"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Indha punnagai enna vilai - Deivaththaai

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Apr 11, 2008 4:39 am    Post subject: Lyrics - Indha punnagai enna vilai - Deivaththaai Reply with quote

படம்: தெய்வத்தாய் இசை: விஸ்வநாதன், ராமமுர்த்தி
பாடியவர்கள்: டி.எம்.எஸ், சுசீலா

டி.எம்.எஸ்: இந்த புன்னகை என்ன விலை
சுசீலா: என் இதயம் சொன்ன விலை
டி.எம்.எஸ்: இவள் கன்னங்கள் என்ன விலை
சுசீலா: இந்த கைகள் தந்த விலை

சுசீலா:
எழுதிய கவிதைகள் ஆயிரமோ
எண்ணங்கள் ஊஞ்சலில் போய் வருமோ
அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ
பாட்டுக்கள் பாடும் வழக்கம் உண்டோ
(இந்த புன்னகை)

டி.எம்.எஸ்:
எந்த பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்
எந்த பாவைக்கும் காவல்கள் வேண்டும்
எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும்
எந்த பார்வைக்கும் பருவங்கள் வேண்டும்
எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்

சுசீலா:
அழகே அருகே வருவேனே
(இந்த புன்னகை)

டி.எம்.எஸ்:
கண்ணில் பட்டதில் பாதி சுகம்
கையில் தொட்டதில் மீதி சுகம்
இரவுக்கும் நிலவுக்கும் வேலை வைத்தாய்
காலத்தில் காதலை வாழ வைத்தாய்

சுசீலா:
இமை மூடிய பார்வையில் மயக்கம்
இதழ் மூடிய வார்த்தையில் மௌனம்
இந்த ஆரம்ப பாடத்தை படித்தேன்
இதை உன்னிடமே நான் நடித்தேன்

டி.எம்.எஸ்:
எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
சுசீலா:
அழகே அருகே வருவேனே
(இந்த புன்னகை)


எம்.ஜி.ஆர். அவர்களின் மிகச் சிறந்த காதல் பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடலில் சரணங்கள் மூன்றும் மூன்று விதமாக அமைந்திருப்பது மிக அழகு. பாடலின் துவக்க இசை மெதுவாக வந்து, பின் சற்று விறுவிறுப்பாகி, மீண்டும் நிதானமாகி பல்லவி அழகாக துவங்கும்.

இந்த பாடலில் ஒவ்வொரு சரணத்திற்கு முன்பும் ஒவ்வொரு விதமான இசை. முதல் சரணத்திற்கு முன் வரும் அந்த trumphet மிகவும் அழகு. மூன்றாவது சரணத்திற்கு முன் வரும் அந்த துள்ளலான இசை நம் மனதையும் துள்ளச் செய்யும். இது போல ஒவ்வொரு முறையும் சரணம் முடிந்தவுடன் பல்லவி பாடும்போதும், அதனுடன் வேகமாக வரும் அந்த பின்னணி இசை வெகு அருமை.

இந்த பாடல், காதலின் ஆரம்ப நிலையில் இருக்கும் காதலர்கள் பாடுவது போல வரிகள் இருக்கும். முதலில் காதலன் கேள்விகள் கேட்க, காதலி பதில் சொல்வது போன்ற வரிகள்

//இந்த புன்னகை என்ன விலை, என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை, இந்த கைகள் தந்த விலை//

பிறகு காதலி கேள்விகள் கேட்பதுபோல இருக்கும். பெண்களுக்கு எப்போதுமே சந்தேக உணர்வு அதிகம். அதுவும் தான் ஒருவனை விரும்பத் துவங்கிவிட்டால், அவன் நம்மிடம் பழகுவது போல வேறு யாரிடம் எல்லாம் பழகி இருப்பானோ, இவன் நம்பிக்கையானவனா, என்றெல்லாம் எண்ணற்ற கேள்விகள் மனதில் அலைமோதும். இதை எல்லாம் நன்கு உணர்ந்து, கவிஞர் இந்த வரிகளை எவ்வளவு அழகாக எழுதி இருக்கிறார்.

//எழுதிய கவிதைகள் ஆயிரமோ, எண்ணங்கள் ஊஞ்சலில் போய் வருமோ
அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ, பாட்டுக்கள் பாடும் வழக்கம் உண்டோ//

அதிலும் குறிப்பாக 'எண்ணங்கள் ஊஞ்சலில் போய் வருமோ' என்பது ஊஞ்சல் நிலையாக இல்லாமல் முன்னும், பின்னும் செல்வது போல, உன் எண்ணம் என்னிடம் நிலையாக இல்லாமல், முன்பு நடந்ததை நினைக்குமா இல்லை வருங்காலத்தில், என்னை விட்டு வேறு எதையாவது நினைக்குமா என்று கேட்பது போலவும் எழுதி இருப்பது மிக அழகு.

இவள் கேட்கும் கேள்விக்கெல்லாம் அவன் பதில் சொல்வது போல

//எந்த பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும், எந்த பாவைக்கும் காவல்கள் வேண்டும்// என்றும்

மேலும் அவளுக்கு நம்பிக்கை அளிப்பது போல, நான் உன்னையேதான் எப்போதும் நினைக்கிறேன், அதனால்

// எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்// என்கிறான்.

அவன் சொன்ன பதிலில் அவளும் மயங்கி

//அழகே அருகே வருவேனே// என்கிறாள்.

அவளுக்கு, அவனால் உண்டான மயக்கத்தையும், அதை வெளியே சொல்ல முடியாமல் அவள் கொண்ட மௌனத்தையும் கவிதையாக சொல்லும் இந்த வரிகள்

//இமை மூடிய பார்வையில் மயக்கம், இதழ் மூடிய வார்த்தையில் மௌனம்//

இந்த அழகான காதல் பாட்டுக்கு கவிஞரின் இந்த வரிகள் எல்லாம் கொள்ளை அழகு.

இந்த பாடலை நான் கேட்கும்போதெல்லாம், இந்த இசையின் இனிமையும், பாடல் வரிகளும் எத்தனை அழகு!!!!! என்று என்னை வியக்கச் செய்யும்.
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Fri Apr 11, 2008 8:24 am    Post subject: Lyrics- DEIVATHAI Reply with quote

Dear friends ,
It would be no exaggeration if I say , Deivathai immensely raised the scope for Kaignar Valee's career in filmdom. Despite the then nascent status of Valee , MSV had boosted those compositions by very articulate embellishment and had indeed shaped Mr. Valee's dareer by giving the right logistics . Another dimension of MSV who aleays obliged instead of dictating terms to any one. MSV is a real phenomenon.
Warm regards Prof.K.Raman Madurai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group