"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

AANDAVANE UN PAADHANGALAI ( OLI VILAKKU )

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Thu Apr 10, 2008 9:59 pm    Post subject: AANDAVANE UN PAADHANGALAI ( OLI VILAKKU ) Reply with quote

இந்த சம்பவம் நடைபெற்று 23 வருடங்கள் ஓடிவிட்டன….ஆனால் நினைவுகள் மறக்கமுடியாதவை…

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தமிழக முதல் அமைச்சராக இருந்தபோது ஒரு நாள் திரென்று அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு நினைவிழந்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு அங்கு அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை அவர்கள் சரிசெய்ய முடியாமல்
போக வேறு வழியில்லாமல் அவரை ஒரு தனி விமானம் மூலம் அமேரிக்காவில் உள்ள பூருக்கிளின் மருத்துவமனையில் சேர்க்கபடுகிறார்… ஆம்…. சிறுநீரகங்கள் பழுதடைந்ததால் ஏற்பட்ட பாதிப்பு

ஒரு கட்டத்தில் அப்போதய பிரதமர் இந்திராகாந்தி உடனே சென்னை வந்து மருத்துவமனையில் அவரை பார்த்தார் ( அவர் அப்போலொவில் இருந்த சமயம் ) துரதிருஷ்டவசமாக சில நாட்களிலிலேயே இந்திரா கொலை செய்யப்பட , ராஜிவ்காந்தி பிரதமர் பதவியேற்றார்…
எம்.ஜி.ஆர்.. ஒரு சாதாரணமான் மனிதரா ?? ராஜிவும் அவரை அப்போலோவில் பார்த்தார்…

ஆனால் இந்த இருவரும் பார்த்தபோது எம்.ஜி.ஆருக்கு நினைவு போய்விட்டது….

தமிழகமே ஸ்தம்பித்தது அச்சமயம்….நான் பார்த்த பெரும்பாலானவர்கள் ( வயது வித்யாசம் இல்லாமல் )
இதை பற்றியே பேசுவர்… நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த காலம்….. உண்மையாகவே தமிழகமே உற்சாகமின்றி , களையின்றி காணப்பட்டது…ஒட்டுமொத்த தமிழகமே அவருடைய உடல் பூரண குணமடைய வேண்டும் என்று ப்ரார்த்தனை செய்தனர்

எல்லா முக்கிய ஆலயங்களில் எல்லாம் சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டது ஒரு தனி நபருக்கு இத்தனை நலன் விரும்பிகளா என்று வியப்புற்றனர் எல்லாரும் !!! எம்.ஜி.ஆரின் உண்மையான மக்கள் சக்தியினை அப்போது தான் அனைவரும் உணர்ந்தனர் !!!!

நாத்திக வாதத்தை அடிப்படையாக கொண்ட பெரும்பான்மையினர் தங்கள் கொள்கயினை மறந்து ஆலயங்களில் வழிபட ஆரம்பித்தனர்…எல்லாம் அந்த மாபெரும் தலைவர் மீண்டும் உயிர்த்தெழுந்து
நடமாட வேண்டும் என்ற எண்ணத்தில் தான்….

அச்சமயம் தமிழகமெங்கும் ஆண்டவனே உன் பாதங்களை என்ற இந்த பாடலானது ஒலித்தது….தடையின்றி….ஏறக்குறைய இந்த பாடலை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நான் கேட்ட நினைவு
எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தங்கள் கட்சி அலுவலத்தில் ஒரு பக்தி பாடலை போல போட்டுகேட்பார்கள்

உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை
விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்


இந்த பாட்டின் வரிகள அந்த சூழ்நிலைக்கேற்ப அமைந்ததாலும் …மெய் மறக்க வைக்கும் மெட்டும் உருக்கமான பின்னிசையும் இந்த பாடலின் வெற்றிக்கு அடிப்படை காரணம்…

ஒரு பணக்காரரின் வீட்டில் திருடச்சென்ற எம்.ஜி.ஆர். , அங்கு அவரின் விதவை மருமகள் சவ்கார் ஜானகி ஆதரவற்று இருப்பதை கண்டு பரிதாபப்பட்டு அவர் தன் வீட்டில் அடைக்கலம் தருகிறார்….அன்பும் ஆதரவும் தந்து ஒரு சகோதரியை போல நடத்துகிறார்…சவ்காரும் அவரின் பேரில் மிக்க மரியாதையும் அன்பும் செலுத்தி அவரை திருட்டு தொழிலை விட்டு நல்வழியில் சேரும்படி பல முறை முயர்ச்சி செய்கிறார்…..இப்படி இருக்க ஒரு நாள் வீட்டில் நெருப்பு பற்றி கொள்ள அதில் சிக்கிக்கொள்ளும் சவ்காரை காப்பாற்றும் தருவாயில் எம்.ஜி.ஆர். தீயில் சிக்கி உடலில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தான நிலையில் போராடும் தருணத்தில் இந்த பாடலானது படத்தில் அமைந்துள்ளது

எம்.ஜி.ஆரின் 100ஆவது படமான இதில் நம் மெல்லிசை மன்னர் படம் முழுவதும் அற்புதமான ப்ரபலமான பாடலகளை தந்துள்ளார்….சில பாடல்களை நம் சகோதரி சாரதா வெகு சிறப்பாக முன்னர் ஒரு திரியில் எழுதியுள்ளார்..

இந்த பாடல் ஒவ்வொரு எம்.ஜி.ஆர். ரசிகனுக்கும் / தொண்டனுக்கும் என்றும் மறக்க முடியாததாகும்…

வீட்டிலுள்ள முருகன் படத்தினிடம் சவ்கார் மிக உருக்கத்துடன் பாடுவார்…

பாட்டின் சிறப்பே அதன் அற்புதமான சந்தமும் , சுசிலாவின் குரலும் தான்….மற்றும் எம்.எஸ்.வியின் ஆஸ்தான கருவிகளான புல்லாங்குழல், தபேலா மற்றும் வயலின் அனைத்தும் சேர்ந்து நமக்கு ஒரு மிக உருக்கமான பாடலை தந்தள்ளார்..


இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இங்கு உன்னிடம் கையேந்தினேன் முருகைய்யா

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மல்ர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை
விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்

மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும்
வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரை தருகின்றேன்
மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு
இறைவா நீ ஆணையிடு….ஆணையிடு…
இறைவா இறைவா…இறைவா…


இன்றும் இந்த பாடலை கேட்கும் தருவாயில் எனக்கு 1984இல் நடந்த சம்பவங்கள் தான் உடனே நினவுக்கு வருகின்றது

இம்மாதிரி எத்தனையோ அற்புதமான பாடலைகளை நம் மன்னர் அளித்தாலும் இந்த பாடல் ஒரு தனித்தன்மை வாய்ந்தது.. மறக்கமுடியாதது…
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Apr 11, 2008 3:16 am    Post subject: Reply with quote

Good one Balaji. நீங்கள் எழுதி இருப்பது முற்றிலும் உண்மை. எம்.ஜி.ஆர். உடல் நிலை சரி இல்லாத அந்த நேரத்தில் தமிழ் நாட்டையே ஒரு கலக்கு கலக்கியது நம் மெல்லிசை மன்னரின் இந்த பாடல். பாடலின் வரிகளும் அற்புதம். சுசீலா அவர்களும் இறைவனிடம் கெஞ்சுவதுபோல பாடி இருப்பது அருமை.
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Fri Apr 11, 2008 8:12 am    Post subject: Pick a song and analyz- OLi viLakku Reply with quote

Dear Friends,
'OLI VILAKKU' was from Gemini house where MGR acted for that banner for the first time. Every effort was taken since the movie maker and MGR had lots of personal stakes. Needless to state that lyrics and music had to be approved by SS Vasan and MGR - a double demand on MSV. Obviously MSV gave his best and left no room for any desire and to date 'Iraiva un kaaladiyil' stays supreme in reference and appeal.
What draws my memory is the fact that in 1965, SSV was very reluctant to engage MSV -TKR as MDs for Vazhkai padagu , before which Gemini had the cincept of 'House technicians and MD' on their regular pay roles. SSV infact menacingly told MSV that he was just obliging pressure from his own people to try MSV and that it was for MSV to save his reputation. Yet, MSV being what he is , made such an impact in Vazhkai padagu that SSV had to eat humblepie and had to engage MSV for all their subsequent Tamil movies until Director APN worked for Gemini's VILAIYATTU PILLAI with KVM as the MD. How it happened and the subsequent lamentations of SSV have already been posted in our site by Mrs. Saradha Prakash. By every reckoning, MSV is a delight to say the least Lest he should not have succeeded over generations transceding all barriers. That is MSV.
WARM REGARDS Prof.K.Raman Madurai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group