"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Kanne kaniye muththe maniye - Ragasiya Police 115

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Tue Dec 23, 2008 4:18 pm    Post subject: Lyrics - Kanne kaniye muththe maniye - Ragasiya Police 115 Reply with quote

படம்: ரகசிய போலீஸ் 115
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பீ. சுசீலா
இசை: மெல்லிசை மன்னர்
பாடலாசிரியர்: கண்ணதாசன்

(TMS & PS)
கண்ணே கண்ணே, கனியே கனியே, முத்தே முத்தே, மணியே மணியே
அருகே வா ஆஆஆஆஆஆ
(TMS)
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
(PS)
கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
(TMS)
கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
(PS)
கனி தரும் வாழை என் கால்கள் பின்ன வா
(TMS)
கனி தரும் வாழை என் கால்கள் பின்ன வா
(TMS & PS)
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா

(PS)
செம்மாதுளையோ பனியோ மழையோ உன் சிரித்த முகம் என்ன
சிறு தென்னம் பாளை மின்ன கீற்று வடித்த சுகம் என்ன
(TMS)
ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
வா என்பேன் வரவேண்டும், தா என்பேன் தர வேண்டும்
(கண்ணே கனியே)

(TMS)
ஒரு நாள் இரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் தந்தானோ
(PS)
என்னை காண சொன்னானோ, துணை தேட சொன்னானோ
(TMS)
ஆனந்தம் வரவாக
(PS)
ஆசை மனம் செலவாக
(கண்ணே கனியே )

திரு. பந்துலு அவர்களின் இயக்கத்தில் 1968- ல் வெளிவந்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் திரு. கண்ணதாசன் அவர்கள். மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் மிகவும் அருமை.

இந்த பாடலின் பல்லவி, ஜெயலலிதா அவர்கள் எம்ஜியார் அவர்களுக்கு காதல் பாடல் சொல்லிகொடுப்பது போல் துவங்கும். கண்ணே, கனியே என்று ஒவ்வொரு வார்த்தையாக ஜெயலலிதா துவங்க எம்ஜியார் உடன் சொல்ல தொடங்குவார். மெல்லிசை மன்னர் இந்த பாடலின் ராகத்தை அந்த வார்த்தைகளில் இருந்தே தொடங்கி விடுவார். அதுவே இந்த பாடலுக்கு ஒரு தனி அழகு. சுசீலா அவர்களும் 'கண்ணே, கனியே' என்று கொஞ்சி கொஞ்சி அதை உச்சரிக்க, டி.எம்.எஸ். அவர்களும் அதே போல் கொஞ்சி கொஞ்சி உடன் உச்சரிக்க என்று பல்லவி துவங்குவதே மிகவும் அழகாக இருக்கும்.

பாடலின் முதல் சரணம் தொடங்கும் முன் ஆர்மோனிகாவின் வேகத்திலும், அதை தொடர்ந்து ஜலதரங்கத்தில் நிதானத்திலும் வரும் ராகம் இந்த பாடலில் மிகவும் வித்யாசமாக இருக்கும். பின்பு சரணத்தில் டி.எம்.எஸ். அவர்கள் 'ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன' என்ற வரிகளை பாடியவுடன் ஒரு சிறிய 'டப்பாங்குத்து' புல்லாங்குழலில் வரும். இந்த மென்மையான காதல் பாடலில் அந்த டப்பாங்குத்து அழகாக இணையும். இது மெல்லிசைமன்னரின் இசை ஜாலம்தான்.

இரண்டாவது சரணம் தொடங்கும் முன் பியானோவும் வயலினும் மாறி மாறி ராகம் இசைக்க பின்பு மெதுவாக அந்த வயலினின் ராகம் மறையும் போது உடனே புல்லாங்குழலில் வேகமாக அடுத்த ராகம் வரும். இந்த பாடல் முழுவதுமே பின்னணியாக வரும் இசையில் ஒரு வாத்தியம் நிதானம் என்றால் அடுத்து வாத்தியம் வேகம் என்று மாறி மாறி வந்து இடையில் டப்பாங்குத்துடன் சேர்ந்து ஒரு கதம்ப மாலையின் நறுமணத்தை முகர்வது போல, இந்த பாடலை கேட்பது ஒரு சுகத்தை தரும்.

இந்த பாடலில் கண்ணதாசனின் வர்ணனையும் மிகவும் அற்புதமாக இருக்கும்.
சிரித்த முகத்துக்கு 'செம் மாதுளையோ, பனியோ, மழையோ என்று சிவந்த நிறத்தையும், குளிர்ச்சியான பனியையும், அழகான ஓசையுடன் வரும் மழையையும் உதாரணம் காட்டி இருப்பது, 'ஒரு கோடி முல்லை பூ விளையாடும் கலையென்ன' என்று எழுதி இருப்பது மிகவும் பிரமாதம்.

//ஒரு நாள் இரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ, பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் தந்தானோ//
ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும்போதும் இந்த வரிகள் என்னை மிகவும் ரசிக்க வைக்கும்.
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Tue Dec 23, 2008 8:30 pm    Post subject: Reply with quote

dear m,s meenakshi

You picked up real master piece ( wish i could write in tamizh , as you do )
especially the lines , as you saidஒரு நாள் இரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் தந்தானோ
(PS)

Are out of the world.

thanks alot
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Thu Dec 25, 2008 6:12 am    Post subject: Lyrics Reply with quote

Dear Mr.Ram and other friends,
There has been the never-ending cofusion between Kavignars - Kannadasn and Valee, as both specialized in punchy lyrics ably serving the screen situations. In a way, the mega image of Kannadasan tempted people to ascribe all good songs to Kannadasan. Most MGR movies were exceptions as Valee was the 'aasthana' kavignar for MGR. Valee right from his school days at Srirangam was a playwright making 3 hr dramas in Trichy and short ones for AIR Trichy. He had the skill of poetic narrations too , as the then dramas used to field songs as well. I remember Mr. Valee's drama troupe had an orchestra team headed by one Mr. Stanis Las and his name would figure on drama posters and bills. Thus, Valee has had enormous experience as a writer and had to wait for a recognition in cinema. His entry to cinema, the roles of MGR, MSV and KSG, besides the support from actors Nagesh, V Gopalakrishnan [who were fighting for their own livelihood] are known to many. My point here is Valee had to be in shadows before he could establish as a trusted lyricist. Yet, Kannadasan , Valee, MSV got on very well in the industry known for attitudes of rivalry.
Warm regards Prof.K.Raman Madurai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group