"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Ullam enbadhu aamai - Paarthaal pasi theerum

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Thu Jan 03, 2008 3:47 am    Post subject: Lyrics - Ullam enbadhu aamai - Paarthaal pasi theerum Reply with quote

படம்: பார்த்தல் பசி தீரும்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இசை: மெல்லிசை மன்னர்

உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி, நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி.

தெய்வம் என்றால் அது தெய்வம், அது சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை

(உள்ளம் என்பது)


தண்ணீர் தணல் போல் எரியும், செந்தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும், அது நாட் பட நாட் பட புரியும்
நாட் பட நாட் பட புரியும்.
(உள்ளம் என்பது)
Back to top
View user's profile Send private message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Sun Jan 20, 2008 7:31 am    Post subject: Reply with quote

எனக்கு மிக மிக பிடித்த சிவாஜி அவர்களின் படத்தில் இந்த 'பார்த்தல் பசி தீரும்' படமும் ஒன்று. இந்த படத்தை எடுத்துக்கொண்டால், கதை, இசை, பாடியவர்கள், நடித்தவர்கள், பாடல் வரிகள் இப்படி எல்லாமே சிறப்பாக இருப்பதால் எதைப்பற்றி எழுதுவது என்றே தெரியவில்லை.


சிவாஜி அவர்களின் மிக நெருங்கிய நண்பனாக வரும் ஜெமினி கணேசன் பல நெருக்கடி நிலைகளை சந்திப்பார். அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிவாஜி அவர்கள் தன் நண்பனை காப்பாற்றுவார். பல இடங்களில் அதனால் வந்த விளைவுகளுக்கு தானே பொறுப்பு எடுத்துக்கொள்வார். ஜெமினி கணேசனின் மனைவியாக வரும் சௌகார் ஜானகி அவர்கள் ஒரு இருதய நோயாளி. இவரின் நலன் கருதி சிவாஜி அவர்கள் செய்யும் எல்லா உதவிகளையும் தவறாக புரிந்து கொள்ளும் சௌகார் ஜானகி அவர்கள், அவரை வெறுக்கத் தொடங்குவார். இதனிடையே சௌகாரின் தங்கையாக வரும் சரோஜா தேவி அவர்கள் சிவாஜியை காதலிப்பார். ஏற்கனவே அவரை வெறுக்கும் சௌகார் தன் தங்கையும் அவரை காதலிப்பது தெரிந்து, தன் வீட்டிற்கு வரும் சிவாஜியை மிகவும் கடினமாக பேசும்போது சொல்லும் வரிகள் இது.

'இந்த வீட்டிற்கு ஆமை மாதிரி அடியெடுத்து வைத்து எங்கள் நிம்மதியை குலைத்து விட்டாயே' என்பார்.

இதை கேட்டு மனம் உடைந்து போய் சிவாஜி அவர்கள் பாடும் பாடல் இது. அதனாலேயே கவிஞர் இந்த பாடலை 'உள்ளம் என்பது ஆமை' என்ற வரியில் துவக்கி உள்ளார்.

இந்த பாடலின் அனைத்து வரிகளுமே மிகவும் அர்த்தம் உள்ளவை..

'தெய்வம் என்றால் அது தெய்வம், அது சிலை என்றால் வெறும் சிலைதான்'
நம்புகிறவர்களுக்கு கல்லும் கடவுள்தான். நம்பாதவர்களுக்கு அது வெறும் சிலைதான்.

'உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை'
எந்த ஒரு விஷயமும் நாம் பார்க்கிற கண்ணோட்டத்தில் தான் உள்ளது என்பதை மிகவும் அழகாக சொல்லும் வரிகள் இவை.

தன் நண்பனின் மனைவி தன்னை தவறாக நினைத்ததை எண்ணி வருந்தும்போது அவர் பாடும் இந்த வரிகள் அற்புதம்.

'நண்பனும் பகை போல் தெரியும், அது நாட் பட, நாட் பட புரியும்'

நம்மை கண்ணீர் சிந்த வைக்கும் வரிகள் இவை. மெல்லிசை மன்னர் அவர்கள் தன் இசையாலும், டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் தன் குரலாலும் இந்த பாடலை நம் மனதில் நிரந்தரமாக பதிய வைத்து விட்டனர்.
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Sun Jan 20, 2008 8:59 am    Post subject: Reply with quote

Dear Meenakshi Ma'm,

Great number and your description following the lyrics for this song is really fantastic....You have quoted some interesting scenes, which are my favourites too...

Your choice of songs and your interest to bring the lyrics for those, is adorable...More from you Ma'm !!! Very Happy
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group