"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

A Handful of Piano Picks - Part 8

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Sun Dec 02, 2007 10:44 pm    Post subject: A Handful of Piano Picks - Part 8 Reply with quote

A Handful of Piano Picks

Part 8

நம் பியானோ தொடரைத் தொடர்வோம். இம்முறை ஒரே பாடலை மட்டும் பார்க்காமல், பியானோ கொண்ட திஸ்ர (3) நடையில் எவ்வளவு அதிசயங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பதை உணர ஒரு சிறு முயற்சி மேற்கொள்வோம்

ஏழு பாடல்கள் பார்த்தாகிவிட்டன. இதோ கீழே இன்னும் சில பாடல்கள். ஆனால் ஒவ்வொரு பாடலும் தனக்கென ஒரு அழகைச் சுமந்து நிற்கின்றன, என்கிற உண்மையால் இசைக்குப் பெருமை.

"எங்க மாமா" திரைப்படம் ஒரு இசைக் காவியம்! அதில் அருமையான பாடல் "எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்". பாடல் ஒரு சோகமன சூழல், காதலன் மனமுடைந்து பாடும் பாடல். பாடல் ஒரு பியானோ ரோலிங்குடன் தொடங்கும். பாடலின் முன்னிசையில் என்ன கம்பீரம்! பல்லவி இரண்டாம் முறை வருகையில் பின்னணியில் பின்னணியில் ஸ்ட்ரிங்ஸ். எவ்வளவு இதம். பாடலுக்கு இடையே பல அருமையான சிறு சிறு சேர்ப்புகள் - அக்காடியன், டிரம்ஸ் தீர்மானம், பியானோ, டபுள் பாஸ் ஃபில்லிங் - பாடலுக்கு அவ்வளவு அழகு சேர்ப்பதை அறியலாம். இடையிசையில் கோரஸும், பியானோவும், வயலினும் விளையாடும் விளையாட்டு.... சொல்லில் அடங்காது.

ஒரு மென்மையான பாடலுக்கு மெஜஸ்டிக் ஆர்க்கெஸ்ட்ரேஷன். பாடலின் மென்மை கொஞ்சமும் கலையாமல். அதுதான் மெல்லிசை மன்னரின் மேன்மை.

இப்பாடலைப் போன்ற ஒரு சூழல். ஒரே நடிகர் (திலகம்). இரண்டிலும் டி.எம்.எஸ் அவர்களின் உருக்கக் குரல். அதே பியானோ ரிதம் பின்னணியில் மற்றொரு பாடல் - "மெழுகுவத்தி எறிகின்றது". அத்தனையும் ஒரே போலிருந்தாலும், பாடலின் அமைப்பு வேறுபட்டிருப்பதுதான் அழகு. குறிப்பாக பாடல்களின் சரணங்கள் வேறுபட்டிருப்பது இதற்கு எடுத்துக்காட்டு.

பாடலில் சிறந்த இடமே சரணம் தான். பியானோ-டிரம்ஸ்'ல் இருந்து தபேலா நடையாக மாறும் அழகு. சரணத்தின் முடிவில் "உறவு கொள்ள பிறந்து வந்தது" வரியில் பின்னணியில் கிட்டார் மட்டும் கொண்டு பின், பியானோவுடன் டிரம்ஸ் துவங்கும். (இவ்விடத்தில் பேஸ் கிட்டார் பிரதானமாக கேட்கும். ஒரு Ear-Phone கொண்டு இவ்விடத்தைக் கேளுங்கள், அற்புதமாக இருக்கும்)

அடுத்த பாடலின் படம் இன்னொறு காவியம். மெல்லிசை மன்னர்கள் இசையில் "சுமை தாங்கி" படத்தில் "மனிதன் என்பவன்" என்கிற பாடல். இப்படமும் பாடல்களும் எவ்வளுவு முறை அலசப்பாலும், பார்க்கப்பட்டாலும், எத்தனை காலம் சென்றாலும் நிலைத்து நிற்கும் அழிவில்லாத படைப்பு.

(நம் தளத்தின் "சிறந்த வர்ணிப்பாளர்" பாலாஜி அவர்கள் இப்பாடலையும் அடுத்த பாடலையும் அணுஅணுவாக அலசிய பிறகு, அதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், ஓரிரு வார்த்தைகள் இப்பாடலைப் பற்றி நான் ரசித்தவற்றை இங்கு பகிர்ந்து கொள்ள ஒரு ஆவல். அவரது அனுமதியுடன்....)

எவ்வளுவு மென்மை, இதமாக குழல் - பி.பி.எஸ் அவர்கள் - ஒரு சிறு சிரிப்புடன் "மனிதன் என்பவன் என்று தொடங்கும் அழகு.... சரணத்தில் "யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்" முடிகையில் பின்னணியில் அமைதி.

"மனம்..மனம்.. அது கோவிலாகலாம்" கவியரசரின் அற்புதமான வார்த்தைகளுக்கு மெல்லிசை உயிர் கொடுத்திருப்பதை உணரலாம்.

தனிமையில் அமர்ந்து அமைதியாக கேட்பதற்கு மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இப்பாடல்!

இப்படியெல்லாம் பாடல் இருக்க முடியுமா? இனியும் இப்படி ஒரு பாடல் உருவாகுமா? என்று பல வகையான வியப்பை விதைத்துக் கொண்டே தொடங்கும் பாடல் "பணம் படைத்தவன்" படத்தில் "கண் போன போக்கிலே". கல்யாணி ராகத்தை, WALTZ இசையில் மறைத்து அட்டகாசமான முன்னிசையையும், பிரமாதமான British ஆர்க்கெஸ்ட்ரேஷனையும் கொண்டு திகழும் பாடல். பாலாஜி அவர்களின் வர்ணனையின் கடைசி இரண்டு வரிகள் இப்பாடலின் சிறப்பை உணர்த்தும்:
"Western Orchestration at its Best"

"And it was way ahead of times then"

சத்தியச் சொற்கள் !!!

அடுத்த பாடல் ஒரு சரித்திரப் பாடல். படத்தின் களம் "சரித்திரம்" என்பதால் அல்ல. ஒவ்வொரு பாடலும் "சரித்திரம்" படைத்தது என்கிற காரணத்தால். மக்கள் திலகத்தின் நடிப்பில் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்". சரித்திரப் பாடலாக இருந்தாலும், சோகப் பாடலாக இருந்தாலும், காதல் பாடலாக இருந்தாலும், தத்துவங்களை மிக அழகாகத் ததும்பவிடுவது கவியரசர் கண்ணதாசனின் வல்லமை. பாடலின் ஆர்க்கெஸ்ட்ரேஷன் ட்ரம்பெட், இடையிசையில் வரும் "ல லா லா லா" போன்றவற்றால் ஒரு "சரித்திர" உணர்வை மிக அழகாக உணர்த்தியிருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள்.

மெல்லிசையில் திளைக்கும் கவியரசரின் வரிகளும், திரையில் மக்கள் திலகத்தின் துடிப்பும், கேட்பவர்கள் ஒவ்வொருவரின், அடிமை உணர்வை இழுத்து எறிந்து, சுதந்திரமாக எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உரைக்கும் ஒரு வழிகாட்டி இப்பாடல்.

அடுத்த பாகத்தில் மற்றுமொரு வித்தியாசமான பியானோ தொகுப்பைக் காணலாம்.

மெல்லிசை மன்னரின் பாடல்களை எழுத்துக்களால் மட்டும் உணர நினைப்பது அனுபவக் கல்வியை அஞ்சலில் கற்க முயல்வது போலாகும். இது நன்கு தெரிந்திருந்தும் அவர் இசையின் பெருமைகளைப் பகிர்ந்து கொள்ளத் துடிக்க வைப்பது அவர் இசையின் சிறப்பாகும்.

A Handful of Piano Picks - Listing
Part 1 - Ennai Theriyuma
Part 2 - Kaatru Vandhaal
Part 3 - VannakkiLi
Part 4 - Oh Little Flower
Part 5 - Naan Nandri Solven
Part 6 - Thairiyamaaga Chol Nee
Part 7 - Maanicka Thottil
Part 8 - Collection of Piano Songs
Part 9 - Jazz Piano1 - Varavendum Oru Pozhuthu
Part 10 - Jazz Piano2 - Viswanathan Velai VeNdum
Part 11 - Jazz Piano3 - Enna Vegam Nillu Bama
Part 12 - Rock and Roll - Aadavarellam, Malarendra Mugamadhu
Part 13 - Unnai Ondru Ketpaen
Part 14 - Kannirendum Minna, Vidiya Vidiya
Part 15 - "Periya Idathu PaNN" - Kannenna Kannenna Kalanguthu
Part 16 - "Paal Thamizh Paal"
Part 17 - Chella KiLigaLaam
Part 18 - An Ensemble of Jazz Rhythms(1) - Thottu Kaattavaa
Part 19 - An Ensemble of Jazz Rhythms(2) - Hey..Naadodi (Anbe Vaa)
Part 20 - Piano Thisram - Jillendru, Manamedai, Senthamizh Paadum, Pillai Thamizh Paadukiren, Ninaithathai Nadathiye
Part 21 - "Rocking Piano" - Adadaa enna azagu, Allippanthal, Yaaro aada therinthavar
Part 22 - MSV-SPB Mesmerism
Part 23 - Avan Ninaithaana
Part 24 - "Expressions" - Athanin MuthangaL, Piano Fillers in different songs
Part 25 - Layam - An analysis on different beat patterns in Tamil Film Music
Part 26 - The Finale - Top 3 Piano songs of MSV
_________________
Ramkumar


Last edited by Ram on Wed Jun 17, 2009 4:17 pm; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
raghavan vasudevan
Enthusiant


Joined: 03 Jan 2007
Posts: 65
Location: Chennai

PostPosted: Mon Dec 03, 2007 2:00 pm    Post subject: Piano in MSV composition Reply with quote

Hallo,

Ramki write up on Piano was well resarched. I had already posted this topic earlier on. Just to append I recall the song from the film Kannan En kadalan song Padvore by TMS.

In this song Tabla and piano combination is unique which no music director has thought of. Normally congo drums/drums are used on a song where piano is played. But this song is a great one . The competiton between table and piano is indeed a joyful experience. I am sure the musicians of both instruments would have enjoyed as much the listners.

It is one more feather on our great Mellisai mannar.
Back to top
View user's profile Send private message Visit poster's website
Vatsan
The Fervent


Joined: 20 Jan 2007
Posts: 352

PostPosted: Mon Dec 03, 2007 3:51 pm    Post subject: MSV's piano works Reply with quote

Ram,
As you rightly stated, MSV's works compell you to write on them...far too different from MSV the persona, who couldn't give a damn about opinions or recognitions Smile
kaN pOna pOkkilE.....sevigaL pOna pOkkilE pOnAl....kAlam muzhuvathum antha pAdalaiyE kEttunkkondirukka thOndrum. The unedited version that is often played on TV has a violin solo at the later half of the second interlude that was played TKR himself. The very seed of the song belongs to an era that has yet to arrive !!!! The percussions ensemble is a treat. Any other composer would have been happy with a generic waltz rhythm arrangement. engu podi vaikkalAm endru "edakku" seyyum Nandi-yin thalaivanAna Viswanathan avargaLukkuL mattum magnified creative rhythm sense adakkam. The slur on the beats, that subtle something else creeping into the rhythm pattern during the interludes is all something we have come to expect from MSV.
ellOrum nalam vAzha is a timeless classic especially when you notice how easily it eclipses Shankar Jaikishen's 'dil kE jharOkOn mein tujhkO bitAkar'. Multiple tunes for stanzas, especially the one slight slant at 'nAn ippOthu oomai, mozhi illAtha piLLai ' is a western classical-ish touch that ONLY MSV manages to fuse with an Indian melody time and again and ofcourse, seamlessly.....and oh GAWD...so appropriate....yawn....MSV does that all the time...so what's new here ?!!!? . To seamlessly blend the seemingly irreconciliable aspects of feelings hurtful outrage, strong melody, a Victorian touch to the tune (like in the above mentioned lines), brilliant santhams, orchestral arrangement that would send the word "grandeur" on a dictionary hunt to re-write its own meaning and yet, up your scale on appreciation of aesthetics leaving you benumbed is an art form that 'happens' to MSV only, consistently so. Plus here is a bonus, two different tunes for stanzas !!!! Quite a lot to imbibe, right ? Happy "experiencing"....lets all go back to listen to the song once again. Wait....what about the delectable solo violin that serves as prompt for a the first stanza!!! That seemed to come out of nowhere, a panache loaded touch, offering the charanams to TMS on a platter, pretty much like the sitar swirl that hands the entire 'mounamE pAravayAl' to PBS. The feeling of the inevitable flow of music forces the word 'happen' to happen to me when I write about MSV.
Ram, if you could discern the piano notes behind the classical-folkish 'pAvaiyin mugathhai' from pAsa malar, we could showcase it as the mother of all fusion music, except that MSV did not call it so, because it 'happened' to him much unlike the case of today's composers where the fused components stick out like sore thumbs.
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Tue Dec 04, 2007 3:13 am    Post subject: Reply with quote

Thanks for your comments, dear Vasudevan Sir... hope you have had opportunity to go through my other 7 songs prior to this part too. See the presentation in all the songs. (Am sure there are still more left). Completely unimaginable variety by anyone in the world, except our MSV. Real master of melodies!!! Your observations on "Paaduvor Paadinaal" is vivid.

And dear Vatsan... I fully enjoyed your description "Nandi-yin Thalaivan" for MSV's sense of rhythm. Aptly said! None could agree more !!!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji
Maniac


Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Wed Dec 05, 2007 9:08 am    Post subject: Reply with quote

A very good writeup as ever , dear Ram.

Your articles are like a research material to me . I get so many information on the nuances of a song, its basic note, raga aspect & ABOVE ALL , YOUR BEAUTIFUL TAMIL . Very Happy
IMO, today, very few talk or write in tamil & seeing someone like you writing so fluently in Tamil makes me an addict to your posts.

All the songs highlighted by you are gems of MSV's rich Piano orchestration. As you rightly mentioned, even if we discuss about such songs 1000 times, the enthusiasm and happiness in talking about such songs of MSV are always intact & continuing . Thats the speciality of his Melody music . Smile

எவ்வளுவு மென்மை, இதமாக குழல் - பி.பி.எஸ் அவர்கள் - ஒரு சிறு சிரிப்புடன் "மனிதன் என்பவன் என்று தொடங்கும் அழகு.... சரணத்தில் "யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்" முடிகையில் பின்னணியில் அமைதி.

"மனம்..மனம்.. அது கோவிலாகலாம்" கவியரசரின் அற்புதமான வார்த்தைகளுக்கு மெல்லிசை உயிர் கொடுத்திருப்பதை உணரலாம்.

தனிமையில் அமர்ந்து அமைதியாக கேட்பதற்கு மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இப்பாடல்!

Absolutely true 100%. This is one song which one can enjoy listening in isolation ! Even the picturisation shows Gemini going for a walk in Chennai Beach ! What a beautiful imagination by Sridhar those days !

Amazing set of people we had !

Cheers.
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki
Fanatic


Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Mon Dec 10, 2007 9:35 pm    Post subject: Reply with quote

Dear Ram

Only today I read your this posting since i wanted spend considerable time to read line by line to enjoy your writing every bit . As usual, it is a wonderful analysis of a set of 'THISRA nadai ' songs of MSV !

Pl keep writing on many more numbers of the OUTSTANDING CREATOR of our era !

Dad
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group