"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Ponnukkenna azhagu - En Magan

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Tue Jan 20, 2009 9:40 pm    Post subject: Lyrics - Ponnukkenna azhagu - En Magan Reply with quote

படம்: என் மகன்
பாடியவர்கள்: டி.எம்.எஸ் & பீ. சுசீலா
இசை: மெல்லிசை மன்னர்
பாடலாசிரியர்: கண்ணதாசன்


(டி.எம்.எஸ்)
பொன்னுகென்ன அழகு
(சுசீலா)
ஆ ஆ ஆ ஆ
(டி.எம்.எஸ்)
பூவுகென்ன பெருமை
(சுசீலா)
ஆ ஆ ஆ ஆ
(டி.எம்.எஸ்)
உன் கண் எழுதும்
தமிழ் கோலங்கள் போதாவோ வண்ணக்கிளியே

பொன்னுக்கென்ன அழகு
பூவுக்கென்ன பெருமை

(சுசீலா)
ஒரு பொருள் மறை பொருள் விவரிக்கும் இலக்கியமே
உடன் பட்டு துணை நின்று சுகம் தரும் இலக்கணமே
(டி.எம்.எஸ்)
எதுகையில் உன் முகம்
(சுசீலா)
மோனையில் உன் முகம்

(பொன்னுக்கென்ன)

(டி.எம்.எஸ்)
கம்பரச கிண்ணம் அதிலே கட்டி வெல்லக் கன்னம்
காம தேவன் வாகனங்கள் காற்றிலே ஆடுதே
(சுசீலா)
சேரன் மகள் வஞ்சி எதிரே சேனைக் கண்டு அஞ்சி
காதல் தேவன் மார்பின் மீது காவலை தேடுதே
(டி.எம்.எஸ்)
மின்னும் நீல மணிபோல் இன்று என்னில் ஆடு கண்ணே
(சுசீலா)
இன்னும் என்ன ஏக்கம் இன்ப வண்ணம் பாடு கண்ணா

(பொன்னுக்கென்ன)


1978 -இல் வெளி வந்த படம் என் மகன். இதில் சிவாஜியும், மஞ்சுளாவும் நடித்துள்ளனர்.

இந்த பாடலின் மெட்டே மிகவும் ஸ்டைல்லாக இருக்கும். இந்த பாடலை டி.எம்.எஸ். அவர்களை விடவும் சுசீலா அவர்கள் மிகவும் அழகாக பாடி இருப்பார்.
பல்லவியில் பொன்னுக்கென்ன அழகு என்று டி.எம்.எஸ். பாடலின் முதல் வரியை பாடியவுடன் சுசீலா மிகவும் மெதுவாக முணுமுணுப்பது போல ஹம்மிங் செய்து விட்டு, இரண்டாவது முறை அழகாக குரலெடுத்து ஹம்மிங் செய்வார். பல்லவி முடியும்போது இதே ஹம்மிங் மிகவும் அழகாக வெட்கப்படுவது போல புல்லாங்குழலில் வரும்போது நம்மை மயக்கி விடும். இதே போல் முதல் சரணத்தின் முதல் இரண்டு வரிகளையும் சுசீலா பாடியவுடன் வரும் புல்லாங்குழல் அழகாக வெட்கப்பட்டு தலை குனிவது போன்ற உணர்வை தரும். இந்த பாடலில் பின்னணி இசையாக வரும் வயலின், trumpet எல்லாமே மிகவும் ஸ்டைலாக இருக்கும்.

இந்த பாடலை டி.எம்.எஸ். சுசீலா இருவருமே இந்த ஸ்டைலான மெட்டுக்கேற்றவாறு அழகாக பாடி உள்ளனர். முதல் சரணம் முடிந்தவுடன், மறுபடியும் அந்த பல்லவியை பாடி முடிக்கும்போது சுசீலா 'பொன்னுக்கென்ன அழகு, பூவுகென்ன பெருமை' என்ற இந்த வரிகளை செல்லமாக ஒரு அழுத்தம் கொடுத்து பாடி இருப்பது மிகவும் ரசிக்க வைக்கும்.

முதல் சரணத்தில், பாடலின் வரிகள் நம்மை வியக்க வைக்கும்.

//ஒரு பொருள் மறை பொருள் விவரிக்கும் இலக்கியமே
உடன் பட்டு துணை நின்று சுகம் தரும் இலக்கணமே//

இது அப்படியே தமிழ் மொழி இலக்கண புத்தகத்தில் வரும் இலக்கிய, இலக்கணத்தின் விளக்கம். இதை இவ்வளவு அழகாக, பொருத்தமாக ஒரு காதல் பாடலின் வரிகளாக கண்ணதாசன் கொண்டு வந்திருப்பது அருமையிலும் அருமை. எதுகையும், மோனையும் கவிதைக்கு அழகு. இது போல் 'எதுகையில் உன் முகம், மோனையில் உன் முகம்' என்று இருப்பது காதலுக்கு அழகு என்று காதலர்களுக்கு சொல்வது போல் இந்த காதல் பாடலில் எழுதி இருப்பது மிகவும் ரசிக்க வைக்கிறது.

மெல்லிசை மன்னர் இசை அமைத்த காதல் பாடல்களில் இந்த பாடல் ஒரு தனி அழகு.
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Jan 21, 2009 1:45 pm    Post subject: Reply with quote

DEAR Ms meenakshi

i always wanted to write about this song , but since i didnot hear this for almost 2 decades , i didnot want to venture out .

but as usual you have described it in excellent manner .

my memory is fresh in the emphasis given

PONNUKKENNA A AZHGHU
POOVUKKENAP PERUMAI .

AND THE PHASE GIVEN BETWEEN THESE TWO WORDS -only MSv can think about these .

he is like a good gold smith , who does all this nagassu work , to make the ornament glitter ,better .

but this film came earlier i believe .

the duets , during this period willbe little different while the melody is in tact (of course murali has described in depth about the styles and changes during diffrerent decades ,
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group