"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Kannil therigindra vaanam - Ragasiya Police 115

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Mon Apr 13, 2009 5:05 am    Post subject: Lyrics - Kannil therigindra vaanam - Ragasiya Police 115 Reply with quote

படம்: ரகசிய போலீஸ் 115
பாடியவர்கள்: எல்.ஆர் ஈஸ்வரி, டி.எம். சௌந்தரராஜன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர்


LRE:
கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற மேகம் தொட்டு தழுவாதோ
கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ

TMS:
பொன்னழுகு பெண் முகத்தில் கண் விழுந்தால் என்னாகும்
பொன்னாகும், பூவாகும், தள்ளாடும்
செங்கனி மங்கையின் மீது செவ்வரி வண்டாடும்

LRE:
சிவந்த மலர்கள் சிரிக்கும் அழகில் நினைவில் எதனை சிந்தும்

TMS:
கொடுக்கும் கரங்கள் துடிக்க துடிக்க எடுத்து முடிக்க சொல்லும்
மலர் கிள்ளலாம் கையில் அள்ளலாம் கதை சொல்லலாம்
வண்ண கன்னமெல்லாம், இன்னுமென்ன வந்துவிடு
சொல்லிவிடு, சொல்லிவிடு
(செங்கனி மங்கையின்)

LRE: அருவி விழுந்து நதியில் நடந்து கடலில் கலந்ததென்ன

TMS: பருவம் மறந்து மடியில் விழுந்து பழகும் கதையை சொல்ல

LRE: நதி வந்தது

TMS: கடல் கொண்டது

LRS: சுவை கண்டது

TMS: என்ன சொந்தமிது

LRE:
கொஞ்ச வரும் வஞ்சியரின் நெஞ்சமிது
ஆடவந்தேன் மேடையிலே ஆடிவிட்டேன் உன்மனதில்

TMS: ஆடுவதை காண வந்தேன் ஆடவைத்தேன் உன்மனதை
(கண்ணில் தெரிகின்ற)

திரு.பந்துலு அவர்களின் இயக்கத்தில் எம். ஜி.ஆர்., ஜெயலலிதா அவர்கள் நடித்து 1968- ல் வெளிவந்துள்ள படம் ரகசிய போலீஸ் 115. இது ஒரு அருமையான நகைசுவை கலந்த பொழுது போக்கு திரைப்படம். இந்த படத்தில் அனைத்து பாடல்களும் மெகா ஹிட்.

இந்த பாடல் படத்தில் எம்.ஜி.ஆரும், வெண்ணிற ஆடை நிர்மலாவும் பாடுவதாக வரும். இந்த பாடலும் மெல்லிசை மன்னர் நமக்கு அளித்துள்ள மிகப் பெரிய விருந்துகளில் ஒன்று.

பாடலின் தொடக்கத்தில் வரும் வயலின் இசை, மிக வேகமாக ஓடி வரும் ஒரு நதி பள்ளம் கண்டதும் இறங்குவதைப் போல, high pitch-l ஓடி வந்து அழகாக low pitch-l இறங்க, உடன் ஒரு சிறு அலை உயரே எழுவதை போல புல்லாங்குழல் ராகம் சற்று மேலே எழ அதை தொடர்ந்து எல்.ஆர்.ஈஸ்வரியும் high pitch-l 'கண்ணில் தெரிகின்ற வானம்' என்று அழுத்தம் திருத்தமாக, அழகாக பல்லவியை தொடங்கிவிடுவார். இவர் பல்லவியை முடிக்கவும் xylophone ராகம் ஆடி ஆடி அழகாக வர, அது இசைக்கும் அதே ராகத்தை வயலினும் ஆடி ஆடி ராகம் இசைக்கும்போது நம் தலையும் அந்த ராகத்தை 'வா வா' என்று அழைப்பது போல ஆடத் தொடங்கும்.
இதை தொடரும் ட்ரம்பெட்டின் தனி ராகம் கொள்ளை அழகு. இந்த ட்ரம்பெட் ராகத்துக்கு பின்னணியாக Harp ராகம் இனிமைக்கு மேலும் இனிமை சேர்கிறது. இதை தொடரும் ஆர்மோனிகாவின் ராகம் high pitch-l முடிய, அதோடு இந்த பாடலில் இணையும் டி.எம்.எஸ். அவர்களின் குரலும் அதே high pitch-l கம்பீரமாக 'பொன்னழகு பெண் முகத்தில்' என்று தொடங்கும். இவர் பாடும் ஒவ்வொரு வார்த்தையையும் அடுத்த வார்த்தையோடு இணைப்பது ட்ரம்பெட்டின் ராகம்தான். இதே வரிகளை டி.எம்.எஸ். அவர்கள் நிதானமாக அனுபவித்து மீண்டும் பாடும்போது அந்த ட்ரம்பெட்டின் ராகமும் அதற்கு ஏற்றார் போல் இசைக்கும்.
பின் டி.எம்.எஸ்சை தொடரும் எல்.ஆர். 'சிவந்த மலர்கள் சிரிக்கும்' என்ற வரியை முடிக்கும்போது சட்டென்று ஒரு நொடியில் வரும் அந்த mouth organ ராகம் இந்த பாடலை எட்டிப் பார்த்து மறைவதுபோன்ற பாவனையை உண்டாக்கும்.

இரண்டாவது சரணத்துக்கு முன் நிதானமாக வரும் புல்லாங்குழலும், அதற்கு பின்னணியாக வரும் ட்ரம்பெட்டும் இந்த வேகமான பாடலின் மெட்டுக்கு ஒரு அணை போடுவது போல அழகாக வருவதும், அதை மீண்டும் துரிதப்படுத்துவது போல ஆர்மோனிகா வருவதும் நம்மை மெய் மறக்கச் செய்யும்.

இந்த பாடலை கண்ணதாசன் அவர்கள் எழுதி இருப்பது விவரிக்க முடியாத அழகு.
ஒரு பெண்ணை எவ்வளவு அழகாக வர்ணித்து இருக்கிறார்.
//செங்கனி மங்கையின் மீது செவ்வரி வண்டாடும்.....// என்னை மிகவும் கவர்ந்த வர்ணனை இது.

'ஆட வந்தேன் மேடையிலே, ஆடி விட்டேன் உன் மனதில்' என்று அவள் பாட, அதற்கு பதில் சொல்வது போல், 'ஆடுவதை காண வந்தேன், ஆட வைத்தேன் உன் மனதை' என்று எழுதி இருப்பது அற்புதம்.

மெல்லிசை மன்னரின் ஒவ்வொரு பாடலை கேட்கும்போதும், நம் ஒவ்வொருவர் மனதிலும் தோன்றுவது ஒவ்வொரு விதமான எண்ணங்கள்தான். அந்த எண்ணங்கள் வேறானாலும் அதனால் கிடைக்கும் நிறைவும், இனிமையும், இதமும் எல்லோருக்கும் ஒன்றேதான்.
Back to top
View user's profile Send private message
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Mon Apr 13, 2009 7:21 am    Post subject: Reply with quote

the beauty of MM lies here where he along with excelling the soulful tune , wonderful music with the singers ensures that the poet contribution allso gets noticed .

in other words in an output of MM right from singers ,hero heroines, poet all excelled along with the product of MM

it is not just for a song , for a movie and it has been there all in his products .

when people sit in a AC hotel and discuss for hours only to come out with a song with no life imagine MM doing the same with his counterparts just like that

more than the quality or efficiency the beauty is that they are in general effortless which only goes to porove that muisc is his way of life

it is a pride that we live in his days and he is just there flesh and blood
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group