"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

KANNUKKU KULAMEDHU ( KARNAN )

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sun Apr 20, 2008 10:48 am    Post subject: KANNUKKU KULAMEDHU ( KARNAN ) Reply with quote

மகாபாரத காவியத்தில் சில நல்ல குணாதிசயங்கள் கொண்ட வீரர்களை நாம் பார்கின்றோம்….அதில் கர்ணன் மிக முக்கிய பாத்திரமாகும்…..போர்கலையில் திறமை , வீரம், நேர்மை, ஈகை என்று பலவகை குணங்களைக்கொண்ட கர்ணனின் பிறப்பின் உண்மை அனைவருக்கும் தெரியாதது…..அவர் ஒரு தேரோட்டியால் வளர்க்கப்பட்டவர் என்பதால் அனைவரும் அவரை இழிவாகவே பேசுவர்….. இதில் அவரின் மாமனாரும் ஒருவர்….காதல் திருமணம் செய்துகொள்வதால் விருப்பமின்றி அவருக்கு தன் பெண்ணை மணம்முடிக்கிறார்…இதனால் முதிலிருந்தே அவரை
தூற்றுவார்….அவரின் பிறப்பை பற்றியும், அவர் ஒரு அரசர் ஆனதே துரியோதனனின் கருணை தான் என்று திட்டுவார்….பலர் முன்னிலையில் புண்படும் வகையில் திட்டுவார் அரசராவதற்கே தகுதியற்றவர் என்றும் பழிப்பார்..பொருத்து பொருத்து பார்த்து
மிகுந்த கோபத்துடனும், வருத்ததுடுனும் கர்ணன் தன் அரண்மனைக்கு வருவார்…..

இதை உணர்ந்த அவரின் காதல் மனைவி ஆறுதல் சொல்வது போல் அமைந்திருக்கும் இந்த பாடல்….

கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது

விண்ணுக்குள் பிரிவேது கண்ணா
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா
விளக்குக்கு இருளேது

கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது

பாலினில் இருந்தே நெய் பிறக்கும் கண்ணா
பரம்பொருள் கண்டே உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும்
அதில் மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்


கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது

கொடுப்பவர் எல்லாம் மேலாவார்
கைய்யில் கொள்பவர் எல்லாம் கீழாவார்
தருபவன் அல்லவோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே

கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது


கர்ணனாக நடிகர் திலகமும், மனைவியாக தேவிகாவும் மிக அற்புதமாக நடித்திருபார்கள் இந்த பாடலிலே…

உண்மையாகவே ஒரு பேரரசன் எப்படி இருப்பானோ அப்படி ஒரு நடிப்பு…இந்த பாடலை பாடுவது தேவிகா மட்டும் தான்
சிவாஜிக்கு வெறும் முகபாவம் மாற்றங்களை தான் காட்ட வேண்டும்…..

தன் பெருமையை பாடியவுடன் ஒரு பெருமிதத்தோடு
பார்வை…..மேலே பார்த்தபடி ஒரு புன்சிரிப்பு… கம்பீரத்துடன் மீசையை முறுக்கிக்கொள்ளுதல்

வருத்தம், கோபம், வீரம், பரிதாபம் என பலவகையான முகபாவங்களை வியக்கும் வண்ணம் செய்வார் நடிகர் திலகம்…
தேவிகாவோ ஒரு மனைவி எப்படி பாசமும், அன்பும் , பரிவும் காட்டுவாரோ அவ்வண்ணம் சிறப்பாக செய்வார்…

ஒரு வேகத்தோடு வருபவர் ….பாடல் முழுவதும் ஒரு நிதானமும் ..அன்பு காட்டும் மனைவியை ஆசையுடனும் பார்பார்…
ஆறுகல் அளிக்கும் மனைவியை மேலும் கீழும் ஒரு பார்வை…ஒரு புன்சிறிப்பு….. இவர் மீண்டும் நமக்கு கிடைப்பாரா ???

நடிகர் திலகம் எத்தனையோ நடிகைகளுடன் நடித்திருந்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் அவரும் தேவிகாவும் தான் சிறந்த ஜோடி என்று வாதம் செய்வார்கள்.. அது உண்மையோ என்று நம்க்கே தோன்றும் இந்த பாடலை பார்த்தபின்.

பி.சுசிலாவின் இசைவாழ்க்கையில் இந்த படம் ஒரு மைல்கல்…..

இந்த பாடலில் பல தருணங்களில் அடுக்கு சங்கதிகளை வாரி வழங்கியுள்ளார் அவர்…..

கருணைக்கு இனமேது…..என்ற வார்த்தைகளின் போது…..தொடர்ந்து சங்கதி….

விளக்குக்கு இருளேது ….மீண்டும் சங்கதி !!

பாலினிலிருந்து…என்ற சரணத்தின்போது…. அழகான சிறிய ஆலாபனை !!

சுசிலாவின் குரலில் ஒரு மனைவியின் பரிவும், பாசமும் காண்போம் !

அவரின் மிகச்சிறந்த பாடல்கள் வரிசையில் வரும் இது

பாடலை கேட்பவர்க்கு ஏதோ தேவிகாவே தன் குரலில் பாடுவது போல தோன்றும் !!!

புல்லாங்குழலிசையோடும் ஜலதரங்கதோடும் மென்மையாக முன்னிசையை துவக்கும் மெல்லிசை மன்னர்கள் மற்றுமொரு அற்புதமான பாடலை நமக்கு தந்துள்ளனர்…

அனுபல்லவி முடிந்தவுடன் மீண்டும் பல்லவியை பாடும்போது ஒரு வேகமான தபேலா….

பல்லவியை தொடர்ந்து மீண்டும் ஆறுதல் அளிப்பது போன்ற புல்லாங்குழலிசை…ஆனால் தீடிரென்று வயலின் புகுந்து வேகத்தை கூட்டும்

பல்லவிக்கும் சரணத்திற்கும் இடையே புல்லாங்குழலும் வயலினும் போட்டி போடும்…ஒன்றுக்கொன்று முந்திக்கொள்வது போல !

பாடல் முழுவதும் புல்லாங்குழலின் துணை அற்புதமான அமைப்பு !! அதை வாசித்தவரை நாம் வணங்குவோம்….மெல்லிசை மன்னரின்
நிழலாக எத்தனையோ காலத்தை வென்ற பாடல்களை தந்த இவர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் நாம் ?

பாடலின் சிறப்பே அதன் மெட்டமைப்பு என்று சொல்லலாம்….

ஹிந்துஸ்தானி ராகமான பஹாடியில் அமைந்த மெய்மறக்க வைக்கும் சந்தம்….நடை..தாளம்…

இந்த ராகமே இப்பேற்பட்ட சூழ்நிலைக்காகவே உருவானது

எதாவது சந்தேகமா உங்களுக்கு ?? இதோ வயலின் மேதை லால்குடி ஜயராமனின் தில்லானாவை கேளுங்கள்

http://www.musicindiaonline.com/p/x/n4I0hz_wM9.As1NMvHdW/

நம் மன்னர் பஹாடி ராகத்தை இன்னும் பல பாடல்களுக்கு பயன்படுத்தியுள்ளார் :

விழியே கதை எழுது ( உரிமை குரல் )

உலகின் முதலிசை தமிழிசையே ( பி.பி.எஸ். தவக்கும் இடம்…தவப்புதல்வன் படத்தில் )

நாடு அதை நாடு ( நாடோடி )

வான் மீதிலே இன்ப தேன்மாறி பெய்யுதே ( சண்டி ராணி )

வா வெண்ணிலா உன்னை தானே வானம் தெடுதே ( மெல்ல திறந்தது கதவு )

பஹாடியை இந்த பாடலுக்கு பயன்படுத்தும் எண்ணம் எப்படி அவர்களுக்கு ஏற்பட்டது ??

வைத்தி , ராம்கி தயவு செய்து எம்.எஸ்.வியிடம் கேளுங்கள்….இதையெல்லாம் நாம் பதிவு செய்யவேண்டும்…


பாடல் எழுதிய கவிஞரை பற்றி என்ன எழுத ?? பாட்டின் கருவையே பல்லவியின் முதல் வரியில் கொண்டு
வந்த மாபெரும் கவிஞர் !!

கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது

வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும்
அதில் மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்


பாடல்கள் அனைத்தும் கண் இமைக்கும் நொடியில் எழுதப்பட்டது என்றும், உடனே சந்தம் அமைக்கப்பட்டது என்ற செய்தி அதிற்சியாக இருக்கிறது

காலத்தை வென்ற இந்த பாடலை கண்டு மகிழுங்கள் :

http://video.google.com/videoplay?docid=-6240700947635030763&hl=en
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sun Apr 20, 2008 3:56 pm    Post subject: Kannikku Kulamaedhu Reply with quote

Dear Mr.Balaji,
You are yet another rasika to have been irretrievably possessed by MSV- KD COMBINATION - ' A NOT -TO REAPPEAR ' PAIR OF TFM. As on date, we can only lament of what a treasure we have had and how insensirive and immune are the present day lyricists and so-called composers of TFM. Innumerable write-ups have come on 'KARNAN' in our own site. As perennial as 'MAHABHARATHAM', KARNAN SONGS HAVE DULY ROOTED THEMSELVES IN THE MINDS OF THOSE WHO HAVE HEARD THEM ONCE. A student of mine recently asked me the qustion "Sir, I heard a song in Karnan and the music was refreshingly fine- why such songs are not coming up now? I just told him - So long as you people clap around mediocrity, more inferior songs and composers would parade in abundance. I explained to him that the industry and media started projecting undesirable quality in TFM; so nothing better can emerge until we discern music [harmony] from noise.
Coming to KARNAN , all songs were scripted and structured in 2 days time at Hotel Woodlands, Bangalore. MSV- KD pair was the most sought after in TFM those days. Sensing that the duo would not be able to devote time exclusively for KARNAN, the producer Director of the movie B.R.Pantulu, packed them off to Bangalore with a specific condition that they should get back to Madras only after, all the ground work and lyrics for songs are ready. [The expected time was about 8-10 days]. But both these ASURANS [ my pet reference to MSV and KD to refer to their ability]
did everything in 2 days and returned. [ You can imagine how nervous would Mr.Pantulu have been [seeing them back in 2 days] until they briefed him that all the 10+ songs are ready.
Another intersting piece to share here is : In those days, music for most movies of Puranic and Historic themes were handled by G Ramanathan or KV.Mahadevan . All the younger generation TFM lovers had a wrong notion that MSV-TKR are not very adept in Carnatic / classical music. [Based on this very same unfounded notion, recently Mr.A.V.Ramanan said that KVM has composed music for Karnan]. One major factor for this notion was Mellisai mannar's novel choice of Piano, Mandolins, Guitars, Bongo, Triple Bongo, Congo, Trombo, Accordion, Trumpet and every other item like electric guitar. I can without hesitation point out that it was MSV - TKR and later MSV who brought a revolution in orchestration. I do not refer to the mere choice of instruments of varied description some of which were unheard of in pre MSV times. The prolific synthesis of harmony in all their songs duly wun them the accolade "MELLISAI MANNARGAL" USING A REAL plethora of instruments, MMs drew extremely fine Mellisai. From an array of instruments , they weaved a musical magic , a magic that stays fresh in seamless harmony and matchless virginity , while according the place of pride to the lyric. So to say, that has been the GRAMMAR and GRANDEUR of MSV's music. Rather he [they] took pains to ensure that the lyric stayed rich and high by even receding the orchestration by a few decibels. on occasions infusing moments of silence through the thick of a song was a beauty in strategy. Even in his days of uncrowned monarchy in music, MSV alone has stuck to humility , leaving a lesson for us to learn that "HUMILITY CAN NOT LOWER ANYONE".
With so much of music in all his cells, no doubt MSV demonstrated his supremacy in KARNAN, FOR ALL TIME TO COME that Mellisai mannar is indeed NALLISAI MANNAR of all Genre and Times. There are several instances of songs being composed in seconds and embellished in minutes. That is MSV- a true legend.
Warm regards Prof. K.RAMAN Madurai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sun Apr 20, 2008 4:02 pm    Post subject: Kannikku Kulamaedhu Reply with quote

Dear Mr.Balaji,
You are yet another rasika to have been irretrievably possessed by MSV- KD COMBINATION - ' A NOT -TO REAPPEAR ' PAIR OF TFM. As on date, we can only lament of what a treasure we have had and how insensitive and immune are the present day lyricists and so-called composers of TFM. Innumerable write-ups have come on 'KARNAN' in our own site. As perennial as 'MAHABHARATHAM', KARNAN SONGS HAVE DULY ROOTED THEMSELVES IN THE MINDS OF THOSE WHO HAVE HEARD THEM ONCE. A student of mine recently asked me the qustion "Sir, I heard a song in Karnan and the music was refreshingly fine- why such songs are not coming up now? I just told him - So long as you people clap around mediocrity, more inferior songs and composers would parade in abundance. I explained to him that the industry and media started projecting undesirable quality in TFM; so nothing better can emerge until we discern music [harmony] from noise.
Coming to KARNAN , all songs were scripted and structured in 2 days time at Hotel Woodlands, Bangalore. MSV- KD pair was the most sought after in TFM those days. Sensing that the duo would not be able to devote time exclusively for KARNAN, the producer Director of the movie B.R.Pantulu, packed them off to Bangalore with a specific condition that they should get back to Madras only after, all the ground work and lyrics for songs are ready. [The expected time was about 8-10 days]. But both these ASURANS [ my pet reference to MSV and KD to refer to their ability]
did everything in 2 days and returned. [ You can imagine how nervous would Mr.Pantulu have been [seeing them back in 2 days] until they briefed him that all the 10+ songs are ready].
Another intersting piece to share here is : In those days, music for most movies of Puranic and Historic themes were handled by G Ramanathan or KV.Mahadevan . All the then younger generation TFM lovers had a wrong notion that MSV-TKR are not very adept in Carnatic / classical music. [Based on this very same unfounded notion, recently Mr.A.V.Ramanan said that KVM has composed music for Karnan]. One major factor for this notion was Mellisai mannar's novel choice of Piano, Mandolins, Guitars, Bongo, Triple Bongo, Congo, Trombo, Accordion, Trumpet and every other item like electric guitar. I can without hesitation point out that it was MSV - TKR and later MSV who brought a revolution in orchestration. I do not refer to the mere choice of instruments of varied description some of which were unheard of in pre MSV times. The prolific synthesis of harmony in all their songs duly won them the accolade "MELLISAI MANNARGAL" USING A REAL plethora of instruments, MMs drew extremely fine Mellisai. From an array of instruments , they weaved a musical magic , a magic that stays fresh in seamless harmony and matchless virginity , while according the due place of pride to the lyric. So to say, that has been the GRAMMAR and GRANDEUR of MSV's music. Rather he [they] took pains to ensure that the lyric stayed rich and high by even receding the orchestration by a few decibels. On occasions infusing moments of silence through the thick of a song was a beauty in strategy. Even in his days of uncrowned monarchy in music, MSV alone has stuck to humility , leaving a lesson for us to learn that "HUMILITY CAN NOT LOWER ANYONE".
With so much of music in all his cells, no doubt MSV demonstrated his supremacy in KARNAN, FOR ALL TIME TO COME that Mellisai mannar is indeed NALLISAI MANNAR of all Genre and Times. There are several instances of songs being composed in seconds and embellished in minutes. That is MSV- a true legend.
Warm regards Prof. K.RAMAN Madurai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Mon Apr 21, 2008 4:30 pm    Post subject: Reply with quote

Quote:
You are yet another rasika to have been irretrievably possessed by MSV- KD COMBINATION - ' A NOT -TO REAPPEAR ' PAIR OF TFM


Dear Professor,

SPB exclaimed the same on 19th APr in Jaya TV Hamam programme as he summed up the performance of the participants !

Indha MSV-Kannadasanai pondra oru aniyai meendum parpathu impossible . And Director Vasanth noded in approval !
Sir, I think MSV knew exactly what output he can derive from Kavignar & Kavignar in turn would know what Meter he is going to dish out !

Amazing combination Very Happy
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Wed Apr 23, 2008 7:49 pm    Post subject: Kannukku kulamaedhu Reply with quote

Dear Mr. Balaji,
Nice to have your reaction, citing SPB's appreciation of KD-MM duo as the most resourceful pair in tfm. Yet, it is sad that people do not have the frankness to honestly say what they know. Fearing some cosequence many either hold back truth or simply play innocent by diverting the topic to the actor/ actress and put on innocence as a cover of their mind. But, ardent lovers of music dutifully expect that the composer be acknowledged, more as a logical acceptance of merit. That is why feel let down when THE COMPOSER IS NOT DULY ACKNOWLEDGED. Thank you for your kind response.
Warm regards Prof.K.Raman Madurai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Wed Apr 23, 2008 9:31 pm    Post subject: Reply with quote

பாலாஜி, இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. உங்களின் அழகான விளக்கம் இந்த பாடலை போலவே மிகவும் அழகாக உள்ளது. இந்த கர்ணன் என்ற காவியத்தை, ரசிக்கும் மனதையாவது கடவுள் நமக்கு கொடுத்திருக்கிறாரே, அதற்கே நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் தேவகானம். ஒவ்வொரு முறையும் இந்த பாடல்களை கேட்கும்போதும் என் மனம் தேனிசை வெள்ளத்தில் மிதக்கும்.
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Sun Apr 27, 2008 2:40 pm    Post subject: Reply with quote

அன்புள்ள பாலாஜி,

'கண்ணுக்கு குலமேது" பாடலின் (தவறு, ஒரு இசைக்காவியத்தின்) உங்கள் அழகான வர்ணனையை நான் (அன்றே படித்திருந்தாலும்)
இன்று மிக நிதானமாகப் படித்து பிரமிப்படைகிறேன் ( பாடலின் அருமைக்கும் உங்கள் எழுத்தின் மேன்மைக்கும்!).

ஒவ்வொரு வரியின் வலிமை, கவிதை, இசை, பாவம் எல்லாம் சொல்லிலடங்காது.

உங்கள் விமரிசனம் படிகக படிக்க எனக்கு சமீபத்தில் ஏற்பட்ட அனுபவம் ப்ற்றி எழுதத்தோன்றியது.

சமீபத்தில் நடந்த எம் எஸ் வி டைம்ஸ் ன் 'வின்டேஜ் விசு" நிகழ்ச்சிக்கு நம் மாஸ்டரை என் காரில் அழைத்துவரும் பாக்யம் எனக்குக்கிடைத்தது. அவர் ஹாலில் இருக்கும்போது இசைக்கவேண்டிய பாடலாக தெரிவுசெய்யப்பட்டு, இது பாடப்பட்டது.
அவர் அருகில் அமர்ந்துகொண்டு, அவர் ஊர்ந்து கவனித்து, அவர் ரசித்த அழகை நான் ரசித்தேன்.

நீங்கள் ரசித்த வரிகள், சங்கதிகள், இசை நுண்ணீப்புக்கள், பாவங்கள் யாவற்றையும் அவர் ரசித்தது, நடு நடுவே என்னைப்பார்த்து புன்சிரித்தது எல்லாம், அவர் உங்கள் ரசனைக்கு அளித்த அங்கீகாரமாக்கருதுகிறேன்.

நன்றி
ராம்கி.,
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group