"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

NEERODUM VAIGAIYILE NINDRADUM MEENE ( PAAR MAGALE PAAR )

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Fri May 23, 2008 2:33 pm    Post subject: NEERODUM VAIGAIYILE NINDRADUM MEENE ( PAAR MAGALE PAAR ) Reply with quote

ஒரு செல்வந்தராக நடிகர் திலகமும் அவர் மனைவியாக சவ்கார் ஜானகியும் இணைந்து நடித்த மற்றொரு குடும்ப சித்திரம் , திரு பீம்சிங் இயக்கிய பார் மகளே பார்…. பா வரிசை காவியங்களில் இதுவும் ஒன்று

இரு குழந்தைகளுக்கு தந்தை என்று படம் துவங்கும்…. தொட்டில் குழந்தைகளாயிற்றே ! அதனால் தாலாட்டு பாடல் இன்றியமையாதது…ஒர் இரவில் தம்பதியினர் தன் இரு பெண் மழலைகளை தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடுவது போல் அமைக்கப்பட்டு உருவானது இந்த பாடல்..

சவ்காருக்காக பி.சுசிலா ஹம்மிங் செய்து துவக்க…. மெல்லிசை மன்னரே விசில் கொடுத்து அதை சிவாஜி செய்வது போன்று அமைந்தது

ஒரு பணக்காரருடைய உடை நடை அடையாளத்துடன் கம்பீரமாக நடந்து கொண்டே பாடும் நடிகர் திலகத்தின் பாணியே தனி தான் !! ஒருவித பெருமிதத்தோடு காணப்படுவார் அவர்

சவ்காரோ அடக்கமே உருவாக அமைதியாக காட்சியளிப்பார்…கணவரின் முன்பு கொன்ஜம் பயப்படுவது போல தோன்றும்…அது உண்மை தான்.. இப்படத்தில் அவர் சிவாஜியின் சொல்படி
கேட்டு நடப்பவர் போன்ற பாத்திர அமைப்பு…. இவரா உயர்ந்த மனிதன் மற்றும் புதிய பறவையில் வேறுவிதமான பரிமாணத்தை காண்பித்தார் என்று நமக்கே வியப்பு ஏற்படும் !!

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே

நெய்யூரும் கானகத்தில் கை காட்டும் மானே

தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே

தெம்மாங்கு பூந்தமிழே தென்நாடன் குலமகளே


மகளே உன்னை தேடி நின்றாளே மங்கை
இந்த மங்கல மங்கை

வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை
உன் மழலையின் தந்தை
நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே

அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே

ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ

குயிலே என்று கூவி நின்றேனே உன்னை
என் குலக்கொடி உன்னை

துணையே ஒன்று கூட்டி வந்தாயே இங்கே
என் தோள்களில் இங்கே

உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா

உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின்
வெள்ளம் அல்லவா

ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ


பாடல் கவிஞர் எழுதியது தான்..சந்தேகமே வேண்டாம்…
வரிகள் ஒரு நல்ல கவிதை போல தோன்றும்

விசில் சப்தத்துடன பல்லவியை துவக்குவது நல்ல கற்பனை தான்..
மென்மையான் ரிதம் கிடார் துணை கொடுத்து தனி பாணியையே கொண்டு வந்தார்கள் மெல்லிசை மன்னர்கள !

புல்லாங்குழலும் வயலினும் சேர்ந்து இசைக்கும் இடையிசை முடிவில் அற்புதமான சாரங்கி அதன்பின் மீண்டும் வயலின் !!

சரணம் முடியும் தருவாயில் சுசீலா உம் உம் என்று தூங்கச்செய்வது போல பாட அதற்கு பிண்ணனியில் விசில் கொடுத்து துணை செய்வது போன்ற அமைப்பு பாராட்டதக்கது !

மீனே…. மானே…தென்நாடன்…. இந்த சொற்களை மீண்டும் பாடும்போது நல்ல சங்கதி கொடுத்து ஒரு நல்ல சந்த அமைப்பு.

பி.சுசிலாவும் டி.எம்.எஸ்சும் கதாபாத்திரமாகவே நினைத்துப்பாடி மற்றுமொரு மறக்கமுடியாத கவிதையை அளித்துள்ளனர்….

குடும்பமே நல்ல சூழ்நிலையில் இருப்பது போல அமைத்த இவர்கள் பின்.

அவள் பறந்து போனாளே ….

பார் மகளே பார்

என்று நொந்து போய் பாடுவது ஒரு வியத்தகு மாற்றம் !!
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Sat May 24, 2008 2:15 am    Post subject: Reply with quote

அன்புள்ள பாலாஜி,

என்னை மிகவும் கவர்ந்த தாலாட்டு பாடல் இது. இந்த பாட்டில் சிவாஜி அவர்கள் சிகரெட் பிடித்துக்கொண்டே பாடுவது ரொம்ப ஸ்டைலாக இருக்கும். பாடலின் மெட்டும், பின்னணி இசையும் மிகவும் அருமையாக இருக்கும்.

பாடல் வரிகளோ மிகவும் அழகு. //உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளம் அல்லவா// பிறந்தது இரட்டை குழந்தை என்பதை சொல்லும் அழகான வரிகள்.

வழக்கம் போல பாடலை பற்றிய உங்களின் கருத்து அபாரம்.
Back to top
View user's profile Send private message
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Sat May 24, 2008 11:15 am    Post subject: Reply with quote

As usual a wonderful analysis dear Balaji.

MM first thought of composing this song entirely with whistle.
But Kavingar metta kettutu ithuku naandhan ezhuthuvennu pidivatham pidichu ezhutinaaram.

This was told by our legend in Madras DD some years back for his serial "Thirayum Isayum".
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Damodaran Pachaiappan



Joined: 21 Oct 2007
Posts: 119
Location: Ireland

PostPosted: Thu Dec 18, 2008 1:19 am    Post subject: Reply with quote

One of my all time favourites.
See what SPB has to say about this song.

http://www.youtube.com/watch?v=DiT-X33VZ0k

Courtesy of Mohanvraman.

SPB also talks about Kamban Emandhaan song.

Regards,
_________________
Dr.Damodaran Pachaiappan
Back to top
View user's profile Send private message Yahoo Messenger MSN Messenger
Ramesh.P



Joined: 07 Dec 2006
Posts: 177
Location: Chennai

PostPosted: Thu Dec 18, 2008 2:42 pm    Post subject: Reply with quote

For those who have not seen ENDRUM MSV PROG.
MSV initially composed this with whistle only (without lyrics).He gave this idea to director and he inmediately agree to that. Kannadasan inspired and told sivaji about it and immediately gave lyrics also. Sivaji told MSV to compose song for the situation and finally song was born.

Sad things we missed original composistion but MSV seems to be very happy that kanndasan got inspired after his tune and made to him compose full song.

regards
ramesh
Back to top
View user's profile Send private message Send e-mail Yahoo Messenger
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Dec 20, 2008 8:58 am    Post subject: Reply with quote

[quote="rinks"]I always abhorred this song because of this particular line
M: Naan Kaadhal Ennum Kavidhai Sonnen Kattilin Melle
F: Andha [b]Karunaikku[/b] Naan Parisu Thandhen Thottilin Melle
(aariro aariro...)
I wonder what exactly Kannadasan implies by the word Karunai?! Idhil enna karunai irukku Rolling Eyes Isn't that so male chauvinistic? Grr!
...
[/quote]
This in no way sounds male chauvinistic. Because that word karunai is rendered by female, which reflects the humble and submissive nature of women in those days. And at the same time establishing that "I have reciprocated (implying I am not indebted to it) but appreciated and rewarded (parisu thanthen)..". So it is neither male nor female chauvinistic but at the same time maintaining balance of both the characters.
And that is Kannadasan.
Raghavendran.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group