"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Paattu Onnu Paadu Thambi - Varumaiyin Niram Sivappu

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Sun Jul 27, 2008 11:44 am    Post subject: Paattu Onnu Paadu Thambi - Varumaiyin Niram Sivappu Reply with quote

பாட்டு ஒண்ணு பாடு தம்பி

வறுமையின் நிறம் சிவப்பு (1980) படத்தைப் பற்றி வெவ்வேறு கோணங்களில் பக்கம் பக்கமாக எழுதலாம்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் சமுதாயச் சிந்தனை, எளிமையாக ஆனால் உறுதியான திரைக்கதை மற்றும் கதாப்பாத்திரங்கள், படத்திற்கு உயிரோட்டம் அளித்த மெல்லிசை மன்னர், கவியரசர் கண்ணதாசன் என்று பல சக்திகளைப் பற்றி நாள் கணக்காக எழுதலாம்.

சிப்பியிருக்குது, நல்லதோர் வீணை செய்தேன் என்று சிறப்புப் பாடல்கள் இருந்தாலும், இவைகள் அளவிற்குப் பெரிதாகப் பேசப்படாத 'பாட்டு ஒண்ணு பாடு தம்பி' என்னை மிகமிகக் கவர்ந்த பாடல் ஆகும்.

குறிப்பாக இப்பாடலின் வரிகளில் கண்ணதாசன் தன் சமுதாயக் கோபங்களை எவ்வளவு வேதனையுடன் தெரிவிக்கிறார் என்பது புலப்படும். சுட்டெரிக்கும் நக்கீரர் பாணியிலல்ல! யதார்த்ததை அறிந்து, ஏற்று வாழ்க்கையை நடத்தும் தருமியின் பாணியில்!

இப்பாடலை நால்வகையாகப் பார்க்கலாம். அதாவது, நான்கு வகையான பொருளை உள்ளடக்கி, அழகாகத் தன் வார்த்தைகளால் கூறியிருப்பார் கண்ணதாசன்... என்னென்ன?

1) நகைச்சுவை
2) வஞ்சப் புகழ்ச்சி
3) அடிப்படைப் பொருளாக - சமுதாய நிலை, அதைக்கண்டு வேதனை!
4) சொன்ன விதம் - தெருவோரச் சித்தாந்தமாக! (Roadside Philosophy)

நச்சென்று கதைச் சுருக்கத்தைப் பல்லவியிலேயே கூறிவிடுகிறார்!

பாட்டு ஒண்ணு பாடு தம்பி
பசியைக் கொஞ்சம் மறந்திருப்போம்

பாரதத்தின் தலைநகரில்
தேடு தேடு வேலையைத் தேடு
தம்பீ...!

பாரதத்தின் பெருமைதனைப்
பாடு பாடு சோறு எதுக்கு
தம்பீ...!


விருந்தோம்பலுக்குப் பெயர் போனவர்கள் நாம். அதே சமயம் வறுமைக்கும் பெயர் போனவர்கள்..... இதை விளக்குகிறார்.

வந்தார வாழ வெச்சு
சொந்தங்கள ஏங்க வெச்சு
பூமியெங்கும் பேரெடுத்தோமே - தம்பியப்போ...
ஊர் முழுதும் புத்தி சொன்னோமே!


கதாப்பாத்திரமாகப் பாடும் தனக்கு சோறில்லை... எனினும் தெருக்களில் இயல்பாக நடப்பதைப் பார்த்து பேசாமலிருக்கவும் முடியவில்லை.

பட்டணத்து வீதியிலே
பட்டம் பெற்ற ஆணும் பெண்ணும்
இட்டிலிக்கும் தோசைக்குமா
சுத்தி சுத்தி வாராரப்பா


அடுத்த வரிதான் வஞ்சப் புகழ்ச்சியின் உச்சம்:

பாருக்குள்ளே நல்ல நாடு
பாரதம் தான்'னு சொல்லுங்கப்பா!


(பாட்டு ஒண்ணு பாடு தம்பி)

அரசியல்வாதிகள் மேடைகளிலும் வித விதமாக முழக்கமிட்டாலும், பாடப் புத்தகங்களில் நாம் போற்றிப் பாடினாலும், உண்மை நிலை என்ன?' என்பதாக அடுத்த வரிகள்.

வற்றாத கங்கை என்றும்
வாடாத பொன்னி என்றும்
கத்தாத ஆளில்லையப்பா - ஆனாலும்
கத்தாழை வெளையுதே யப்போ


பிறப்பு நம் கையிலில்லை. ஆனால் வறுமையை எதிர்நோக்க வழியுமில்லை. என்ன செய்வது? காவி அணிந்து, பிச்சையெடுக்க வேண்டியதுதான் என்று சொல்லாமல் சொல்கிறார்..

நாம்பொறந்த சீமையிலே
நாம செஞ்ச பாபம் இல்லே
அப்பனுக்கும் அம்மாவுக்கும்
ஆசை வந்த தோஷமப்பா
கங்கையிலே முழுகிவிட்டு
காவிகட்டி போவோமப்பா!


அடுத்த வரிகள் ஒவ்வொறு முறை கேட்கும் போதும் கேட்பவர்களுக்கு சிரிப்பை உண்டாக்கும். கவியரசர் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் அழகைப் பாருங்கள்....

ஊரெல்லாம் பிள்ளையப்பா
உள்வீடு நிறையுதப்பா
கூரையிலும் தொங்குதேயப்பா - இனிமேல்
கூப்பிடவே பேரில்லையப்பா!


நகைச்சுவை எனினும் அதில் எவ்வளவு ஆழமும் அழுத்தமும் உள்ளதென்பதயும் நாம் உணரலாம். இந்திய நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும், குறிப்பாக வறுமைக்கு ஜனத்தொகைப் பெருக்கமே காரணம் என்பதை அதன் கொடிய விளைவுகளால் விளக்குகிறார்.

பள்ளியிலே இடமும் இல்லே
படிச்சு வந்தா வேலையில்லே
பள்ளியறை மட்டும் சும்மா
பட்டு பட்டு தெரிக்குதப்பா!


சரி, எல்லாம் கூறியாகி விட்டது. அடுத்தெங்கு போவது? அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வது? இதோ தெருவோரச் சித்தாந்தம்...

ஆண்டவன் மேல் பழியப்போட்டு
அடிவயித்த தடவுங்கப்பா!


அரசே! கவியரசே! தாங்களின் சமுதாய வலியைக் கண்டு வேதனை அடைவதா, இல்லை அதை வெளிப்படுத்திய அழகை ரசிப்பதா? தாங்கள் தான் கூற வேண்டும்!

தாங்களின் இது போன்ற கவிதைகளின் சுடர் என்றென்றும் அணையாது என்பது மட்டும் உண்மையே!

சரி, நம் மெல்லிசை மன்னர் மட்டும் சாமானியவரா? அருமையான இசை, கிட்டார் விளையாடும் இப்பாடலில். Lead கிட்டார் Chords, Solo கிட்டார் Interludes, Bass கிட்டார், இடையிசையில் ட்ரம்பெட் என்று இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார்.

கைதட்டல்கள் FOLK உணர்வைத் தருவதாக இருக்கும். (இப்பாடலில் ஸ்ரீ ராக சாயல் இருக்கிறதென்று நினைக்கிறேன்). Futuristic!

தவறாமல் கேளுங்கள்
http://www.msvtimes.com/music/songs/p.html

உலகின் தலைசிறந்த இந்த இசை-கவிதை கூட்டணிக்கு என் நெகிழ்ச்சி கலந்த வணக்கங்கள்!
_________________
Ramkumar


Last edited by Ram on Sun Jul 27, 2008 9:14 pm; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Sun Jul 27, 2008 2:43 pm    Post subject: Great Pick Ram! Reply with quote

Hey Ram,

I am sure you would have completely got bowled over by this song from the time go..... What a prelude Ram with double bass playing havoc from the beginning till the end. It's innovation all the way by the Kings of Meter, Matter - Kannadasan & MSV!!! Great song, in my all time favorites of MSV.

Ram, what happended to fotos of Vatsan, Raman & SRS I mailled you? Cud u upload them please??? Also make a general call for all the elite members to send you their respective fotos so that we cud upload them all under "msv club" category.

CONGRATULATIONS RAM FOR CROSSING YET ANOTHER MILESTONE@700 AND I AM SURE YOUR DAD RAMKI WILL ALSO REACH YOU FASTER WITH A DOUBLE CENTURY ALREADY IN HIS KITTTY!!!

CHEERS
MSV IS MUSIC
vaidy

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group