"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Megam thiraluthadi - Thanneer Thanneer

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
ravikumar



Joined: 12 Dec 2007
Posts: 25

PostPosted: Sat Jan 12, 2008 12:22 am    Post subject: Megam thiraluthadi - Thanneer Thanneer Reply with quote

மேகம் திரளுதடி கும்மிருட்டு கம்முதடி - தண்ணீர் தண்ணீர்

மெல்லிசை மன்னர் தனது வழக்கமான மெல்லிய இசை பாணியிலிருந்து விலகி, தனது இன்னொரு பரிணாமத்தை காட்டிய படம். அதிகமான கிராமத்து படங்களும், பாடல்களும் வந்து கொண்டிருந்த நேரம் அது. ஐந்தாறு பெண்களின் குலவையும், கிராமத்து கலாச்சாரத்திற்கு சிறிதும் பொருந்தாத எலக்ட்ரிக் சமாச்சாரங்களுமே சிறந்த கிராமிய இசை என பலரும் எண்ணிக் கொண்டிருந்த காலம். மன்னரின் இசை ஓய்வு பெற்று விட்டது, அவரது இசை கிராமிய படங்களுக்கு எடுபடாது என்று ஒரு கருத்து நிலவியது.

உண்மையான கிராமிய இசை, அவர்களின் உணர்வோடு ஒட்டிய இசை, இது தான் என்பதை சத்தமில்லாமல், ஆனால் ஆணித்தரமாக உணர்த்தினார் எம்.எஸ்.வி.

ஆட்சியாளர்கள்/ அதிகாரிகளின் குழப்பத்தினால், நதிகள் இனைப்பு திட்டம் எப்படி கிடப்பில் போகிறது என்பதை விளக்கும் வலிமையான கருத்தை கொண்ட படம்.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக மழை துளியை பார்த்திராத கிராம மக்கள், மேகம் கருக்க துவங்கியவுடன், மழை வருமென்ற சந்தோழத்தில் பாடுவதாக அமைந்த பாடல்.

பாடலின் துவக்கமே பம்பை, உருமி, தப்பட்டை, நையாண்டி மேளம், நாயனம் என படு அமர்க்களமாக இருக்கும்.

மேகம் திரளூதடி மின்னிருட்டு கம்முதடி
இன்னும் கருக்குதடி ஈசான மூலையிலே ..
நாம் கும்பிட்டோமே ....(கோரஸ்)

மந்தையிலே மாரியாயி மலை மேல மாயவரே
இந்திரரே சூரியரே இப்ப மழை பெய்ய வேனும்..
இப்ப மழை பெய்ய வேனும்.. ....(கோரஸ்)


மேகம் திரளூதடி மின்னிருட்டு கம்முதடி
இன்னும் கருக்குதடி ஈசான மூலையிலே ..
நாம் கும்பிட்டோமே ....(கோரஸ்)

மந்தையிலே மாரியாயி மலை மேல மாயவரே
இந்திரரே சூரியரே இப்ப மழை பெய்ய வேனும்..
இப்ப மழை பெய்ய வேனும்.. ....(கோரஸ்)

சித்திரையில் பாத்து விட்டோம் செல்ல மழை பெய்யவில்லை..
செல்ல மழை பெய்யவில்லை.. ....(கோரஸ்)
ஐப்பசியில் பாத்து விட்டோம் அடை மழை பெய்யவில்லை..
அடை மழை பெய்யவில்லை ....(கோரஸ்)

அம்மாவே ஜக்கம்மாவே உன் கண்ணு பட்டா மும்மாரி பெய்யும் வானே
அம்மாவே ஜக்கம்மாவே உன் கண்ணு பட்டா மும்மாரி பெய்யும் வானே ....(கோரஸ்)

மேகம் திரளூதடி மின்னிருட்டு கம்முதடி
இன்னும் கருக்குதடி ஈசான மூலையிலே
ஈசான மூலையிலே., ....(கோரஸ்)

ஆஆ ,,,

மட்டமலை ஐய்யனாரே.. மாவூத்து வேலவரே
மழையை எறக்கிவிடு வந்த பசி தீர்த்துவிடு
அம்மாடி முத்துமாரி உன் கண்ணு பட்டா மாசத்துக்கு மூணு மாரி
உன் கண்ணு பட்டா மாசத்துக்கு மூணு மாரி....(கோரஸ்)

மேகம் திரளூதடி மின்னிருட்டு கம்முதடி
இன்னும் கருக்குதடி ஈசான மூலையிலே ..
ஈசான மூலையிலே., ....(கோரஸ்)

ஊசி போல மின்னி மின்னி ஊர் செழிக்க பெய்யும் மழை
வாசலிலே பெய்ய வையம்மா என் ஜக்கம்மா
வானம் பாத்த பூமி இதம்மா..
என் ஜக்கம்மா வானம் பாத்த பூமி இதம்மா.. ....(கோரஸ்)

ஏர் பிடிக்கும் தம்பியெல்லாம் ஏங்கி ஏங்கி நிக்காங்க
ஆங்.. ஏங்கி ஏங்கி நிக்காங்க ....(கோரஸ்)
காரணியா பெய்ய வேணுமே.. என் ஜக்கம்மா,
கரிச காடு வெளைய வேணுமே


வேலியிலே களை பறிச்சு விரல் நிறைய கொப்பளங்கள்
ஏழியையும் தூங்க விட்டோமே
என் ஜக்கம்மா விறகு வெட்டி வாழ வந்தோமே
என் ஜக்கம்மா விறகு வெட்டி வாழ வந்தோமே (கோரஸ்)


பத்து வருழமடி பச்ச தண்ணி பாத்ததில்ல
முத்து முத்தா பெய்ய வேணுமே
ஏரி கொளம் நிறைய வேணுமே
என் ஜக்கம்மா ஏரி கொளம் நிறைய வேணுமே

மேகம் திரளூதடி மின்னிருட்டு கம்முதடி
இன்னும் கருக்குதடி ஈசான மூலையிலே .
ஈசான மூலையிலே., (கோரஸ்)

பஞ்சம்கெட பாவம்கெட எங்கும் கொடி மஞ்சள் வர
பொங்கும் நதி வெள்ளம் வரனும்
நல்ல மானம் மதி தானம் கெட
மாறும் கலை ஞானம் கெட தோனும்படி வெள்ளம் வரணும்
தோனும்படி வெள்ளம் வரணும். (கோரஸ்).
தோனும்படி வெள்ளம் வரணும் (கோரஸ்)

அடி அம்மா உனை கேட்டோமடி கம்மாக்கரை நீரோடிட
உன் பார்வையை இங்கே தரனும்
நீ தொட்டா சுகம், விட்டா பசி கொட்டாவிடில் கிட்டாதடி
கொட்டும் மழை கொண்டே தரனும்..

கொட்டும் மழை கொண்டே தரனும்.. (கோரஸ்)
கொட்டும் மழை கொண்டே தரனும்.. (கோரஸ்)

மேகம் திரளூதடி மின்னிருட்டு கம்முதடி
இன்னும் கருக்குதடி ஈசான மூலையிலே ..
நாம் கும்பிட்டோமே(கோரஸ்)
ஈசான மூலையிலே.,


மேற்சொன்ன வரிகளை பாருங்கள். எந்தவித சந்தத்திலும் அடங்காத, நாட்டுப்புற பாடலுக்குரிய அனைத்து விஷயங்களும் உள்ளன. இதை முற்றிலும் உணர்ந்து, கிராம பண்பாடு மாறாமல் சிறப்பாக இசை அமைத்திருக்கிறார் மன்னர். கிராமிய பாடல்கள்/ தெம்மாங்கு பாடல்கள் பொதுவாக எந்த வித ராகத்தையும் அடிப்படையாக கொண்டு பாடப்படுவதில்லை. அதே போல் இதிலும் ராகம், தாளம் என ஒரு கட்டுக்குள் வைக்காமல், காளியாட்டம், தெருக்கூத்து, கும்மிப்பாட்டு என பல பாவங்களை வெளிப்படுத்தி உள்ளார். வரிகள் கரடு முரடாகும் போது துணைப்பாடகர்களின் குரலை உபயோகப்படுதிதி இருப்பது இன்னொரு புதுமை.

தெருக்கூத்து நாடகங்களில் பாடல் முடியும் போது, மேளத்தை மூன்று முறை ஒலித்து முடிப்பார்கள். இந்த பாடலை அதே வகையில் முடிக்கும் போது, பழங்கலைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து தகுந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தியுள்ளார் என்பது தெரிகிறது.

எத்தனை விதமான தாள வாத்தியங்கள் இந்த பாடலில்!! என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. படத்துக்கும், பாடலுக்கும் பொருத்தமான குரல் தெரிவு இன்னொரு சிறப்பம்சம்.


இதற்கு முன் பார்த்த ‘ஆறோடும் மண்ணில்’ பாடலுக்கும் இதற்கும் தான் எவ்வளவு வித்தியாசம். இரண்டும் கிராமிய பாடல் என்றாலும், காட்சியின் / கதாபாத்திரத்தின் தேவை உணர்ந்து, படம் வெளிவந்த காலத்தை புரிந்து விந்தை புரிந்துள்ளார் எம்.எஸ்.வி.

அவருடைய வார்த்தைகளில் ‘ பழமை மாறாத புதுமை ‘.

இதே படத்தில் மற்றொரு பாடலான ‘கண்ணான பூமகனே’ எனும் வைரமுத்துவின் புது கவிதை வரிகளுக்கு வித்தியசமான மெருகேற்றியிருந்தார். முதல் பாடலுக்கு வாத்தியங்களின் அணிவகுப்பை காண்பித்தவர், இந்த பாடலுக்கு ஒன்றிரண்டு வாத்தியங்களை மட்டுமே வைத்து இது கிராமத்து இசையின் இன்னொரு வடிவம் என எடுத்துரைத்தார்.

முதல் பாடலில் சந்தோஷத்தின் மொத்த வடிவை காட்டியவர், இரண்டாம் பாடலில் துயரத்தையும், வறுமையுடன் கூடிய தாய்மையையும் தெளிவுபட விளக்கியுள்ளார்.

இந்த அளவுக்கு கலாச்சாரத்தோடு ஒட்டிய கிராம பாடல் இதற்கு பிறகு வரவேயில்லை.

இந்தப்படம் வெளிவந்து 25 வருடங்களுக்கு மேலாகியும், படத்தில் சொல்லப்பட்ட பிரச்சினை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனை.

ஆனால் படத்தின் பாடல்களை பார்த்து இன்னும் எல்லோரும் வியந்து கொண்டிருப்பது மெல்லிசை மன்னரின் சாதனை.
_________________
Ravikumar
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Mon Jan 14, 2008 10:45 am    Post subject: Reply with quote

Nice song & a very good movie too. Its Komal Swaminathan’s stage play made a movie by KB. This song will be played when the poor villagers see some drizzle and believe that there will be heavy rains . They all run around to celebrate the expected arrival of monsoon which will put an end to their misery.
MSV did well in re-recording also. In this song, MSV uses all the native instruments Another noteworthy song is P.Susheela sung Kannaana poo magane… a thalaattu song. As rightly mentioned by Mr. Ravi, the song has just 1 or 2 instrumental support. Saritha is the lead performer . Radha Ravi, a police Constable is her husband. A jail Convict escapes and operates in disguise to help the villagers but what happens finally is a sad tale. KB wanted to create an awareness .
Though the movie expectedly failed at the box office, it got very good name for the entire crew including MSV. The songs were regular in AIR .

Barathi Raja acknowledged that its MSv’s best performance on re-recording / music after Apoorva ragangal.
Back to top
View user's profile Send private message Send e-mail
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Mon Jan 14, 2008 8:27 pm    Post subject: Reply with quote

Absolutely true dear friends.
I have seen that Komal's drama in stage...
Excellent movie with wonderful re-recording...

Ghatam is the only instrument (I think so) used in the song "Kannana poomagane..."
One more unusual song is there. Sung by Arundhathi (Actress is also Arundhathi). Intha actress dhan paadinangalanu I am not sure...
This song comes with natural sounds as bgm...

Another musical classic of our MASTER with KB.

The ack. of Bharathiraja is a new info to me...
Thanks...

The same way "Theerthakarayinile therku..." from Varumayin Niram Sivappu (Another musical classic of the above Duo). No instrumentation. May be some light guitar string...

MSV Rules...
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Thu Jan 17, 2008 5:11 am    Post subject: Re: Megam thiraluthadi - Thanneer Thanneer Reply with quote

Great write-up dear Ravikumar! The way you have explained "FOLK" is simply great.... And it pains if some does not seem to know (or rather do not want to know) what MSV has done for folk!
ravikumar wrote:
இதற்கு முன் பார்த்த ‘ஆறோடும் மண்ணில்’ பாடலுக்கும் இதற்கும் தான் எவ்வளவு வித்தியாசம்

Very true... This "VARIETY" is something that is unique to this greatest composer!!!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
rajeshkumar_v



Joined: 19 Apr 2007
Posts: 79

PostPosted: Sat Jan 19, 2008 3:30 am    Post subject: Reply with quote

Kannana Poomagane Kannurangu Sooriyane from the Same Film is a CLASS by MSV-PS combo!!
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group