 |
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
Ram Devotee
Joined: 23 Oct 2006 Posts: 1160
|
Posted: Sat Apr 19, 2008 10:46 pm Post subject: A Handful of Piano Picks (15) - Periya Idaththu 'PaNN' |
|
|
A Handful of Piano Picks - Part 15
பெரிய இடத்துப் 'பண்'
மண்ணின் மணம் கொண்டு திகழும் பாடல்களை 'கிராமத்துப் பண்' என்று கூறுவோம். அப்படிப்பட்ட 'பண்' மெல்லிசை மன்னர்களின் கைகளில் இருந்து உருவாகி, சாகாவரத் தன்மையுடன் உலாவரும் காரணத்தால் அது "பெரிய இடத்து பண்" என்று பெயர் பெருகிறது. இனிமை பொங்கும் 'பண்'களை வெகுவாகக் கொண்ட "பெரிய இடத்துப் பெண்" படத்தை நமது ஆய்வுக்குத் தேர்வு செய்வோம்!
முற்றிலும் மாறுபட்ட பொருட்கள் கொண்ட சொற்கள் அடுத்தடுத்து வருவதை ஆங்கிலத்தில் "OXYMORONS" என்று கூறுவார்கள். உதாரணமாக:
Pretty Ugly
Friendly War
Found Missing
Exact Estimate
தமிழில்....
சுகமான சுமைகள்
அமைதிப் புரட்சி
நல்ல பாம்பு
பகல் நிலவு
துன்பத்தில் இன்பம்..
போன்ற சொற்களை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.
இது போன்ற சொற்கள் இசை சார்ந்து இருந்தால் அதை "MUSICAL OXYMORONS" என வைத்துக் கொள்வோம். மெல்லிசை மன்னர்கள் இது போன்ற பல "MUSICAL OXYMORON" களை உருவாக்கியுள்ளனர்.
1) "JAZZ-சிவரஞ்சனி" - இவ்விரண்டையும் இசையின் ஒவ்வொரு துருவங்கள் எனலாம். ஆனால் இந்தக் கூட்டணிக்கு உயிர் கொடுத்தவர் மெல்லிசை மன்னர் - "என்ன வேகம் நில்லு பாமா" குழந்தையும் தெய்வமும் படப் பாடலில்! "CABAREY-பூர்யதனஸ்ரீ" - நீராட நேரம் நல்ல நேரம் - மற்றுமொரு பாடல் - இதே வகையில்!
2) "Perfect Note-Deviation" - ஸ்வரப் பிசகல்களை 'அபஸ்வரம்' என்று கூறுவோம். அதே ஸ்வரத்தை மெல்லிசை மன்ன்ர் ஒரு ராகத்திலிருந்து விலக்கும் போது அது ஜீவனைத் தொடுகிறது. "அம்மம்மா கேளடி தோழி" பாடலில் சரணத்தில் "சாருகேஸி" ராகத்திலிருந்து விலகும் இடம் ஒரு உதாரணம்.
3) Folk-Piano - மண்ணின் மணத்தை உணர்த்துவது Folk. பியானோ என்பது Folk ஐப் பொருத்தவரை ஒரு அந்நிய வாத்தியம். இது இரண்டையும் கொண்டு Folk இன் குணம் குன்றாமல் அற்புத கிராமியப் பாடலைத் தந்தவர்கள் மெல்லிசை மன்னர்கள்.
"பெரிய இடத்துப் பெண்" படத்தில் "கண்ணென்ன கண்ணென்ன கலங்குது" பாடல் Folk-Piano விற்கு மிகப் பொருத்தமான பாடல்!
இப்பாடலுக்குள் போவதற்கு முன் "ஏன் இப்படி ஒரு Folk-Piano வகையில் ஒரு பாடல் போட்டிருகிறார்கள்?" என்று யோசித்துப் பார்த்தால், "இப்படம் கிராமம்-நகரம் சார்ந்த படம் என்பதால்" என்று காரணம் விளங்கும் !!!
டி.எம்.எஸ் குரலில் கணீரெனத் தொடங்கும் முன்னிசை:
பட்டணம் பார்த்த மாப்பிள்ளையே.....
பாக்க வந்த கிளிப்பிள்ளே..
பட்டிக்காட்ட பாத்து பாத்து
நெனப்பதென்ன மனசிலே..
(பட்டிக்...)
கிளிப்பிள்ளே.. கிளிப்பிள்ளே... கிளிப்பிள்ளே
இது முடிகையில் கிளம்பும் பியானோ முன்னிசை. பியானோ வுடன் பாங்கூஸ் மற்றும் மரைக்காஸ் சேர்ந்து கொள்ள, அக்கார்டியன் கொஞ்சம் ஆட்டம் போட - வடிவேலு பாணியல் "அஹா.... கெளம்பிட்டாருய்யா... கெளம்பிட்டாருய்யா" என்று நமக்குத் தோன்றும்!
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொண்ணென்ன பொண்ணென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது
முதல் இடையிசை முடிந்து முன்னிசையாக வந்த அதே வரிகள் சரணமாக வரும்:
பட்டணம் பார்த்த மாப்பிள்ளையே.....
பாக்க வந்த கிளிப்பிள்ளே..
பட்டிக்காட்ட பாத்து பாத்து
நெனப்பதென்ன மனசிலே..
கிளிப்பிள்ளே.. கிளிப்பிள்ளே... கிளிப்பிள்ளே
ஒரே வரிகளை எவ்வளவு அழகாக, வேறு விதமாக, வழங்கியிருக்கிறார்!
இது முடிந்து மீண்டும் சரணம் வரும் போது பியானோ வும் சேர்ந்து கொள்ள, பாடல் கொண்டாட்டத்தின் உச்சத்திற்குப் போய்விடும்!
இடையிசையில் அற்புதங்களைச் செய்திருப்பார்கள். முதலில் கிராமிய இசையாக குழலும், பின் நகர இசையாக ட்ரம்பெட்டும், பின் இரண்டும் சேர்ந்து கொண்டு இசைக்க - கிராமிய உணர்வு சற்றும் குரையாமல் பாடல் முழுவதிலும் தெளித்து, தன் இசைக் கோலத்தை அதன் மேல் எவ்வளவு அழகாகப் போட்டிருக்கிறார்கள் என்பது விளங்கும்.
இரண்டாம் சரணம்....
குங்குமத்தைக் கொண்டு வரும்
குலுக்கி வரும் சிங்காரி
குண்டு மல்லி பூவைக் கொண்டு
கொழஞ்சு வரும் ஒய்யாரி
இவ்வரிகள் முதல் முறை முடிகையில் ஒயிலாட்ட நடையில் வரும் அருமையான இசை. கவுண்ட மணி பாணியில் "அடங்கப்பா.... இது எப்பேற்பட்ட இசை டா சாமி..." என்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது!
டி.எம்.எஸ் அவர்கள் குரலில் இருக்கும் கிராமிய இசையின் அழகு - இவர்தான் "மாதவிப் பொன் மயிலாள்" பாடியவரா? என்ற ஆச்சர்யத்தில் நம்மைத் தள்ளுகிறது.
"வாத்தியார்" பாடல்களில் நம் "பாட்டு வாத்தியாருக்கு" நாடி நரம்பெல்லாம் குதூகலம் நிரம்பி வழியும் என்பது மீண்டும் மீண்டும் இத்தொடரில் ஊர்ஜிதமாகிறது!
இப்படத்தில் ஒவ்வொரு பாடலும் மணி-மணியானவை.
"அன்று வந்ததும் இதே நிலா" - அட்டகாசமான BALLEY பாடல்! முதல், மூன்றாம் சரணங்களில் வரும் பியானோவில் தான் எத்தனை அழகு!
"அவனுக்கென்ன தூங்கி விட்டான்" - உருக்கும் சோகப் பாடல்.
"துள்ளியோடும் கால்கள் எங்கே" - மிக மிக இனிமையான டூயட்! இப்பாடலைப் பற்றிய என் தந்தையின் விவரிப்பை இங்கு காணலாம்.
http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=232
"கட்டோடு குழலாட ஆட". நம் தளத்தின் ரவிகுமார் அவர்கள் "கிராமத்து மண் வாசனையை தவழ செய்யும் மற்றுமொரு பாடல்" என்று தொடங்கும் உரையை இங்கு படிக்கலாம்:
http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=1490
நமது தளத்தின் ராஜேஷ்குமாரின் கருத்தையும் இங்கு மேற்கோளிடுகிறேன்: "ஆஹா கிராமத்து மெட்டு என்றால் இதுதானய்யா மெட்டு.."
அருமையான மற்றொரு பாடல், எனக்கு மிகவும் பிடித்த "பாரப்பா பழனியப்பா" - உட்பட அனைத்துப் பாடல்களும் "பெரிய இடத்துப் பண்"களே!
கண்ணதாசன் வரிகளும் சரி, மெல்லிசை மன்னர் இசையும் சரி வரிந்து கட்டிக் கொண்டு கிராமத்து இசையை உணர்த்துகிறது!
ஒருமுறை "நையாண்டி தர்பார்" என்கிற தொலைக் காட்சி நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர் (எம்.எஸ்.வி) பங்கு பெற்றார். நிகழ்ச்சியை நடத்திய யூகி சேது மெல்லிசை மன்னர் மெட்டமைப்பதற்காக ஒரு பாடல் சூழலைக் கொடுத்தார்.
ஒரு கிராமத்தில் ஒரு தாய், தொலைவில் இருக்கும் தன் குழந்தைக்காக பாடுவது போன்ற ஒரு பாடல். மெல்லிசை மன்னரும் அடுத்த நொடியே அருமையான மெட்டமைத்தார்.
யூகி சேது கொடுத்த இந்த பாடல் சூழல் ரஷ்யாவில் ஒரு இசை அமைப்பாளர் போட்ட ஒரு பாடலின் சூழல். (இது மெல்லிசை மன்னருக்கு முதலில் தெரியாது) இதில் ஆச்சர்யமான உண்மை மெல்லிசை மன்னர் போட்ட அந்த மெட்டும் ரஷ்ய இசையமைப்பாளரின் மெட்டும் ஒன்று போல் இருந்ததுதான்! பார்வையாளர்கள் அனைவருக்கும் ஆச்சர்யம், அதிர்ச்சி, வியப்பு! மெல்லிசை மன்னர் உணர்வின் அடிப்படையில் இசை அமைப்பவர் என்பதற்கு இதற்கு மேல் உதாரணம் அவசியம் இல்லை!
நிகழ்ச்சி முடிகையில் யூகி சேது மெல்லிசை மன்னரிடம் "தங்களின் வருகையால் இந்நிகழ்ச்சி புனிதமடைகிறது!" என்று நெகிழ்ந்து கூறினார்!
மெல்லிசை மன்னர்களின் பாடல்களினால் தமிழ்த்திரையியே, ஏன் உலக இசையே புனிதமடைந்து கொண்டிருக்கிறது என்று கூறுவது சற்றும் மிகையாகாது!
(தொடரும்)
A Handful of Piano Picks - Listing
Part 1 - Ennai Theriyuma
Part 2 - Kaatru Vandhaal
Part 3 - VannakkiLi
Part 4 - Oh Little Flower
Part 5 - Naan Nandri Solven
Part 6 - Thairiyamaaga Chol Nee
Part 7 - Maanicka Thottil
Part 8 - Collection of Piano Songs
Part 9 - Jazz Piano1 - Varavendum Oru Pozhuthu
Part 10 - Jazz Piano2 - Viswanathan Velai VeNdum
Part 11 - Jazz Piano3 - Enna Vegam Nillu Bama
Part 12 - Rock and Roll - Aadavarellam, Malarendra Mugamadhu
Part 13 - Unnai Ondru Ketpaen
Part 14 - Kannirendum Minna, Vidiya Vidiya
Part 15 - "Periya Idathu PaNN" - Kannenna Kannenna Kalanguthu
Part 16 - "Paal Thamizh Paal"
Part 17 - Chella KiLigaLaam
Part 18 - An Ensemble of Jazz Rhythms(1) - Thottu Kaattavaa
Part 19 - An Ensemble of Jazz Rhythms(2) - Hey..Naadodi (Anbe Vaa)
Part 20 - Piano Thisram - Jillendru, Manamedai, Senthamizh Paadum, Pillai Thamizh Paadukiren, Ninaithathai Nadathiye
Part 21 - "Rocking Piano" - Adadaa enna azagu, Allippanthal, Yaaro aada therinthavar
Part 22 - MSV-SPB Mesmerism
Part 23 - Avan Ninaithaana
Part 24 - "Expressions" - Athanin MuthangaL, Piano Fillers in different songs
Part 25 - Layam - An analysis on different beat patterns in Tamil Film Music
Part 26 - The Finale - Top 3 Piano songs of MSV _________________ Ramkumar
Last edited by Ram on Wed Jun 17, 2009 4:23 pm; edited 1 time in total |
|
Back to top |
|
 |
S.Balaji Maniac
Joined: 10 Jan 2007 Posts: 772
|
Posted: Sun Apr 20, 2008 8:26 am Post subject: |
|
|
Quote: | Folk-Piano - மண்ணின் மணத்தை உணர்த்துவது Folk. பியானோ என்பது Folk ஐப் பொருத்தவரை ஒரு அந்நிய வாத்தியம். இது இரண்டையும் கொண்டு Folk இன் குணம் குன்றாமல் அற்புத கிராமியப் பாடலைத் தந்தவர்கள் மெல்லிசை மன்னர்கள். |
Highlight of this composition ! Unconventional . I always wonder how did they experiment like this for a folk type ! Lovely interludes also. Truly a memorable movie for the Mellsai mannargal. |
|
Back to top |
|
 |
madhuraman Devotee
Joined: 11 Jun 2007 Posts: 1226 Location: navimumbai
|
Posted: Sun Apr 20, 2008 6:23 pm Post subject: A HANDFUL OF PIANO PICKS |
|
|
Dear Mr. Ram,
As ever, you excel in your description of the nuances of MM in folk version of cine songs. At one point, you have referred to MSV's capturing a Russian style of composition. From my familiarity with MSV's repertoire, all I can say is -he is music personified. What I imply is, on seeing a lyric, he is right away able to peg the exact extremities to which a lyric would obligingly abide by. This, MSV refers to as Meter. But, by a sheer instinct, MSV is able to choose that meter which would automatically carry the melody with it. In other words, more than one meter may be adapted for a lyric. But, MM never settles for less, since he accords the highest value for melody without in any manner diluting the lyric or its content. By a mere look at the matter, meter presents itself in all its varied forms. That is why , as MD. he is able to provide a range of alternatives to choose from. The available range is really bewildering and people express conflicting preferences.Remember the post man / Tea serving boy who offered suggestions? All these are elegant pointers to the fact that he is a library. It is for the user to locate the right references. This master can blend a range of raga variations to yield a harmony that is non existent but for [i]that [/i] blending. Undoubtedly we are blesed to receive from such a range.
Warm regards. Prof.K.Raman Madurai. _________________ Prof. K. Raman
Mumbai |
|
Back to top |
|
 |
msvramki Fanatic
Joined: 18 Dec 2006 Posts: 418 Location: Chennai
|
Posted: Mon Apr 21, 2008 9:36 am Post subject: |
|
|
Dear Ram,
Great writeup on PERIYA EDATHU PA(E)NN !
Mixing two or more unrelated instruments and that too in the most appropriate way to give the best output for the film, situation and lyric
has been the unmatchable quality of Mellisai Mannar, which other MDs
would have never imagined even in dreams !
I have to listen again to some of the songs you have mentioned (though I have heard them many times in the past long ago) and appreciate the finer points you have highlighted w.r.t to presentation.
LongLive MSV and his Melodies
Dad/ _________________ isaiyin innoru peyar thaan emmessvee. |
|
Back to top |
|
 |
N Y MURALI Maniac
Joined: 16 Nov 2008 Posts: 920 Location: CHENNAI
|
Posted: Wed Dec 31, 2008 12:15 am Post subject: |
|
|
Mr. RAM
I AM STUNNED BY YOUR TAMIL ACCENT. I THOUGHT TAMIL LANG IS GONE. I SAW YOUR PROFILE IN THE CORE CREW MEMBER. AND UNDERSTOOD YOU ARE HARDLY BELOW 30. IT IS ASTONISHING TO READ THE STYLE OF YOUR TAMIL. AFTER READING YOUR ARTICE I FEEL CONFIDENT THAT TAMIL LANGUAGE WILL LIVE FOR EVER SINCE SOMEBODY LIKE YOU WOULD BE KEEP COMING.
ABOUT THE SONG 'PARAPPA PALINAPPA. YOU RECALL THE ACCENT WITH WHICH TMS SINGS THE LINE 'SHETTHA PANAM SHELAVAZHINCHA'
REGARDS
N Y MURALI |
|
Back to top |
|
 |
Ram Devotee
Joined: 23 Oct 2006 Posts: 1160
|
Posted: Thu Jan 01, 2009 8:40 am Post subject: |
|
|
Dear Murali,
Thanks for your words of appreciation!  _________________ Ramkumar |
|
Back to top |
|
 |
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|