"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Ennai yaar endru enni enni nee paarkiraai ( Paalum pazamum )

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sun Dec 21, 2008 9:52 pm    Post subject: Ennai yaar endru enni enni nee paarkiraai ( Paalum pazamum ) Reply with quote

பாலும் பழமும் ஒரு காலத்தை வென்ற காவியம்….

நாம் முன்பு இப்படத்தின் சில பாடல்களை அலசினோம்….

இன்று நாம் பேசப்போவது படத்தின் ஒரு முக்கிய கட்டத்தில்
அமைந்த ஒரு உணர்ச்சிகரமான பாடல்..

மனைவி சரோஜாதேவி இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு
( தவறானது ).. சிவாஜி வாழ்க்கையின் மீது எந்த பற்றும் இல்லாத நிலையில் தன்னை வளர்த்து ஒரு மருத்துவராக்கிய சுப்பையாவின் குடும்பத்திற்கு நன்றி செலுத்துவதற்காக அவரின் மகளான சவ்காரை மணக்கும் ஒரு கட்டாயம் ஒரு கவனப்பிசைவால் சிவாஜிக்கு கண் போய்விடுகிறது…..
இதற்கிடையே சரொஜாதேவி உயிர் பிழைத்து மீண்டும் தாயகம் வந்து
விதிவசத்தால் சிவாஜிக்கே ஒரு பணிப்பெண்னாக வரும் அதற்ச்சி !!
சரோஜாதேவியை யாருக்கும் தெரியாததால் அவருடைய வேலை எளிதாகிறது சிவாஜிக்கு மறுமணம் ஏற்பட்ட செய்தி கேட்டு அவர் தன்னுடைய வாழ்வை தியாகம் செய்ய முடிவு செய்கிறார்…பணிப்பெண்ணாக வந்திருப்பது தன் மனைவி என்று சிவாஜிக்கும் தெரியாது..

கண் பார்வையிழந்த தன் கணவரை ஆதரவாக பார்த்துக்கொண்டே அவர் சவ்காருடன் வாழும்படி வேண்டுகோள் விடுக்கிறார்…

ஆனால் சிவாஜியோ சரொஜாதேவியுடன் வாழ்ந்த அந்த பழைய நாட்களையே மறக்கமுடியாமல் தவிக்கிறார்….

இந்த சூழ்நிலையில் ஒரு அற்புதமான பாடலை திரு பீம்சிங் புகுத்தியுள்ளார் !!!

பாடலின் சூழ்நிலைக்கேற்ப இசை அமைப்பத்தில் வல்லவர்கள் நம் மெல்லிசை மன்னர்கள் !!

சரோஜாதேவி சிவாஜியை மிண்டும் சவ்கார் ஜானகியை முழுமையாக ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்த அதற்கு சிவாஜி பதிலாக பாடுவது போன்று அமைக்கப்பட்ட பாடல் இது… ஆதலால் பாடல் முழுதும் ஒருவிதமான சோகமான சந்ததமும் அதற்கு துணைசெய்வது
போல இசையும் கலந்து ஓர் அற்புத மறக்கமுடியாத பாடலை அளித்துள்ளனர்…

பாடல் முழுவதும் ஷெனாய் தன் முழு திறமையை காண்பிக்கிறது….அவ்வப்போது புல்லாங்குழலும் சந்தூரும்…. சரணம் முடியும் தருவாயில் ஒரு மென்மையான ரிதம் கிடார் !!
எம்.எஸ்.வி.யின் ஆஸ்தான ஷெனாய் சத்யம் தான் இதை செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.. மெய் மறக்க வைக்கும் ஒரு ஷெனாய் வாசிப்பு…அதிலும் இரண்டவது சரணத்தின் முன்பு வரும்
ஷெனாய்க்கே அவருக்கு மகுடம் சூட்டவேண்டும்….

இப்பாடல் சிந்துபைரவியின் சாயலில் அமைத்ததாக தோன்றுகிறது….எப்படித்தான் எண்ணம் உதித்ததோ நம் மன்னர்களுக்கு !!!

சிவாஜி :
என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயில் அல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா

என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்


சரோஜாதேவி :
என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதையா
சருகான மலர் மீண்டும் மலராதையா
கனவான கதை மீண்டும் தொடரையாதய்யா
கனவான கதை மீண்டும் தொடரையாதய்யா
காற்றான அவள் வாழ்வு திரும்பாதையா


சிவாஜி :
எந்தன் மனக்கோவில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மல்ர்ந்தாளம்மா
கனவென்னும் தேரெறி பரந்தாளம்மா
கனவென்னும் தேரெறி பரந்தாளம்மா
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா


சரோஜாதேவி :
இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லா
அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா
அவள் வாழ்வு நீ தந்த வரம் அல்லவா
அவள் வாழ்வு நீ தந்த வரம் அல்லவா
அன்போடும் அவளோடு மகிழ்வாய் அய்யா

என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்


டி.எம்.எஸ். ஏதோ தானே இந்த சூழ்நிலையில் தவிப்பது போன்ற ஒரு குரலை கொடுப்பார்… கடந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஒரு மாபெரும் பாடகர் திரு டி.எம்.எஸ் !!!!! இவரின் காலத்தில் நாமும் வாழ்வது நமக்கு கிடைத்த் வரம் தான்… அதிலும் சில் வரிகளை மீண்டும் பாடும்போது அதற்கு மிகவும் அழுத்தம் கொடுத்து பாடி பாடலுக்கு இன்னும் ஆழத்தை தருகிறார்

சுசீலா தன் திறமையை காண்பிக்கிறார்…..தியாகம் செய்ய துணியும் ஒரு மனைவியின் மனநிலையை அழகாக காட்டுவார் அற்புதமான குரலின் மூலம்….

கவிஞ்ரைப்பற்றி எழுத எனக்கு அனுபவம் போதாது…. மனிதர் எவ்வளவு உணர்வுபூர்வமாக எழுதியுள்ளார்….சிவாஜி மற்றும் சரோஜாவின் மனநிலையை எவ்வளவு தெள்ளத்தெளிவாக
சாதாரணவரிகளின் மூலம் நமக்கு எடுத்திரைக்கிறார்…. காலத்தை வென்றவர் …..காவியமானவர் கவிஞர்…

நடிகர் திலகம்…………நடிப்புக்கு ஓர் பல்கலைகழகம் அவர் …..சொல்ல வார்த்தைகளில்லை… வரிக்கு வரி தன் முத்திரையை காண்பிப்பார்….மனைவியை இழந்த சோகம்..அதே சமயம் அவருடன்
வாழ்ந்த சில மறக்கமுடியாத நாட்கள்….அது போல இன்று இல்லை என்று முகபாவத்தினை மாற்றி மாற்றி தன் திறமையை காண்பிப்பார்… சரோஜாதேவிக்கு இப்படம் ஒரு மைல்கல்…

ஒரு காலத்தை வென்ற பாடலை இசை அமைப்பதற்கான அருமையான் சூழ்நிலையினை தந்த திரு பீம் சிங்கிற்கு நன்றி…
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Wed Dec 24, 2008 1:51 pm    Post subject: Reply with quote

அன்புள்ள பாலாஜி,

"என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் " என்று நீங்கள் நம் தள நண்பர்களிடம் கேட்கும் அளவு இடைவெளிக்குப்பின் உங்கள் அருமையான பதிப்பைப் பார்த்து, படிப்பதற்கு மிக மகிழ்ச்சியாக இருந்த்து.

பாடல் காட்சி, பாடல் வ்ரிகள், நடிப்பு, நம் மாஸ்டரின் மனம் மயக்கும் இசை எல்லாம் சேர்ந்து இப்பாடலை காலத்தை வென்ற ஒன்றாக்கிவிட்டது !

மனம் கவரும் உங்கள் எழுத்தை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

ராம்கி.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Sat Dec 27, 2008 3:03 am    Post subject: Reply with quote

அன்புள்ள பாலாஜி,

மிகவும் அழகாக இந்த பாடலை பற்றி எழுதி இருக்கிறீர்கள். நன்றி.
இந்த பாடலில் ஒரு வரியை தேர்ந்தெடுத்து இதை மிகவும் ரசித்தேன் என்று சொல்ல முடியாதபடி, பாடலின் அத்தனை வரிகளும் அற்புதமானது. மெல்லிசை மன்னர் இந்த பாடலுக்கு அமைத்திருக்கும் மெட்டும், கவிஞரின் வரிகளும் நம்மை கண்கலங்க வைத்துவிடும். ஒரு காலத்தில் சிலோன் வானொலி நிலையத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தவறாமல் இந்த பாடல் ஒலிபரப்பாகிவிடும். நேயர் விருப்பம் பகுதியிலும் இந்த பாடல் இடம் பெறாத நாளே இல்லை. அந்த அளவு எல்லோர் மனதையும் கொள்ளைகொண்ட அர்த்தமுள்ள, அழகான பாடல் இது. நீங்கள் எழுதி இருப்பதை படித்தவுடன் இந்த பாடலை இப்பொழுதே கேட்கவேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.
Back to top
View user's profile Send private message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sun Dec 28, 2008 7:26 am    Post subject: Reply with quote

Mr. BALAJI,
I AM SORRY I AM UNABLE TO REPLY YOU IN TAMIL AS I DO NOT KNOW TAMIL TYPING.

THE SONG MENTIONED BY YOU AND THE WAY YOU HAD EXPLAINED MAKES ME REMEMBER MY FREIND WHO IS A GREAT RASIGAN OF TMS, MSV, SIVAJI COMBINATION.

THIS SONG IS COMPOSED IN RAAGA SINDHU BAIRAVI WITH A SLIGHT CHANGE OF "NI2" SWARAM (KAKALI NISHADAM) WHICH ADDS BEAUTY TO THIS SONG. YOU CAN NOTICE A TONE CHANGE WHEN THE LINE COMES LIKE " AVAL VAZHVU NEE THANDHA VARAMALLAVA" YOU CAN YEAR KAKALI NISHADAM DURING "VARA" PLACE. REST OF THE PLACE IT IS SINDHU BAIRAVI WHICH IS ONE OF THE BEST NORTH INDIAN RAAGA WHICH CAME TO SOUTH. I CAN QUOTE AT 50 - 75 SONGS OF MSV COMPOSED IN THIS RAAGA.

EXP
ENGE NEEYM NANUM ANGE UNNODU
UNAKKENNA MELAI NINDRAI
KAN KANDA THEIVAME (KIZH VANAM SIVAKKUM)
KARAI MEL PIRAKKA VAITHAN (PADAKOTTI)

VERY GOOD RAAGA FOR SOBER EFFECT

REG

N Y MURALI
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Fri Jan 02, 2009 10:44 pm    Post subject: Reply with quote

I read an interesting background relating to this song sometime back in the Hindu. Kavignar had picked up some quarrel with Sivaji and they avoided each other for sometime. They met during the composition of thissong but the cold war had not ended. Sivaji maintained his hostile demeanour. The situation for the song was explained by Bhim Singh.

Kavignar usually composes the song orally which will be written by his assistant (Panchu Arunacham, mostly - but in a recent interview in Jaya TV,GS Mani claimed that he used to write down Kavignar's outpourings, before the advent of PA) But this time, Kavignar wrote the pallavi of the lyric himself and gave the paper to MSV asking him to read it out aloud. After reading the piece, MSV said,'Kavignare, neeNgaLE padinga.' Kavignar looked at Sivaji and read,
'Ennai Yaar Endru eNNi eNni nee paarkkiraay,
ithu yaar paadum paadal endru nee ketkiraay.'

The tension was relieved instantly. Sivaji burst out laughing and embraced Kavignar saying, 'Muthaiya (Kavignar's original name!), nee maarave illaiyaa!'

P R Swami (parthavi)
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sun Jan 04, 2009 7:05 pm    Post subject: Pick a song and analyze Reply with quote

DEAR MR. PARTHAVI,
The song 'ennai yAr endru eNNi eNNi'' has another anecdote about its origin. Please wait for our book on the legend to get to know that version. Yes, I dpo not wish to divulge it, lest it should lose charm of expectancy of the book and its content. Please stay in pleasant suspense for a while.
Warm regards Prof.K.Raman Madurai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sun Jan 04, 2009 8:49 pm    Post subject: Reply with quote

Yes professor, I will wait. Antha suspense enna endru eNNi eNNi naan parkkirean, ehir paarkkiren.

Nandri.

P R Swami (parthavi)
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group