"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Kannaana poomagane kannurangu sooriyane ( Thaneer Thaneer )

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Thu May 08, 2008 5:35 pm    Post subject: Kannaana poomagane kannurangu sooriyane ( Thaneer Thaneer ) Reply with quote

கோமல் சுவாமிநாதன் எழுதி வெற்றிகரமாக மேடை நாடகமாக
அரங்கேறிய தண்ணீர் தண்ணீர் …கே.பாலசந்தர் திரைபடமாக உருவாக்கிய வருடம் 1981. தண்ணீர் பிரச்னையை மைய்யக்கருவாக கொண்டது இந்த படம்

அரசாங்கத்தின் மெத்தனப்போக்கையும் , அரசியல்வாதிகளின் சூழ்ச்சியினையும், அதிகாரிகளின் பொறுப்பின்மைய்யும் நய்யாண்டிதனத்தோடு காண்பிக்கப்பட்ட படம்..

வானம் பார்த்த பூமி போன்ற அந்த கிராமமானது விவசாயம் செய்யமுடியாமல் தவிக்கிறது.. ஒரு நதி கூட அருகில் கிடையாது….நீர்பாசன வசதியில்லை… மழையை காண்பதே அரிது என்ற சூழ்நிலை உருவாகி பல வருடங்களாகிறது…குடிப்பதற்கே தண்ணீரில்லாமல் அவதி படுகிறது எவ்வளவு முயற்சிகள் செய்தும் அரசியல் காரணமாக அனைத்தும் வீண் இந்த நிலையில் ஒரு கொலை குற்றம் காரணமாக தலைமறைவாகி அண்டை
கிராமத்திலுருந்து தப்பி வந்த ஒருவன் இந்த தண்ணீர் பிரச்னையை தீர்க்க முயல்கிறான்… அவனுக்கு துணையாக அனைத்து மக்களும் வருகின்றனர் …அந்த கிராமத்தின் ஒரு அரசாங்க காவலர் ( ராதா ரவி ) ஒருவரை தவிர….அவர் மனைவி கூட ( சரிதா ) துணைதான்

ஒரு மாட்டு வண்டி மூலமாக தினமும் அண்டை கிராமத்திலுருந்து தண்ணீர் கொண்டு வரும் அவனுக்கு ஒரு நாள் பலத்த காயம் ஏற்பட அவனுக்கு சரிதா மற்றும் கிராமத்தினர் துணை புரிகின்றனர்
குடி தண்ணீருக்காக மிகவும் அவதி படும் கிராமத்தினர் சார்பாக ஒரு பாட்டினை புகுத்தியுள்ளார் கே.பி. அந்த இரவில் சரிதா தன் தொட்டில் குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைப்பது போன்ற அமைந்த
இந்த பாடலானது எவ்வித முன்னிசையோ, பின்னைசையோ அன்றி வெரும் இரவின் அமைதியையே துணையாக கொள்வது போல் பி. சுசிலாவின் மெய்மறக்க வைக்கும் குரலில் நம் மெல்லிசை மன்னர்
அமைத்துள்ளார்..

கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே

ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து
தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலையும்வரை
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே

ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை சக்கரையே
நீ நான் பெத்த தங்கரதம் இடுப்பிலுள்ள நந்தவனம்
காயப்பட்ட மாமனின்று கண்ணுறக்கம் கொள்ளவில்ல
சோகப்பட்ட மக்களுக்கு சோறு தண்ணி செல்லவில்ல
ஏகப்பட்ட மேகமுண்டு மழை பொழிய உள்ளமில்ல

கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே

கள்முளைச்ச மல்லிகையே நான்
கண்டெடுத்த ரோசாவே
நீ தேன் வச்ச அத்தி பழம்
முத்தம் தரும் முத்து சரம்
தண்ணி தந்த மேகமின்று
ரத்த துளீ சிந்துதடா
காத்திருந்த பாணைக்குள்ள
கண்ணீர் துளி பொங்குதடா
வீட்டு விளக்கெரிவதற்கு கண்ணீர்…….
எண்ணை இல்லயடா

கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே


சுசீலாவின் குரலில் ஒரு தாயின் பரிதவிப்பும் , இயலாமையும் , சோகத்தையும் ப்ரதிபலிக்கும்…

இப்பாடலை எழுதிய் கவிஞர் வைரமுத்து தன் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத பாடலாக கருதுகிறார்… கண்ணதாசன் மறைவிற்கு பிறகு வந்த படம். அப்பொழுது வைரமுத்து ஒரு முண்ணனி எழுத்தாளர்…எனவே கே.பி. அவரை தேர்வு செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்

இந்த படத்தின் வெற்றிக்கு இசையும் முக்கிய பங்கு வகித்த்து…..நல்ல கிராமிய மணம் தவழும் பாடல்களும் , சூழ்நிலைக்கேற்ப பிண்ணனியிசையும் கை கொடுத்தன…30வருடமாக ஓயாது இசை அமைத்து கொண்டிருந்த எம்.எஸ்.வி..நிரந்தர ஓய்வு அடையப்போகிறாரோ என்று பெரும்பாலோர் நினைத்த வேளையில்
அமைதியாக சத்தமின்றி , ஆரவாரமின்றி வந்த இப்படத்தின் பாடல்கள் மிக ப்ரபலம் அடைந்தன… பல வருடங்களுக்கு பிறகு ( பழனி , பெரிய இடத்து பெண் , பாகப்பிரிவினை போன்ற) ஒரு முழுநீள கிராமிய பிண்ணனியைகொண்ட பட்த்திற்கு இசையமைக்கும் ஒரு வாய்ப்பு..
பிண்ணனியிசைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தார் .. பெரும்பாலும் கிராமிய இசை கருவிகளையே பயன்படுத்தினார்..

மெல்லிசை மன்னரின் தாலாட்டு பாடல்கள் வரிசையில் இது முற்றிலும் வித்தியாசமானது …

மலர்ந்து மலராத பாதிமலர் போல
அத்தை மடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா
பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா
இப்படி ஓர் தாலாட்டு பாடவா
செல்லக்கிளியே மெல்ல பேசு
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
நீரோடும் வைகையிலே
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

இப்படி பல ஆனால் ….கண்ணான பூமகனே போன்ற சூழ்நிலையில் அமைக்கப்பட்டவை அல்ல ஒரு பெண் தன் குழந்தையை தூங்க செய்துகொண்டே ஒரு சமுதாயத்தின் வேதனையை பகிர்ந்து கொள்ளும் வித்தியாசமான ஒன்று

சமுதாயத்தில் புரையொடிக்கொண்டிருக்கும் ப்ரச்னைகளை திரு கே.பி. தன் படங்களின் மூலமாக அவ்வப்போது அழகாக அதே சமயம் அழுத்தமாக சொல்வார்…ஒரு விழிப்புணர்வுக்காக எடுத்த திரைப்படம்… நல்ல முயற்சி

இந்த தண்ணீர் ப்ரச்னையை இன்று கூட நாம் பார்க்கின்றோம்…. காவிரி நதி நீர் … க்ரிஷ்ணா நதிநீர் திட்டம்….தற்போது ஹொகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டப்ப்ரச்னை இப்படி பல நல்ல திட்டங்களிருந்தும் அரசியல் காரணமாக எல்லாம் நிறைவேறாத
வண்ணம் இருப்பதை தான் கே.பி.யும் இந்த படத்தின் முடிவில் சொல்வார்….

இதற்கெல்லாம் தேசியகவி பாரதி சொன்னாரே :
வங்கத்தில் ஓடுவரும் நீரின்மிகையால் மைய்யத்து நாடுகளில் பயிர் செய்வோம்

அந்த தீர்க்கதரிசி சொன்னது போல நதிகளை தேசியமயமாக்கினால் தான் இதற்கெல்லாம் ஒரு நிரந்தர தீர்வு காணலாம்….

இந்திய திரைப்படங்களில் மிகச்சிறந்தவை வரிசையில் தண்ணீர் தண்ணீர் நிச்சயம் இடம் பெறும்….
Back to top
View user's profile Send private message Send e-mail
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Sat May 10, 2008 12:11 am    Post subject: Reply with quote

Dear Mr.Balaji,
Excellent writeup for a wonderful song. No words...

Indha paadalil oru isai karuvi mattum dhan (Ghatam) use panrikukar MM. This movie is another classic by our MM both in terms of songs and BGM.
Another song by Arundhathi. Natural sounds vaithu isai amaichurupar.
Then "Megam thiraludhadi".

I have seen this drama also in stage. The year is 1980, I think so...

இந்திய திரைப்படங்களில் மிகச்சிறந்தவை வரிசையில் தண்ணீர் தண்ணீர் நிச்சயம் இடம் பெறும்….

You are absolutely true...
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Sun May 11, 2008 9:04 pm    Post subject: Reply with quote

பாலாஜி, இந்த பாடலை பற்றிய உங்கள் எழுத்து அபாரம். அமைதியான இசையில், அர்த்தமுள்ள கருத்துக்களைக் கொண்ட ஒரு சோகமான பாடல் இது. இந்த பாடலில் இறுதியில் சுசீலா அவர்கள் 'ஆராரிராரிராரோ' என்று சொல்லி முடிக்கும்போது நம் மனம் பாரமாகிவிடும்.

//ஒரு பெண் தன் குழந்தையை தூங்க செய்துகொண்டே ஒரு சமுதாயத்தின் வேதனையை பகிர்ந்து கொள்ளும் வித்தியாசமான ஒன்று // உண்மையான கருத்து.

ஒவ்வொரு பாடலை பற்றியும் நீங்கள் எழுதுவது மிகவும் அழகாக இருக்கிறது. நன்றி.
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Tue May 13, 2008 1:44 pm    Post subject: Reply with quote

அன்புள்ள பாலாஜி

'தண்ணீர் தண்ணீர்" படத்தின் மிக அருமையான தாலாட்டுப்பாடலைப்ப்ற்றிய உங்கள் விளக்கம் அபாரம்,.

மிகக்குறைந்த இசைக்கருவிகளானாலும், மிக அதிகமான கருவிகளானாலும், மெல்லிசைமன்னரின் படைப்பு எப்பொழுதுமே
முதல் தரமே ! பாட்டின் மூலம் உள் உணர்வுகளை வருடுவதே அவருக்கு வேலையாகப் போய்விட்டது ! என்ன செய்ய ?

தயவுசெய்து எழுதிக்கொண்டே இருங்கள் பாலாஜி !

ராம்கி.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun May 25, 2008 10:27 am    Post subject: Reply with quote

dear balaji

this song , i would consider a proof , a tune can stand on its own

but who else can beat ever winning lullaby team of our MM and PS


right from the days of , pathi bakthi

lets keep enjoying
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group