"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

A Handful of Piano Picks (7) - Maanikka Thottil Ingirukka

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Fri Sep 21, 2007 7:58 am    Post subject: A Handful of Piano Picks (7) - Maanikka Thottil Ingirukka Reply with quote

A Handful Of Piano Picks - Song 7

"மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க"

படம்: பணம் படைத்தவன் (1965)

முதல் முறை கேட்கும் போதே வாழும் நாள் முழுதும் மறக்க இயலா வகையில் நினைவில் குடியேறும் அற்புதப்பாடல் "மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க" . பாடலின் எடுப்பென்ன, அருமையான பியானோ நடையென்ன, அதிலுள்ள உருக்கமென்ன.... மெல்லிசை மன்னர்(களி)ன் இசை வெள்ளத்தின் பாய்ச்சலை, அதன் தாக்கத்தை, உணர ஒரு மற்றுமொரு நல்லிசை விருந்து இப்பாடல்.

பல வகையான உணர்வுகள் (Mixed Emotions) கொண்ட சூழலுக்கு கணக் கச்சிதமாக மெட்டமைகும் இசை வேந்தர் நம் மெல்லிசை மன்னர். பாடலின் முன்னிசையே மிகவும் ஆச்சர்யமான வகையில் அமைந்திருக்கும். எவ்வளவு நுணுக்கங்களை அழகாகப் பின்னி, ஒரு இசை மாலையைக் கோர்த்திருக்கிறார் என்பதை இப்பாடலில் உணரலாம்.

பாடல் தொடங்கும் நொடியிலேயே ஒரு இனிமை; புதுமை; பியனோ ரிதம் மிக அழகாகத் தொடங்கும். ஆனால் எல்லாப் பாடல்களைப் போல் இல்லாமல் Slow Tempo (Slow Speed) அதாவது குறைந்த காலப்பெருமாணம். முதல் முறை இப்பாடல் கேட்ட போது இந்த 'Slow Tempo' வின் புதுமையால் இன்பத்தில், ஆச்சர்யத்தில் நான் தூக்கி எறியப் பட்டேன். பாடல் தொடக்கம் முதல் இறுதி வரை அந்த இன்பத்தைச் சற்றும் குறைக்காமல், பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைத்து ரசிகர்களை அடிமையாகவும் செய்த மெல்லிசை மன்னரின் இசை உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

பாடலைப் பற்றி மறந்து முதல் சில வினாடிகள் வரும் பியானோ ரித்தத்தை மட்டும் தனியாகக் கேட்டால் அருமையான வெஸ்லர்ன் ரிதம் போல் இருக்கும். எல்.ஆ.ஈஸ்வரி "ஆரீராரீராரீ ஆரீராரோ" என்று பாடும் போதுதான் இது ஒரு தமிழ்த் தாலாட்டுப் பாடல் என்பது விளங்கும். முதல் "அரீராரீ" முடிந்து மீண்டும் பியானோ ரிதம். இப்போது ஒரு கிராமிய மணத்துடன்! "அரீராரீ" பகுதி முடிந்து ஒரு மேண்டலின் ஃபில்லிங்குடன் டி.எம்.எஸ் அவர்கள் "மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க" என்று தொடங்கும் போதுதான் இது ஒரு "சோக" உணர்வுள்ள பாடல் என்பது விளங்கும்!

இங்கு இசை வேந்தன் செய்த இசைப் பயணத்தைப் பாருங்கள். வெஸ்ட்டர்ன் நடையில் தொடங்கி, தாலாட்டாக மாற்றி, அதில் Folk ஐ நுழைத்து அதில் சோகத்தை இழைத்து... ஆனால் இந்த பயணம் கேட்பவர்களின் பயணத்தை எவ்விதத்திலும் பாதிக்காமல்....The Seamless Flow and Transition.... இமயச் சாதனையில் மெல்லிசைக் கொடியை என்றோ நட்டு விட்டு தன் வீட்டு அறையில் அமைதியாகத் அமர்ந்து கொண்டிருக்கிறார் மெல்லிசை மன்னர்!

இப்பாடல் எனக்கு அறிமுகமானது என் தந்தை ராம்கி அவர்களின் விசில் மூலம்! பல நாட்களாக அந்த விசில் என் மனத்தில் ஓடிக்கொண்டிருந்தது - பெரும் 'பாதிப்பை' ஏற்படுத்திக் கொண்டு. பாடலை முழுவதுமாகக் கேட்ட பின்பு தான் அந்த விசிலின் உருக்கத்தை முழுவதுமாக உணர்ந்தேன்! (இப்படி பல பாடல்களை என் தந்தையின் விசில், ஹம்மிங் மூலம் தான் அறிந்தேன் என்பது வேறு பெருங்கதை)

நமது களத்தில் சாரதா அவர்கள் இப்படலைப் பற்றி வேறு தலைப்பின் கீழ் குறிப்பு எழுதியிருந்தார். அருமையான பதிவு அது. பாடல் காட்சியினைச் சுட்டிக்காட்டி, படத்தின் தந்தை-மகன் உணர்வுப் போராட்டத்தை பாடல் வரிகள் எவ்வளவு அழகாக உணர்த்துகிறது என்பதை விவரித்திருந்தார். (நான் பாடல் காட்சியைப் பார்த்ததில்லை). எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங் இடையிசையைக் குறிப்பிட்டதையும், 'கண்ணதாசனுக்கே பெருஞ்சவாலாய் இருந்த இந்த தாடிக்காரர் லேசில்லை' என்று வாலியைப் பற்றிக் குறிப்பிட்டதையும் நான் வெகுவாக ரசித்தேன்.

இப்பாடலின் மெலடியை எவ்வாறு கூறுவது என்று தெரியவில்லை. டி.எம்.எஸ் அவர்கள் அழகாக பல்லவியை எடுக்க:

"மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
மன்னவன் மட்டும் அங்கிருக்க
"

"காணிக்கையாக யார் கொடுத்தார்" எனும் போது ஒரு பெரிய இறக்கம். மெல்லிசை மன்னரால் தான் முடியும்! இது போல் பல இறக்கங்களில் பலர் சறுக்கி விழுந்துள்ளனர்.

சிவந்த மண்ணில்,
"ஒரு நாளிலே
உறவானதே
" --> இரண்டாவது வார்த்தையில் இப்படி ஒரு இறக்கம் எவ்வாறு சாத்தியம்? எவரால் சாத்தியம்??

மற்றுமொரு அட்டகாசமான இறக்கம். "நெஞ்சிருக்கும் வரை" யில் "முத்துக்களோ கண்கள்" பாடலில். சரணம்: "கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட" என்று துவங்கும்.
"எழுந்த எண்ணம் என்ன" எனும் போது எழுவது போல் எழுந்து "என் எண்ணம் - ஏங்கும் ஏக்கமென்ன" என்று ஒரு ஆனந்தமான இறக்கம்! பலரை விழவைத்த, அழவைத்த இடம் இது!

எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங்கில் எவ்வளவு அருமையான "Melodic Nuances". அதில் முதல் பகுதியை ஸ்வரப் படுத்த முயன்ற போது:

ஸ.....ஸ ரி2 க2 ம1 ப த2...
ம1 ப த2 ப ப...
ம1 ப த1 ப ப...


இந்த "த1" ஐத் தொட்ட அழகு..... என்ன Variation !!!

இதே பகுதி அழகாக ஷெனாயில் பின் பாடப்படும். ஹம்மிங் முடியும் இடத்தில் உற்றுக் கேட்டால் 'இஸ்லாமிய' இசை இருக்கும். நான்கே மாத்திரைக்கு மட்டும்! தயவு செய்து பாடலை ஒரு முறை நம் இணைய தளத்தில் கேட்டு விடுங்கள்!

சரணத்தில் சுகமாக தபேலா!

டி.எம்.எஸ்:

கொடியில் பிறந்த மலரை
கொடி புயலின் கைகளில் தருமோ
மடியில் பிறந்த மகனை
தாய் மறக்கும் காலம் வருமோ



சுசீலா:

புகுந்த வீட்டை நினைத்தாள் (என்ன அருமையான Folk Touch)
மனை விளங்க நினைத்த பேதை
பிறந்த மகனை கொடுத்தாள் (வார்த்தைகளுக்கு ஏற்றவாறு மெட்டின் உணர்வு மாறும்!)
அவள் வகுத்த புதிய பாதை

இசைக்குக் கொஞ்சம் சோர்வு ஏற்பட்டால், மெல்லிசை மன்னரின் ஆர்மோனியத்திடம் வந்து இதம் கேட்கும் !!!

(தொடரும்)

A Handful of Piano Picks - Listing
Part 1 - Ennai Theriyuma
Part 2 - Kaatru Vandhaal
Part 3 - VannakkiLi
Part 4 - Oh Little Flower
Part 5 - Naan Nandri Solven
Part 6 - Thairiyamaaga Chol Nee
Part 7 - Maanicka Thottil
Part 8 - Collection of Piano Songs
Part 9 - Jazz Piano1 - Varavendum Oru Pozhuthu
Part 10 - Jazz Piano2 - Viswanathan Velai VeNdum
Part 11 - Jazz Piano3 - Enna Vegam Nillu Bama
Part 12 - Rock and Roll - Aadavarellam, Malarendra Mugamadhu
Part 13 - Unnai Ondru Ketpaen
Part 14 - Kannirendum Minna, Vidiya Vidiya
Part 15 - "Periya Idathu PaNN" - Kannenna Kannenna Kalanguthu
Part 16 - "Paal Thamizh Paal"
Part 17 - Chella KiLigaLaam
Part 18 - An Ensemble of Jazz Rhythms(1) - Thottu Kaattavaa
Part 19 - An Ensemble of Jazz Rhythms(2) - Hey..Naadodi (Anbe Vaa)
Part 20 - Piano Thisram - Jillendru, Manamedai, Senthamizh Paadum, Pillai Thamizh Paadukiren, Ninaithathai Nadathiye
Part 21 - "Rocking Piano" - Adadaa enna azagu, Allippanthal, Yaaro aada therinthavar
Part 22 - MSV-SPB Mesmerism
Part 23 - Avan Ninaithaana
Part 24 - "Expressions" - Athanin MuthangaL, Piano Fillers in different songs
Part 25 - Layam - An analysis on different beat patterns in Tamil Film Music
Part 26 - The Finale - Top 3 Piano songs of MSV
_________________
Ramkumar


Last edited by Ram on Wed Jun 17, 2009 4:16 pm; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
tvvraghavan



Joined: 15 Dec 2006
Posts: 175

PostPosted: Fri Sep 21, 2007 8:32 am    Post subject: What a Song !!! Reply with quote

Dear Ram,
What a song da.....!!! Reading your post , am unable to get ready to office.....am just listening n njoing it all alone sitting @ my home..... How many times we ( Vaidhy uncle, Ramki uncle n u ) have enjoyed this song....

Now I have got a doubt ,

How do u categorise this song ???

A piano song, a shehnai song or an accordion song or TMS /PS song or as an LRE humming song ????!!!!

Am not sure....coz I completely enjoy the Piano , Shehnai ( what a usage..) n the mild accordion that goes in the bg from the beginning to the end ...along with LRE's humming......!!!

God Only Knows as how Our Master could give such a melody......There is melody in everything....in Piano, Shehnai , accordion...in TMS's /PS' voice ....n LRE's Araaro....!!!! Am getting choked......

I do not have words to express my emotion that am currently experiencing...!!!

MSV Rules !!!
Venkat
Back to top
View user's profile Send private message
Sriram Kannan



Joined: 12 Sep 2007
Posts: 103

PostPosted: Fri Sep 21, 2007 10:45 am    Post subject: Reply with quote

Dear Ram/Venky,

So eager to hear this song... but unfortunately, i dont have it... Does anyone have a link, where i can download it ?
_________________
Thanks and Regards,
Sriram Kannan.

Follow me at http://bibliomaniac-moviefanatic.blogspot.com/
Back to top
View user's profile Send private message Send e-mail Yahoo Messenger
irenehastings
Guest





PostPosted: Fri Sep 21, 2007 10:57 am    Post subject: Reply with quote

Sriram Kannan wrote:
Dear Ram/Venky,

So eager to hear this song... but unfortunately, i dont have it... Does anyone have a link, where i can download it ?


Sriram kannan,

This song is available in our MSV times website:


http://www.msvtimes.com/music/songs/m.html
Back to top
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Fri Sep 21, 2007 11:03 am    Post subject: Reply with quote

hey ram,


it has has been in my mind ( what song was not there) for long and you have brought it out

how they were able to bring about such a melody and how they sat and discussed and how many takes it took and how they all felt at the out put

i have no words and i can simply listen and wonder
Back to top
View user's profile Send private message
irenehastings
Guest





PostPosted: Fri Sep 21, 2007 11:18 am    Post subject: Re: A Handful of Piano Picks (7) - Maanikka Thottil Ingirukk Reply with quote

Ram wrote:
நமது களத்தில் சாரதா அவர்கள் இப்படலைப் பற்றி வேறு தலைப்பின் கீழ் குறிப்பு எழுதியிருந்தார். அருமையான பதிவு அது.


Here is Saradha madam's post about this song:

http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=641
Back to top
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Wed Jun 04, 2008 8:20 am    Post subject: Reply with quote

Mega write-up on a MEGA MUSICAL, Ram!
Very proud of you!


I was engaged this evening with the poignant, powerful musical while driving, PLEASURE IS ALL MINE, Thanks Shri.MSV for engaging my thoughts.

Kudos to L.R.E, what a humming!
Shri.TMS's appealing singing!
What an orchestration - Evoking meloncholic emotions with a tasteful choice of instruments in a deliberately measured tempo!
Every great musical needs great lyrics.
What an emotionally charged lyrics! Memorable indeed!

Please continue ..
love, Vinatha.
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group