"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

A Handful of Piano Picks(19)-An Ensemble of Jazz Rhythms (2)

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Mon Jun 30, 2008 4:12 am    Post subject: A Handful of Piano Picks(19)-An Ensemble of Jazz Rhythms (2) Reply with quote

A Handful of Piano Picks - Part 19

An Ensemble of Jazz Rhythms (2)

"ஹே.... நாடோடி" (அன்பே வா)


கடந்த சில வாரங்களாக நான் அடிமையாக இருக்கும் ஒரு பாடல் இப்பாடல். இதன் அருமைகளை எழுதுவதென்பது மிகக்கடுமையான ஒன்று. எப்பேற்பட்ட பாடல், ஆர்கஸ்ட்ரேஷனென்ன, 'ரிதங்'களின் அழகென்ன எல்லாவற்றிற்கும் மேலாக மெலடியும் இனிமையுமென்ன. இசைச் சாதனைகளில் வானுயர்ந்து நிற்கிறார் மெல்லிசை மன்னர் என்பதற்கு இப்படத்தின் ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் எடுத்துக்காட்டு!

இப்பாடலைப் பற்றி எழுத எப்படித் தொடங்குவது, எங்கிருந்து தொடங்குவது என்றே தெரியவில்லை. சரி, பல்லவியிலிருந்து தொடங்கி பாடலுடன் நாமும் பயணிப்போம்.

முன்னிசையே இல்லாமல் பல்லவியைத் தொடங்கியிருப்பதே ஒரு புதுமைதான்!

ஹே.... நாடோடி (நாடோடி)
போக வேண்டும் ஓடோடி (ஓடோடி)
ஹே... ஏ.ஏ.. வாயாடி (வாயாடி)
போகவைப்போம் போராடி (போராடி)


கோரஸ் பல்லவியின் ஒவ்வொரு கடைசி வார்த்தையையும் பின்பாடுவது அழகு. இதில் குறிப்பிடவேண்டியது "போராடி" வார்த்தையின் போது தான். கோரஸ் பின்னணியில் "போராடீ....இ...இ" என்று அற்புதமாக இருக்கும். அதில் "PARTS SINGING" மிகக் கச்சிதமாக அமைந்திருக்கும்!

அது முடிகையில் கோரஸ்...

"அஹா... ஒஹோ..... ஒஹோ.....ஒஹோ" ...என்று பாடியிருக்குமிடத்தில் தான் எத்தனை மெலடி. மெல்லிசை மன்னரின் அக்மார்க் முத்திரை ஆணித்தனமாக பதிந்திருப்பதை அறியலாம்.

Typical ஜாஸ் ரிதம் கொண்டு துவங்கும் இப்பாடல். Brush ட்ரம்ஸ் உபயோகம் பிரமாதம்!

முதல் இடையிசையில் கிட்டார் சோலோ, பிறகு பியானோ, பின் மீண்டும் கிட்டார், அதற்கு இடை இடையே Brass-Trumpet சேர்க்கைகள் பட்டையைக் கிளப்பும் Jazz ரிதம்!

சரணம்:

வெச்சா குடுமி அடிச்சா மொட்டே
எல்லாம் எங்கள் கையிலே
பிடிச்சா பைத்தியம் முடிச்சா வைத்தியம்
எல்லாம் எங்கள் பையிலே

மந்தரவாதி தந்தரவாதி எந்தரவாதி என்ற ஜாதி
எங்களோடி போட்டி போடவா
நீ கால் மடக்கி கை மடக்கி மூச்சடக்கி பேச்சடக்கி
எங்களோடு ஆட்டமாட வா


பியனோவும் கோரஸும் அமைதியாக பின்னணியில் வருவது அழகு.
ட்ரம்பெட் - குழல் - பாங்கூஸ் கொண்டு முடிய, ரிதம் தொடர்கிறது.

ஹே....

எந்த ஊர்..... என்ன பேர்
எந்த காலேஜ்.... என்ன Group
(இங்கு வரும் chord மாற்றம் அருமை!)

அடுத்து இங்கு ரிதம் மாறுகிறது... கொஞ்சம் 'ராக்-ன்-ரோல்' பாணியில்!

Twist Dance தெரியுமா.
Test Match புரியுமா
(அஹா... என்ன மெலடி இந்த இடத்தில்)

பாடல் மறுபடியும் பழைய ரித்ததிற்குச் செல்ல... பெண் குரல்கள் துவக்கம். மீண்டும் பல்லவி:

ஹே.... நாடோடி (நாடோடி)
போக வேண்டும் ஓடோடி (ஓடோடி)
ஹே... ஏ.ஏ.. வாயாடி (வாயாடி)
போகவைப்போம் போராடி (போராடி)


ஏ.எல்.ராகவன், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, டி.எம்.எஸ் என்று அனைவரும் தத்தம் பாணியில் பாடி அசத்தியிருப்பார்கள்.

சிரிச்சா சிரிப்போம் மொரச்சா மொரெப்போம்
எல்லாம் எங்கள் கண்ணிலே
(எல்.ஆர்.ஈஸ்வரி)

நெனச்சா நெனப்போம் மறந்தா மறப்போம்
எல்லாம் எங்கள் நெஞ்சிலே
(சுசீலா)


அ...ராமனென்ன பீமனென்ன கண்ணனென்ன மன்னனென்ன
பெண்களோடு போட்டி போட வா
(எல்.ஆர்.ஈஸ்வரி.... இவ்வரியில் "பெண்களோடு போட்டி போட..வ்வ்வா - என்று அநாயாசமாகப் பாடும் அழகு மிகவும் ரசிக்கத்தக்கது!)

தேனிருக்கும் மொழியிருக்க மீனிருக்கும் விழியிருக்க
எங்களோடு ஆட்டமாட வா (சுசீலா)
(பின்னணியில் பெண் கோரஸ்)

What a Lucky Day (கோரஸ் - Parts Singing)

இப்போது நம் வாத்தியார் Entry. ஆம்... பாடலில் டி.எம்.எஸ் கர்ஜனைக் குரலின் வருகை! பாடலில் ரிதம் மாறுகிறது.

புலியைப்பார் நடையிலே
புயலைப்பார் செயலிலே
புரியும்பார் முடிவிலே

விரட்டினால் முடியுமா
மிரட்டினால் படியுமா


இவ்வரி முடிகையில் - Unleashed வயலின் ஆர்க்கஸ்ட்ரேஷன் அற்புதமாக இருக்கும். எம்.ஜி.ஆரின் பாயும் துள்ளல்களுக்கு காட்சியில் மிகப் பொருத்தமாக இருக்கும்.

துணுக்கு: இதே போல ரிதமும்- வயலின் ஆர்க்கஸ்ட்ரேஷனை இளையராஜாவின் இரு பாடல்களில் காணலாம். "ராஜா கைய வெச்சா" (அபூர்வ சகோதரர்கள்) பாடலில் இரண்டாம் இடையிசையிலும், "அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி" (பேர் சொல்லும் பிள்ளை) பாடலின் முன்னிசையிலும். Not identical - but similar style.

உலகில் உள்ள நாடுகளில் என்
கண்கள் படாத இடமில்லை
உங்களைப் போலே கும்பலும் கூச்சலும்
பார்வையில் இதுவரை படவில்லை.
"ஒஹோ...ஒஹோ...ஒஹோ...."
(கொஞ்சம் மெதுவாக)

அஹா.... என்ன மெலடி? மெல்லிசை ஊற்றே!! எங்கிருந்தையா உங்களுக்கு இப்படி இசை பொங்குகிறது ???!!!!

டி.எம்.எஸ் கணீர் குரல் - எவ்வகையான பாடலும் இவருக்கு லட்டு சாப்பிடுவது போலாகும்!

உச்ச ஸ்தாயியில்..

Twist Dance பாருங்கள்
Test Match வாருங்கள்


இங்கு சோலோ கிட்டாருடன் ரிதம் படு வேகமாக மாறும். இன்னொரு ரிதம் பாடலில்!

பறவை போல் பறந்தவன்
கவலைகள் மறந்தவன் நான்
என்று அருமையாக சரணம் முடிய... டி.எம்.எஸ் பல்லவியை மீண்டும் பாட பாடல் முடியும்.

புதுமை விரும்பிகளுக்கு - இப்போதுள்ள Terminology படி Fantabulous "FUSION MUSIC". ஒரே பாடலில் நாங்கைந்து வகையான ரிதம் (யப்பா!). மெலடி விரும்பிகளுக்கு அருமையான மெல்லிசை. மற்ற சிலருக்கு அட்டகாசமான வாத்தியார் பாடல்! CLASS-MASS Balance என்பதை மெல்லிசை மன்னரிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.

இப்படி பல வருடங்களுக்கு முன்னே இசையில் என்னவெலாமோ செய்துவிட்டு, நம்மை எல்லாம் இப்படிப் பைத்தியம் பிடித்து அலையவிட்டுவிட்டு அவர் மட்டும் சாந்தோம் மகானாக தன் இல்லத்தில் அமைதியாக அமர்ந்திருப்பது கொஞ்சமும் நியாயமில்லாதது. Very Happy

ஆன்மீக அடிப்படையில் சரஸ்வதி தேவியின் தவப்புதல்வன். தந்தை பெரியார் வழியில் ஒரு தனி மனித சிறப்புகள் நிறைந்த உயர்ந்த மனிதன். Charles Darwin மொழியில் இயற்கை தேர்ந்தெடுத்த இசைச் சிறப்பாளன். எவ்வகையில் பார்த்தாலும் மெல்லிசை மன்னர் ஒரு ஒப்பிலா உலக இசை மாமேதை!!!

(தொடரும்)

A Handful of Piano Picks - Listing
Part 1 - Ennai Theriyuma
Part 2 - Kaatru Vandhaal
Part 3 - VannakkiLi
Part 4 - Oh Little Flower
Part 5 - Naan Nandri Solven
Part 6 - Thairiyamaaga Chol Nee
Part 7 - Maanicka Thottil
Part 8 - Collection of Piano Songs
Part 9 - Jazz Piano1 - Varavendum Oru Pozhuthu
Part 10 - Jazz Piano2 - Viswanathan Velai VeNdum
Part 11 - Jazz Piano3 - Enna Vegam Nillu Bama
Part 12 - Rock and Roll - Aadavarellam, Malarendra Mugamadhu
Part 13 - Unnai Ondru Ketpaen
Part 14 - Kannirendum Minna, Vidiya Vidiya
Part 15 - "Periya Idathu PaNN" - Kannenna Kannenna Kalanguthu
Part 16 - "Paal Thamizh Paal"
Part 17 - Chella KiLigaLaam
Part 18 - An Ensemble of Jazz Rhythms(1) - Thottu Kaattavaa
Part 19 - An Ensemble of Jazz Rhythms(2) - Hey..Naadodi (Anbe Vaa)
Part 20 - Piano Thisram - Jillendru, Manamedai, Senthamizh Paadum, Pillai Thamizh Paadukiren, Ninaithathai Nadathiye
Part 21 - "Rocking Piano" - Adadaa enna azagu, Allippanthal, Yaaro aada therinthavar
Part 22 - MSV-SPB Mesmerism
Part 23 - Avan Ninaithaana
Part 24 - "Expressions" - Athanin MuthangaL, Piano Fillers in different songs
Part 25 - Layam - An analysis on different beat patterns in Tamil Film Music
Part 26 - The Finale - Top 3 Piano songs of MSV
_________________
Ramkumar


Last edited by Ram on Thu Oct 02, 2014 7:35 pm; edited 2 times in total
Back to top
View user's profile Send private message Send e-mail
Vatsan



Joined: 20 Jan 2007
Posts: 352

PostPosted: Mon Jun 30, 2008 1:31 pm    Post subject: Ram Reply with quote

Ram, as usual a gripping write-up on a tour-de-force composition. Variety of rhythms and what structuring and orchestration. None of the traditional pallavi-charanam structure. Vocal harmony, thrilling guitar passages, gripping violin passages, varied melodic structures, unconventional song structure on the whole. One wonders how MSV even conceived the song. MSV patri SPB kooriyathu thAn ninaivukku varugirathu.....'MSV kadithhu pOttathai thAn matravargal eduthhu koNdArgaL'. Of all the phrasing played out by the instruments, the violin passages stand tallest. Watching the recording of this song live .....guess the people with good Karma accumulated were there when it happened. Often the flow of this song accompanied by vocal harmony gave me the goose bumps.

MSV's sense of placement of vocal harmony is far too ahead of the rest of the field. Credit him with using human cords as chords in songs first Smile !!!
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Mon Jun 30, 2008 4:59 pm    Post subject: Reply with quote

Dear Vatsan..

Uncoventional song to the core!! "How MSV would have perceived this song?" - Exactly same thought I had while my write up.

Vatsan wrote:
.....guess the people with good Karma accumulated were there when it happened. !!!

I think people with "Bad Karma" would have watched this song live. Otherwise we would have had the video (atleast some notes on the composing scene!). I donno if they would have even enjoyed this mega-compo in the first place.

I'll use your own phrasology to describe them - "Living Corpses!"
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Tue Jul 01, 2008 8:21 am    Post subject: A SONG FOR THE MILLENNIUM!!! Reply with quote

Dear Ram & Vatsan,

Great way to express the Monastry called Melody being ruled by MSV all the way. Anbey Vaa is one movie that I'll never forget in my life as this song Puthia Vaanam.... was the first ever song that I listened to (when I was in my KG in Tuticorin). As my school gate was opposite to my house itself, any time this song was played on the radio, I'll immediately run off from school to listen to this (and get whacked later ofcourse by my mom Very Happy ). What just started as a sheer listening pleasure, later turned to be an absolute addiction to MSV's music that is still in me and will ever be in me.

MSV's level of orchestration is something that is worth it's publication as mere guides for those who want to achieve or aspire to do something in music. In other words, this could be the biggest guide in the world (MSV is way ahead of every one in everything you can think of in music!!!!!!!!!!!!!) as imaginE the amount of information one could gather from all his compositions. Truely an amazing creator. Vatsa, that Kannazhagan song is haunting me day in day out. Ennappa I was expecting you to share some thoughts from you about the Musical rehaersal we attended the other day (Sangeetha Saraswathy Award function musical nite). Both Vatsan & I were enjoying every moment as the Legend kept on changing tune after tune and in some places we were literally awestruck and you know why???? MSV landed with some rare chords and I am sure Vatsan could throw more light on these as my technical knowledge is limited in this area, but my Love & Addiction to My Master's Music is..................UNLIMITED FOREVER Very Happy Very Happy Very Happy Very Happy

CHEERS
MSV IS MUSIC
VAIDY

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
tvvraghavan



Joined: 15 Dec 2006
Posts: 175

PostPosted: Tue Jul 01, 2008 9:47 am    Post subject: Reply with quote

Ram wrote :

Quote:
I think people with "Bad Karma" would have watched this song live. Otherwise we would have had the video (atleast some notes on the composing scene!). I donno if they would have even enjoyed this mega-compo in the first place.


Hi Ram
You just stole words from my mouth. I had never enjoyed the orchestration and the song perse as I did yesterday after reading your posting. It is indeed an amazing work done by our Master which has really gone unnoticed and into oblivion because of the poor choreography and picturisation without any aesthetical value.

I should only extend a Big Thanks to you for an amazing write up and making people like me notice such hidden marvels which are overshadowed for the above said reasons.

A Brilliant composition and your references about the song are truely a genius work. You have actually done a very good job and may not have delineated it better. No room for apprehension.

The most interesting aspect of all your writings is the conclusion that you make in every posting..... !!!

Certainly , our Master has given created aspect of the real FUSION music way ahead of his time with the "meditative" melody (ARR's defn of our Master's music) in it which is the most important part . He has fused piano with mridangam , Sarangi with guitar , shehanai with flute and What not...!!!

As you say there are lots of seam less transitions and changes in the rhythm that just does not disturb the listener from listening this song his way....

How could he do this... ?? Probably, this would only remain a mystery and would never be answered for all generations to come. People could only get awed and wonder listening to his compositions but would never be able to answer this !!

Am just enjoying both...your writing and the UNNOTICED OVERSHADOWED MARVEL !!!

MSV Rules !!!
Venkat
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Tue Jul 01, 2008 10:09 am    Post subject: Reply with quote

[size=18]Dear Ram,

You have come to your real form after a small spell of time and the analysis of NADODI POGAVENDUM ODODI from ANBE VAA is indeed a great work.

THis write up has made VENKAT to reappear in the Forum and that itself is a certification to your fabulous writing ! VENKAT - Are you listening ?
Pl come back to Forum as a storm and write a lot. WE definitely miss you .

In fact, I had listened to this song long back and as Venkat had said this song has definitely gone unnoticed in spite of the marvellous work of MEllisai Mannar !

THis evening I am going to listen to this song to enjoy whatever Ram has written and vouched by V(atsan, enkat, aidy).

As all of you have said, none of MSV's compositions could be understood for it HOW part and you have to simply acknowledge that
IT HAPPENS, THAT's ALL !!

Would the guys who had watched the composition ,orchestration and recording of this song at that point of time, have understood REALLY the marvel of the song ? inculding the producers, Directors ? I doubt !
It would have been another good song from MSV, who had been the most wanted music director then ! What a pathetic situation ya !

Ram. pl keep going.

Ramki
[/size]
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Thu Jul 03, 2008 7:38 am    Post subject: Reply with quote

Dear Vaidy, Vatsan, Venkat, Dad and All,

Thanks for all your replies.

Venkat, great to see your post after months together. As dad said, we are expecting your active participation as before.
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Tue Dec 30, 2008 12:39 am    Post subject: Reply with quote

Mr. RAM,
IAM IMAGINING ABOUT THE COMPOSING SITUATION. I THINK HE WOULD HAVE BEEN BRIEFED ABOUT THE COMPETION BETWEEN MGR AND SAROJA DEVI WHO TO SCORE POINTS WITH ONE ANOTHER UNTIL THEY FALL IN LOVE. SO HE WOULD HAVE THOUGHT THERE IS NEED TO FOLLOW THE USHUAL RULE LIKE PALLAVI, CHARANAM ETC. BUT THE CREATION IS A MASTER PIECE. THE GREATNESS OF THIS SONGS IS IN IT'S TEMPO. THE OTHER ASPECT OF THIS SONG IS THE PICTURISATION

N Y MURALI
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group