"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Ennai eduththu thannai koduththu - Padagotti

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Sat Dec 20, 2008 8:59 pm    Post subject: Lyrics - Ennai eduththu thannai koduththu - Padagotti Reply with quote

படம்: படகோட்டி
பாடியவர்: சுசீலா
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடலாசிரியர்: வாலி


ஹோய் ஹோய் யா, ஹோயா, ஹோய் ஹோய் யா

என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி
தன்னை கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி ஹோய்
போனவன் போனாண்டி

சின்ன வயதுக்கு ஏக்கத்தை வைத்து போனவன் போனாண்டி
போனவன் போனாண்டி
ஏக்கத்தை தீர்க்க ஏனென்று கேட்க வந்தாலும் வருவாண்டி ஹோய்
வந்தாலும் வருவாண்டி ஹோய் ஹோய் ஹோய்
போனவன் போனாண்டி

(என்னை)

நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து போனவன் போனாண்டி ஹோய்
நீரை எடுத்து நெருப்பை அனைக்க வந்தாலும் வருவாண்டி ஹோய்
வந்தாலும் வருவாண்டி ஹோய் ஹோய் ஹோய்
போனவன் போனாண்டி

ஆசை மனசுக்கு வாசலை வைத்து போனவன் போனாண்டி
போனவன் போனாண்டி
வாசலை தேடி வாழ்த்துக்கள் பாடி வந்தாலும் வருவாண்டி ஹோய்
வந்தாலும் வருவாண்டி ஹோய் ஹோய் ஹோய்
போனவன் போனாண்டி

(என்னை எடுத்து)

விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசையில் 1964- ல் வெளிவந்த படம் படகோட்டி. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை.
எம்.ஜி.ஆர், சரோஜாதேவி இருவரும் எதிர்பாராத விதத்தில் சந்திக்கும்போது, அவர்களுக்குள் காதல் தோன்றுகிறது. இடையில் ஏற்படும் தற்காலிக பிரிவின் சோகத்தில் சரோஜாதேவி இந்த பாடலை பாடுவார்.

பாடலின் ஒவ்வொரு வரிகளும், எளிமையாகவும் அதே சமயம் காதலனை பிரிந்த ஒரு காதலியின் ஏக்கத்தையும், தவிப்பையும், வருத்தத்தையும் மிகவும் அற்புதமாக வாலி அவர்கள் எழுதி இருக்கிறார்கள். குறிப்பாக பாடலின் பல்லவி 'என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி, தன்னை கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி' மிகவும் அழமான, அர்த்தமுள்ள வரிகள்.

பாடல் முழுவதும் ஆக்கிரமிக்கும் அந்த புல்லாங்குழலின் ராகம், நம் மனதையும் அந்த காதலியின் சோகத்தை உணர வைத்துவிடும். ஹோய் ஹோயா என்று பாடல் முழுவதும் பின்னணியாக வரும் கோரஸ், மெல்லிசை மன்னரின் ஹம்மிங் இரண்டும் இந்த சோக ராகத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. கண்களை மூடிக்கொண்டு இந்த ஹம்மிங்கை கேட்கும்போது, நாம் ஒரு நடுக்கடலில், மனசுமையுடன் ஒரு தனி படகில் செல்வது போல தோன்றும். அந்த ஹம்மிங் நம் மனதை அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

சோக ராகம் என்றாலே சுசீலா அவர்களின் குரல்தான் மனதில் முதலில் இசைக்கும். பாடலின் நடுவில் வரும் 'நெஞ்சை எடுத்து' இந்த வரிகளின் போது சுசீலா அவர்கள் சிறிதும் சிரமம் இல்லாமால் அழகாக high pitch-il தொடங்கி விடுவார். பாடல் முழுவது 'ஹோய் ஹோய்' என்று அவர் உச்சரிப்பது மிகவும் அழகு.

இந்த பாடல் அழகான் கோரஸ், ஹம்மிங் என்று தொடங்கி அதிலேயே முடியும்.

மகேஷ், நீங்கள் இந்த பாடலின் வரிகளை கேட்டதை படித்தவுடன் எனக்கு இந்த பாடலை பற்றி உடனே எழுத வேண்டும் என்று தோன்றி விட்டது. நன்றி.
Back to top
View user's profile Send private message
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Sun Dec 21, 2008 12:43 am    Post subject: Reply with quote

அன்புள்ள மீனாக்ஷி,

எனது விருப்பத்திற்கிணங்க இந்த பாடலின் வரிகளை எழுதியதற்க்கு மிக்க நன்றி.

I am finding it very difficult in writing using Tamil font. So pls. let me continue this way.

Not only this song. For all the songs neenga romba azhaga analyze panni ezhudhara vitham really superb...

The way you describe the song sequence and athil varum BGM, are very nice.

Thanks a lot once again.
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Sun Dec 21, 2008 4:04 pm    Post subject: Reply with quote

Dear Meenakshi,

Very nice to see you in the MSVTIMES Forum after a considerable time !
We were all missing your wonderful tamil writing for long !

Pls be a very regular visitor and writer in the forum as usual !

With warm regards
Ramki
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Sun Dec 21, 2008 8:57 pm    Post subject: Reply with quote

அன்புள்ள ராம்கி அவர்களுக்கு,

உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. சில தவிர்க்க முடியாத வேலைகள் இருந்ததால்தான் எழுத முடியவில்லை. மன்னிக்கவும். நம் மெல்லிசை மன்னரின் பாடல்களைப் பற்றி எழுத கிடைத்திருக்கும் வாய்ப்பை எப்படி தவிர்க்க இயலும். இனிமேல் தவறாமல் எழுதுகிறேன்.

அன்புடன்
மீனாக்ஷி
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Wed Dec 24, 2008 2:11 pm    Post subject: Reply with quote

நன்றி, நன்றி, நன்றி !! மீனாக்ஷி !

உங்கள் அருமையான " கண்ணே கனியே" பதிப்பையும் படித்தேன், மகிழ்ந்தேன் !

தொடர்ந்து எழுதுங்கள் !!

உங்கள் பதிப்பின் பக்கங்கள் சில நாம் வெளியிட இருக்கும் புத்தகத்திலும் சேர்க்கப்பட உள்ளன - உங்கள் அனுமதியுடன் !!

நன்றி.

ராம்கி.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Thu Dec 25, 2008 7:37 am    Post subject: Reply with quote

நன்றி ராம்கி. என் சந்தோஷத்தையும், நன்றியையும் தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. நம் மெல்லிசை மன்னரின் பாடல்களைப் பற்றி இந்தப் பதிவில் எழுதுவது பெருமை என்றால், நீங்கள் இதை புத்தகத்தில் வெளியிடுவதாக சொல்வதை பாக்கியமாகவே கருதுகிறேன். மிக்க நன்றி.
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Thu Dec 25, 2008 10:25 am    Post subject: Lyrics Reply with quote

Dear Meenakshi mam and Mr. Ramki,
Mam may remember how hesitant was she to post writings on our site. To-day she is among the grand writers of our forum. As Editor of the English section, some of her pieces, I have translated and accommodated in our book. Many works from our members have been included. Some we are unable to accommodate as their pieces are mostly responses to some situations. I wish we bring a year book from 2009 on to encourage better approaches to write on themes. As of now, the book work would over in 4 -5 days. Only printing has to start soon.
Warm regards Prof.K.Raman Madurai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Dec 26, 2008 2:27 am    Post subject: Reply with quote

Yes, Professor. I too remember this. Initially, I was so hesitant to write about the description of the songs. With all your encouragement, I was able to write in this forum with confidence. I really thank all of you with the bottome of my heart.
Back to top
View user's profile Send private message
Damodaran Pachaiappan



Joined: 21 Oct 2007
Posts: 119
Location: Ireland

PostPosted: Tue Jan 06, 2009 2:45 am    Post subject: Reply with quote

Dear Meenakshi m'am,

Brilliant writing as usual.

How is it that even a song that I have listened to for several years suddenly assumes a new dimension when you write about them?!!

Thank you.

I must also add that no one has used this Hoi hoi hoi humming to such exquisite levels like our Mellisai Maamannar. In so many songs, he has created so much variety from this simple humming .It is mind boggling!

Hoping to hear more from you,
Yours sincerely,
_________________
Dr.Damodaran Pachaiappan
Back to top
View user's profile Send private message Yahoo Messenger MSN Messenger
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group