"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Oru Muththaaraththil Muppadhu Muththu - Sorgam

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Sat Feb 14, 2009 12:47 pm    Post subject: Lyrics - Oru Muththaaraththil Muppadhu Muththu - Sorgam Reply with quote

படம்: சொர்க்கம்
பாடியவர்: பீ. சுசீலா
இசை: மெல்லிசை மன்னர்


ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்க கோடுகள் போட்டு வைத்திருந்தேன்
என் கண்கள் அதன் காவல், என் நெஞ்சம் அதன் மஞ்சம்
(ஒரு முத்தாரத்தில்)

அந்த மாலை இந்த பெண்ணின் சொந்தமானதே
அந்தி மாலை நேரம் பார்த்து ஆடுகின்றதே
பொன்னரங்கம் தன்னில் வந்து
என்னை மட்டும் பாட சொன்னதென்ன
கண்ணரங்கம் மின்ன மின்ன காதல் கொண்டதோ
அந்தரங்கம் கண்டுகொள்ள அழைத்து வந்ததோ
அந்த கிண்ணம் சொந்தம் இல்லை
என்று இன்று கண்டு கொண்டதென்ன
(ஒரு முத்தாரத்தில்)

நீலவானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே
காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே
பாடல் ஒன்று, ராகம் ஒன்று
தாளம் கொஞ்சம் மாறிவிட்டதென்ன
காலம் என்னும் தேவன் என்னை கேலி செய்கிறான்
கோலம் வேறு கொள்கை வேறு காண சொல்கிறான்
இன்று மட்டும் நாளை இல்லை
என்ற சொல்லில் உண்மை இனி இல்லை
(ஒரு முத்தாரத்தில்)

1970- ஆம் ஆண்டு வெளிவந்த படம் சொர்க்கம். இதில் சிவாஜி கணேசனும், கே.ஆர். விஜயாவும் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சிவாஜி அவர்கள் பெரிய செல்வந்தன் ஆக வேண்டும் என்ற கனவுடனேயே வாழ்பவர். மது அருந்தும் பழக்கத்தில் உள்ள இவர், தன் மனைவியான கே.ஆர். விஜயாவிடம் இனி மது அருந்த மாட்டேன் என்ற நம்பிக்கை கொடுத்து, ஒரு விருந்துக்கு அவரை அழைத்து செல்வார். விருந்தில் கே.ஆர். விஜயா அவர்களை வற்புறுத்தி பாட சொல்லும்போது, அவர் இந்த பாடலை பாடுவார்.

சுசீலா அவர்கள் இந்த பாடலை எவ்வளவு அருமையாக பாடி இருக்கிறார் என்பதை நான் எழுத்தில் உணர வைக்க முடியாது. அதை கேட்டுதான் உணர முடியும். இந்த பாடல் அந்த விருந்தில் முதலில் சந்தோஷமாக பாடுவதாக தொடங்கும். அந்த சந்தோஷத்தை நாம் அப்படியே சுசீலாவின் குரலில் உணர முடியும். சுசீலா ஒரு அழகான ஹம்மிங்கில் இந்த பாடலை தொடங்கி பின் பல்லவியின் முதல் இரு வரிகளை பாடுவார். அதை தொடரும் அந்த புல்லாங்குழலும் சந்தோஷமாக துள்ள, உடன் வயலினும் இணையும். சுசீலா மீண்டும் பல்லவியை தொடங்க, பல்லவியின் ஒவ்வொரு வரியின் முடிவிலும் அந்த புல்லாங்குழல் ஒரு அழகான சந்தோஷமான ராகமாக வரும்.

புல்லாங்குழலுக்கு அடுத்தபடி இந்த பாடலில் trumpet-n இசை மிகவும் அருமையாக இருக்கும். பல்லவி முடிந்தவுடன் drums, trumpet, வயலின், புல்லாங்குழல் என்று மெல்லிசை மன்னர் அந்த விருந்தில் எல்லோரும் அழகாக நடனமாடுவதற்கு ஏற்றார் போல் தன் இசையால் மிக அழகான இசை மேடை அமைத்திருப்பார்.

முதல் சரணம் முடிந்தவுடன் சுசீலா மறுபடியும் பல்லவியின் முதல் இரண்டு வரிகளை பாடி 'போட்டு வைத்திருந்தேன்' என்று முடிப்பதை அளவற்ற சந்தோஷத்தில் கொஞ்சுவதை போல முடித்திருப்பார்.

இந்த பாட்டின் முதல் சரணம் முடிந்தவுடன் கே. ஆர். விஜயா அறியாவண்ணம் சிவாஜி மது அருந்த அந்த இடத்தை விட்டு அகன்று விடுவார். அப்பொழுது பாடிக்கொண்டிருந்த கே.ஆர். விஜயா, தன் கணவரை அருகில் காணாமல் அந்த விருந்து நடக்கும் இடத்தில் தவிப்புடன், கண்கள் கணவரை தேட, துடிக்கும் துடிப்பை மிக துல்லியமாக மெல்லிசை மன்னர் வயலின் இசையில் வடித்திருப்பார். இதை தொடர்ந்து சிவாஜி மது அருந்தி விட்டு, ஒரு நிலையின்றி மெதுவாக நடந்து வருவதை trumpet-l மிக அற்புதமாக இசை அமைத்திருப்பார்.

மெல்லிசை மன்னருக்கு இணையாக கவிஞரின் ஒவ்வொரு வரிகளும் இந்த பாடலில் மிகவும் பிரமாதமாக இருக்கும்.

'அந்தரங்கம் கண்டு கொள்ள அழைத்து வந்ததோ' ..... கணவர் தான் இனிமேல் மது அருந்துவதில்லை என்று சொன்னதற்கு ஏற்றார் போல் நடக்கிறாரே என்ற சந்தோஷம் தெரிகிறது இந்த வரிகளில்.

அதே போல் மது அருந்தியவுடன்
//நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே
காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே// எவ்வளவு அழகாக அவர் மது அருந்தியதை கவிஞர் எழுதி இருக்கிறார். இந்த காட்சியில் சிவாஜி அவர்கள் மது அருந்தி நடந்து வருவதும், அவருடைய கண்கள் மது அருந்தியதால் மெல்ல மெல்ல சிவப்பதும் என்று தன் நடிப்பால் அசத்தியிருப்பார்.

சுசீலா அவர்களும் முதல் சரணத்தில் அத்தனை சந்தோஷத்தை பாடல் வரிகளில் கொண்டு வந்து பின், இரண்டாவது சரணத்தில் அப்படியே சோகத்தை கொட்டிவிடுவார். அதே போல் பாடல் முடியும்பொழுது பல்லவியின் ஒவ்வொரு வரியும், இந்த காட்சிக்கு ஏற்றார் போல் மெல்லிசை மன்னர் புல்லாங்குழலில் இசைக்கும் அந்த மிக சிறிய சோக ராகம் கண்ணீரை வரவழைத்து விடும்.

இந்த பாடலினால் மெல்லிசை மன்னர் தன் இசையாலும், கவிஞர் தன் பாடல் வரிகளாலும், சுசீலா அவர்கள் தன் குரலாலும் சந்தோஷத்தின் சுகத்தையும், சோகத்தின் துக்கத்தையும் ஒரே நேரத்தில் நம் மனதை உணர வைத்து விட்டார்கள்.
Back to top
View user's profile Send private message
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Sun Mar 08, 2009 6:17 pm    Post subject: Reply with quote

Dear Meenakshi,
As usual romba azhagaga oru arumayana paadalai thervu seidhu describe pannirukeenga.

Oru chinna request.
"Chithirai madham pournami neram..." (same combination MSV-PS-Sivaji-KRV).
Intha song enaku migavum piditha ondru. Intha padalin tune and music, guitar, flute ellam ennai rombavum kavarntha ondru.
Antha train sound-a ennama use pannirukar...
Second interlude-la vara flute aaha...
If possible can you please provide the lyrics and analyze the song in your unique style.
Thanks in advance.
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Mon Mar 09, 2009 7:49 am    Post subject: Reply with quote

நிச்சயமாக எழுதுகிறேன் மகேஷ். 'சித்திரை மாதம்' எனக்கும் மிகவும் பிடித்த பாடல். நீங்கள் எழுதி இருப்பது போல் அந்த ரயில் வண்டி சத்தம், புல்லாங்குழல் எல்லாம் நானும் மிகவும் ரசித்து கேட்பேன். இந்த பாடலை தேர்ந்தெடுத்து என்னை எழுத சொன்னதற்கு மிக்க நன்றி.

நீங்கள் புல்லாங்குழல் என்றதும் இந்த படத்தில் டி.எம்.எஸ். மகிழ்ச்சியுடன் பாடுவதாக வரும் 'அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு' என்ற பாடலில் வரும் புல்லாங்குழல் நம் மனதை இவ்வுலகை விட்டு, இன்னிசை உலகுக்கே அழைத்து சென்று விடும். அவ்வளவு அருமை, இனிமை. இந்த பாடல்கள் எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டும்.
Back to top
View user's profile Send private message
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Fri Mar 13, 2009 12:20 am    Post subject: Reply with quote

Dear friends,
In this beautiful song chosen, we are carried by the mood of the song and the scene. This is so effortlessly brought out by the change in the beats employed as well as the pace. The beginning with a combined tabla-dholak, then the brass sections, solo tabla, drums, all the instruments...The lyrics, so beautiful, literally rides on the glorious music of Mellisai Maamannar. To top it all, the acting of Shivaji and KRV, and the contrasting style of dancing on the floor! How the lyrics, music, dance and the scene are seamlessly intertwined and delivered by MM!! Beauty!
Sai Saravanan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group