"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Aayiram iravugal varuvathundu... Karpagam

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
ravikumar



Joined: 12 Dec 2007
Posts: 25

PostPosted: Sat Jan 19, 2008 1:16 am    Post subject: Aayiram iravugal varuvathundu... Karpagam Reply with quote

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு.. ஆனால் இதுதான் முதலிரவு..

திரைப்படங்களில் கனவன் மனைவி அன்னியோன்யத்தை காண்பிப்பது மிகவும் கடினமான விஷயம். கிட்டத்தட்ட கம்பி மேல் நடப்பதை போன்ற சாகசம் அது. ஒரு புறம் சாய்ந்தால் விரசமாகவும், மறுபுறம் சாய்ந்தால் கேலிக்கூத்தாகவும் முடிந்து விடும். சமீப கால படங்களில், இந்த சாகசத்தை அறிந்திராத சிலரின் படைப்புகள் எவ்வாறு விரசமாகவும், கேலிக்கூத்தாகவும் தோன்றுகிறது என்பதை நாம் அறிவோம்.

திரைப்படப்பாடல்களில், இந்த காட்சியை கையாள்வது இன்னமும் கடினம். பாடப்படும் வரிகளும், பாடகர்களின் உணர்ச்சி பாவமும் கொஞ்சம் பிசகினாலும் மொத்த உழைப்பும் வீனாகிவிடும். பாடல் வரிகளோ அல்லது பாடகர்களின் வெளிப்பாடோ விரசமாக இருந்த காரணத்தினால் சில பாடல்கள் வானொலியில் ஒலிபரப்ப தடை செய்யப்பட்டதுண்டு. மிக குறைவான பாடல்களே இந்த எல்லைகளை தாண்டி பிரபலம் அடைந்துள்ளன. அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று தான் ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு’.

கற்பகம் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல், முதலிரவு அறைக்கு தோழியை அழைத்து செல்லும் பெண் கிண்டலாக முதலிரவின் ரகசியங்களை எடுத்துரைப்பது போல அமைந்த பாடல்.

எளிமையான, நேர்த்தியான பாடல். இதை வெற்றிபெற செய்வது இசையம்பாளர்களின் கையில். கனவன் மனைவி உறவை திருமணமாகாத ஒரு பெண்ணில் நிலையிலிருந்து சொல்ல வேண்டும் எனவே விரசமோ, காமமோ வெளிப்பட கூடாது. (திருமணமாகாத பெண் பாடுவதை, பாடல் வரிகளில் புத்திசாலித்தனமாக ‘யாரோ சொன்னார் கேட்டேன்’ என குறிப்பிட்டுள்ளார் வாலி).

இசையமைப்பாளரின் பங்குக்கு, புதுமையும் புத்திசாலித்தனத்தையும் காட்ட வேண்டாமா? பாடல் வரிகளை பார்த்தால் அல்ல அல்ல கேட்டால் தான் இவர்களின் பங்கு புரியும்.

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு..
ஆனால் இதுதான் முதலிரவு..
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு...
ஆனால் இதுதான் முதல் உறவு..
ஆனால் இதுதான் முதல் உறவு..


வயதில் வருவது ஏக்கம்.. அது
வந்தால் வராது ... (தூக்கம்)
வந்ததம்மா மலர் கட்டில்.. இனி
வீட்டினில் ஆடிடும் ...(தொட்டில்)
ஆஹா..ஆஹா அஹாஆஹா ஆ
ஆரி ராரி ஆரிரரோ

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு..
ஆனால் இதுதான் முதலிரவு..
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு...
ஆனால் இதுதான் முதல் உறவு..
ஆனால் இதுதான் முதல் உறவு..


வருவார் வருவார் பக்கம்..உனக்கு
வருமே வருமே ..(வெட்கம்)
தருவார் தருவார் நித்தம்..
இதழ் தித்திக்க தித்திக்க ...(முத்தம்)
ஆஹா..ஆஹா அஹாஆஹா ஆ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ


ஆயிரம் இரவுகள் வருவதுண்டு..
ஆனால் இதுதான் முதலிரவு..
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு...
ஆனால் இதுதான் முதல் உறவு..
ஆனால் இதுதான் முதல் உறவு..


யாரோ சொன்னார் கேட்டேன்..நான்
கேட்டதை உன்னிடம் சொன்னேன்..நானாய்
சொன்னது பாதி ..இனி தானாய்
தெரியும் மீதி..
ஆஹா..ஆஹா அஹாஆஹா ஆ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு..
ஆனால் இதுதான் முதலிரவு..
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு...
ஆனால் இதுதான் முதல் உறவு..
ஆனால் இதுதான் முதல் உறவு..


மேலே உள்ள வரிகளில் அடைப்பு () குறியில் உள்ள வார்த்தைகளை பாடலில் சொல்லாமல் இசையால் உணர்த்தி இருப்பார்கள். இது இசையமைப்பாளர்கள் தங்களின் இசை மீது கொண்டுள்ள தன்னம்பிக்கையையும், கதாபாத்திரத்தின் உணர்வுகளை எவ்வளவு தூரம் புரிந்து கொண்டுள்ளனர் என்பதையும் தெளிவுபடுத்தும்.

அதே போல் பாடலின் பல்லவியில் ‘ஆயிரம் உறவுகள்.. .. வருவதுண்டு’ என்பதை ஒரு இடைவெளி கொடுத்து பாட செய்து ‘ஆனால் இது தான் முதல் உறவு’ என்பதை இருமுறை பாடச் செய்து அந்த உறவின் முக்கியத்துவத்தை கோடிட்டுள்ளனர். இவர்களின் சிறப்புக்கு இன்னொரு உதாரணம்.. ஒவ்வொரு சரணம் முடிந்தவுடன் வரும் ஹம்மிங்கில் ‘இனி வீட்டில் ஆடிடும் (தொட்டில்)’ என்ற வரிக்கு பின்னர் மட்டும் தாலாட்டு ஒலிக்க செய்தது. What a perfectionist!!

பாடல் எளிமையான வயலின், குழல், சிதாரின் இசை. (ஆனால் இரண்டாம் இடையிசையில் மேற்கத்திய தொனி ஒலித்தது காட்சியமைப்புக்கு சற்று பொருந்தாமல் இருந்தது. விவரிக்கப்பட்ட காட்சி பாடல் ஒலிப்பதிவுக்கு பின் மாற்றப்பட்டதை போல் தோன்றுகிறது.).

படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே சிறப்பானவை. அனைத்தும் வாலியின் பாடல்கள். இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்னனுக்கும் கவிஞர் கண்ணதாசனுக்கும் ஏற்பட்ட ஒரு செல்ல போட்டியால் -- கவிஞரின் பாடல்கள் இல்லாமல் தன்னால் படத்தை வெற்றிபெற செய்ய முடியும் என்று காட்ட மன்னரின் உதவியை நாடினார் கே.எஸ்.ஜி -- மன்னரால் கே.எஸ்.ஜிக்கு அறிமுகம் செய்யப்பட்டார் வாலி. இந்த விஷயம் இவர்களின் நட்புக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. இவரின் அடுத்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் கண்ணதாசன் தான் எழுதினார்.


கற்பகம் படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றது குறித்த வாலியின் கருத்து இது..

‘கற்பகம் படம் வருவதற்கு முன் சாப்பிட காசில்லாமல் பட்டினி கிடந்தேன்.
கற்பகம் படம் வந்த பின் சாப்பிட நேரமில்லாமல் பட்டினி கிடந்தேன்’.

_________________
Ravikumar
Back to top
View user's profile Send private message
Damodaran Pachaiappan



Joined: 21 Oct 2007
Posts: 119
Location: Ireland

PostPosted: Tue Jan 22, 2008 3:24 am    Post subject: Reply with quote

Dear Mr.Ravikumar,
What an excellent write up! I have listened to this song several times before but I am able to appreciate it better after reading your posting. I grew up on the songs of Mellisai Mannar(gal), and I seem to have taken so much for granted . In all those years that MSV has been creating music, I cannot recall any instance when he contravened the limits of decency and decorum. Even a first night song where there is plenty of opportunity for vulgarity to creep in (both in lyrics and in music), has been done with so much subtlety and sweetness that it almost sounds like a lullaby. Being the first film for Vaalee, it is almost certain that our Emperor took the lead in all this. By the way, thanks for sharing all the information about Vaalee.
Expecting to see more from you,
With regards,
Damodaran Pachaiappan
_________________
Dr.Damodaran Pachaiappan
Back to top
View user's profile Send private message Yahoo Messenger MSN Messenger
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Tue Jan 22, 2008 6:56 am    Post subject: Pick a Song and Analyze! -Reference to Vaalee Reply with quote

Dear Dr,
Nice to read your responses to Mr. Ravikumar's observation on 1000 IeavugaL varuvadhundu from Karpagam. One point that needs being reiterated was, the role of MSV- TKR in making the movie a big hit was of a mammoth value. The movie did not boast of stars except Savitri and it was the very first screen appearance for KR.Vijaya. It was a story-rich occasion done on B&W with no romantic sequences and songs of that version. Naturally, the MMs have raised the songs to a dimension where the lyric value has been brilliantly elevated besides being embellished. Also, another interesting feature was the movie had only 4 songs [as against the then 6-8 songs trend in a movie]. All the songs were rendered by ONLY P.Susheela. [A sharp contrast to POLICEKAARAN MAGAL where all songs for female artistes were done only by S.Janaki] Karpagam songs had no male voice.
Incidentally Karpagam was not the first movie for Vaalee.
His film career began in Sathya movies' DEIVATHTHAI, WHERE K.Balachander also opened his innings as a dialogue writer.

Another pet reference by Vaalee of MSV goes thus.

"VARU MAANATHIRKU VAZHI ILLAMAL IRUNDHA NAAN,
VARUMAANA VARI KATTUM NILAIKKU UYARNDHAEN" MSV ai Kanda pinbu'.
But these things didnot strain MSV's relation with Kannadasan / Directors / Actors as every one did realize that MSV does the same help to anyone, only with the sole intention that the songs must come out very well.
From every reckoning MSV is a GIANT.
Thank you for the nice opportunity.

Warm regards Prof.K.Raman Navi Mumbai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group