"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

TMS and Vamanan praises MSV!
Goto page 1, 2, 3  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
raghavankannan



Joined: 05 Jan 2007
Posts: 57

PostPosted: Fri Dec 14, 2007 10:28 pm    Post subject: Reply with quote

அன்பான நண்பர்களே

நம் குருவைப் பற்றி திரு. டி.எம்.எஸ் மற்றும் வாமனன் எழுதியதை கீழே தொகுத்து உள்ளேன்.

" முதலில் எழுதியது சரியாக வராததால் கீழே தனியாக தொகுத்துள்ளேன். சரியாக வந்தால் தொடர்கிறேன்.


ராகவன் கண்ணன்.


Last edited by raghavankannan on Sun Dec 16, 2007 2:51 pm; edited 1 time in total
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Sat Dec 15, 2007 10:28 am    Post subject: Reply with quote

அன்புள்ள ராகவன்கண்ணன்,

உங்கள் தமிழ் எழுத்துக்களைப் படிக்கமுடியவில்லை. எனக்கு மட்டுமா எல்லோருக்குமேயா என்று தெரியவில்லை.

திரும்பவும் பதித்தால் நல்லது.

ராம்கி.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Damodaran Pachaiappan



Joined: 21 Oct 2007
Posts: 119
Location: Ireland

PostPosted: Sat Dec 15, 2007 10:36 pm    Post subject: Reply with quote

Dear Mr Raghavan Kannan,

I too am unable to read your attachment. I am eager to know what TMS has said. Could you please try it again?

With regards,
Damodaran Pachaiappan
_________________
Dr.Damodaran Pachaiappan
Back to top
View user's profile Send private message Yahoo Messenger MSN Messenger
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sun Dec 16, 2007 6:23 am    Post subject: Articles &Writings by Fans Reply with quote

Dear Mr.Raghavan Kannan,
While thanking your effort to bringforth the observations of TMS and Vamanan on MSV, we are just unable to read the message as the scripts appear totally strange. Somewhere along the line, there is a transformation failure and much looks likre virus-crippled. If the whole thing can be reloaded, your purpose will be usefully served. If there are technical problems in script transformation, you may please give the English translation of what these people have said and just mention the source of the report so that we can collect the printed version for documentation. Still you deserve our thanks for your noble pursuit.
Warm regards Prof.K.Raman Navi Mumbai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
raghavankannan



Joined: 05 Jan 2007
Posts: 57

PostPosted: Sun Dec 16, 2007 2:46 pm    Post subject: Reply with quote

அன்பான நண்பர்களே

நம் குருவைப் பற்றி திரு. டி.எம்.எஸ் மற்றும் வாமனன் எழுதியதை கீழே தொகுத்து உள்ளேன்.

வாமன்ன் எழுதுகிறார்:

விஸ்வநாதன் ஒரு ஜீனியஸ்

பாபநாசம் சிவனின் அடுத்த தலைமுறையில் திரைப்பாடலின் வாயிலாக தமிழ் மக்களிடம் கண்ணதாசன் நிரந்தர இடம் பிடித்தார். இதை சாத்தியமாக்கியவர்களில் மெல்லிசை மன்னர்கள் என்று புகழ் பெற்ற விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் ஆவார்கள். மெல்லிசை மன்னர்களின் இசை பங்களிப்பை திரை இசையின் பொற்காலம் என்று பலர் கருதுகிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கு மேல் பெரும் வீசசுடன் இயங்கிய ஒரு சகாப்ததின் அனைத்துப் பாடல்களையும் எதிர் கொள்வது என்பது எளிதாக இல்லை.

மெல்லிசை மன்னரின் இசையை விட இனிமையான ஒன்று இருக்குமானால் அது அவரின் ஆளுமையாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். அது தென்றலைப் போல வீசும். சில சமயங்களில் மின்னலைப் போல கோப வானில் தெறித்து சீக்கிரமே வந்த சுவடு தெரியாமல் விலகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக் அது கடலலையைப் போல ஓயாமல் இசையை உச்சரித்துக் கொண்டிருக்கும். மூர்த்தி சிறியதாகவும் கீர்த்தி பெரியதாகவும் உள்ள திரை இசையின் மகோன்னத சாதனையாளருக்கு வணக்கம்.

சில இசை அமைப்பாளர்களைப் போல இணைப்பு இசையை அமைக்கும் வேலையை உதவி இசை அமைப்பாளர்களுக்கு விட்டு விட்டுவிடுபவர்கள் இல்லை. பாடலின் ஒவ்வொரு அணுவின் சுழற்ச்சியிலும் விஸ்வநாதன் இருக்க விரும்புவார்....இருப்பார்.
Back to top
View user's profile Send private message
raghavankannan



Joined: 05 Jan 2007
Posts: 57

PostPosted: Mon Dec 17, 2007 8:02 am    Post subject: Reply with quote

வெற்றியின் ரகசியங்கள்.

எல்லா விஷயங்களைப் போல, விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைப்பு உடைந்தது. கடலைக் குடிக்க கிளம்பிய விஸவநாதன், உற்சாகத்துடன் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார். விஸ்வநாதனின் இசையில் பாரதிதாசனின் தமிழுக்கும் அமுதென்று பேரும், சங்கே முழங்கும் இனிமைக்கும் வலிமைக்கும் எடுத்துக் காட்டாக விளங்கின.


(தொடரும்)
Back to top
View user's profile Send private message
raghavankannan



Joined: 05 Jan 2007
Posts: 57

PostPosted: Wed Dec 19, 2007 6:20 am    Post subject: Reply with quote

அன்பான குரு ரசிகர்களே நான் வாமனன் அவர்கள் கூறியதை தொடர்கின்றேன்.

மெல்லிசை மன்னர்களின் பாடல்களும் பிறகு விஸ்வநாதன் தனியாக அமைத்த பாடல்களும் கோடிக்கணக்கான தமிழர்களுக்கு இன்பத்தை தந்திருக்கின்றன. இன்னும் தந்து கொண்டிருக்கின்ற்ன. இனியும் தரும்.

அதிர்ஷ்டம் என்ற கண்ணுக்குத் தெரியாத வஸ்துவைத் தவிர படைப்பாற்றல், கடுமையான உழைப்பு, பணியை முடிக்கும் திறமை, பிறருடன் அன்பாக பழகும் தன்மை, வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்கும் தன்மை, விட்டுக் கொடுக்கும் தன்மை, தயாரிப்பாளர்கள் முடங்கும் போது காசை பெரியதாக நினைக்காமல் அவர்களுக்குத் துணை போகும் தன்மை, சலிப்படையாமல் எத்தனை மெட்டுக்கள் கேட்டாலும் போட்டுக் காண்பிக்கும் திறமை...இப்படி பல விஷயங்கள் விஸ்வநாதனை வெற்றியின் சிகரத்தில் நிறுத்தின.

காட்சியின் தன்மைக்கு ஏற்பவும் பாடல் வரிகளின் தன்மைக்கு ஏற்பவும் இசை அமைத்தார். பிண்ணனிப் பாடகர்களின் குரல்களை சரிவர புரிந்து கொண்டு அவர்களிடம் வேலை வாங்கினார். அதில் சில சமயம் பொறி பறந்ததும் உண்டு.

1952ல் தொடங்கிய விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற இனைவு, 1965 வரை இயங்கி திரை இசையின் மறக்க முடியாத பல பக்கங்களை சிருஷ்டித்து விட்டது. இன்று அவர்கள் அமைத்த பாடல்கள் இனிமைக்கும், பொருட்செறிவுக்கும் சிறந்த எடுத்துக் காட்டுகளாக விளங்குகின்றன. பிறகு விஸ்வநாதன் பல சாதனைகள் புரிந்தார். அவருடைய சிருஷ்டியில் ராகங்கள் உணவுப்பூர்வமான மெட்டுக்களாக ஒளி வீசின.

சக்ரவாகம் - தெய்வத்தின் தேர் இழுத்து தேவியைத் தேடு
மோகனம் - சங்கே முழங்கு
ஹிந்தோளம் - மனமே முருகனின் மயில் வாகனம்
சிந்துபைரவி - எண்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்கின்றாய்
ஆனந்த பைரவி - மதுரை மீனாட்சி மணிக்கழுத்தில்
மாயாமாளவ கெளளை - கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
ஸ்ரீரஞ்சனி - நாதமெனும் கோவிலிலே
பிருந்தாவன சாரங்கா - பொன்னொன்று கண்டேன்
கெளரி மனோகரி - கெளரி மனோகரியைக் கண்டேன், மலரே குறிஞ்சி மலரே
கல்யாண வசந்தம் - காஞ்சி பட்டுடுத்தி
ஆபோகி - வணக்கம் பல முறை சொன்னேன்
போன்ற ராகங்கள் அவருடைய கற்பனையில் சிறகசைத்தன. தமிழ் இசையாய் வலம் வந்தன. இன்றும் வந்து கொண்டிருக்கின்றன.

விஸ்வநாதன் என்ற இசை அமைப்பாளரின் படைப்புகளை ரசித்த தமிழ் மக்கள் விஸ்வநாதன் என்ற கலைஞரையும் நேசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் தான் அவர் ஒரு தனிப்பட்ட் ஆளுமை கொண்ட கலைஞராக வலம் வருகின்றார். பின்னனியில் இருக்கும் இசை அமைப்பாளர் முன்னணியில் வந்து மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

திரை உலாகதின் தன்மைகளுக்கு ஏற்ப, விஸ்வநாதன் அலையப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இளையராஜா அலை வந்தது. அதன் பின்னும் இளையராஜாவுடன் இணைந்து சில படங்கள் செய்தது ஒரு அற்புதமான தன்மையக் காட்டியது. வாழ்க்கை என்ற பாற்கடலை காலம் கடைந்து தோல்வி என்ற ஆலகாலத்தை அளிக்கும். அதைப் பெரிது படுத்தாமல் கண்டத்தில் நிறுத்தி வைப்பவன் நீலகண்டனாக ஒளிர்வான். இந்த மாபெரும் சாதனைய விஸ்வநாதன் செய்திருக்கிறார்.

கால வெள்ளத்தில் மூழ்கி விடாமல் இருக்க கையாளப்படும் உத்தியாக மட்டும் அதை நாம் கொள்ள முடியாது. உலகத்தை தன் இசையால் மயக்கும் விஸ்வநாதனுக்கு தன் இசையை மீறி அனுபவிக்கவும், சிந்திக்கவும் முடியும் என்பதற்காகத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இசை ஒரு போதை தான்... அமுதம் தான். ஆணால் அதை விடப் பெரிய விஷயம் ஒன்று வாழ்க்கையில் உள்ளது. அதுதான் இசைபட வாழ்தல்.

(தொடரும்)
Back to top
View user's profile Send private message
raghavankannan



Joined: 05 Jan 2007
Posts: 57

PostPosted: Wed Dec 19, 2007 9:25 pm    Post subject: Reply with quote

இதயம் பாடும் இசை அமைப்பாளர்.

1990 எச்.எம்.வி இசை நிறுவனத்தில் எம்.எஸ்.வி இசை அமைப்பில் ஒரு பக்தி பாடல் காசெட் உருவாகிக்கொண்டிருந்த்தார்கள். நான் எழுதிய இரு பாடல்கள் அதில் இடம் பெற்று இருந்தன.

மெட்டமைப்பிலிருந்து பாடல் பதிவு வரை எம்.எஸ்.வியின் செயல்பாடுகளை நேரடியாக கவனிக்க முடிந்தது. பல சிறந்த பாடகர்கள் அந்த ஒலி நாடாவிற்கான பாடல்களை நன்றாகன்வே பாடினார்கள். 'குழலும் அழகு, குழலில் பதியும் இதழும் அழகு, குழலின் வழியாய் பொழியும் இசையின் இனிமை அழகு' என்று தமிழின் சிறப்பான 'ழ' கரத்தை வலியுறுத்தி நான் எழுதிய வரிகள் பீலு ராகத்தின் கரங்களில் அற்புதமாக பதிவாகின.

பாடகர்களுக்கு எம்.எஸ்.வி பாடிக் காட்டியதையும், பிறகு அவர்கள் பாடிப் பதிவானதயும் கேட்ட எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. இனிமையான குரலில் தங்கள் தனித்தன்மை தொனிக்குமாறு பாடகர்கள் சிறப்பாகத்தான் பாடுகிறார்கள். ஆனால், எம்.எஸ்.வி பாடும் போது தென்படும் சில அரிய சுகங்கள் காணாமல் போய் விடுகின்றன. இதை அவரிடம் தெரிவித்த போது, எம்.ஜி.ஆரும் இப்படியே கூறுவார் என்று அறிந்து கொண்டேன்.

விஸ்வநாதனின் குரல் சுகங்களைக் கேட்டதன் விளைவு, பத்துக் கண்ணன் பாடல்களுடன் அடுத்த நாள் காலை அவர் இல்லத்தில் இருந்தேன்.

கவிஞர் வரிகளை விளம்பியதுமே, ஆர்மோனியக் கட்டைகளில் நர்த்தனமாடிய விரல்கள், தாள்களின் விளிம்புகளைத் திரும்பிப் பார்த்தன.

'அற்புதமாக எழுதீருக்கீங்களே' என்றவர் 'உங்கள் பாட்டுக்குள்ளேயே மெட்டிருக்கிறது' என்றார். 'அது ஏன் உங்களுக்கு மட்டும் தெரிகிறது" என்றேன்.

அடுத்த நாள் மெல்லிசை மன்னரின் மாடி அறையிலேயே மெட்டுக்கள் அமைக்கும் பணிக்கு அமர்ந்தார்.

'மணி' என்று ஒவ்வொரு வரியும் முடிவது போல ஒரு பாடல் எழுதியிருந்தேன்.

'கண்ணன் என்னும் கருமணி - அவன்
என்றும் ஒளிரும் விண்மணி
ஆயர் குலத்தின் கண்மணி
ராதை நெஞ்சில் பொன்மணி...

ஒரு தாளை எடுத்து சுரங்களை எழுத ஆரம்பித்தார் திரு. எம்.எஸ்.வி. வலஜி ராகத்தின் சுரங்கள் திஸ்ர நடையில் துள்ளி வந்தன. முதல் பாட்டின் சில வரிகளுக்கு இப்படி எழுதியதோடு சரி; அப்புறம் எதையும் குறிக்கும் அவசியம் ஏற்படவில்லை! அடுத்தடுத்த பாடல்களுக்கு ஆர்மோனியத்திலிருந்து நயாகராவைப் போல சுரங்கள் துள்ளி குதித்தன.

'வருவான் வருவான் வாவென்றழைத்தால் ஓடோடி வருவான் கண்ணன்' என்ற பல்லவி சிந்து பைரவியை சொந்தமாகிக் கொண்டது.

'கண்ணன் பதமலர் காட்டும் மலை, புண்ணியத்தின் புண்ணியமாய் விளங்கும் மலை, விண்ணவரும் அடைந்திட விரும்பும் மலை,வேங்கடம் என்னும் வேதமலை' என்னும் தொகையறா, சுத்த சாவேரியை சுவீகரித்துக் கொண்டதும்..அதே ராகத்தில் அமைந்த பாட்ல் எழு அட்சரங்கள் கொண்ட மிஸ்ர ந்டையில் எழுமலையானை நோக்கி ந்டை போட்டது. 'ஏழுகொண்டலவாடாவுக்கு ஏழு அட்சரத்தில் ந்டை ...உங்களுக்கு அதிர்ஷ்டம் என்றார் தபேலா கோபால கிருஷ்ணன்.

கவிஞனாகவும், கலைஞனாகவும் என்னுடைய இரண்டாவது பிறவியைக் குறிக்கும் வகையில் ஒரு பாடல் இருந்தது. ..ஓங்கி உலகளந்த வாமனனை நோக்கி என்னுடைய கனவில் வந்த பாடல்...மாபலி தலையில் கால் வைத்து மோட்சம் தந்தவனே..என்னுடைய இதயத்தில் கால் வைத்து அங்கிருக்கும் அஞ்ஞான முடிச்சுகளை களைந்து விடு' என்று அறை கூவல் விடுக்கும் பாடல்.

"மூன்றடி தன்னால் விண்ணையும் மண்ணையும் ஓங்கி அளந்தவனே-அந்த மூன்றாம் அடியினை என்னுளம் தனிலே வைத்திட மாட்டாயோ. ஆணவம் என்னும் சிறு விலங்குடைய வழியொன்றை காட்டாயோ-நான் ஞான கங்கையில் நீந்திட உன்றன் அருளொளி கூடடாயோ"

அடர்த்தியான ஞான வேட்கையை வெளிப்படுத்தும் பாடல் வரிகளுக்கு எவ்வளவு நேர்த்தியாக இசை அமைத்துச் சென்றார் திரு. விஸ்வநாதன். ஏழு நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்த பாடலை ஒலிப்பதிவு கூடத்தில் பாடிவிட்டு, வெளியே ஓடி அல்லவா வந்தார் விஸ்வநாதன். ஞானாக்கினியை வெளிப்படுத்திய பாடலின் தகதகப்பைப் பொறுக்க முடியாமல்! அந்த வரிகளின் கனத்தை எல்லாம் அந்த அளவிற்கு உள்வாங்கியிருந்தார்.

'எங்கள் நாதனே ரங்கநாதனே' என்ற பாடலில், 'வண்ண கோபுரங்கள் எத்தனை, அவை உன்னை நோக்கிய பிரார்த்தனை' என்ற வரிகள் வந்த போது, கட்டை விரலைத் தூக்கி காட்டி 'சபாஷ்' என்று சமிக்ஞை செய்ததை சொல்லவா, மகாதேவன் அவன், உமா தேவியுடன் சதா மகிழும் நாமம், விசாலமனதோர் விதானமீதினிலே நிலாவென்றொளிர் நாமம், அனாதியான நம் பிரதான மூர்த்தியின் விலாசம் தரும் நாமம்' என்ற வரிகளில், நெடிலாக நான் அமைத்திருந்த இரண்டாம் அட்சரங்களை அவர் அற்புதமாக நீட்டிப் பாடிய நேர்த்தியைச் சொல்வதா, இப்படியெல்லாம் செய்ததால்தான்,
"சொல்லுக்குச் சுகம் தரும் சித்தன், அவன்
சுருதிலய ஞானத்தில் புத்தன்" என்று என்னை சிந்து பாட வைத்து விட்டார்.

ஒலிப்பதிவுக் கூடத்திலேயே பாடல்களுக்கு இண்னைப்பு இசையை எல்லாம் கணத்திற்கு கணம் அமைத்து பதிவு செய்தார். அதன் பின்பு காசெட் வெளிவருவதற்கு தன்னுடைய நண்பர் வி. பாஸ்கரன் மூலம் வழியும் செய்தார். பாஸ்கரனும் விஸ்வநாதன் மீதும், கிருஷ்ணாம்ருதம் என்ற பெயரில் உருவாகியிருந்த அந்தப் பாடல்கள் மீதும் கொண்ட அசையலே அதை வெளியிட்டார். அன்றிலிருந்து கிருஷ்ணாம்ருதம் மீதும் என் மீதும் பெரு மதிப்பு வைத்து விட்டார். நல்ல இசையை விரும்பும் பக்தி உள்ளம் கொண்ட பலரை அந்த காசெட் வசீகரித்தது.. அலைகடலுக்கு அப்பாலும் பல ரசிகர்களைப் பெற்றது.

இதோ, சென்ற வாரம் விஸ்வநாதன் என்னுடன் தொலைபேசியில் பேசிய போது, நீங்கள் எழுதிய பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம் என்று கனிவாகப் பேசினார். ஆயிரம் குயில் பாட்டுக்களுக்கு ஆரோகணம் பிடித்த வற்றாத இசைப் பெருக்கு, இந்த சிறுவனின் ஜீவனில் தெறித்த சில மூர்ச்சனைகளுக்கு இசை முடியைச் சூட்டியதுடன் அதைச் சொல்லி பெருமைப்படுத்திக் கொண்டிருந்தது.

என்னுடைய இந்த அனுபவத்தை நான் கூறுவதற்குக் காரணம், மெல்லிசை மன்னரின் நாதச்சுவடுகளை ஓரளவிற்கேனும் நேரடியாக அனுபவித்தவந்தான். மெல்லிசை மன்னருடைய இசையின் பாதச் சுவடுகளை பதித்திருக்கிறான் என்னும் பொருத்தத்தைக் கூறத்தான். திரும்பிப் பார்க்க நேரமோ விருப்பமோ இல்லாமல் ஓயாமல் இசைச் சிறகுகள் மீது பறந்து கொண்டிருக்கும் ஒரு இசைக் குயிலுக்கு அது கடந்த காலத்தில் விட்டுச் சென்ற மெல்லிய இறகுகளை எல்லாம் சேகரித்து சமர்பிக்கின்றேன்.
Back to top
View user's profile Send private message
ravikumar



Joined: 12 Dec 2007
Posts: 25

PostPosted: Wed Dec 19, 2007 10:18 pm    Post subject: Reply with quote

Dear Mr. Raghavan

Very many thanks for sharing this article!! It is amazing to read how big of an impact Shri. MSV could cause on each and everyone, who happen to work / interact with him.

Thanks again for this article.
_________________
Ravikumar
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Wed Dec 19, 2007 11:07 pm    Post subject: Reply with quote

Dear Raghavan Sir,

It is really a great effort from you to bring the article to our MSVClub. I dont have any words to express this effort! THANK YOU !!!!!! Very Happy
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Wed Dec 19, 2007 11:12 pm    Post subject: Reply with quote

What a great man our Legend is.... What a noble character... See the interest and dedication he has.... Simply outstanding.... Its definitely a lesson for the aspiring Musicians and Composers!!!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Thu Dec 20, 2007 7:13 am    Post subject: Articles &Writings by Fans Reply with quote

Dear Mr. Raghavan,
On behalf of all rasikas of MSV, please accept our thanks and appreciation for your effort to post observations of VAMANAN on the legend. Despite my long familiarity about many write-ups on MSV the present one has a different dimension. Unlike Kannadasan who had a professional bondage to MSV, Shri Vamanan has come across the legend in a particular effort and as such has fallen in love with the magnanimity of MSV, despite the latter's indisputable talents as a composer. The best point for us to cherish is in the short conversation between Mr.Vamanan and MSV-- "Thereis tune in your lyric"---MSV
'It is visible to you alone-how? '--Vamanan.
MSV, is an obvious product of wholesome divinity, lest it should not occur to him to unearth a volley of tune variants that simultaneously reveal and hide Raagas. Coming as it does from one who narrates his personal experience leading to admiration, the message is clear that MSV stands tall as a composer. Look at the beauty --- both the Vamanans stand admirably tall in being truthful to their tasks on hand. A great experience that suggests that MSV holds wholesome appeal for all those willing to see things in objectivity. Thank you.
Warm regards Prof.K.Raman Navi Mumbai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
raghavankannan



Joined: 05 Jan 2007
Posts: 57

PostPosted: Thu Dec 20, 2007 8:26 am    Post subject: Reply with quote

குரு ரசிகர்களுக்கு என் இனிய வணக்கங்கள். இந்த தொடரில் நம் குருவினைப் பற்றியும் அவரது பாடல்களைப் பற்றியும் வாமனன், டி.எம்.எஸ், வாலி அவர்களுடைய தொகுப்பினை தொடர்ச்சியாக வழங்க உள்ளேன்.

பெற்ற தாய்க்கு செய்த பேருதவி-வாமனன்.


நான் அவ்வப்போது மலையாளத்தில் எம்.எஸ்.வி இசை அமைத்த ஒரு சில பாடல்களைக் கேட்டு வியந்திருக்கிறேன்.

எம்.எஸ். விஸ்வநாதன் இசை அமைத்த பல மலையாளப் படங்கள், மலையாள நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றில் சில வெற்றி அடைந்தன. சில தோல்வியை தழுவின. ஆனால் எல்லாப் படங்களிலும் எம்.எஸ்.வி அமைத்த பாடல்கள் இன்றும் நினைவில் நிற்கின்றன. ரசனைகள் மாறிவிட்டதால் இன்றைய தலைமுறை எம்.எஸ்.வி இசை அமைத்த படங்களை ரசிக்காமல் போகலாம். ஆனால் அவருடைய பாடல்கள் ஜீவனுள்ள தன்மையால் இன்றும் இளைஞர்களை ஈர்க்கவே செய்கின்றன.

'பணிதீராத்த வீடு" (கட்டி முடிக்கப்படாத வீடு) என்ற படத்தை எடுத்துக் கொள்வோம். கே.ஈ. மத்தாய் (புனைப்பெயர்-பாரப்புறத்து) எழுதிய பிரபல நாவலை ஆதாரமாகக் கொண்டபடம் இது. பல விருதுகளை வென்றது. இசை அமைப்பிற்காக எம்.எஸ்.விக்கு விருது வழங்கப்படாவிட்டாலும், அவர் இசை அமைப்பில் பாடிய ஜெயசந்திரன். 'சுப்ரபாதம் சுப்ரபாதம்' என்ற பாடலுக்கு கேரள அரசின் சிறந்த பாடகர் விருதைப் பெற்றார். 'பணிதீராத்த வீடு"படத்தின் மற்ற பாடல்களும் ஹிட் பாடல்களாக விளங்குகின்றன. படத்தின் ஆறு பாடல்களில் நான்கு இன்று வரை தொடர்ந்து மக்களால் ரசிக்கப்படுகின்றன. 'சுப்ரபாதம்' பாடலைத்தவிர 'காற்றும் ஒழுக்கும் கிழ்க்கோட்டு' (ஜெயச்சந்திரன், லதா ராஜு), 'அணியம் மணியம்' (பி.சுசீலா), கண்ணுநீர்துள்ளியெ' (எம்.எஸ்.விஸ்வநாதன்) அகிய பாடல்கள் அவை. இந்த தலைமுறை ரசிகர்களும் விரும்பும் பாடல்கள் இவை. எம்.எஸ்.வி தானே பாடிய அசரீரிப் பாடலான 'க்ண்ணுநீர்துள்ளியெ ஸ்திரீயோடு உபமிச்ச காவ்ய பாலனே' சமூகத்தில் பெணகள் படும் வேதனையைச் சுட்டிக் காட்டியது (யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் பாடலைப் போல) மனசாட்சியின் கம்பீரக் குரலாக விளங்கியது எம்.எஸ்.வியின் நாதம்.


(தொடரும்)
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Thu Dec 20, 2007 5:01 pm    Post subject: Reply with quote

Dear Raghavan Kannan,

Splendid work by you Sir . Pls continue with your collection of Vamanan works on the Master. We are all reading with rapt attention. Thanks .

Your posts will become permanent feature of this website. Very Happy

Cheers
Back to top
View user's profile Send private message Send e-mail
raghavankannan



Joined: 05 Jan 2007
Posts: 57

PostPosted: Thu Dec 20, 2007 9:28 pm    Post subject: Reply with quote

தொடர்கின்றது.

வெட்டூர் ராமன் என்ற பிரபல எழுத்தாளரின் நாவலான 'ஜீவிக்கான மறன்னு போய ஸ்திரீ' அதே பெயரில் படமாக வந்தது (1974). இந்த படமும் முக்கியமாக எம்.எஸ்.வியின் அற்புதமான இசைக்காகவே இன்றும் நினைவு கொள்ளப்படுகிறது. படத்தின் இரண்டு பாடல்கள் 'சூப்பர் ஹிட்' தரத்தில் உள்ளவை. வீண் பூவே, குமரன் ஆசாந்தெ வீணை பூவே' தனித்தனியாக ஏசுதாஸும் ஜானகியும் பாடும் பாடல், அஷ்டபதியிலே நாயிகே (ஜெயசந்திரன்) ஆகிய இரண்டு பாடல்கள் ரசிகர்களை தொடர்ந்து வசீகரித்து வருகின்றன.

வி.டி. நந்தகுமாரின் 'ரண்டு பெண்குட்டிகள்' (1978) ஒரு தோல்விப் படம். எம்.எஸ்.வியின் இசையில் ஜெயச்சந்திரன் பாடிய 'சுருதி மண்டலம்' என்ற வெற்றிப் பாடல்தான் அதை இன்றும் நிணைவுப் படுத்திக் கொண்டிருக்கின்றது. மலையாள நாடக மேடை மற்றும் திரை உலகின் நடிகரும் எழுத்தாளருமான சுராசு எழுதிய நாடகத்தின் திரை வடிவம் தான் 'விஸ்வரூபம்'(1978) எப்போது வந்தது, எங்கு போனது என்கிற வகையில் ஓசைப்படாமல் திரைஅரங்குகளிலிருந்து விடை பெற்ற படம். 'நாக பஞ்சமி' (ஜெயச்சந்திரன்), 'புஷ்பங்கள்' (பீ. சுசிலா) ஆகிய பாடல்கள்தான் இந்தப் படத்தை நினைவுப் படுத்துகின்றன.

விஜயன் காரோட்ட எழுதிய சிறுகதை, 'மர்மரம்' (1982)என்ற பெயரில் படமாக்கப்பட்டது. பரதன் இயக்கிய இந்தப்படம் விதவை மறுமணத்தையும் கலப்பு மணத்தையும் சிறந்த முறையில் வலியுறுத்தியது. ஆனால் மக்கள் இன்று மர்மரத்தை நினைவு கொள்வது பரதனுடைய சிறந்த இயக்கத்திற்காகவோ கதையின் சிறந்த அம்சங்களுக்காகவோ அல்ல. எஸ். ஜானகி பாடிய சூப்பர் ஹிட் பாடலான 'வட்டத்தில் வட்டாரம்' தான் அவர்கள் மனதில் நிற்கிறது. இன்றும் நேயர் விருப்பங்களில் இடம் பெறும் பாடல் இது.

சிறந்த எழுத்தாளரும் இயக்குனருமான பத்மராஜனின் சிறுகதை 'கைகேயி' என்று படமாக்கப்பட்டது (1983-இயக்கம் ஐ.வி.சசி). சுமாராக ஓடிய இந்தப் படத்தை மக்கள் மனதிலே பசுமையாக வைத்துள்ளது, எம்.எஸ்.வி அமைத்த 'சாயுஜ்யம் ஏகாந்த சாயுஜ்யம்(ஜெயச்சந்திரன்).

பிரபல நாடகசிரியர் சி.எஸ்.ஜோஸின் புகழ் பெற்ற நாடகம் 'அறியாத்த வீதிகள்'. அதே பெயரில் படமாக்கப்பட்டது (1984). தோல்வி அடைந்தது. ஆனால் இன்னும் அறியாத்த வீதிகளை அறிய வைத்திருக்கின்றன எம்.எஸ்.வி இசையில் ஜெயச்சந்திரன் பாடிய 'சிந்தூர மேகங்கள்'

பாடல்களுக்காகவே நினைவில் நிற்கும் படங்கள்

மேற்குறிப்பிட்ட படங்கள் சிறந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருந்தும், நல்ல கருத்துள்ள கதைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்தும் இன்று வரை சிறந்த பாடல்களால் மட்டும் மனதில் நிற்கின்றன.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி 'லில்லி' என்ற படத்திற்கு 1958ல் இசை அமைத்தார்கள். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் 1971ல் 'லங்காதகனம்' என்ற படத்திற்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசை அமைத்தார். 'லங்காதகனம்' ப்ரேம் நசீர் நடித்த ஒரு மசாலா படம். ஸ்டண்டும் காமெடியும் கவர்ச்சி நடனங்களும் நிறைந்த படம். இந்த கூத்தை வெற்றி பெறச் செயதது எம்.எஸ்.வியின் பாடல்கள்.

'ஈஸ்வரன் ஒரிக்கல்' (ஏசுதாஸ்), 'இறைவன் உலகத்தைப் படைத்தானாம்' என்ற பாடலைப் போல செல்வச் சீமான்கள் கேளிக்கைகளில் ஈடுபட்டிருக்க தரித்திரத்தில் வாடுவோரின் தீன நிலைய சிததரிக்கிறது. ஸ்ரீகுமாரன் தம்பியின் வரிகளும் எம்.எஸ்.வி அவற்றுக்கு அமைத்த கருணை ரசம் ததும்பும் மெட்டும் பாடலை வெற்றியின் உச்சத்தில் கொண்டு வைத்து விட்டன. வாழ்க்கையின் கசப்பான அனுபவங்கள் முன் வைத்த 'சூரியன் என்னொரு நட்சத்திரம்' (ஏசுதாஸ்) அமோக்மான வெற்றி பெற்றது. மோகன ராகத்தில் அமைந்த இரண்டு பாடல்கள் (பஞ்சவடியிலே மாயா சீதையோ-ஜெயச்சந்திரன்: ஸ்வர்க்க நந்தினி-ஏசுதாஸ்), கர்நாடக இசை ரசிகர்களை கவர்ந்தன. ஜெயச்சந்திரன் பாடிய பாடல் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு போனது. ஏசுதாஸின் 'ஸ்வர்க்க நந்தினி' மலையாளம் சினிமாவின் ஒரு தலை சிறந்த பிரார்த்தனைப் பாடலாக விளங்குகிறது.

பணிதீராத்த வீடு படத்தின் இரண்டு பாடல்கள், மிகச் சிறந்த சிறுவர் பாடல்களாக விளங்குகின்றன. 'அணியம் மணியம் பொய்கையில்' (பி.சுசீலா), ஒரு அன்னத்தின் கதையைச் சொல்கிறது. தாலாட்டைப் போல் அமைந்த இந்தப் பாடல், எம்.எஸ்.வியின் இசை அமைப்பில் சிரஞ்சீவித்தன்மை பெற்று விட்டது. 'வாமம்மி வாமம்மி' (லதா ராஜு) இன்றைய சிறுவர்களையும் கவர்ந்து கொண்டிருகிறது.

திவ்ய தரிசனம் (1973) என்ற படத்தில் எம்.எஸ்.வி தானே பாடிய 'உதிச்சால் அஸ்தமிக்கும்' தத்துவங்களை மறக்க முடியாத பாடலாக்கியது. திவ்ய தரிசனத்தில் எம்.எஸ்.வி ஏசுதாஸை பாடவைத்த 'ஆகாசரூபினீ அன்னபூர்ணேஸ்வரி' பக்தி மணம் பரப்புகிறது. கற்பூர ஒளியின் தகதகப்பில் காதலி முகம் கண்டேன் என்று பொருள்பட அமைந்த ஸ்ரீகுமாரன் தம்பியின் வரிகளை அவற்றின் காவியத் தரத்திற்கு ஏற்ற சங்கீத சுரங்களில் அமைத்தார் எம்.எஸ்.வி.

'ஜீவிக்கான மறன்னு போய ஸ்திரீ'யில் வயலார் ராம வர்மாவின் காவிய வரிகளுக்கு (வீணபூவே வீணபூவே, குமாரன் ஆசாண்டெ வீண்பூவே) உன்னதமான சுரமேடை அமைத்துத் தந்தார் எம்.எஸ்.வி. மெதுவாக நகரும் அந்த மிருதுவான மெட்டில்தான் எவ்வளவு சுகம்.

'சந்திரகாந்தம்' என்ற படத்தில் (1974) சாருகேசி ராகத்தில் எம்.எஸ்.வி அமைத்த 'ஸ்வர்க்கமென்ன கானனத்தில்' ஏசுதாஸ், ஸ்ரீகுமாரன் தம்பியின் காவிய வீச்சுக்களை ஒரு கந்தர்வனமாக வழ்ங்கியது. இதே படத்தில் எம்.எஸ்.வி தானே பாடிய 'ப்ராபாதம்லோனி'யும் 'ஹிருதயவாஹினி'யும் மலையாளத் திரைப்பாட்டின் உன்னதங்களாக விளங்குகின்றன.

தமிழ் 'ராமு' கேரளா எங்கும் சிறப்பாக ஓடியது. அப்படியிருந்தும் அதை மலையாளத்தில் 'பாபுமோன்' என்று எடுத்தார்கள். அதுவும் ஓடியது என்றால் எம்.எஸ்.வி மலையாளப் படத்திற்கு வழங்கிய பிரத்யேகப் பாடல்கள்தான். ஏசுதாஸ் பாடிய 'நாடன்பாட்டிந்தே'என்றும் இனிய பாடல்களின் வரிசையில் நிற்கிறது.

நடிகை ஷீலா யக்க்ஷகானம் (1976) எடுத்தார். இன்றைக்கு அதன் தடங்கள் இசை அலையாக நம்மை வந்தடைவது, 'நிஷீதினி நிஷீதினி' என்ற பாடலின் வாயிலாகத்தான். எம்.எஸ்.வி இசை அமைப்பில் எஸ். ஜானகி பாடிய இந்த பாடல் இன்றைக்கும் மக்களின் மனதில் பசுமைய்யாக உள்ளது. 1976ல் வந்த் 'ஞசமி'யில் ஆறு ஹிட் பாடல்கள். இந்த படத்தில்தான் ஜாலி அப்ர்ஹாம் 'ரஜனிக்ந்திவிடற்னு' பாடி மக்களைக் கவ்ர்ந்தார்.

இளையராஜாவின் இசையில் தமிழில் வந்த 'முள்ளும் மலரும்' மலையாளத்தில் எம். எஸ்.வி இசை அமைப்பில் வந்தது. (வேனில் ஒரு மழ-1979), மது ஸ்ரீவிதயா, ஜெயன் நடித்த இந்த படத்தின் வெற்றிக்கு எம்.எஸ்.வியின் இசை ஒரு முக்கிய காரணம். 'அயலா பொரிச்ச துண்டு" என்று எல்.ஆர். ஈஸ்வரி இந்தப்படத்தில் பாடியது பலரை கவர்ந்தது. இன்றும் கூட சாதாரண மக்கள் இந்தப்பாடலை விரும்பிக் கேட்கிறார்கள்.

மெதுவாக நகர்கிற பாடலிலும் கொஞ்சம் ஈர்ப்பு குறையாமல் நடத்திச் செல்வதில் எம்.எஸ்.விக்கு இணையே இல்லை. இந்த தன்மையை சிம்ஹாசனம் படத்தில் வருகிற 'காவாலம் கண்டன் வள்ளம்' ஏசுதாஸ், வாணி ஜெயராம்-1979) என்ற பாடலில் நாம் கவனிக்கலாம். கேரள ஓடப்பாட்டின் பாணியில் அமைந்த இந்தப் பாடல் நம்மை ஒரே நொடியில் நதிக்கரைக்கு இட்டுச் செல்லும் சக்தி படைத்திருக்கிறது. இதில் இந்தப் பாட்டிற்கு ஈடே இல்லை.

தமிழ் சினிமாவின் தத்துப் பிள்ளையான எம்.எஸ்.விஸ்வநாதன் வளப்பு அன்னையின் கரங்களிலே பலகாலம் வளர்ந்தார். தாய் மொழிக்கு தாமதமாகத்தான் வந்தார். ஆனால் எழுபதுகளில் அவருடைய சிறந்த இசையில் ஜெயச்சந்திரன், ஜாலி அப்ரஹாம், வாணி ஜெயராம் போன்ற புதிய பாடகர்கள் புகழ் பெற்றார்கள். ரேணுகா, ஏ.எல். ராகவன், சாய்பாபா, வல்சலா, ரமோலா முதலியவர்கள் மலையாளம் சினிமாவில் எம்.எஸ்.வியால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்கள். ஜெயச்சந்திரனை அற்புதமான பாடல்கள் பாட வைத்து உச்சாணிக்கொம்புக்கு ஏற்றியவர் எம்.எஸ்.வி. ஜாலி அப்ரஹாம், பிரம்மானந்தம் ஆகியோரையும் சிறந்த பாடல்களைப் பாட வைத்தார்.

முன்பு குறிப்பிட்ட ஸ்ரீகுமாரன் தம்பி, வயலார் ராம வர்மாவைத் தவிர பி.பாஸ்கரன், ஓ.என்.வி.குருப் முதலிய சிறந்த கவிஞர்களின் வரிகளுக்கு எம்.எஸ்.வி இசை அமைத்திருக்கிறார். மூன்று தலைமுறைப் பாடலாசிரியர்களுடன் பணியாற்றியவர். சுவாமி பிரம்ஹவிரதன், ஞானபீட விருது பெற்ற ஜி.சங்கர குரூப் போன்ற மேதைகளின் பாடல்களுக்கும் இசை அமைத்திருக்கிறார். மலையாளம் மறன்னுபோயி என்று சில சமயம் வேடிக்கையாகச் சொல்வார் விஸ்வநாதன். ஆனால் மலையாளிகள் அவரை மறக்க முடியாத அளவிற்கு சிறந்த பாடல்கள் தந்திருக்கிறார்.
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Goto page 1, 2, 3  Next
Page 1 of 3

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group