam for bringing out lots of such collections. Manathai varudum mellisai. The song was picturised in a very beautiful manner - emotions well portayed by Kanchana.

P. Sankar.
Back to top
View user's profile Send private message Send e-mail
Ramesh.P



Joined: 07 Dec 2006
Posts: 177
Location: Chennai

PostPosted: Mon Mar 05, 2007 12:02 pm    Post subject: Reply with quote

Saradhaa

All time favourite song for me. Amazing orchestra .

காணாத உறவோடு நேர் வந்தது
கண்ணா உன் அலங்கார தேர் வந்தது
வாழாத பெண்ணொன்று வழி கண்டது
வாழாத பெண்ணொன்று வழி கண்டது

before that beautiful but unexpected instrument play from our MASTER(I think sitar). adds another glory to this song.

regards
ramesh
Back to top
View user's profile Send private message Send e-mail Yahoo Messenger
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Mon Mar 05, 2007 8:48 pm    Post subject: Reply with quote

Saradhaji

Superb Very Happy

Are you aware that this song is from a raga called Dharmavathi ?

One of the very best of PS.

Beautiful ragam . beautiful tune & nice orchestration by Mellisai Mannar .

But for a 100 % comedy entertainer, wonder how he composed such a classy number ?!
Back to top
View user's profile Send private message Send e-mail
irenehastings
Guest





PostPosted: Tue Mar 06, 2007 7:40 pm    Post subject: Reply with quote

P. Sankar wrote:
Dear Sharadha madam,

Undoubtedly this is one of the best of MSV-Susheela combinations. Great composition. No words to express the beauty of this song.. Our sincere thanks for you madam for bringing out lots of such collections. Manathai varudum mellisai. The song was picturised in a very beautiful manner - emotions well portayed by Kanchana.

P. Sankar.


i have no other words, except second this statement.

(appadiye vazhi mozhigiren)
Back to top
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Sat Mar 17, 2007 1:42 pm    Post subject: Reply with quote

tvsankar wrote:
Dear Saradha,
Thanks for your writing. Its a beautiful song by MSV.Nice modulation.

Ungal wriitings padalai ketta oru feelings ai koduthadhu. Enanku migavum piditha padal varisaiyil eppodhum idam petru irukum indha paadal.

padalai ketka enaku link work agavillai.

with Love,
Usha Sankar.


டியர் உஷா அக்கா...

அந்த இணைப்பில் பாடல் கிடைக்கவில்லை யென்றால்
கீழ்க்கண்ட இணைப்பில் பாடலைக்கேளுங்கள்.

இந்த இணப்பு கண்டிப்பாக கிடைக்கும்.

http://psusheela.org/tam/audio.php?offset=270&ord=song

(பாடல் எண் :272) ஆடியோ என்ற பகுதியில் கிளிக் செய்யவும்.

HEAD-PONE மாட்டிக்கொண்டு கேட்டால், திவ்யமாக இருக்கும். சின்ன சின்ன இசைச் சிணுங்கலைக்கூட துல்லியமாக கேட்க முடியும்.

இந்த அற்புதமான, மற்றும் அபூர்வமான பாடலை எல்லோரும் கேட்டு மகிழ வேண்டும் என்பதே என் விருப்பம்.
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sat Mar 17, 2007 3:33 pm    Post subject: Reply with quote

Vanakkam Saradhaji

A suggestion to everyone - when we post a song, shall we give the audio / video links also for everyone to listen / watch and enjoy ? Very Happy
Back to top
View user's profile Send private message Send e-mail
irenehastings
Guest





PostPosted: Sun Mar 18, 2007 7:14 pm    Post subject: Reply with quote

s. balaji sir

it is a very good suggestion.

saradha madam

thanks for your new link. i can hear the song very clearly and hearing it by multiple times. everytime it looks like a fresh one.

thanks every one who brings out 'wonders of msv sir' to the public.
Back to top
Muthukrishnan



Joined: 27 Feb 2007
Posts: 17
Location: tirunelveli

PostPosted: Thu Mar 29, 2007 7:48 am    Post subject: MSV_PS_REQUEST FOR ANALYSIS Reply with quote

Dear sharada madam,
A superb write-up on kadal kadal song,one of mine and my daughter abhinayas favourite song. you have done an in-depth analysis of the song -thai mozhi thamizhil athai padikkumpozhudhu Then vandhu payudhu kadhinile.There are many MSV _PS combo songs , to name a few,
1.VASANTHATHIL OR NAAL-MONDRU DHEIVANGAL.
2.ALAYAMAGUM -SUMADHI EN SUNDARI>
3.CHITTUKURUVIKKENA KATTUPADU-SAVALE SAMALI.
4.JANAGANIN MAGALAI-ROJAVIN RAJA.
5.CHITHIRAI MADHAM-RAMAN ETHANAI RAMANADI.
And the list goes on and on and on.
Please consider the above songs for your expert analysis in our thaimozhi -thenmozhi THAMIZH.Eagerly waiting.
UDAL MANNUKKU UYIR ANNANNUKKU.
Muthukrishnan [MBM].
_________________
"long live MELLISAI MANNAR"
UMUA , MBM.
Back to top
View user's profile Send private message Send e-mail Visit poster's website
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group