"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Chittukkuruvikkenna kattuppaadu - Savale Samali

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Mar 20, 2009 2:08 am    Post subject: Lyrics - Chittukkuruvikkenna kattuppaadu - Savale Samali Reply with quote

படம்: சவாலே சமாளி
பாடியவர்: பீ.சுசீலா
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர்

சம் சம் சம் சம்சம் சம் சம் சம் சம்சம்
சம் சம் சம் சம்சம் லல்லல்லா

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கெது சொந்தவீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு
சிட்டுக்குருவிகென்ன கட்டுப்பாடு கட்டுப்பாடு ஓஹோ....

மரத்தில் படரும் கொடியே
உன்னை வளர்த்தவரா இங்கு படரவிட்டார்
டட் டட டட்டட்டா டட டட் டட டட்டட்டா
மண்ணில் நடக்கும் நதியே
உன்னை படைத்தவரா இந்த பாதை சொன்னார்
உங்கள் வழியே உங்கள் உலகு
இந்த வழிதான் எந்தன் கனவு
ரரரரரரரரரர ரரராரா ரரராரா ரீ...........
ரரரரரரரரரர ரரராரா ரரராரா ரா.........
சிட்டுக்குருவிகென்ன கட்டுப்பாடு கட்டுப்பாடு ஓ.......

பழத்தை கடிக்கும் அணிலே
இன்று பசிகின்றதோ பழம் ருசிக்கின்றதோ
டட் டட டட்டட்டா டட டட் டட டட்டட்டா
பாட்டு படிக்கும் குயிலே
நீ படித்ததுண்டோ, சொல்லி கொடுத்ததுண்டோ
நினைத்ததெல்லாம் கிடைக்க வேண்டும்
நினைத்தபடியே நடக்க வேண்டும்
சிட்டுக்குருவிகென்ன கட்டுப்பாடு கட்டுப்பாடு ஓஹோ.....

வளரும் தென்னை மரமே
நீ வளர்ந்ததைப் போல் நான் நிமிர்ந்து நிற்பேன்
டட் டட டட்டட்டா டட டட் டட டட்டட்டா
வணங்கி வளையும் நாணல்
நீ வளைவதைப் போல் தலை குனிவதில்லை
பார்க்கும் கண்கள் பணிய வேண்டும்
பாவை உலகம் மதிக்க வேண்டும்
ரரரரரரரரரர ரரராரா ரரராரா ரீ...........
ரரரரரரரரரர ரரராரா ரரராரா ரா..........
(சிட்டுக்குருவிக்கென்ன)

"சவாலே சமாளி"
1971- ல் வெளிவந்த இந்த படத்தில் சிவாஜியும், ஜெயலலிதாவும் நடித்துள்ளனர். இது ஒரு சுவாரசியமான குடும்பத் திரைப்படம். படத்தில் சிவாஜி அவர்கள் ஒரு ஏழை கிராமத்து வாலிபனாக, பிடிவாத குணமும், கொள்கை பிடிப்பும் மிகுந்தவராக வருவார். இந்த படத்தில் அவருடைய உடை வெள்ளை வேட்டியும், கதர் சட்டையும்தான். எதற்கெடுத்தாலும் அழகாக வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு நியாயம் கேட்க கிளம்பி விடுவார். ஜெயலலிதா அவர்கள் பட்டணத்தில் படித்த, மிகுந்த நாகரீகமுள்ள பெண்ணாக வருவார். இவரும், சிவாஜியும் சந்திக்கும் இடத்தில் எல்லாம் சண்டை போட்டுக்கொள்வது படம் முழுவதும் மிகவும் ரசிக்கும்படி இருக்கும்.

இந்த பாடல், படத்தின் தொடக்கத்தில் படிப்பை முடித்துக் கொண்டு ஜெயலலிதா ஊருக்கு திரும்பியவுடன் பாடுவதாக வரும். இந்த பாடலில் அவர் அழகான frill வைத்த gown, இரட்டை பின்னல் என்று மிகவும் அழகான தோற்றத்துடன் அழகாக ஆடுவார். இவரின் கதா பாத்திரத்துக்கு ஏற்றார் போல் இந்த பாடலின் வரிகளை கண்ணதாசன் அவர்கள் மிகவும் பொருத்தமாக எழுதி இருப்பார். ஒரு படித்த, நாகரீகமுள்ள பெண், கிராமத்தில் இந்த பாட்டை பாடுவது போல் காட்சி இருந்தாலும், அந்த பெண்ணின் முற்போக்கான சிந்தனைகள், அந்த அழகான கிராமத்தின் இயற்கை காட்சிகளை அவர் ரசிப்பதில் கூட வெளிப்படுவது போல பாடலின் வரிகளை எழுதி இருப்பது மிகவும் அற்புதம்.

மரத்தில் படரும் கொடியையும், வளைந்து ஓடும் நதியையும் பார்த்து
'உங்கள் வழியே உங்கள் உலகு, இந்த வழிதான் எந்தன் கனவு' .......என்றும்

உயர்ந்து வளர்ந்திருக்கும் தென்னை மரத்தை பார்த்து
'நீ உயர்ந்ததை போல் நான் நிமிர்ந்து நிற்பேன்'.........என்றும்

நாணலை பார்த்து 'நீ வளைவதைப்போல் தலை குனிவதில்லை' .....என்றும்

பெண்களை 'பார்க்கும் கண்கள் பணிய வேண்டும், பாவை உலகம் மதிக்க வேண்டும்' என்று எவ்வளவு அழகாக எழுதி இருக்கிறார்.

சுசீலா அவர்களும் இந்த பாடலை சுதந்திரமாக, நாகரீகத்துடன் வலம் வரும் ஒரு இளம்பெண் பாடினால் எப்படி ஸ்டைலாக, சந்தோஷத்துடன் பாடுவாரோ அப்படியே பாடி இருக்கிறார். இந்த பாடலில் வரும் ஹம்மிங்கை அவர் பாடும்போதே, அந்த குரலில் ஒரு துள்ளலும், ஸ்டைலும், பாடலின் வரிகளை பாடும் போது ஒரு அழுத்தமும், கம்பீரமும் இருக்கும். இந்த பாடல் அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்திருக்கிறது.

இந்த பாடலின் தொடக்கமே வயலின் ஒரு அழகான ஹம்மிங்கை எடுத்து கொடுக்க, அதை ஒரு புல்லாங்குழல் வாங்கி ராகத்துடன் சென்று சுசீலா அவர்களுக்கு கொடுக்க, சுசீலா தன் தேன் குரலில் அந்த ஹம்மிங்கை பாட, பின் மீண்டும் புல்லாங்குழல் அதே ராகத்துடன் mouthorgan-னிடம் செல்ல அது ஒரு குருவி பறப்பது போல அழகான ராகம் இசைத்து பறந்து விட, உடனே சுசீலா அவர்கள் 'சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு' என்று பல்லவியை பாட தொடங்கி விடுவார். இவை அனைத்துக்கும் பின்னணியில் அழகாக bongos வேறு.

இந்த பாடல் முழுவதும் பின்னணி இசையாக வந்து நம் மனதை ஆக்கிரமிப்பது வயலினும், புல்லாங்குழலும்தான். இவை இரண்டும் சேர்ந்து இந்த பாடலை நாம் கேட்கும்போதெல்லாம் நம் மனதையும் அந்த கிராமத்து சூழலில் நடமாட வைத்து விடும். இந்த பாடல் முடிவதும் சுசீலாவின் ஹம்மிங்கிலும் அதை தொடர்ந்து ஒரு புல்லாங்குழல் ராகத்திலும்தான்.

இவ்வளவு அழகான வரிகளைக் கொண்ட இந்த பாடலுக்கு அற்புதமான இசை வடிவம் கொடுத்து, அதை சுசீலா அவர்களை அத்தனை உணர்ச்சியுடன் பாடவும் வைத்து, அது அவருக்கு விருதையே பெற்று கொடுத்திருக்கிறது என்றால், நம் மெல்லிசை மன்னரின் சாதனையை என்னவென்று புகழ்வது. அவரின் தெய்வீக இசை ஞானத்தை புகழ்ந்து சொல்ல வார்த்தைகளே இல்லை. வார்த்தைகள் என்னும் ஒரு வரையறைக்குள் அவை அடங்காது. அடக்கவும் முடியாது. அது அவற்றை எல்லாம் கடந்து எல்லையே இல்லாமல் விஸ்வரூபம் பெற்று நிற்கிறது.
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Fri Mar 20, 2009 10:48 am    Post subject: Reply with quote

Dear Mrs. Meenakshi,

(I would have liked to reply in Tamil but it takes quite longer for me to type in Tamil.)

The lyrical analysis you have done by way of responding to 'neyar viruppam', (I think Mrs Usha Shankar was the first 'Neyar' to ask for this) carries your well-established stamp. As usual, you have described the situation (as a director would to our MM, before the song composition) and analyzed the lyrics while also highlighting the orchestration. A complete analysis! Excellent.

As per PS getting a national award for this song, I feel that she should have been given the award for some other song, since in my opinion, this song, while excellently composed, does not require extraordinary skills or efforts from the singer. Of course, PS deserves it, but it should have been for a song demanding a huge effort mustering her entire skills. It is like Kannadasan getting the Sahitya Academy Award, not for any of his poems, but for a historical novel 'Seramaan Kaadhali,' which cannot be called his best!

Mrs. Malathi,

'Savaale Samaalee' is often telecast in the afternoons in KTV/Raj/Kalaignar once in every two three months. You can keep a watch on the TV programs page of the newspapers or may surf channels around 2 pm. You will hit the jackpot sooner than later! The DVD may be available in Raj Video Vision shop near Anand Thetre. But in my opinion, it is not a very good movie to watch!

I would also suggest that this lyrics analysis may be supplemented by a song (raagaa) analysis by someone like Mr.Murali for the benefit of people like me with poor knowledge about raagaasa. I perceive some similarities between this song and 'vellimani osaiyile' (iru malargal) Does my perception have some base or it is just an illusion?
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Mar 20, 2009 7:07 pm    Post subject: Reply with quote

உங்கள் இருவரின் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

மாலதி உங்கள் மகளின் லட்சியம் நிறைவேற என் வாழ்த்துக்கள்.

பார்தவி, நீங்கள் எழுதி இருப்பது சரிதான். இந்த பாடலை பொறுத்தவரை இதன் சிறப்பே அந்த காலத்தில் இப்படி ஒரு அழகான, வித்தியாசமான ஹம்மிங்கிலும், சட்டென்று மனதை கவரும் மெட்டிலும் இந்த பாடலை நம் மெல்லிசை மன்னர் அமைத்த விதம்தான். அதை சுசீலா அவர்களும் அற்புதமாக பாடியுள்ளது எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டு விட்டது.

நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பழைய படங்களைத்தான் மீண்டும், மீண்டும் விரும்பி பார்ப்பேன். சென்ற மாதம்தான் இந்த படத்தை பார்த்தேன். இந்த படத்தை நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம் என்பது என்னுடைய அபிப்பிராயம்.
Back to top
View user's profile Send private message
tvsankar



Joined: 24 Jan 2007
Posts: 229

PostPosted: Mon Mar 23, 2009 10:47 am    Post subject: Reply with quote

Dear Meenakshi,
Sorrry for the delayed response. Indru dhan parthen.
padithen.
Padalai kettu kondu , ungalin ezhuthaiyum padikiren.

INdha kaalai velaiyil, Enaku Kidaitha periya sandhosham
idhu dhan ............

Very nice description came from yoi Meenakshi.


"இந்த பாடலின் தொடக்கமே வயலின் ஒரு அழகான ஹம்மிங்கை எடுத்து கொடுக்க, அதை ஒரு புல்லாங்குழல் வாங்கி ராகத்துடன் சென்று சுசீலா அவர்களுக்கு கொடுக்க, சுசீலா தன் தேன் குரலில் அந்த ஹம்மிங்கை பாட, பின் மீண்டும் புல்லாங்குழல் அதே ராகத்துடன் mouthorgan-னிடம் செல்ல அது ஒரு குருவி பறப்பது போல அழகான ராகம் இசைத்து பறந்து விட, உடனே சுசீலா அவர்கள் 'சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு' என்று பல்லவியை பாட தொடங்கி விடுவார்." இவை அனைத்துக்கும்

Padalinal , ungalin ezhuthukalinal
- oru avasaramana kaalai pozhudhu
Ennai kattu paduthamal,
oru sandhoshamana kaalaiyaga marriyadhu.
SILA NIMIDANGALIL.

Really amazing.....

With Love,
Usha Sankar.
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Tue Mar 24, 2009 1:58 pm    Post subject: Reply with quote

Dear Malathi,

The film "SAVALE SAMALEE" is a very good movie and you will love it.
IF you see once, you will tempted to see many times. That is basically because :

1. Wonderful Music Composition by MM
2. Story and dialogue by Malliam Rajagopal
3. Charecterisation
4. Very good acting by almost every one (Sivaji, Jayalalitha, NAGESH, and so on). Nagesh's role is fantastic - say something equivalant to 'Vaidy' in 'Thillaana Mohanambal"

My family would have seen the movie a dozen times. as I write this I would like see this again !

You will enjoy it !

I have the movie CD. You may take it whenever you want.

Regards
RAMKI
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Wed Mar 25, 2009 12:27 am    Post subject: Reply with quote

Dear friends,
This is one of the evergreen songs of MM.

I remember an earlier DD "oliyum oliyum" kind of a programme in National network in the nineties. This was hosted by ARRahman as a guest, after his launch and success Roja. The last song telecast was this one, and he had special words and praise for the song and MM. I was in Delhi and had a strange surprise to hear Tamil song in broadcast allover our hostel area, and of course had a feverish night after that!!

Sai Saravanan
Back to top
View user's profile Send private message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Wed Mar 25, 2009 6:04 pm    Post subject: Reply with quote

Dear Friends,

'Chittu Kuruviikenna Kattupaadu'

My daughter wanted to learn this song once she heard this for the first time a month ago. I taught her and she learnt this in about 3 days.
I am giving the link in which you can hear her playing this song in her keyboard.
THE LINK IS

http://www.youtube.com/watch?v=i-T7RxRlyTw




Regards,

N Y MURALI
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Thu Mar 26, 2009 1:59 am    Post subject: Reply with quote

It was awesome!!!!!

Please convey my congratulations to your daughter, Murali.
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Thu Mar 26, 2009 11:40 am    Post subject: Reply with quote

அன்புள்ள முரளி,

'தாயைப்போல் பிள்ளை, நூலைப்போல் சேலை' என்பது பழமொழி.

தந்தையைப் போல் மகள், சிந்தையைப் போல் செயல் (ஈடுபாட்டை ஒட்டி சாதனை).

லக்ஷ்மிக்கு நல்ல இசையில் நாட்டம் இருப்பதால், இசைக் கருவிகளும் அவள் இச்சைக்கு இசைந்து செயல் படுகின்றன.

மற்ற செல்வங்களோடு லக்ஷ்மிக்கு இசைச்செல்வமும் பொங்கிப் பெருக அந்தத் திருமகளும், கலைமகளும் அருள் புரிய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Sat Mar 28, 2009 7:06 pm    Post subject: Reply with quote

Dear Ms.Meenakshi,
That was an excellent analysis as usual in your unique style.
You are bringing the song sequence and in particular the live recording in front of our eyes.
Thanks a lot.
As Mr.Sai Saravanan said, I too watched that program in DD in 90's.
It was Chitramala broadcasted in National DD. Every week some guest will be presenting.
This particular episode was by ARR. I still remember the words uttered by Rahman. What he said is as below followed by the song:
"The voice which cannot be outdated and the Music which cannot be outdated".
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Mar 29, 2009 10:35 pm    Post subject: Reply with quote

Dear Mrs Malathi


I really wish , all the best to your daughter .
No doubt about the outcome , it ought to be good , with a lot of ears to our MMs tunes , more you 2 are there to motivate

MRS banumathy ramakrishna has scored music , if i am not wrong .and also now Rahanna (arr 's sister )
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Sat Apr 04, 2009 2:06 pm    Post subject: Reply with quote

Dear Mr.Venkat and friends,
Thanks for remembering that DD Chitramala episode and recounting ARR's words for me. The song evoked that memory and the memory brought forth beautiful feelings further on MM's unique styles of compositions like for this song!
As far as female music directors lists are concerned, did Sulamangalam also compose? In hindi, I can remember Usha Khanna; she did deliver some memorable music to landmark films and some interesting songs with that also.
Sai Saravanan
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sat Apr 04, 2009 3:41 pm    Post subject: Reply with quote

Yes Mr. sai Saravanan,
Sulamangalam composed music for a few films: Darisanam (idhu maalai nerathu mayakkam by LRS and TMS is a good number), Therottam (Nandri solla vendum iraivanukku) and Tiger Thathachari, all by V.T.Arasu, who produced and directed a few films based on story value.( Karpuram was his first production but directed by one Shanmugam)

I have also read about a young girl composing music for Telugu films. She is Maragatha Mani 's(MD for a couple of KB's films like Azhagan and Vaaaname Ellai, during the period when KB and IR became estranged and ARR was yet to make his appearance.) sister, f I remember coorrectly.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group