"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Ammadi ponnukku thanga manasu.

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
ravikumar



Joined: 12 Dec 2007
Posts: 25

PostPosted: Sat Jan 05, 2008 4:50 am    Post subject: Ammadi ponnukku thanga manasu. Reply with quote

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு
-------------------------------------------
சமீப கால படங்களில் Track Singingகாக ஒரே பாடல், அதே இசையுடன் வெவ்வேறு பாடகர்களின் குரலுடன், சி.டி.க்களை நிரப்புவதற்காக, வருகின்றன. அவ்வப்போது ஒரே பாடல் இருவேறு காட்சிகளில் இடம் பெறுவதும் உண்டு. சில நேரங்களில், பாடல் வரிகள், காட்சிக்கேற்ப, கதாபாத்திரத்திற்கு ஏற்ப லேசாக வேறுபட்டு இருக்கும்.

அப்படி மெல்லிசை மன்னரின் படங்களில், இடம்பெற்ற ஒரு பாடல், ‘அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு’. படம் : ராமன் எத்தனை ராமனடி.

படத்தின் முதல் பாதியில் அப்பாவி கிராமத்து இளைஞனாக வரும் நாயகன் இரண்டாம் பாதியில் நகரத்து வாழ்க்கைக்கு பழகிய ஒரு நடிகனாக வருவார்.

அப்பாவியாக வெகுளித்தனத்துடன் பாடுவதற்கும், நடிகனான பின் நளினத்துடன் பாடுவதற்கும் தான் எத்தனை வித்தியாசம்? பாடலை பாடிய டி.எம்.எஸ், இசையமைத்த எம்.எஸ்.வி, நடித்த சிவாஜி கணேசன் என மூன்று பேரும் சேர்ந்து படைத்த ஒரு அற்புதம் இந்த பாடல்.

இரண்டாம் முறை சோகமாக ஒலிக்கும் பாடல், ஒரே சரனத்துடன் முடிந்துவிடும்.

‘அம்மாடிடிடிடிடி’ எனும் முதல் வார்த்தையில் தான் எவ்வளவு வித்தியாசம். துள்ளலுடன் மகிழ்ச்சி பொங்க சொல்லும் போதும், சோகத்துடன் சொல்லும் போதும் இசையால் எந்த அளவு உணர்ச்சிகளை வேறுபடுத்தி காட்ட முடியும் என்று நிருபித்துள்ளார் மன்னர்.

முதல் முறை வரும் பாடலில், கிராமத்து சூழலை விளக்க, தபேலாவின் சீரான நடையுடன் மற்றும் ஒரு சிறப்பு சத்தத்தை ** (கீழே பாடலில் குறிப்பிட) சேர்த்து அழகு படுத்தியிருப்பார். இடையில் நாயகன் மாட்டை விரட்டுவதை போல ‘டிர்டிர்’*** என சிறப்பு சத்தம்



அம்மாடி .. (ஒரு சிட்டிகை சத்தம்)
பொண்ணுக்கு தங்க மனசு ,, **
பொங்குது சின்ன மனசு .. **
கண்ணுக்கு நூறு வயசு **
அவ சொல்லுக்கு நாலு வயசு .. சொல்லுக்கு நாலு வயசு **

அம்மாடி ..
பொண்ணுக்கு தங்க மனசு ,, **
பொங்குது சின்ன மனசு .. **
கண்ணுக்கு நூறு வயசு **
அவ சொல்லுக்கு நாலு வயசு .. சொல்லுக்கு நாலு வயசு **

ஒஹ ஒஓ ..ஓ (ஒரு அழகிய தெம்மாங்கு)

எண்ணெயில் எரியும் விளக்கு .. அவள்
என்னையே அழைக்கும் சிரிப்பு ....
****
எண்ணெயில் எரியும் விளக்கு .. அவ
என்னையே அழைக்கும் சிரிப்பு ....
என்னவோ நடக்குது நடப்பு .. இதில்
ஏதோ சுகமும் இருக்கு

யாருக்கு இந்த கதை தெரியும் ... **
சாமிக்கு மட்டும் இது புரியும் .. **
பாலுக்குள் மோரும் கூட இருக்கும் .. **
நாலுக்கும் காலம் வந்தா நடக்கும் ..

அம்மாடி ..
பொண்ணுக்கு தங்க மனசு ,, **
பொங்குது சின்ன மனசு .. **
கண்ணுக்கு நூறு வயசு **
அவ சொல்லுக்கு நாலு வயசு .. சொல்லுக்கு நாலு வயசு**


மீண்டும் அழகிய புல்லாங்குழல், தபேலா மற்றும் சலங்கையின் துணையோடு வளைந்து நெளிந்து செல்வதை போன்ற ஒரு இடையிசை.

அடித்தால் அழுவேன் ஒரு நாள் ..யாரும்
அணைத்தால் சிரிப்பேன் மறு நாள் ..
***
அடித்தால் அழுவேன் ஒரு நாள் ..யாரும்
அணைத்தால் சிரிப்பேன் மறு நாள் ..
எடுப்பார் கைகளில் பிள்ளை .. ஒரு
பகையோ உறவோ இல்லை..
தோப்புக்கு தென்னை மரம் சொந்தம் .. **
காத்துக்கு எந்த மரம் சொந்தம் .. **
பூமிக்கு காட்டு வெள்ளம் சொந்தம் .. **
பொண்ணுக்கு இந்த உள்ளம் சொந்தம் . **.


அம்மாடி .. பொண்ணுக்கு தங்க மனசு ,, **
பொங்குது சின்ன மனசு .. **
கண்ணுக்கு நூறு வயசு **
அவ சொல்லுக்கு நாலு வயசு .. சொல்லுக்கு நாலு வயசு

புல்லாங்குழலின் இனிய இசையுடன் பாடல் முடியும் போது மற்றுமொரு கிராமத்து கவிதையை படித்து முடித்தது போன்ற நிறைவு.

மேலே சொன்ன சிறப்பு ஒலிகள் இல்லாமல் பாடல் அவ்வளவு ஈர்ப்புடன் இருந்திருக்காது என்பது என்னுடைய கருத்து.


இரண்டாம் முறை பாடல் வரும் போது, நாயகனின் வாழ்க்கை முறை மாறி இருக்கும். காதலியை பிரிந்த சோகம் இருக்கும். இந்த முறை புல்லாங்க்குழல் இல்லை. பதிலாக வயலிங்களின் அணிவகுப்பு. தபேலாவிற்கு பதிலாக டிரம்ஸ். அதே பாடகர். அதே ராகம் ஆனால் வேறு பாவம். வார்த்தைகளின் ஜாலம் சூழ்நிலையை முற்றிலும் மாற்றி இருக்கும்.

பாடலின் ஆரம்பத்தில் நாயகனின் தனிமையை விளக்க வார்த்தைகளை எதிரொலிக்க செய்திருப்பது மன்னரின் சாதுர்யத்தை காட்டுகிறது.

இந்த முறை அம்மாடி என்று சொல்லும் போது டி.எம்.எஸ் யாடலிங் முறையில் குரலை ஏற்றி இறக்கி விளையாடியிருப்பார். முதல் தடவை சிறப்பு சத்தம் ஒலித்த இடங்களில் இப்போது வயலின் **

அம்மாடி..பொண்ணுக்கு தங்க மனசு,,தங்க மனசு,,தங்க மனசு,,(வயலின்களின் அருவி)
அம்மாடி..பொண்ணுக்கு தங்க மனசு,,தங்க மனசு,,தங்க மனசு,,(வயலின்களின் அருவி)
(ஆர்கனின் இசை)..

பொண்ணுக்கு தங்க மனசு **
பொங்குது இந்த மனசு .. **
கண்ணுக்கு ரெண்டு மனசு **
அவ சொல்லுக்கு என்ன வயசு .. சொல்லுக்கு என்ன வயசு ..

ஆர்கன், கிட்டார், டிரம்ஸ் மற்றும் வயலினின் துணையோடு இடையிசை.

எண்ணெயில் எரியும் விளக்கு .. அவள்
என்னையே அழைத்த சிரிப்பு ....
என்னவோ நடந்தது நடப்பு .. அதில்
ஏதோ நினைவிலும் இருக்கு
யாருக்கு இந்த கதை தெரியும் ... **
சாமிக்கு மட்டும் இது புரியும் .. **
ஏழைக்கு அன்று வந்த நினைவு ..
செல்வத்தில் வந்த பின்பு கனவு..

அம்மாடி..பொண்ணுக்கு தங்க மனசு **
பொங்குது இந்த மனசு .. **
கண்ணுக்கு ரெண்டு மனசு **
அவ சொல்லுக்கு என்ன வயசு .. சொல்லுக்கு என்ன வயசு ..

அம்மாடி.. அம்மாடி.. அம்மாடி..

என பாடல் முடியும்.

முதல் பாடலுக்கும் இதற்கும் தான் எத்தனை வித்தியாசம். எது சிறந்தது என்று கேட்டால், இரண்டும் தான் என்று சொல்லத் தோன்றும். எல்லோரும் அப்படிதான் சொல்வார்கள். (சாதாரணமாக இதை போன்ற மகிழ்ச்சி / சோக பாடல்களில் ஒரு வடிவம் தான் எடுபடும்). ஆனால் எம்.எஸ்.வியின் கைகளில் எதுவும் எடுபடும்.

கண்ணதாசன், டி.எம்.எஸ்., சிவாஜி கணேசன், எம்.எஸ்.வி கூட்டணியின் மற்றுமொரு மாயாஜாலம் இது.
_________________
Ravikumar
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Sat Jan 05, 2008 12:18 pm    Post subject: Reply with quote

Hey Mr.Ravi, you have picked one of my favorite song. I like the themmangu & pathos versions.
Tonight I prefer the short sweet pathos delight to cuddle up this cold rainy windy night. Forever I can lay down with that elongated 'ammaadi...' longing echo! adhuleyum idham yerukku!
nice job,Sir!
vinatha.
Back to top
View user's profile Send private message
tvsankar



Joined: 24 Jan 2007
Posts: 229

PostPosted: Tue Jan 08, 2008 3:58 pm    Post subject: Reply with quote

Dear Ravi,

இந்தப் பாடல் தேர்வுக்கு என்னுடைய நன்றி.

கேட்பதற்க்கு எளிமையாகத் தோன்றினாலும், இந்தப் பாடலின் இசை அமைப்பு
மிகவும் ஆழமான ஒன்றாக நான் உண்ர்கிறேன்.

ராஜு அவர்கலின் பங்கு இந்தப் பாடலிலும் இருக்கிறது என நினைக்கிறேன்.ஒரு இசை நிகழ்ச்சியில் இந்தத்
தகவலை கேட்ட நினைவு.தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

இந்தப் பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போதும், பாடல் விரைவில் முடிந்துவிட்டதே
என்ற ஒரு உண்ர்வே மனதில் வரும்.

அதனால், பாடலை திரும்ப திரும்பக் கேட்க வேண்டும் என்ற ஆசை வந்து, பல முறைக்
கேட்பதேப் பழக்கமாக் ஆகிவிட்டது எனக்கு.

இப்படிப் பட்ட ஒரு சிறந்தப் பாடலைப் பற்றி எழுதியதற்க்கு, என்னுடைய
நன்றியை திரும்பவும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
உஷா சங்கர்.
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Tue Jan 08, 2008 6:31 pm    Post subject: Reply with quote

Usha'kka...

It was a nice reply and great to see that in tamil Very Happy
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
tvvraghavan



Joined: 15 Dec 2006
Posts: 175

PostPosted: Tue Jan 08, 2008 9:19 pm    Post subject: Great Song !!! Reply with quote

Dear Ravi,
Thanks for bringing out this amazing composition. I got to listen to this number after a loong time. I really fell for the flute in the second interlude when I heard this song for the first time.

But I would like to know if the first interlude has anything else other than the humming of TMS ? Believe the movie's version might have a prolonged interlude than the radio and the CD versions. Can anyone check this please and share if the first interlude is different.

As you conclude, one cannot say which of the versions is better than the other !!!

Our Master chose to have a drum background in the rhythm for the same folk melody just to differentiate and portray that the Hero is no more an innocent village guy. With this , he aesthetically brings out the sorrow in the Hero with an amazing Violin ensemble.What a thought process and a level of imagination !!!

The other Gems from this movie are Nilavu Vandhu Paadumo and Chithirai Madham ,as we all know !!!

PLEASE KEEP UP THE GREAT WRITING !!!!

MSV RULES !!!!
VENKAT
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Tue Jan 08, 2008 9:57 pm    Post subject: Ammaadi Ponnukku Thanga Manasu Reply with quote

Dear friend,
First let me thank you for bringing out this evergreen number. This song takes me to 70s. 15th August 1970 - that was the day this film was released. Well before that the records came out much early with the name of the film as SAAPPAATTU RAAMAN. The 78 records were labelled in this title and released. This particular song was instant hit and who were all able to afford to the records got it. After some time the title was changed to RAAMAN ETTHANAI RAAMANADI but not the sensation for this song. It was played frequently in Vivid Bharathi. It was the peak for Nadigar Thilagam and the craze for hims was wild. And finally the d-day - Independence Day of 1970 and we the Sivaji Fans assembled well before for the preview show for the Fans. It was not wonder as the theatre roared when NT's name appeared on the screen. But you won't believe - there was one more occasion for the roaring applause in the title scene - YES the whole Shanthi Theatre at Madras was thunderous for that magic name - MELLISAI MANNAR M.S. VISWANATHAN - what more he would have wanted. The whole audience - of course 99 per cent Sivaji Fans - clapped and appreciated the appearance of the name of MSV - such was the impact of this song!
May be some body thought I am boring with this anecdote - but I felt it is apt to mention it here.
V. Raghavendran
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Wed Jan 09, 2008 12:32 am    Post subject: Reply with quote

Dear Ragasuda,

This is very interesting info that you have shared with every one of us here. Infact, I used to wonder many times, how the public response would have been when these gems were released and how the fans would have welcomed those super hits on theatres etc. These types of anecdotes from people like you definitely adds so much interest to the readers, especially of this generation. And it is really great to know about the applauds for Mellisai Mannar's name on the screen.

A question I had for a long time in my mind... Were you "Sivaji Rasigar Manra Thalaivar" for some district those days ??? Very Happy If yes, I request you to share great moments like these during "Fans Meet", important articles, rare photos of Nadigar Thilagam etc.

Thanks for sharing and expecting more of this sort!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Jan 09, 2008 7:17 am    Post subject: Ammadi Ponnukku thanga manasu Reply with quote

Dear Ram,
Please read the new topic I have started "Audience response" under Any topic. I shall post separately for my contribution (if any) to NT.
V. Raghavendran
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Wed Jan 09, 2008 9:29 am    Post subject: Reply with quote

Dear Ravikumar,

Your current status shows OBSERVER . True. You have observed the essence of the song so minutely ! Cheers.

Dear All,

I would say, this song is one of the most favourite amongst the Nadigar Thilagam-MSV combination. Even a physically challenged person will stand up and dance automatically to the tune & the native orchestration arrangement ! You call it an eve teaser or a semi-folk … As Mr. Ragasuda rightly mentioned, even I also get nostalgic memories whenever I hear this song as it goes way back to our childhood days when my Father used to sing cheerfully ( no need to mention, he was a hardcore Nadigar Thilagam fan ) and putting thalam with whatever that comes before him.

Awesome lyrics ! Just one sentence is enough to summarize the character of Nadigar Thilagam here…… அடித்தால் அழுவேன் ஒரு நாள் ..யாரும்
அணைத்தால் சிரிப்பேன் மறு நாள் ..
எடுப்பார் கைகளில் பிள்ளை .. ஒரு
பகையோ உறவோ இல்லை…

You try someoneelse’s voice for this song and see the output . It will be pathetic …. Can a SPB or PBS or KJY sing this song ?? This is in no way to denounce these greats One and only TMS can give this tremendous impact…… TMS excels in both the versions …..

That Ammaadeeeeeeeeeeeeeee……….. and a brief pause .....Then TMS roars with ...Ponnukku thanga manasu...........

Who wins here finally ?? Is it the scintillating tune or the greatest Actor or the singer ?? All have won .

Ram, I bet , if the movie is re-released today, you can imagine the theatre going to raptures when this song is played. Very Happy
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Wed Jan 09, 2008 6:14 pm    Post subject: Reply with quote

அன்புள்ள ரவிகுமார், ராகசுதா, பாலாஜி

"அம்மாடி பொண்ணுக்குத்தங்க மனசு" பாடல் பற்றிய அலசல், பட ப்ரிவியூ குறித்த மிகச்சுவையான தகவல் எல்லாம் மிக அருமை.

இந்தப்படம் ரிலீஸ் ஆவதற்கு சிலநாட்களுக்குமுன், நெல்லையில் எம் எஸ் வி யின் மேடைக்கச்சேரியின் போது, இடைவேளையில் இந்தப்பாட்டின் இசைத்தட்டு ஒலிபரப்பப்பட்டது.

கச்சேரிக் கொட்டகையின் வெளியில் அமர்ந்திருந்த நான் ( டிக்கட் வாங்கி உள்ளே செல்லும் அளவு நிதி நிலைமை அப்போது கிடையாது !) இப்பாட்டின் வரிகள், நிகரற்ற இசையமைப்பு, குரல் பாவம் இவற்றையெல்லாம் கேட்டு, பெற்ற மகிழ்ச்சி, உணர்ச்சி சொல்லிலடங்காது !

அங்குமிங்கும் ஓடி பலரிடம் கேட்டும், என்ன படம் என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால், அந்தப்படத்துக் காட்சி யை என் மனக்கண்முன் பார்க்கமுடிந்த்து.

அதே காட்சியையே பின்னர் படம் பார்க்கும்போது கண்டது விந்தை ( அது விந்தையில்லை, ஏனெனில், அவ்வாறே எப்போதும் இந்தக் காலத்த்தை வென்ற கலைக்கூட்டணி - மெல்லிசை மன்னர், கவிஞர், நடிகர்திலகம் - நடத்திக்காட்டுவதால், again and again ! )

எனது முந்தைய நாட்களுக்கு என்னை அழைத்துச்சென்றதற்கு, எம் எஸ் வி டைம்ஸ் கூட்டணிக்கு நன்றி, நன்றி.

அன்புடன்
ராம்கி.

_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Wed Jan 09, 2008 7:39 pm    Post subject: Reply with quote

சில மாதங்களுக்கு முன் திரு ராம்கி இதே படத்திலுருந்து ஒரு அற்புதமான பாடலை
பற்றி எழுதினார். அந்த பாடல் ……. சித்திரை மாதம் பவுர்ணமி நேரம்….கல்யாணி ராகத்தில்
அமைந்த ஒரு அற்புதமான பாடல்

ஒடும் ரயிலின் சப்தத்தை தாளமாக கொண்டு இசை அமைக்கப்பட்ட பாடல்

மெல்லிசை மாமன்னரின் பொற்காலத்தில் வந்த ஒரு அற்புதமான் படம் இது…

இதே படத்தில் இன்னுமொரு நல்ல பாடல் உள்ளது……

நிலவு வந்து பாடுமோ ….சிலை எழுந்து ஆடுமோ

அதில் மேர்க்கத்திய இசை சாயலில் அமைந்திருக்கும்……

இந்த படத்தின் எல்லா பாடல்களும் மிக மிக ப்ரபலம்
Back to top
View user's profile Send private message Send e-mail
Sriram Kannan



Joined: 12 Sep 2007
Posts: 103

PostPosted: Thu Jan 10, 2008 11:21 am    Post subject: Reply with quote

S.Balaji wrote:

இதே படத்தில் இன்னுமொரு நல்ல பாடல் உள்ளது……

நிலவு வந்து பாடுமோ ….சிலை எழுந்து ஆடுமோ

அதில் மேர்க்கத்திய இசை சாயலில் அமைந்திருக்கும்……



Dear Balaji Sir,

An uncomparable composition and orchestration in "Nilavu Vanthu Paadumo"... I would say one of the best of PS, with the expression of emotion so splendid in this song. And the orchestration, EMPEROR tops again.. when PS sings "Paadumo.. Aadumo", the background will be a mild one expressing the lady's sorrowful mindset, but when she compasses herself at lines ""Paadattum... Aadattum", the background raises to a rich orchestra.. Stupendous!!!
_________________
Thanks and Regards,
Sriram Kannan.

Follow me at http://bibliomaniac-moviefanatic.blogspot.com/
Back to top
View user's profile Send private message Send e-mail Yahoo Messenger
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group