"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics -Unnidathil ennai koduththen -avalukkendru oru manam

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Sun Feb 03, 2008 2:31 am    Post subject: Lyrics -Unnidathil ennai koduththen -avalukkendru oru manam Reply with quote

படம்:அவளுக்கென்று ஓர் மனம் பாடியவர்: எஸ். ஜானகி
இசை: மெல்லிசை மன்னர்

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை உள்ளம் எங்கும் அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
(உன்னிடத்தில்)

காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது
இதழுடன் இதழாட நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும் வருவேன்
தடுத்தால் கூட தருவேன்
(உன்னிடத்தில்)

வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
இனி ஒரு பிரிவேது, அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே
இருவர் நிலையும் சிலையே
(உன்னிடத்தில்)

ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
ஊடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே
காலையில் கனவுகள் எங்கே
(உன்னிடத்தில்)

ஸ்ரீதர் அவர்கள் இயக்கிய இந்தப்படம் ஒரு பெண்ணின் மனதை பற்றியது. கதாநாயகி தன் மனதில் உள்ள காதலை பாடல்கள் மூலம் மட்டுமே கதாநாயகனுக்கு வெளிப்படுத்துவாள். அதில் ஒரு பாடல் சுசீலா அவர்கள் பாடிய 'மலர் எது என் கண்கள்தான் என்று சொல்வேனடி'. இன்னொன்று இந்தப்பாடல். ஆனால் கதாநாயகியின் காதலை கடைசிவரை புரிந்துகொள்ளாத காதலனாக ஜெமினி அவர்கள் நடித்து இருப்பார். தன் மனதில் தோன்றும் உணர்வுகளை யாரிடத்திலும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணாக பாரதி அவர்கள் மிக அழகாக நடித்து இருப்பார்கள்.

ஒரு முறை இவர்கள் இருவரும் தனியே வெளியே செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஒரு அழகான இயற்கை சுழல் நிறைந்த இடத்திற்கு செல்வார்கள். அப்பொழுதும் அவள் தன் மனதில் உள்ள காதலை இந்த பாடல் மூலம் வெளிப்படுத்துவதாக கனவுதான் காண்பாள். இந்தப்பாடலை மெல்லிசை மன்னர் அவர்கள் 'ஹிந்தோளம்' என்ற இனிமையான ராகத்தில் இசை அமைத்து இருக்கிறார். இந்தப்பாடல் இந்த ராகத்தில் மிகவும் கொஞ்சுவது போலவும், கெஞ்சுவது போலவும் அழகாக இருக்கும். ஜானகி அவர்கள் மிக அருமையாக இதை பாடி இருக்கிறார்கள். அவர் குரலும் மென்மை, இந்த பாடலும் சரணத்தில் high pitch-il பாடுவதாக அமைந்திருக்கும். இருந்தும் ஜானகி அவர்கள் இந்தப்பாடலை மிக தெளிவான உச்சரிப்பில் இனிமையாக பாடி இருக்கிறார்.

இந்தப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் அவள், அவன் மேல் கொண்ட காதலை சொல்லுவதாக கவிஞர் அழகாக எழுதி இருப்பார்.

"வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது "

கட்டுக்கடங்காத வெள்ளம் கரைபுரண்டு ஓடி கடலில் கலப்பதுபோல அவள் மனதில் ஓடும் எண்ணங்கள் வேகம் எடுத்து அவளுக்கு இன்பம் தரும் அவன் இல்லத்தை அடைவதாக எழுதி இருப்பது மிகவும் பொருத்தம்.

'இனி ஒரு பிரிவேது, அந்த நினைவுக்கு முடிவேது'

அவனுடன் வாழப்போகும் வாழ்க்கையை நினைத்து கற்பனை செய்யும் அவள் எண்ண ஓட்டத்திற்கு எது முடிவு?

மெல்லிசை மன்னர் அவர்களின் பின்னணி இசை இந்தப்பாடலில் கொள்ளை அழகு. 'காற்றில் ஆடும்' இந்த சரணங்களுக்கு முன்னால் வரும் அந்த புல்லாங்குழல் இசை நம்மை காற்று வந்து தழுவுவது போலவே தோன்றும். அது போல இரண்டாவது சரணத்தில் 'வெள்ளம் செல்லும் வேகம்' இதற்க்கு முன்னால் வரும் அந்த வயலினும் புல்லாங்குழலும் சேர்ந்து நம்மை அந்த நீரின் வேகத்திற்கு இணையாக அழைத்து செல்லும்.

இவை அனைத்தையும் விட கடைசி சரணத்தில் பாடல் வரிகளுக்கு முன்னால் மேளத்துடன் ஷெனாய் சேர்ந்து அந்த ஹிந்தோள ராகம் நம் மனதை கொஞ்சும். மற்ற இரண்டு சரணத்திலும் ஒவ்வொரு வரியின் முடிவிலும் வயலின் வருவது போல கடைசி சரணத்தில் ஷெனாய் வருவது மிகவும் இனிமை. மெல்லிசை மன்னர் நம்மை இந்த ஷெனாய் இசையின் மூலம் இசை வெள்ளத்தில் திளைக்க வைக்கிறார்.

இந்த பாடலின் இசையும், வரிகளும் ஜானகி அவர்களின் குரலும் என் மனதை கரையச் செய்யும்.
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Sun Feb 03, 2008 12:28 pm    Post subject: Reply with quote

Dear Madam, Beautiful write-up!
What a coincidence, this evening when I found the film DVD, I was elated, thinking about this song, picked up the DVD to watch this week.
Here I am finding your beautiful write-up.
Very nice!
Neenga romba azhagaa ezhudharel!
Vinatha.
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Sun Feb 03, 2008 12:59 pm    Post subject: Reply with quote

"உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்..."...

முழுப்பாடலுடன், அதுபற்றிய அருமையான மீனாக்ஷி மேடத்தின் விளக்கம், உள்ளம் கொள்ளை கொண்டது - அப்பாடலைப் போலவே !!

தொடர்ந்து எழுதுங்கள் மீனாட்சி மேடம்.

ரசிகன்
ராம்கி.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Sun Feb 03, 2008 6:37 pm    Post subject: A GREAT SONG FOR SJ BY OUR LEGEND Reply with quote

Dear Meenakshi,

A fabulous write-up that stole our hearts. This is one of my most favourite songs by SJ and Venky (tvv raghavan) & I frequently listen to all the songs sung by SJ for our Master and it is absolutely unbelievable the way our Master has handled SJ. This particular song's orchestration deserves a special mention as there will be a marvelous usage of Shehnai and scale & rythm speed change. An absolue stunner by our Master!!!

CHEERS
MSV, THE WORLD OF MUSIC!!!
VAIDY

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group