"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Thanneerile Thamaraipoo

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
ravikumar



Joined: 12 Dec 2007
Posts: 25

PostPosted: Sat Mar 15, 2008 2:42 am    Post subject: Thanneerile Thamaraipoo Reply with quote

பாடல் : தண்ணீரிலே தாமரைப்பூ
படம் : தங்கை
பாடலாசிரியர் : கண்ணதாசன்

அண்ணன், தங்கை உறவை மையமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன..இன்னமும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மிகச் சில படங்களே இந்த மென்மையான உறவை வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளன.

பல்வேறு உணர்ச்சிகளின் கலவையான இந்த பாத்திரங்களை திரையில் சித்தரிப்பதில் வெற்றி பெற்றவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே. அது போலவே இதை பாடல்களில் சிறப்பாக வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றவர்கள், டி.எம்.எஸ்., கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.வி., டி.கே.ஆர் மட்டுமே.

பொதுவாக டி.எம்.எஸ்ஸின் கம்பீர குரலுக்கு மென்மையான பாடல்கள் எடுபடாது என்பது பலரின் கருத்து.

ஒரு வானொலி நிகழ்ச்சியில், பிரபல இசையமைப்பாளர் ஒருவரிடம், டி.எம்.எஸ் அவர்களை அதிகமாக உபயோகப்படுத்தாது ஏன் என்று கேட்ட போது, டி.எம்.எஸ்ஸால் பாவத்துடன், உணர்ச்சி பூர்வமாக பாட முடியாது என்று பதிலளித்தார் அவர். அதற்கு வானொலி நிலையத்தினர் மேற்சொன்ன இந்த பாடலை ஒலிபரப்பி விட்டு மீண்டும் இதே கேள்வியை கேட்ட போது, பதிலளிக்க விரும்பவில்லை அந்த இசையமைப்பாளர்.

பாசம், நேசம், ஆதரவு, சோகம், கோபம், விரக்தி என பல உணர்ச்சிகளை கொட்டும் அற்புதமான பாடல்.

Xylaphone, மற்றும் வயலினின் அமைதியான துவக்கத்தில் டி.எம்.எஸ்ஸின் மென்மையான ஹம்மிங், நம்மை அப்படியே தாலாட்டும். குறைந்த நேரமே வந்தாலும் என்னை மீண்டும் மீண்டும் கேட்க செய்யும் துவக்கம்.


ம்ம்ம்,,ஹுஹும்.. ம்ம்ம்ம். ஹுஹும்... ம்ம்ம்ம்

தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே..
தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே..
தத்தளிக்கும் மலரை சக்தி உள்ள இறைவன்
தனக்கென்று கேட்டால் தருவேனோ?
தலைவிதி என்றால் விடுவேனோ?
மலரும் முன்னே பறிப்பதற்கு
அவன் தான் உன்னிடம் வருவானோ?
தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே..


அழகிய முகத்தில் இருளென்ன?
அசையும் உடலில் அமைதியென்ன? அமைதியென்ன?. அமைதியென்ன?
இழையும் புன்னகை ஓய்ந்ததென்ன?
இறைவன் கருணையும் சாய்ந்ததென்ன?. சாய்ந்ததென்ன? சாய்ந்ததென்ன?
அந்த இறைவன் கருணையும் சாய்ந்ததென்ன?
தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே..

இறைவா உனக்கொரு கோயில் உண்டு..
இரவும் பகலும் தீபம் உண்டு..
இறைவா உனக்கொரு கோயில் உண்டு..
இரவும் பகலும் தீபம் உண்டு..
எனக்கென இருப்பது ஒரு விளக்கு.
இதனுடன் தானா உன் வழக்கு?
எனக்கென இருப்பது ஒரு விளக்கு.
இதனுடன் தானா உன் வழக்கு?
இதனுடன் தானா உன் வழக்கு?

தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே..
தத்தளிக்கும் மலரை சக்தி உள்ள இறைவன்
தனக்கென்று கேட்டால் தருவேனோ
தலைவிதி என்றால் விடுவேனோ
மலரும் முன்னே பறிப்பதற்கு
அவன் தான் உன்னிடம் வருவானோ?

ம்ம்ம்,,ஹுஹும்.. ம்ம்ம்ம். ஹுஹும்... ம்ம்ம்ம்




தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே..
என பாடும் போது ஒரு விதமான வருத்தம்

.... தனக்கென்று கேட்டால் தருவேனோ? தலைவிதி என்றால் விடுவேனோ? மலரும் முன்னே பறிப்பதற்கு அவன் தான் உன்னிடம் வருவானோ? என பாடும் போது ஒரு ஆறுதலுடனான வீராப்பு ...

எனக்கென இருப்பது ஒரு விளக்கு. இதனுடன் தானா உன் வழக்கு? முதல் தடவை வரும் போது ஒரு வேதனை கேள்வியாகவும்,

எனக்கென இருப்பது ஒரு விளக்கு. இதனுடன் தானா உன் வழக்கு? இரண்டாம் முறை வரும் போது ஒரு கோப கேள்வியாகவும்

இதனுடன் தானா உன் வழக்கு? என முடிக்கும் போது ஒரு விரக்தியுடனும் ..

எத்தனை பாவங்கள்?


இசையமைப்பாளரின்/ கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப நெகிழ்ந்து பாடிய பாடகரை சொல்வதா?

வியக்க வைக்கும் எளிய வரிகளால் பெரிய கருத்துக்களை சொன்ன பாடலாசிரியரை சொல்வதா?

அல்லது கதைக்கும், காட்சியமைப்பிற்கும் ஏற்றாற் போல இசைத்த இசையமைப்பாளரை சொல்வதா?

அனைவரும் சேர்ந்து படைத்த அற்புதம் இது.

ஒவ்வொரு பல்லவி முடியும் பொழுது ஆர்கன் அதை முடித்து வைக்கும் விதம் மிக அழகு. வயலின், ஆர்கன், புல்லாங்குழல் என மிக எளிய இடையிசை.

அந்த நேரத்தில் இருந்த ஒலிப்பதிவு வசதி குறைப்பாட்டினால் எம்.எஸ்.வியின் ஆர்கெஸ்ட்ரேஷன் வெகுவாக பலரால் கவனிக்கப்படவில்லை. இந்தப்பாடலும் அதற்கு ஒரு உதாரணம். பாடல் முழுவதும் பாடல் வரிகளுடன் தொடர்ந்து வரும் வயலின் இசை, பாடலை மென்மையாக்கி, மனதை அமைதியாக்கும் தாலாட்டாக அமைந்திருக்கும். HeadPhone ல் கேட்டாலோ அல்லது நிசப்தத்தில் இந்த பாடலை கேட்டாலோ மட்டுமே அதை உணர முடியும். அதே போன்று ஆர்கன் வரிகளை முடித்து வைப்பதும் உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே ரசிக்க முடியும்.

சில பாடல்களை திரையில் பார்த்தால் மட்டுமே அதன் மேன்மையை பாராட்ட முடியும்.
சில் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டால் மட்டுமே பாராட்ட முடியும்.

நான் இந்த பாடலை திரையில் பார்த்ததில்லை. அடிக்கடி கேட்டதுமில்லை. ஆனாலும் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மனதை இளக செய்யும்.
_________________
Ravikumar
Back to top
View user's profile Send private message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Tue Mar 18, 2008 1:03 am    Post subject: Reply with quote

ரவிக்குமார், இந்த பாடலுக்கு உங்கள் விளக்கம் அற்புதம். நீங்கள் எழுதி இருப்பது போல டி.எம்.எஸ். அவர்களால் எல்லா விதமான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டி பாடமுடியும். எத்தனை மென்மையான பாடல்களை அவர் பாடி இருக்கிறார். இந்த மாதிரி பாடல்களை திரையில் பார்த்துக்கொண்டே கேட்பது ஒரு சுகம் என்றால், அதை நாம் தனிமையாக அமர்ந்து கொண்டு கேட்பது இன்னொரு சுகம். மெல்லிசை மன்னரின் பாடல்களை தனியாக அமர்ந்து உன்னிப்பாக கேட்டால், அவர் எத்தனை அழகாக ஒவ்வொரு வாத்தியங்களையும் இசைத்திருக்கிறார் என்பதை நாம் உணர்வுபூர்வமாக தெரிந்து கொள்வோம். இந்த பாடல், எல்லோர் மனதயுமே இளகச் செய்யும்.
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Sun Mar 23, 2008 10:29 am    Post subject: Reply with quote

Dear Ravikumar,

Really a great song and your description was 'Perfect' in conveying the song's beauty!

Sadly, as you mentioned, the orchestration is not fully audible with poor Audio. (I heard in Musicindiaonline)

http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.5486/

Great Melody and great Bhavams!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Wed Mar 26, 2008 2:37 pm    Post subject: Reply with quote

Mr. Ravikumar,

By the tone of TMS, you can conclude . Its for Nadigar Thilagam for a sober situation. Listening to songs like this makes me wonder whether TMS fang first or on seeing Sivaji’s actions, he sang later !
Such slow compos you will not get now.
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Fri Apr 04, 2008 12:34 pm    Post subject: A MELODY IN A CLASS OF IT'S OWN Reply with quote

Dear Ravikumar,

Great pick by you. MSV steals our hearts in the hummimng prelude itself. As you've rightly said, it's the grand show of MSV & TMS all the way.

Cheers
MSV IS MUSIC
VAIDY
_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group