 |
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
Ram Devotee
Joined: 23 Oct 2006 Posts: 1160
|
Posted: Fri Jan 09, 2009 9:06 pm Post subject: A Handful of Piano Picks(22) "MSV-SPB" Mesmerism |
|
|
A Handful of Piano Picks - Part 22
The "MSV-SPB" Mesmerism
வாழ்வில் ஒரு சில நிகழ்வுகள் நம் அறிவையும், மனத்தையும் தாண்டி உணர்ச்சியின் அடிப்படையில் சில பாதிப்புகளைச் செய்யும். நாம் எவ்வகையில் சிந்திக்க முயன்றாலும் 'காரணங்களை' (Logic) தாண்டி நம்மையறியாமல் ஒரு ஈர்ப்பும் ஈடுபாடும் ஏற்படக்கூடிய வகையில் விளங்கும். ஒரு தமிழ்த்திரையிசை ரசிகனின் அனுபவத்தில் அப்படிப்பட்ட நிகழ்வுகளில் மிக முக்கியமானதாக என்றென்றும் விளங்கும் தன்மை கொண்ட ஒரு உன்னதக் கூட்டணி "மெல்லிசை மன்னர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்" கூட்டணி.
இவ்விருவர் கூட்டணியில் உருவான ஒவ்வொரு பாடலும் இசைத்தாயின் இதயத்தில் நீக்கமற நிறைந்திருப்பவை. ஒரு எளிய இசையையும் வானுயரத்திற்கு அள்ளி வீசக்கூடிய திறன் அப்பாடல்களுக்கு. "பெற்றால் தான் பிள்ளையா?" என்ற கேள்விக்கான சரியான உறவு இவ்விருவருடையது. ரசிப்புத்தன்மையின் உச்சகட்ட வெளிப்பாடு. "இனிமை" கொண்டாடும் இணையற்ற இசை விழா!! The perfect Composer-Singer chemistry !!!
அப்போது "மெல்லிசை மன்னர் - டி.எம்.எஸ்" கூட்டணியை என்ன சொல்வது? கர்ஜித்துக் கொண்டே விளையாடிக் கொண்டிருக்கும் இரண்டு சிங்கங்கள் போன்றது, எனலாம். என்னே கம்பீர கர்ஜனை!! சரி, P.B.S அவர்களின் குரலை எப்படிக் கூறுவது - காட்டருவியும் அதிலிருந்து எழும் சாரலும் போன்றது. சாரலில் தான் என்னே இதம்!! மெல்லிசை மன்னரின் இசையில் சீர்காழி அவர்கள்? ஆலய மணியும் அதலிந்து எழும் ஞான ஒலியும் போன்ற தெய்வீக இசை. இப்படி அனைவருக்கும் ஒரு பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இப்படி ஒவ்வொரு கூட்டணியும் இயற்கையாகத் தமக்கென ஒரு அழகைச் சுமந்து கொண்டிருக்கின்றன.
நேஷனல் ஜாகிரபிக் வெளியிட்ட ஒரு குறும் படமொன்றைப் பார்க்க நேர்ந்தது. அதாவது சிங்கமொன்று ஒரு மானைத் தத்தெடுத்து அதனைக் காத்து பாலூட்டி வந்த ஒரு அதிசய நிகழ்வு (ஆப்ரிக்காவில்) அதைப் பார்த்து முடித்த அடுத்த கணம் என்னையே அறியாமல் எனக்குத் தோன்றியது "இது எம்.எஸ்.வி-எஸ்.பி.பி கூட்டணி போன்ற விந்தை" என்று.
இப்படி திடீரென்ற ஒரு ஒப்பீடு வர என்ன காரணம் என்று சிறிது நேரம் சிந்தித்த பிறகு காரணங்கள் அந்த எண்ணதிற்கு சாட்சி சொன்னது.
1. இப்படி ஒரு நிகழ்வு இனி ஒரு முறை நடப்பதற்கில்லை.
2. இந்த ஒரு கூட்டணி எப்படிப் பட்ட மனிதனையும் ஒரு முறை திரும்ப வைப்பதோடு மட்டுமில்லாமல், ஒரு துளி நெகிழ்ச்சியில் கலங்கவும் வைக்கும்.
3. இயற்கையில் (இசையில்) இப்படி ஒரு நிகழ்வு எப்படியய்யா சாத்தியம் என்று ஒருவனைப் பித்து கொள்ள வைக்கும் தன்மை கொண்டது.
4. எல்லாவற்றிற்கும் மேலாக - உலகில் ஜெனிக்கும் போதே "இது உன்னத உறவாகத் திகழும்!" என்று வரம் வாங்கி வந்தாற்போன்ற சிறப்பு.
எவ்வளவு உண்மை!! இவ்வாறு காரணங்களினால் ஆழ்மனத்தில் தோன்றிய எண்ணத்தினை, உண்மையினை அறிவு எற்றது.
சிலர் இதில் இந்த கூட்டணிகளை, உன்னத உறவுகளை, ஒப்பிட்டுப் பார்க்கும் விபரீதத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் தனித்தனியே ரசிக்கப் பட வேண்டியனவையே தவிற ஒப்பிட வேண்டியதல்ல. இயற்கையின் படைப்பினில் உயர்வேது தாழ்வேது!
"எம்.எஸ்.வி-எஸ்.பி.பி" - கொண்டு உருவான (உறவான) பாடல்களைத் தொகுத்தெழுதுவதென்பது கடலினும் மாணப் பெரிது. தலைப்பைக் காரணம் காட்டி "பியானோ பாடல்கள் மட்டும் தானே" என்று எண்ணிக்கைக் குறைவை எள்ளி நகையாட முயன்றால், ஒவ்வொரு பாடலின் தன்மையோ "என்னைப் பக்கம் பக்கமாக எழுதி விடேன்!" என்று அன்புக் கோரிக்கையால் அச்சுறுத்துகிறது. சரி - பாடல் தொகுப்பை எடுத்து சில பாடல்களைக் கேட்டு எழுதலாம் என்று நினைத்தால், பாடல்கள் ஒவ்வொன்றும் கடிகார முட்களை என்றும் காணா வேகத்தில் விரட்டியடிப்பதோடு, நம்மை ஒரு மயக்க நிலைக்கும் தள்ளுகிறது.
'தடை'களைத் தாண்டி வழி வகுத்து, தொடர்ந்து செல்ல 'முயல்வோம்'.
முதல் பாடலாக நாம் தொடுவது "சொர்கத்திலே முடிவானது" என்கிற பாடல். பாடலின் இனிமை என்ன! அழகென்ன! அமைப்பென்ன!!
பியானோவுடன் துவங்கும் முன்னிசை...தொடர்ந்து, பல்லவி..
"சொர்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது"
நாலே வார்த்தகள் தான். ஆனால் மெட்டு எவ்வளவு அழகாக அதற்கு அமைக்கப் பட்டிருக்கிறது!
ரத்தினச் சுருக்கமாக முதல் இடையிசை.. பியானோவுடன். தொடர்ந்து சரணம்.. வாணி ஜெயராமின் தீங்குரலில்.
"தீபத்திலொன்று கற்பூரமொன்று
எரிகின்றதிங்கு ஒன்றாக நின்று"
எப்போதும் போல் நம் இசைத் தலைவர் இங்கு தபேலா!
இரண்டாம் இடையிசை பியானோ துள்ளிக் கொண்டு வர, அதைக் கொஞ்சம் ஆதிக்கம் செலுத்தி ட்ரம்பெட். ட்ரம்பெட்டில் வரும் Deviations நம்மை அள்ளிக் கொண்டு போக - தொடர்ந்து வயலின் ஆர்கெஸ்ட்ரேஷன்.
இந்த ஆர்கெஸ்ட்ரேஷனில் பின்னணியில் சின்னதாக இன்னொறு Chord லேயர் வந்து கொண்டிருக்கும். அதன் தனிச்சிறப்பு - அது இருமுறை "Augmented Chords" ஐ தழுவிக் கொண்டு போகும். இதெல்லாம் மெல்லிசை மன்னர் தெரிந்து செய்தாரா, இல்லை தெரியாமல் செய்தாரா, கவனமாகக் கோர்த்தாரா, இல்லை விளையாட்டாக வைத்தாரா. யாமறியோம் பராபரமே!
மூன்றாம் இடையிசை - பியானோ வுடன் ஆர்கெஸ்ட்ரேஷன், கைதட்டல் கொண்டு, கிட்டாருடன் முடிந்து ஒரு இசை அமர்க்களத்தையே ஏற்படுத்தும்! அதை விவரிக்க நினைப்பது நம்மையே நாம் ஏளனம் செய்வது போலாகும்!
மூன்றாம் சரணம் முடிகையில் எஸ்.பி.பி,
"உரிமைக்கு என்றும் பிரிவென்பதில்லை" எனும் இடத்தில் எத்தனை அழகு. உணர்ச்சியில் மிளிர்கிறார்.
மொத்தத்தில் ஒரு பாட்டில் Party யே வைத்துவிடுவார் மெல்லிசை மன்னர்!
அடுத்து வரும் பாடலை நாம் ஏற்கனவே ஒருமுறை பார்த்து விட்டோம். அனால் அதைக் காரணம் காட்டி இப்போது அதைக் குறிப்பிடாவிடில், தலைப்பிற்கே பெரும் இழுக்கு ஏற்பட்டு விடும். இதோ....
விடிய விடிய சொல்லித் தருவேன் (பியானோ பிட்)
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் எனென்னவோ என் எண்ணங்கள்!
இனிமை... இனிமை... இனிமையைத் தவிற வேறில்லை!
"சொல்லித்தர நானிருப்பேன் ராஜாத்தி" எனும் போது, சிறிது நேரம் அமைதி காத்து வரும் பியானோவும் Base Guitarரும் பளிச்சென விழித்துக் கொள்ளும் விதம் கொள்ளை இன்பம்! இவ்விடத்திலும் மற்றும் இரண்டாம் சரணத்தில் - "வெட்டி எடுக்காத தங்கமோ" என்று தொடங்கும் இடங்களிலும் - எஸ்.பி.பி யின் குரல் நம்மைச் சிலிர்ப்படையச் செய்யும்!
நான் முன்னதாகவே கூறியிருக்கிறேன்.... இப்பாடல் என் தந்தையின் விசில் வழியாக, எனக்கு தாலாட்டாக ஊட்டப் பட்ட ஒன்று. விவரம் தெரிவதற்கு முன் இருந்தே தொடங்கப்பட்ட மெல்லிசைப் பயிற்சி! (அப்பயிற்சி இன்று போதையாகி என்னை முழுவதுமாக ஆட்கொண்டிருக்கிறது என்பது வேறு கதை. )
எஸ்.பி.பி குரலில் பல சிறப்பம்சங்கள் பொதிந்து கிடக்கின்றன. அதில் முக்கியமான என்று - வார்த்தைக்கு அவரளிக்கும் உயிர், 'பாவம்', உணர்ச்சி - எப்படிவேண்டுமானாலும் சொல்லலாம். அட்சரத்திற்கு அட்சரம் கவனமாகப் பாடும் (அல்லது அது தானாகவே இருக்கும்) குணம். மெல்லிசை மன்னரின் சிறப்பம்சமும் அதுவே. "விஸ்வ துளசி" இயக்குனர் சுமதி ராம் கூறியது போல்: "மெல்லிசை மன்னர் ஒரு வார்த்தைக் காவலர்!" இது ஒரு சத்தியச் சொல் என்றால் மிகையல்ல!
இருவரிடம் இருக்கும் இந்த சிறப்பம்சத்தை "Spontaneous Creativity" எனலாம். "Creativity" என்பதை மெனக்கெட்டு "Create" செய்வதில்லை. தொட்டவுடன் பொங்க ஆரம்பித்து விடும். ஆதியாந்தமில்லாமல் இசை பரவத் தொடங்கிகிவிடும். Being FLUID than RIGID, in any sense!
எரியும் தீபம் போன்ற தன்மை. Absolutely no flickering. No scope for flickering. Living every moment. இதனால்தான் இக்கூட்டணி ஒப்பிலா வகையில் வானுயர்ந்து நிற்கிறது!
இதை உணர்த்த ஒரு அருமையான பாடல் - "கம்பன் ஏமாந்தான்" பாடல். மிகச் சில இடங்களில் மிகச் சிறிய அளவில் பியானோ வருவதால் இப்பாடலை உள்ளே இழுத்து விட்டேன். (அப்படி இல்லாவிட்டாலும் இப்பாடலைத் தொட்டிருப்பேன், ஏனெனில் பல காரணங்களுக்காக நான் "நிழல் நிஜமாகிறது" பட வெறியன்! )
பாடலின் சூழலும் சரி, பாத்திரங்களும் சரி - வித்தியாசமான ஒன்று. "இயக்குனர் சிகரம்" K.பாலச்சந்தரின் பாடல் சூழல்களைக் கேட்க வேண்டுமா என்ன? பாடும் ஹீரோ (கமல்) ஒரு "Cool Guy". தனக்குள் ஒரு வேலி போட்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து பாட வேண்டிய பாடல். விழுந்தது ஒரு பாடல் - ஏகாந்தமாக...
ஒரு சில இடங்கள் "எஸ்.பி.பி" உண்மையிலேயே சிலிர்க்க வைத்திருப்பார்....
"ஆத்திரம் என்பது
பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே"
இங்கு "ஆத்திரம்" எனும் போது குரல் கொஞ்சம் இருக்கமாகும்... அடுத்த வரியில்...
"ஒரு ஆதிக்க நாயகன்
சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே"
அடங்குதல் எனும் போது, குரல் அப்படியே மென்மையில் அடங்கி விடும்! ஒரு பானையிலிருந்து ஒரு துளி பதம் போன்ற ஒரு சிறிய எடுத்துக்காட்டு இது.
சரி, பாடலின் மெட்டுக்கு வருவோம். "பகாடி" ராகத்தைத் தழுவி இப்படி ஒரு அருமையான பாடல் மெல்லிசை மன்னர் ஒருவரால் தான் முடியும். Unbelievable perception!!
"கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே" என்று தொடங்கும் ஒரு பக்தி இலக்கியப் பாடலின் வரி மெல்லிசை மன்னருக்கும், குறிப்பாக இப்பாடலுக்கும் சாலப் பொருந்தும்!
மற்றுமொறு பிரமாதமான பாடல் "இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ" என்ற பாடல். பல தத்துவங்களை அநாயாசமாக அள்ளி வீசியிருப்பார் கவியரசர் கண்ணதாசன். கச்சிதமான இசை. மனத்தில் பாயும் மெலடி!
எஸ்.பி.பி மெல்லிசை மன்னருக்கு தனது முதல் பாடலான "இயற்கை எனும் இளைய கன்னி" யை விட "நிழல் நிஜமாகிறது" படத்திற்காகவும், இது போல பல பாலச்சந்தர் படங்களுக்காகவும் தான் கடன் பட்டிருக்கிறார் என்று கூறுவது மிகையல்ல.
(எவ்வளவு அருமையான படங்கள், பாடல்கள் - அவர்கள், அவள் ஒரு தொடர்கதை, மன்மத லீலை, தில்லு முல்லு, நூல் வேலி, வறுமையின் நிறம் சிகப்பு, 47 நாட்கள், அக்னி சாட்சி என்று பல. முத்தாய்ப்பாக "நினைத்தாலே இனிக்கும்"!) _________________ Ramkumar
Last edited by Ram on Sat Jan 10, 2009 9:24 am; edited 4 times in total |
|
Back to top |
|
 |
Ram Devotee
Joined: 23 Oct 2006 Posts: 1160
|
Posted: Fri Jan 09, 2009 9:07 pm Post subject: |
|
|
(Continued...)
சரி, இப்போது என் கண் முன் பல பாடல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. எதை எடுப்பது எதை விடுவதென்றே தெரியவில்லை.
ஒரு அருமையான பியானோ பாடல். எஸ்.பி.பி சோலோ... பியானோ மற்றும் ஆர்கஸ்ட்ரேஷனுடன் தோரணையாகத் துவங்கும்...
"தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ.." என்ற "பயணம்" படப்பாடல்.
இதன் சிறப்பே வயலின்- டபுள் பாஸ் லேயரிங் தான். பல்லவி வரும் இடங்களில் எல்லாம் மெதுவாக பின்னணியில் பனி போல் படரும் அழகே அழகு. ஆர்கெஸ்ட்ரேஷன் பாடலுடன் பின்னிப் பிணைந்து, பின்னணியில் ஒரு ஆட்சியே நடத்திக் கொண்டு, அதே சமயம் ஒரு முறை கூட முன்னணியில் வந்து மூக்கை நுழைக்காமல் இருக்கும் பாங்கை மெல்லிசை மன்னரின் பாடல்களில் வெகுவாகக் காணலாம். மன்னிக்கவும் 'உணரலாம்'!
சின்ன சின்ன இடங்களையும் ரொம்ப அனுபவித்துச் செய்திருக்கிறார் மெல்லிசை மன்னர். மூன்றாம் சரணத்தில் "பட்டுச் சேலை கட்டும் சோலை வாடுது கண் பட்டு" எனும் போது சின்ன ஃப்ளூட் பிட். மூன்றாம் சரணத்தில் எஸ்.பி.பி யிடம் மெல்லிசை மன்னர் "ஜமாய்!" என்று ஏதாவது கூறிவிட்டாரா என்று தெரியவில்லை, ஏனென்றால் குரலில் அப்படி ஒரு துள்ளல், குதூகலம். "எத்தனை சொல்லில் எத்தனை அழகு நான் பாடுவேன்..." என்ற இடமெல்லாம் இனிமையோ இனிமை - குரலிலும் சரி, வழி நடத்தும் இசையிலும் சரி!
இப்பாடலில் குறிப்பிடப் பட வேண்டிய இன்னொரு முக்கியமான ஒன்று இடையிசை. முதல் இடையிசை மிகச் சிறிய ஒன்று - அனால் அதிலும் அழகான Variations. அடுத்தடுத்து வரும் இடையிசைகளில் பியானோ-ஆர்கெஸ்ட்ரேஷன் பட்டையைக் கிளப்பும். "பாடல் இப்படித்தான் இருக்க வேண்டும்" என்கிற விதியை, பண்டிதத்தனத்தை கொஞ்சமும் மதிக்காமல், கைதட்டி சிரித்துவிட்டு, அதன் மேல் ஏறி நின்று ஆனந்த நடனமாடிய காரணத்தினால்தான் மெல்லிசை மன்னரால் இப்படி ஒரு VARIETY காண்பிக்க முடிந்தது. What an Unbelievable Range of Songs !!!!
"ராதா காதல் வராதா", "உன்னைத் தொடுவது இனியது", "அங்கம் புதுவிதம்", "ஆரம்பம் இங்கே ஆகட்டும்", "மரகத மேகம்", "கௌரி மனோகரியைக் கண்டேன்", "மாதமோ ஆவணி", "மங்கையரில் மகராணி", "நானென்றால் அது", "பௌர்ணமி நிலவில்", "பொட்டு வைத்த முகமோ", "பாடும் போது நான்", "நித்தம் நித்தம்", "அண்ணன் ஒரு கோவில்", "ஓடம் கடலோடும்" (இன்னும் பற்பல..........)
இப்படிப் பட்ட பட்டியலை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா? ஒவ்வொரு பாடலும் இக்கூட்டணியின் பெருமையைப் பேசிக்கொண்டே இருக்கும். "World Class" என்ற அடைமொழி கூட ஏதோ ஒரு வகையில் வரையரை வகுக்கிறது. "Out-of-the-World" என்று கூறுவதே சாலத் தகும் !!!
நிறைவாக ஒரு சிறப்புப் பாடல். மெல்லிசை மன்னர் - எஸ்.பி.பி இருவரும் பாடிய.... "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" என்ற அற்புதப் பாடல்!
முன்னிசை மெல்லிசை மன்னரின் சிரிப்போடும், சிரிப்புக்கு ஸ்வரத்தோடும் ( ) தொடங்கும். முதலில் மெல்லிசை மன்னர் பல்லவியைப் பாட, தொடர்ந்து எஸ்.பி.பி.
எனக்கொரு காதலி இருக்கின்றாள் - அவள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை,
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை, தமிழோசை
"நாதம் அவளது தமிழோசை" வரிக்கு முன் சாருகேஸி கொண்டு ஓடி வரும் பியானோ, அக்மார்க் மெல்லிசை மன்னரின் "Boomerang"! மெல்லிசை மன்னர் வீசினால் இந்த "Boomerang" சமர்த்தாக அவர் கையிலே வந்து அமர்ந்து கொள்கிறது. வேறு சில இசையமப்பாளர்கள் இந்த முயற்சியில் ஈடுபடும் போது, ஏனோ அதற்கு ஒரு கொலை வெறி ஏற்பட்டு பரசுராமர் போல் எதிரில் வருபவர் அனைவரையும் வெட்டி சாய்க்க ஆரம்பித்து விடுகிறது. இறுதியாக அது எங்கோ ஒரு காட்டிற்குள் போய் சிக்கிக் கொள்ள, இந்த 'இசை(?)க்கூட்டம்' ஒரு தனிப்படை போல் தேடுதல் வேட்டையில் இறங்குகிறது. அது இறுதியில் கிடைத்ததா இல்லையா என்று யார்க்கும் தெரியாது (அவர்கள் உட்பட!)
"என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
மெல்லிசையாகும் எந்நாளும்"
மெல்லிசை மன்னரின் ஜீவன் மெல்லிசை என்பது இவ்வரியில் புலப்பட்டாலும், இவ்வரி எஸ்.பி.பி பாடியுள்ளதால் - அவரது இன்னொரு ஜீவன் "மெல்லிசை மன்னர்" என்று எழுதப் பட்டதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
பியானோ-வயலின் சங்கமத்தில் பாடலின் முடிவிசை (Post-lude) கேட்பவர்களின் இதயத்தில் வெல்லப் பாகைக் கரைத்து விட்டாற் போன்றினிக்கும். வெல்லத்தை வாய் வழியே சுவைத்தால் "சர்க்கரை நோய்" என்கிற அச்சம் நம்முள் புகும். அதுவே செவிவழியே, மெல்லிசை மன்னரின் இசைவழியே சுவக்கப் படும் போது, அதுவே நோய் நிவாரணியாகவே ஆகின்றது!
பஞ்சமம் பேசும் பார்வையில் என்றும்
பஞ்சணை போடும் எனக்காக
"மோகனம் என்னும் வாகனம் மீது
தேவதை போல அவள் வந்தாள்"
போன்ற வரிகளின் வாலியின் அதீத கற்பனையும் மற்றும் மொழி ஆளுமையும் இனிதே புலப்படுகிறது!
மெல்லிசை மன்னர் - எஸ்.பி.பி பாடல்களில் இப்பாடலுக்கு ஒரு தனி இடம் உண்டு என்பதே உண்மை. இக்கூட்டணியின் சிறப்புத்தன்மையை உணர்த்த முழு உதாரணம் இப்பாடல் என்பதும் உண்மை!
ஹார்ட்ஃபோர்ட்'டிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு இரண்டு வழியாகச் செல்லலாம். ஒன்று I-95 என்கிற ஹைவே. விரிந்து அகண்ட சாலைகள், வேகத்தில் பறக்கும் ட்ரக்குகள், வாகனங்கள், பகலிலும் ஜொலிக்கும் மெக்-டொனால்ட் சர்வீஸ் ஏரியாக்கள் என்று ஆடம்பரம் சொட்டும். அதே சமயம் CT-15 என்று ஒரு பார்க்வே இருக்கிறது. சூழ மரங்கள், தேவையான வேகத்தில் வாகனங்கள் என்று ஒரு தனி அழகுடன் இருக்கும். இந்த CT-15'ல் பயணிப்பதை நான் மிகவும் ரசிப்பேன் ஏனென்றால் அது மெல்லிசை மன்னரின் இசை போன்றது. தேவையற்ற ஆடம்பரத்தை விட அழகையும், இனிமையையும் கொண்டு உருவான காரணத்தினால்!
சில புராணக் கதைகளில் நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அதாவது சில சீடர்கள் தங்கள் குருவிடம் மிகச் சிறிய நேரமே இருந்திருக்கினர் என்றும் அந்த நேரத்திற்குள் அவர்களுக்கு வேண்டிய ஞானம் குருவிடமிருந்து வந்து விடும் என்றும். மெல்லிசை மன்னரின் கம்போஸிங்கும் அப்படித்தான் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஒரு இயக்குனரோ, கவிஞரோ பாடலின் சூழலைச் சொல்ல ஆரம்பிக்கும் போதே எப்படிப் பட்ட பாடல் தேவை, பாடலின் போக்கு எப்படி இருக்க வேண்டும், தாளம், ராகம்(?!), அமைப்பு என்று அனைத்தைப் பற்றியும் நொடியில் ஒரு தெளிவு அவருக்குள் உதிக்க வேண்டும். இல்லையெனில் சுரபி போல் இசையைச் சுரக்க எந்த பயிற்சியாலும் சாத்தியமிலை!
"இப்படி இசைத்தால்தான் நன்றாக இருக்கும்" என்று "நம்பிக்கையின்" அடிப்படையில் மெல்லிசை மன்னர் இசைத்திருக்க முடியாது. ஏனென்றால் "நம்பிக்கையின்" மீது நமக்கே அவநம்பிக்கை வரலாம். காலப் போக்கில் அது மூட நம்பிக்கையாகவும் மாறலாம்.
"நம்பிக்கை" எனும் வட்டத்தைத் தாண்டி தனக்குள் இருக்கும் "தெளிவி"லிருந்து பிறப்பதால், மெல்லிசை மன்னரின் இசை நிச்சய தத்துவமாய், என்றென்றும் அழிவில்லாமல், வேரூன்றி நிலைத்து நிற்கிறது!!!
(தொடரும்)
A Handful of Piano Picks - Listing
Part 1 - Ennai Theriyuma
Part 2 - Kaatru Vandhaal
Part 3 - VannakkiLi
Part 4 - Oh Little Flower
Part 5 - Naan Nandri Solven
Part 6 - Thairiyamaaga Chol Nee
Part 7 - Maanicka Thottil
Part 8 - Collection of Piano Songs
Part 9 - Jazz Piano1 - Varavendum Oru Pozhuthu
Part 10 - Jazz Piano2 - Viswanathan Velai VeNdum
Part 11 - Jazz Piano3 - Enna Vegam Nillu Bama
Part 12 - Rock and Roll - Aadavarellam, Malarendra Mugamadhu
Part 13 - Unnai Ondru Ketpaen
Part 14 - Kannirendum Minna, Vidiya Vidiya
Part 15 - "Periya Idathu PaNN" - Kannenna Kannenna Kalanguthu
Part 16 - "Paal Thamizh Paal"
Part 17 - Chella KiLigaLaam
Part 18 - An Ensemble of Jazz Rhythms(1) - Thottu Kaattavaa
Part 19 - An Ensemble of Jazz Rhythms(2) - Hey..Naadodi (Anbe Vaa)
Part 20 - Piano Thisram - Jillendru, Manamedai, Senthamizh Paadum, Pillai Thamizh Paadukiren, Ninaithathai Nadathiye
Part 21 - "Rocking Piano" - Adadaa enna azagu, Allippanthal, Yaaro aada therinthavar
Part 22 - MSV-SPB Mesmerism
Part 23 - Avan Ninaithaana
Part 24 - "Expressions" - Athanin MuthangaL, Piano Fillers in different songs
Part 25 - Layam - An analysis on different beat patterns in Tamil Film Music
Part 26 - The Finale - Top 3 Piano songs of MSV _________________ Ramkumar
Last edited by Ram on Wed Jun 17, 2009 4:28 pm; edited 2 times in total |
|
Back to top |
|
 |
Venkat Philiac

Joined: 18 Dec 2007 Posts: 601 Location: Chennai, where MuSic liVes
|
Posted: Fri Jan 09, 2009 9:53 pm Post subject: |
|
|
Great Ram.
நீண்ட நாட்களுக்கு பிறகு களத்தில் இறங்கி விட்டீர்கள் போல தெரிகிறது.
ஊங்களது இசைப்போர் தொடர எனது வாழ்த்துக்கள்...  _________________ Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh |
|
Back to top |
|
 |
msvramki Fanatic
Joined: 18 Dec 2006 Posts: 418 Location: Chennai
|
Posted: Sat Jan 10, 2009 5:48 pm Post subject: |
|
|
அன்புள்ள ராம்,
எம் எஸ் வி - எஸ் பி பி யின் கூட்டணியில் உருவான ஒரு சில முத்துக்கள் பற்றிய உனது எழுத்து நீ எழுதியிருக்கும் தொடரின் ஒரு முத்து !! மிக் அருமை !!
'நிழல் நிஜமாகிறது' நம் எல்லாரது ஆஸ்தானப் படம். எண்ணற்ற தட்வைப் பார்த்தாயிற்று, இன்னும் பார்க்க ஆசை வருகிறது - அதன் எல்லா அம்சங்களுக்காகவும் - இசை, குறிப்பாக !
'விடிய விடிய' பாடல், எம் எஸ் வியின் இசை விதையாக உன் மனதில் விதைக்கப்பட்டது, இன்று எம்எஸ்வி டைம்ஸ்.காம் என்ற ஆலமரமாக வளர்ந்து, வரும் சந்ததிக்கு, இளைப்பாறும் இடமாகவும், அதன் விழுதுகள் புது இசை உருவாக்க உதவும் கரமாகவும் விளங்க இருக்கிறது !
Incidentally, அப்பாடலை, விசிலாகவும், பாட்டாகவும், என் பேரன்(உன் பையன்) ரித்விக் (குட்டி ராம்கி)க்கு, இதோ கொடுக்க ஆரம்பித்துவிட்டேன் - அவனும் ஆச்சரிய முழிப்புடன் கவனிக்கிறான். அடுத்த "எம் எஸ் வி ரசிக சந்த்தி' உருவாகிறது. Probably Ritvik is its FIRST MEMBER !
அவனை அந்த எம் எஸ் வி இசை சாகரத்தில் நீந்தக்க் கற்றுக்கொடுக்கவேண்டியது உன் பொறுப்பு !
தொடர்ந்து உன் பணி தொடரடும் - வரும் சந்த்தியினருக்காக !!
அன்புடன்,
ராம்கி.
' _________________ isaiyin innoru peyar thaan emmessvee. |
|
Back to top |
|
 |
tvsankar Addict
Joined: 24 Jan 2007 Posts: 229
|
Posted: Sat Jan 10, 2009 7:08 pm Post subject: |
|
|
Dear Ram.
Thanks a lot for the Topic.
Miga azhagaga start seidhu irukeenga. Pl continue your
Beautiful writings.....
Unga list la indha oru padalaiyum serthu kollavum
"Angum ingum asai undu
Indru nee endha pakkam"
This song has Excellent LUdes Dear Ram...
Neenga ezhudhina , indha paatin sirapai unara mudiyum enru
ninaikiren.....
Thank you once again...
With Love,
Usha Sankar. |
|
Back to top |
|
 |
Damodaran Pachaiappan The Ardent
Joined: 21 Oct 2007 Posts: 119 Location: Ireland
|
Posted: Sat Jan 10, 2009 10:20 pm Post subject: |
|
|
Dear Ram,
A very bewitching write up. Your analogy of the combination of MSV with various singers is excellent. Lion and lion for MSV & TMS, Surging river and misty spray for MSV & PBS, Church bell and the toll of that bell for MSV & Sirkazhiar. The comparison of MSV & SPB to the one you have described is novel to me but makes a lot of sense when I think about it. Mellisai Maamannar indeed fostered him and nurtured him.
Kamban yeimandhan is one of my favourite songs of MSV and thanks for writing about it so wonderfully.
Your writing makes me wish strongly that I could type in Tamil. But I am unable to find any downloadable programme that will work with Mac OS X.
Hoping to be enthralled by more classical postings from you,
Yours sincerely, _________________ Dr.Damodaran Pachaiappan |
|
Back to top |
|
 |
Ram Devotee
Joined: 23 Oct 2006 Posts: 1160
|
Posted: Sun Jan 11, 2009 10:23 am Post subject: |
|
|
நன்றி மகேஷ்! "மெல்லிசை மன்னர்" 'இசைப் போர்', 'இசைச் சமாதானம்', 'இசைத் தூது' அனைத்தையும் செய்து விட்டார்! இனி அந்த வீர சரித்திரத்தப் புரட்ட வேண்டியது மட்டுமே நம் கடமை!
நன்றி Dad! ரித்விக்'கு வித்திட்ட இசை விதையை வளர்க்க வேண்டியது என் தலையாய பொறுப்பு!
நன்றி உஷாக்கா! "அங்கும் இங்கும்" ஒரு அருமையான கிட்டார் பாடல். இத்தொடரில் இல்லாவிட்டாலும், அப்பாடலைத் தாங்களுக்காக கண்டிப்பாக எடுத்து அலசுகிறேன்!
நன்றி டாக்டர்! கீழ்கண்ட 'லிங்க்'கை முயற்சி செய்து பாருங்கள். Online'னிலேயே தமிழில் எழுதலாம்!
http://www.jaffnalibrary.com/tools/Tsc.htm _________________ Ramkumar |
|
Back to top |
|
 |
Damodaran Pachaiappan The Ardent
Joined: 21 Oct 2007 Posts: 119 Location: Ireland
|
Posted: Sun Jan 11, 2009 2:37 pm Post subject: |
|
|
அன்புள்ள ராம்,
தங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. நீங்கள் கொடுத்த லின்க் மூலமாக தான் இதை எழுதுகிறேன்.
உங்களின் அடுத்த தவணை தணை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
மீண்டும் நண்றி. வணக்கம். _________________ Dr.Damodaran Pachaiappan |
|
Back to top |
|
 |
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|