"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

NAAN KAVIGNANUM ILLAI ( PADITHAAL MATTUM PODHUMAA )

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sun Apr 06, 2008 6:34 pm    Post subject: NAAN KAVIGNANUM ILLAI ( PADITHAAL MATTUM PODHUMAA ) Reply with quote

நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலெனும் ஆசையில்லா
பொம்மையும் இல்லை

இரவு நேரம் பிறரை போலே என்னையும் கொல்லும்
துணையிருந்தும் இல்லை என்று போனால்
ஊர் என்ன சொல்லும்

அன்பே ஆருயிரே இன்பமே இன்னுயிரே
பண்போடு அன்போடு படியேறி வந்தவளே
பார்த்து பார்த்து மயங்க வைத்து
காத்து காத்து நிற்க வைத்த
கண்ணே உன்மேல் பாட்டு பாட

நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
காதலெனும் ஆசையில்லா
பொம்மையும் இல்லை

காட்டு மானை வேட்டையாட தயங்கவில்லை
இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே
கூட்டு வாழ்கை குடும்ப வாழ்கை புரியவில்லையே நான்
கொண்டு வந்த பெண் மனதில் பெண்மையில்லையே

நான் அழுதால் சிரிக்கிறாள்
சிரித்தால் அழுகிறாள்
கொஞ்ஜினால் குதிக்கிறாள்
கெஞ்ஜினால் மிதிக்கிறாள்
இருப்பதா இறப்பதா
அழுவதா சிரிப்பதா
அம்மா அம்மா..தாயே


இந்த பாடல் நடிகர் திலகம் பீம்சிங் கூட்டில் உருவான பா வரிசையில் மற்றொரு குடும்பப்படத்தில் அமைந்தது

எஸ்.வி.ரங்காராவ், சஹஸ்ரநாமம் , சாவித்ரி , ராஜசுலோசனா , பாலாஜி , கண்ணாம்பாள் ,நடிகவேள் எம்.ஆர்.ராதா என்று ஒரு பெரும் நடிகர் பட்டாளமே சேர்ந்து அமைந்த நல்ல படம்… அறுபதுகளில் வெளிவந்தது

மூத்த அண்ணன் பாலாஜி படித்தவர்…இளையவர் சிவாஜி…படிக்காதவர் ..ஆனால் நல்ல குணம் கொண்டவர்….
பாலாஜி மென்மையானவர்…..சிவாஜி..கொஞம் முரட்டுதனமானவர்..ஆனால் மனதில்
ஒரு குழந்தையை போன்றவர்…

அண்ணன் தம்பி இருவருக்கும் சேர்ந்து பெண் பார்க்க அவர்கள் மாறி செல்ல பாலாஜிக்கோ சாவித்ரியை மிகவும் பிடித்துபோக நிலைமையை மாற்றி அவர் சாவித்ரியை கை பிடிக்கிறார்
சிவாஜியை மணக்கும் ராஜசுலோசனாவுக்கோ அவர் மிக படித்தவர் என்று தவறான கணக்கு போட்டு மாபெரும் அதிற்சி
அடைகிறார்….அவரின் குணாதிசயங்கள் இவருக்கு துளிகூட பிடிக்காமல் போக… இவர்களின் மண வாழ்க்கை நிம்மதியில்லாமல் போகிறது..தினமும் ஒயாக சண்டை அவரின் ஒவ்வொரு எதிர்பார்புக்கும் நேர் எதிராக சிவாஜியின் குணத்தை பார்த்து மேலும் மேலும் அதிர்ச்சி மொத்தமாக வெருக்கும் சுழ்நிலை உருவாகிறது….சிவாஜிக்கோ என்றாவது ஒரு நாள் ராஜசுலோசனாவின்
நம்பிக்கயினையும் அன்பினையும் பெற்றுவிடலாம் என்று நம்பிக்கை

இந்த சுழ்நிலையில் ஒரு அருமையான் பாடலை திரு பீம்சிங் புகுத்தியுள்ளார்….

முரட்டு கதாபாத்திரம் என்பதால் அவரின் நடை , உடை , பாவனை எல்லாமே சற்று மாறுபட்டு நடித்திருப்பார் ….இவரா பாலும் பழமும் படத்தில் ஒரு மருத்துவராக நடித்தார் என்று நினைக்கவே
வியப்பாக இருக்கும !! அப்படி பட்ட ஒரு பாத்திர அமைப்பு ..நடிப்பு

விலங்குகளை வேட்டையாடுபவர் என்பதால் ஒரு வித கரடுமுரடான உடையும், தடிமனான உடல்
அமைப்பும் கொண்டு மிக ஸ்டயிலாக வந்துகொண்டே பல்லவியை துவக்கும் அவர் போக போக
தளர்ச்சியடந்து வருத்ததுடனும் அழுதுகொண்டே முடிப்பார்.. ராஜசுலோசனாவும் அருமையாக
நடிப்பார்….படம் முழுவதும் வெறுப்பை காட்டி முடிவில் அன்பை வெளிப்படுத்துவார்…

அழகான கம்பீரமான நடை
ஹவாய் கிடாரினை அலட்சியமாக திருகிக்கொண்டே ஒரு பார்வை
கைகளை முன்னும் பின்னும் வீசிக்கொண்டு உட்காரும் பாங்கு
கைகளை இடுப்பில் வைத்துகொண்டே மனைவி மீது பரிதாபமான பார்வை

இதற்காகவே மீண்டும் மீண்டும் பார்க்கலாம்

காட்டு மானை வேட்டையாட தயங்கவில்லை
இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே


கவிஞர் ஒரே வரியில் படத்தின் கருவை சொல்லியுள்ளார்.

ஹவாய் கிடாரும் , சாரங்கியும் , தபலாவும் கொண்டு நம் மெல்லிசை மன்னர்கள்
மற்றுமொரு மயங்கவைக்கும் பாடலை கொடுத்துள்ளனர்…
மெதுவான சந்தம்….இதமான ரிதம் கிடார் துணை…டி.எம்.எஸ். விருத்தம்போல பாடுகையில்
அழகான தபலா ……சுழ்நிலைக்கேற்ப அமைத்த மற்றுமொரு நல்ல பாடல்…
இது சிவாஜி ரசிகர்களிடையே மிகவும் ரசிக்கப்பட்ட ஒரு பாடல்…
அறுபதுகளில் மிக ப்ரபலம் என்று கேள்விபடுகிறேன்…

இன்றும் கேட்கிறோம் !!!
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Mon Apr 07, 2008 1:45 pm    Post subject: YET ANOTHER MASTER PIECE Reply with quote

Dear Balaji,

Truely amazing. I really envy your postings. They are packed with so much of emotions like how MSV packs each of his songs with melodies. Fabulous job. I wish to make a special mention about two of MSV's greatest intrumentalists who have played havoc in this particular song - Mandolin Raju & Dilruba / Sarangi Shanmugam (I am not sure of the name but am sure of the instrument). Both the instruments have given life to this song and espicially the Dilruba - What a way to show case the amount of sadness and the heavy heart with which Shivaji's role is picturised. Master piece of a song and Master piece of Direction!!!

CHEERS
MSV IS M USIC
VAIDY
_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Tue Apr 08, 2008 6:50 pm    Post subject: Reply with quote

Dear Vaidy,

Ella pugazum Masterukke ! His mesmerizing melody makes us write automatically. Very Happy
May you pls find out how the tune was set . Pls ask for some quick flashback fm the Master Smile
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Apr 11, 2008 3:10 am    Post subject: Reply with quote

பாலாஜி, இந்த இனிமையான பாடலுக்கேற்ற அருமையான விவரிப்பு. இந்த பாட்டிற்கான சூழ்நிலையையும் அழகாக எழுதி இருக்கிறீர்கள். நன்றி. இந்த படத்தில் அனைத்து பாடல்களும் அருமை. குறிப்பாக இந்த பாடலில் சிவாஜி அவர்களின் ஸ்டைல் மிக அழகு.
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group